மழையில் தோன்றிய வானவில் நீ
ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது.
அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்...
