முத்த மழை
கதையின் நாயகி மலர்விழி தன் மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும்.
