காலங்கள் தாண்டிய தேடல்
யுகங்கள் பல அவன் காத்திருந்தான்…
அவள் வரவுக்காக. தனிமையைத் துணையாகக் கொண்டு
அவளது நினைவலைகளோடு மட்டுமே வாழ்ந்தான்.
அவனது காத்திருப்பின் முன்
யுகங்களே தலைவணங்கி
மௌனமாய் கரைந்து போனது.
அவள்…
உயிர் இருந்தும் உயிரற்றவளாய்
தன் உயிரின் அர்த்தத்தைத் தேடி அலைந்தாள்.
உணர்வுகள் உறைந்த ஜடமாய்,
அவனின்றி
தன் வாழ்க்கைக்கு ஏது பொருள் என
அறியாத அறியாமையில் சிக்கித் தவித்தாள்.
யுகங்கள் கடந்தன.
காலச்சக்கரம் தன் ஓட்டத்தில்
எதையும் நிறுத்தாமல் நகர்ந்தது.
அந்த ஓட்டத்தில்
அவனது காத்திருப்பும்,
அவளது தேடலும்
ஒரே மௌனமாகி
காலத்தின் கரங்களில் கரைந்ததோ…?
No episodes yet.
