கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு
தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..
சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.
ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது. ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.
யார் மீது தவறு என்று.
