மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ
கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.
