நிழற்பாவை
எட்டாம் வகுப்பு…
பென்சில் கோட்டுகளுக்கிடையில் விழுந்த ஒரு பார்வை.
பெயர் தெரியாத உணர்ச்சி,
காதல் தானோன்னு கேட்கத் துணியாத வயது.
அது நிழல் மாதிரி வந்தது…
தொட முடியாம, சொல்ல முடியாம,
மனசுக்குள்ளே மட்டும் நடந்து போன ஒரு காதல்.
பன்னிரண்டாம் வகுப்பு…
இந்த தடவை நிழல் கொஞ்சம் தெளிவா தெரிஞ்சது.
கனவுகளோட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சது.
ஆனா பாதை பிரியும்போது,
அந்த நிழலும் பின்னாலேயே நின்று போச்சு.
இரண்டுமே காதல் தான்…
ஆனா இரண்டுமே நிழல்தான்.
அந்த நிழல்களைத் தேடி அலைய ஆரம்பிச்சாள் அவள்.
“காதல் நிஜமா இருக்காதா?”
என்ற கேள்வியோட…
கல்லூரி முதல் ஆண்டு…
அங்க தான் நிழல் தேடிய பாவைக்கு
உண்மை கிடைக்குது.
கனவில்லாத காதல்,
பயமில்லாத புரிதல்,
ஓடிப்போகாத மனசு.
இது நிழல் இல்ல…
நிலைத்திருக்கும் உண்மை.
நிழலாய் வந்த முதல் இரு காதல்கள்,
அவளை தேட வைத்தது.
நிழல் தேடிய பாவைக்கு,
நிஜம் கிடைத்த இடம்தான்
இந்த கதை.
“நிழல் பாவை”
நிழல்களை கடந்துபோய்
உண்மையை கண்ட காதல். ✨💙
