இதுவரை…
மற்றவர்களைப் போலவே தனக்கும் அழகான காதல் வாழ்க்கை அமைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தாள் வைஷு. இவளுக்காகவே முழுவதும் யோசித்து தன் சொத்தில் பாதியை அவளுக்கு எழுதி வைத்து தரத்தில் என்றும் நீ குறைந்தவள் இல்லை என வைஷூவிற்கு உணர்த்த நினைத்தான் வீர்.
இனி..
ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து வீர்-உடன் கிளம்பிய வைஷு அவனுடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளை முடித்த பிறகு தன்னுடைய தனிமை கேபினில் நிம்மதியாக அமர்ந்து சித்துவிற்கு அழைத்து பேசினாள்.
“ஹாய் சித்து, மூணு மாசத்திற்கு பிறகு நீ ஜெயிக்க போற விஷயத்தை இப்பவே சொன்னால் நம்புவியா..’
“அட வைஷ்ணவி, உன் திறமைக்கு முன்னால் மூணு மாசம் ரொம்ப அதிகம். அதை நீ எப்போவோ நிரூபிச்சிட்ட இப்பவும் இன்ப அதிர்ச்சி தர மாதிரி ஒரு விஷயம் வச்சிருக்கேன்னு தெரியுது சீக்கிரம் சொல்லு..”
சித்து மிகுந்த ஆர்வம் கொண்டான்.
“அந்த பைத்தியக்கார வீர் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா..? இன்னைக்கு காலையில் என்னை ரெஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு போனான்..”
“என்ன அவன் உன்னை கல்யாணம் செஞ்சுட்டானா..”
“நானும் அப்படித்தான் நினைச்சேன். கடைசியில் பார்த்தால் அவனுடைய சொந்த பிளாட், பிசினஸ் எல்லாத்திலேயும் எனக்கு பார்ட்னர்ஷிப் எழுதி வச்சிருக்கான்..”
“மை காட் நிஜமாவா, அப்படியா செஞ்சான் ..!!” என்னால நம்பவே முடியலை.
“எனக்கும் அதே அதிர்ச்சி தான். ஒரு பொண்ணு மேல ஆசை வந்தா இப்படியா கண்மூடித்தனமா இருப்பாங்க..”
“நீ சொல்ற விஷயத்தை எல்லாம் கேட்கும் போது அவன் உன்னை ஆழமா காதலிக்க ஆரம்பிச்சுட்டான்னு தெரியுது..”
“காதலா..? அவனுக்கு என் மேல ஆசை என் அழகுல மயங்கிட்டான்… ” என்றாள் .
“ஆனால் அவனைப் பொறுத்த வரைக்கும் இது காதல். இந்த காதல் இன்னும் வளரணும், அதுக்கு அப்புறம் தான் அது பொய்யென அவனுக்கு தெரியணும். அந்த வலி எப்படி இருக்கும்னு அவன் அனுபவிக்கணும்.
சரி இன்னைக்கு ஈவினிங் கண்டிப்பா நான் உன்னை பார்க்கணும் உனக்கு எப்போ வேலை முடியும்…”
“ரொம்ப கஷ்டம் சித்து, வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போகவே எட்டு மணி ஆகிடும்..”
“ சரி அப்போ உன் வீட்டுக்கே நான் வரேன்..”
“நீ என் வீட்டுக்கு வரியா அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசணும்..”
“வந்து சொல்றேன்…”
சித்துவிடம் பேசிவிட்டு வைஷ்ணவி அழைப்பை துண்டிக்க, தலைக்கு மேல் இருந்த மற்ற வேலைகளை கவனித்தாள்.
வேலையை முடிப்பதற்கு சரியாக அவள் கணித்த இரவு எட்டு மணி ஆகி இருந்தது.
தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு அவள் வெளியே வர, கார் பார்க்கிங்கில் காத்துக் கொண்டிருந்தான் வீர்.
“Sorry வைஷு, உனக்கு இன்னைக்கு நிறைய வேலையை கொடுத்துட்டேன்..”
“பரவால்ல சார், நீங்க குடுக்குற வேலையை முடிக்கிறது தானே என் வேலை, அதுக்கு தானே சம்பளம் வாங்குறேன்..”
“ஆனால் இப்போ நீ இந்த கம்பெனியோட ஓனர் ஆச்சே..”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார், முதல்ல அந்த பத்திரத்தை கேன்சல் பண்றதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு சொல்லுங்க..”
“கேன்சல் பண்றதா, என்ன நினைச்சுட்டு இருக்க மறுபடியும் நாம இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போடுற வரை அந்த பத்திரம் செல்லும். சரி வா உன்னை வீட்டில் டிராப் பண்றேன்..”
