காதல் இல்லம்
‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:
1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி
2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில்
துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து
ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு.
3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று
பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று
4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ்
விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம்
அல்லது வெறுப்பிற்கு காரணம் .
இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன்.
