தேயாத நினைவு நீ
உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.
உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.
இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.
இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது...
காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்...