அவளுக்காக கார் கதவையும் திறந்து வைத்தான்.
“நீ என் பக்கத்துல உட்காரனும்னு நான் ஆசைப்பட்டேன் . மத்தபடி உனக்கு பின்னாடி தான் உட்காரனும்னா நீ பின்னாடியே உட்காரலாம்..” என்றான்.
“பரவால சார், உங்களை நம்பி எவ்வளவு தூரம் வேணாலும் பயணிக்கலாம். நீங்க ஒரு ஜென்டில்மேன்..”
“அன்னைக்கு என்னுடைய படுக்கை அறையில் நடந்த விஷயத்தை நினைத்து குத்தி காமிச்சு பேசுற மாதிரி தெரியுது..”
“அப்படியெல்லாம் இல்ல சார், நான் அதை அன்னைக்கே மறந்துட்டேன்..”
‘அடிப்பாவி எவ்வளவு முக்கியமான மேட்டர் அது, அன்னைக்கே மறந்துட்டேன்னு சொல்றாளே..’ முனவிக் கொண்டே டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான் வீர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு வீர்-ன் கார் ஹாஸ்டல் வாசலில் நிற்க , அவள் இறங்குவதை ஹாஸ்டல் வாசிகள் கண்டனர்.
“அங்க பாருங்கடி போகும்போது பஸ்ஸில் போனாள். வரும் போது காரில் வந்து இறங்குறாள். சரியான ஆள் தான் இவள்..”
வைஷ்ணவியின் அருகில் நின்றிருந்த வீர் , எட்டிப் பார்க்கும் மற்ற பெண்களை கவனித்தான்.
“அவங்க எல்லாம் உன் ஃப்ரண்ட்ஸா..”
வைஷ்ணவி ஹாஸ்டலை திரும்பி நோக்க அவள் பார்வை பட்டதும் அந்தப் பெண்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
“ஆமா… ”
“அப்போ உள்ள போனதும் என்னை பற்றி கேட்பாங்க… என்கிட்ட உண்மையை மறைச்சு சமாளிச்ச மாதிரி அவங்க கிட்டயும் இருக்காத, அங்கேயாவது உண்மையை சொல்லு..”
ஒன்றும் தெரியாத அப்பாவி போல் உள்ளுக்குள் காதலை மறைத்து நிற்கும் பெண்ணாய் பாசாங்கு செய்தாள்.
தன் விழி காண வெட்கம் கொள்ளும் அவளின் செய்கையை ரசித்தவன் போய் வருவதாக கூறி கிளம்பினான்.
“அப்பாடி எவ்வளவு நேரம் நடிக்கிறது..🙄 காலையில் ஆரம்பிச்சா நைட் 9 மணி வரைக்கும் இவன் கிட்ட நடிக்க வேண்டியதா இருக்கு… ”
பெருமூச்சு ஒன்றை விட்டவள் ஹாஸ்டலினுள் அடி எடுத்து வைத்து நடக்க, மீண்டும் ஒரு கார் வந்து நின்றது.
“அதுக்குள்ள மறுபடியும் வந்துட்டானா..”
யோசனையோடு அவள் திரும்பிப் பார்க்க சித்துவின் கார் தான் அது.
“அட சித்து நீயா, முதல்ல உன்னுடைய காரை காம்பௌண்ட் குள்ள கொண்டு வா.. அந்த வீர் இப்போது தான் என்னை டிராப் பண்ணிட்டு போனான். திரும்பவும் வந்திடப் போறான்…”
வைஷு விஷயத்தை கூறியதால் சித்து காரை காம்பவுண்டினுள் நிறுத்திவிட்டு அவளுடன் இணைந்து வீட்டிற்கு நடந்தான்.
ஹாஸ்டலின் பக்கவாட்டு நடைபாதையில் இருவரும் நடந்து செல்ல மற்ற பெண்கள் மேலே நின்று வேடிக்கை பார்த்தனர்.
அவள் வீட்டினுள் நுழையும் சமயம் ஐயாசாமி டிவியை கவனித்தவாறு கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருந்தார்.
தன் மகள் தான் வருகிறாள் என நினைத்து எதார்த்தமாய் திரும்ப அழகான ஒரு ஆண்மகன் வந்திருப்பது கண்டு உடனே எழுந்து நின்றார்.
“வாம்மா என்ன இவ்வளவு நேரம் ஆச்சு, வேலை அதிகமா ..? இவர் யாரு..?”
ஏதோ பொறுப்பான தகப்பன் போல் விசாரிப்பதை முறைத்துப் பார்த்தாள் வைஷ்ணவி.
“ உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும் இவருக்கு நல்லாவே தெரியும் எந்த நாடகமும் தேவையில்லை போய் உட்காரு..”
