காற்றினிலே வரும் கீதம்
ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..
