Epi – 2 – முதல் தொடுதல்

இதுவரை…. 

   தனக்கு சொந்தமான பெரிய பிளாட்டில் தனிமையில் வசிக்கும் வீர்-க்கு உறவென சொல்லிக்கொள்ள அத்தையும் அத்தை மகளும் மட்டுமே இருக்கின்றனர்.  கொள்கையோடு நகர்ந்து கொண்டிருந்த அவனின் வாழ்க்கையில் வருகை தந்தாள் அவள். 

இனி… 

   அத்தை மகள் ரம்யாவை பள்ளியில் இறக்கி விட்ட பிறகு தொடர்ந்து பயணித்த வீர் ATM – ல் தன் காரை நிறுத்தினான்.  உள்ளே ஆள் இருப்பது தெரியாமல் போன் பேசிக் கொண்டே கதவை திறந்து முன்னே செல்ல வைஷ்ணவியின் நெற்றியில் மோதினான்.

  அவனின் உயரத்திற்கு இவள் சற்று குறைவு தான். நடந்த மோதலில் அவளின் நெற்றி சரியாக இவனின் உதட்டில் மோதி நின்றது.  

   வீர்-ன் கண்களுக்கு தன் எதிரே இருந்த பெண்ணின் உருவம் தெரியவில்லை. அவள் கட்டியிருந்த புடவையின் நிறம் மங்கலாய் தெரிந்தது. 

   முத்தம் கொடுக்கும் சத்தம் மட்டும் தான் கேட்கவில்லை அதற்கான அத்தியாயம் அங்கே முடிந்தது. 

   அங்கு நடந்த நிகழ்வில் அவனே வியந்து நின்றான். இதுவரை எந்த பெண்ணையும் தன் உதடுகளால் தீண்டியதில்லை. தெரியாமல் நடந்தது என்றாலும் அதன் உணர்வு முத்தம் வைத்ததைப் போலவே இருந்தது. 

   ஒரு இன்ச் கூட நகராமல் இருவரும்  அதிர்ச்சியில் நின்றனர். தன் நெற்றியில் ஒருவரின் உதடு இருப்பதை உணர்ந்தவள் ஒரு அடி பின்னால் விலகி சட்டென தலை உயர்த்தினாள்.

  எங்கே அவள் வேண்டுமென்றே முத்தம் வைத்ததாய் நினைத்துக் கொள்வாளோ என்ற அச்சத்தில் விரைந்து பேசினான் வீர். 

    இவளும் அவனைப் போலவே நினைத்தாள்.

   “Sorry , நீங்க உள்ள இருக்கிறதை நான் கவனிக்கலை.. “என்றான் வீர் .

  “Sorry நீங்க வந்ததை நானும் கவனிக்கலை…” என்றாள் வைஷ்ணவி.

  இருவருமே ஒருவருக்கு ஒருவர் தவறாக எண்ணி விடுவார்களோ என்ற எண்ணத்தில் மன்னிப்பாய் தங்களின் கருத்தை கூறினர். 

   “இல்ல தப்பு என் மேல தான் போன் பேசிட்டு வந்தேன்.. sorry..”

   “இட்ஸ் ஓகே… ” என்றாள்.

   ஏனோ வெட்கம் தொற்றிக்கொள்ள அவனின் முகத்தை ஏறெடுத்து பார்க்க சங்கடம் கொண்டாள். அவன் உள்ளே செல்வதற்கு வழி விட்டு விலகி நின்றாள்.

   இவனும் தான் செய்த காரியத்தை அவள் மன்னித்தது நாகரிகமாக எடுத்துக் கொண்டதில், அவள் செல்வதற்காக கதவை திறந்து வழி விட்டான்.

  வெளியே சென்ற வைஷ்ணவி நெற்றியை பிடித்தவாறு தனக்கு வந்த ஞாபகத்தை அவனிடம் உரைக்க ஓடினாள். 

