தூவானம்
எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...?
அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..
உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.
உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!"
காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!
