கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'.
சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'.
யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி.
பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள்.
ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது.
சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை.
இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