   “ஒரு நிமிஷம் ஏ டி எம் மெஷின் வொர்க் ஆகலை பணம் எடுக்க முடியாது..” என்றாள்.

   “ஓ…. அப்படியா சரி…”

     இருவரும் ஒன்றாகவே வெளியே வந்தனர். இதற்கு மேல் பேசிக்கொள்ள எதுவும் இல்லை கண்ணால் அவனைப் பார்த்து சரி என்பது போல் வாயசைக்காமல் சைகை காட்டி நடந்து சென்றாள்..

   மென்மையான குரல், நீண்ட கூந்தல், புடவை கட்டிய மங்களம்.. என கண்களை நகர்த்த மனம் இல்லாது அவளை பார்த்துக் கொண்டிருந்தான். 

  தெருவில் செல்லும் பெண்களை எல்லாம் கண்ணிமைக்காது பார்க்கும் அளவிற்கு அநாகரீகம் கொண்டவன் இல்லை.  எனினும் இவளுடன் நடந்த முதல் மோதல் ஈர்த்துவிட்டது.

  எதார்த்தமாய் நடந்த முத்த மோதலில் அவள் சட்டென்று விலகி முகம் காட்டியது தான் இவர்களின் முதல் சந்திப்பு. அவள் கண்ணில் தெரிந்த பதட்டமும் குரலில் இருந்த இனிப்பும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

   தன் மனதின் போக்கை நினைத்து அவன் துளியும் வருந்தவில்லை மென்மையாக தான் நினைத்தான். தங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த ATM – யை ஒரு முறை திரும்பி பார்த்தான். தானாய் உதடுகள் புன்னகைக்க அந்த நினைவுகளோடு காரில் ஏறினான். 

   வேறு ஒரு ATM-ல் இருந்து பணம் எடுத்துக் கொண்டு தன் அலுவலகத்திற்கு விரைந்தான்.  டைடல் பார்க் என்ற மாபெரும் கட்டிடத்தில் ஐந்தாவது தளத்தில் இவனுடைய கம்பெனி அமைந்துள்ளது. 

   வீர் தன்னுடைய அலுவலக பேக்கை கையில் பிடித்தவாறு ஆபீஸில் நுழைய அனைவரும் வீர் கோபத்தில் இருப்பான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல அதே புன்னகையான முகத்துடன் அனைவருக்கும் காலை வணக்கத்திற்கான பதிலை உரைத்தான். 

    “ அந்த பழைய PA செஞ்ச துரோகத்தில்  கோபத்தில் இருப்பார்னு நினைச்சேன், பரவாயில்லையே.. நேற்று நடந்த விஷயத்துக்கு யாரா இருந்தாலும் வேலை செய்ற ஊழியர்கள் கிட்ட கோவமா தான் நடந்திருப்பாங்க..”

   வீர் – ன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவள் நேற்று நடந்ததை நினைவில் கொண்டு கூறினாள். 

    “நீ இப்போ தானே புதுசா வேலைக்கு சேர்ந்திருக்க வீர் சாரை பற்றி உனக்கு தெரியாது. அவர் ரொம்ப நல்லவர் சாதுவான குணம்.  ஒருத்தர் பண்ண தப்புக்காக மத்தவங்களை திட்ட மாட்டார்.” என சப்போர்ட் செய்து பேசினாள் ஜானவி. 

  வீர் கேபினுக்கு சென்றதும் இன்டர்காம் மூலம் ஜானவியின் டேபிளுக்கு தான் அழைத்தான்.

  “ஹலோ, குட் மார்னிங் சார்… ”

  “குட் மார்னிங் ஜானவி, இன்டர்வியூக்கு எல்லாம் தயாரா இருக்குல்ல… ”

  “யெஸ் சார், எல்லாரும் வந்துட்டாங்க நீங்க சொன்ன ஹாலில் தான் உட்கார வச்சிருக்கேன்..”

