உன் விழி தேடும் என் பிம்பம்
"சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள்.
இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..."
