உன்னில் சிறையாகிறேன்
இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம்,
காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி,
மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி,
உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன்,
உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன்,
ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,