   “ஓகே இப்ப அவங்க கிட்ட போய் இன்டர்வியூ ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்லுங்க..”

  “சார்… ?”

  “சொன்னதை செய்ங்க ஜானவி..”

   “ஓகே சார்..”

   வேலை தேர்விற்காக வந்தவர்கள் காத்திருக்கும் அறையில் இரண்டு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அங்கு இருக்கும் நடவடிக்கையை தன் அறையில் இருந்தபடியே கவனித்தான் வீர். 

     கிட்டத்தட்ட 30 நபர்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.  உள்ளே நுழைந்த ஜானவி ஒரு விஷயத்தை உரைக்க ஒரு சிலர் எழுந்து கேள்வி கேட்பது தெரிந்தது. 

   “என்னங்க இப்படி சொல்றீங்க ஏற்கனவே அரை மணி நேரம் லேட் ஆகிடுச்சு… ”

   ஜானவி காதில் ப்ளூடூத் அணிந்திருக்க அதில் வீர் மொபைல் கனெக்ஷனில் இருந்தான். 

   “ஒரு மணி நேரம் கழிச்சு தான் இன்டர்வியூ ஸ்டார்ட் ஆகும். இஷ்டம் இல்லைனா கிளம்பலாம்னு சொல்லுங்க..”

    வீர் உரைத்த விஷயம் காதில் கேட்டதும், அதே பாவனையோடு அவளும் கூறினாள்.

   இருந்த 30 பேரில் எட்டு பேர் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி விட்டனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்தாள் ஜானவி .

   “இன்டர்வியூ இப்ப ஸ்டார்ட் ஆகும்.  உங்க ஒவ்வொருத்தர் பெயரையும் நாங்க கூப்பிடுவோம். அந்த சத்தம் அறையில் பிக்ஸ் செஞ்ருக்க மைக்கில் இருந்து பிரதிபலிக்கும். அப்போ எதிரில் இருக்க கேபினுக்கு போங்க.. ”

     ஜானவி விஷயத்தை உரைத்து விட்டு அங்கிருந்து வெளியேற இன்டர்வியூவிற்கு வந்திருந்த விஷ்ணு யாரெல்லாம் அந்த அறையில் இருக்கிறார்கள் என நோட்டம் விட்டான். 

   சிலர் டென்சனோடு இருந்தனர், இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டார்களே என்ற கடுப்பில். அவனின் அருகிலேயே அமர்ந்திருந்த வைஷ்ணவியை அப்போது தான் கண்டான். 

    வைஷ்ணவி தன்னுடைய டாக்குமென்டை திறந்து பார்க்க அதிலிருந்த தகவல் மூலம் இவளின் நாமம் அறிந்தான். 

  “ஹாய் வைஷ்ணவி, ஐ அம் விஷ்ணு..”

  ‘எப்படி என் பெயரை சரியாக கூறுகிறான்..’  என அவள் நோக்க 

 ‘ உங்க ரெஸ்யூம்ல பெயரை படிச்சேன்..’ என்றான் .

  “ஹலோ..” மேலோட்டமாக கை கொடுத்து அறிமுகம் செய்து கொண்டாள். 

     “இன்டர்வியூக்கு ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னதும் நிறைய பேர் எந்திரிச்சு போயிட்டாங்க, நீங்க போகலையா…” என விஷ்ணு கேட்க 

  “ஏன் உங்களுக்கு போட்டிக்கு ஆள் குறையும்னு எதிர்பார்க்குறீங்களா..” 

   “உங்க மனநிலை என்னன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…” என்றான்.

   “வேலை இல்லாத எனக்கு இங்க உட்காருவதில் எந்த பிரச்சனையும் இல்லை வீட்டுக்கு போனாலும் சும்மாதான் உட்கார போறேன் அதுக்கு இங்கேயாவது உட்காரலாம்…” என்றாள் வைஷ்ணவி

   “கரக்ட்டுங்க நானும் இதே எண்ணத்தில் தான் இங்க உட்கார்ந்திருக்கேன். வந்ததே இண்டர்வியூக்கு தான் அது எவ்வளவு நேரமா இருந்தா என்ன, அட்டென்ட் பண்ணி தான் ஆகணும்…”

  இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் அடுத்ததாக மைக்கில் விஷ்ணு என பெயர் ஒலித்தது. 

   “ஓகே வைஷ்ணவி, இப்ப நான் தான் போகணும் பார்க்கலாம்..”

   விஷ்ணு கால் மணி நேரத்திற்குப் பிறகு வீர்-ன் அறையில் இருந்து வெளியே வந்தான். அடுத்ததாக வைஷ்ணவியின் பெயரும் ஒலித்தது. 

  எழுந்து நின்றவள் தன் புடவை சரியாக இருக்கிறதா என மேலோட்டமாய் பார்த்துவிட்டு நிமிர்ந்த பார்வையோடு வீர்-ன் கேபினில் அனுமதி கேட்டு நுழைந்தாள் 

   “எக்ஸ்கியூஸ் மீ சார்.. ”

     “உள்ள வாங்க…”

     தன்னை இன்டர்வியூ செய்ய எதிரே      அமர்ந்திருக்கும் வீர்-ஐ பார்த்தவாறு முன்னால் வந்தாள். அவனோ  தன் கையில் இருந்த பட்டியலை பார்த்தவாறு தலைகுனிந்து இருந்தான். 

   “உட்காருங்க…” என்றான்.

  அவனின் அனுமதிக்கு பிறகே நாற்காலியில் அமர்ந்தாள். 

  ஏற்கனவே இவளின் ரெஸ்யூம் மற்றும்  சர்டிபிகேட் ஜெராக்ஸ் எல்லாம் வீர் -ன் டேபிளில் இருந்தது. அதுவரை விஷ்ணுவின் தகவலை படித்துக் கொண்டிருந்தவன் அவளிடம் ஒரு கேள்வியும் கேட்டான். 

   “ஓகே, இப்போ என்னோட கம்பெனிக்கு போட்டியா இருக்க, இன்னொரு கம்பெனியோட மார்க்கெட்டிங் அறிவை பீட் பண்ணனும்னா என்ன செய்வீங்க… ”

   ‘என்ன இவர் பெயர், விவரம் எதுவுமே கேட்காமல் நேரடியாக கேள்விக்கு சென்று விட்டார்… ’

  அவன் தலைகுனிந்தவாரே பேசியதால் வைஷ்ணவி அவனின் முகத்தை நேராக கவனிக்க முடியவில்லை. 

  “என்ன.. கேள்வி புரியலையா இல்லை பதில் சொல்ல தெரியலையா.. ” என வீர் கேட்க 

  வெகு நேரமாக அமைதியாக இருந்ததால் அவளின் பெயரை தெரிந்து கொள்வதற்காக அடுத்த ரெஸ்யூமை கையில் எடுத்தான். அதில் வைஷ்ணவி என பெயர் இருந்தது. 

  “சொல்லுங்க வைஷ்ணவி…” என்றான்.

  “சிம்பிள் நம்ம கம்பெனியோட போட்டி யார் கூடவோ, அவங்களோட மார்க்கெட்டிங் விளம்பரத்தை அப்படியே நானும் செய்வேன்..”

  அவள் உரைத்த பதில் கேட்டு, ‘ மக்கு  போல் பதில் உரைக்கிறாளே..’ என நிமிர்ந்து பார்த்தான். 

  அப்போது தான் இருவருமே பார்த்துக்கொண்டனர் .இன்று காலையில் சந்தித்தவராயிற்றே என இவளும் ஞாபகம் கொள்ள, அவனும் மீண்டும் சந்தித்த ஆனந்தத்தில் இதழ் விரித்தான். 

                                     😉

  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page