தன்மகள் உரைத்தது கேட்டு அடக்கிக் கொண்டு அமர்ந்தார்.
“ உட்காரு சித்து, சாப்பிட என்ன வேணும்..”
இதுவரை தன்னிடம் தன் மகள் இது போன்று ஒருமுறை கூட கேட்டதில்லையே என பார்த்தார் ஐயாசாமி.
“பரவால்ல வைஷு, நான் வந்த விஷயத்தை சொல்றேன். அந்த வீர் உனக்கு பாதி சொத்தை எழுதி வச்சான்ல அதை என் பெயருக்கு நீ மாற்றிக் கொடுக்கணும் . பதிலுக்கு நீ கேட்கிற பணத்தை நான் கொடுக்கிறேன். அது மட்டும் இல்லாம நம்மளோட டீலிங்கில் மிச்சம் இருக்க பத்து லட்சத்தையும் உனக்கு கொடுக்கிறேன்..”
“என்னமா இது..!!! உன் பெயரில் சொத்து எழுதி வச்சாங்களா யாரது..?”
தன் தந்தையிடம் இதுவரை எதுவும் மறைத்ததில்லை கேட்டதும் எதார்த்தமாக விஷயத்தை உரைத்தாள்.
“ஓ… இதுதான் விஷயமா..” என யோசித்தார் ஐயாசாமி.
“அவன் உனக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்கு என்ன மதிப்போ அதைவிட இரண்டு மடங்கு நான் பணம் தறேன் ..” என்றான் சித்து.
” ஏன் தம்பி அதைவிட இரண்டு மடங்கு பணம்னா உங்களுக்கு நஷ்டம் ஆகாதா..” என ஐயாசாமி கேட்க
“நான் இப்போ செய்ற பிசினஸ் என்னுடைய திறமையை நிரூபிக்கிறதுக்காக பண்றது. மத்தபடி என் அப்பா எனக்கு சேர்த்து வச்ச சொத்து கோடி கணக்கில் இருக்கு.. அந்த வீர் எப்படியாவது தோற்று போகணும் அதுக்கு என்ன வேணா செய்வேன்..”
வைஷ்ணவியும் இதை நல் வாய்ப்பாக நினைத்தாள். சொத்தை இவனுக்கு எழுதி வைத்துவிட்டு இரு மடங்கு பணத்தை வாங்கிக் கொண்டால் லாபம் தானே என தோன்றியது.
“எனக்கு ஓகே சித்து, பத்திரம் கூட என்கிட்ட தான் இருக்கு நீ ஏற்பாடு பண்ணு நான் கையெழுத்து போடுறேன்..”
“அவசரப்படாதம்மா உன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வேண்டாமா…” என்றார் ஐயாசாமி.
“யோவ் உனக்கு தான் ஒன்னும் புரியலை சொத்துக்கு பதிலா தான் இரு மடங்கு பணம் தரேன்னு சொல்றாரே, இதில் எனக்கு என்ன நஷ்டம் இருக்கு..”
“இவர் உனக்கு தர பணம் எத்தனை வருஷத்துக்கு பத்தும், ஒரு பத்து வருஷம் மிஞ்சிப் போனா 20 வருஷம், அதுக்கப்புறம் நீ மறுபடியும் உழைத்து சம்பாதிக்கணும்..”
“அங்கிள் இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க… ” என சித்து கேட்க
“உங்களுக்கு இந்த சொத்து மேல ஆசை கிடையாது. அந்த வீர்-ஐ ஜெயிக்கணும் அவ்வளவு தானே, என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க சீதனமா அந்த சொத்து உங்க வீட்டுக்கே வந்து சேரும்… என் பொண்ணோட வாழ்க்கையும் செட்டில் ஆன மாதிரி ஆகிடும் . நீங்களும் போட்டியில் ஜெயிக்கலாம் என்ன சொல்றீங்க..”
ஐயாசாமியின் யோசனையை வைஷ்ணவி சற்றும் எதிர்பார்க்கவில்லை இதற்கு சித்து சம்திப்பானா என்ற கேள்வி இருந்தாலும், ஒரு வேளை சம்மதித்தால் தன் வாழ்க்கையே செட்டில் ஆகிவிடும் என பேராசை எழுந்தது.
“என்ன வைஷ்ணவி உன் அப்பா என்னென்னமோ பேசுறாரு நீயும் அமைதியா இருக்க…”
“அவர் சரியா தான் பேசுறார் சித்து, நீ எவ்வளவு பணம் கொடுத்தாலும் கொஞ்சம் வருஷத்துக்கு பிறகு என்கிட்ட பணம் இருக்காது . அதுக்கு பதிலா உனக்கு மனைவியா வாழ்ந்தால் என்னுடைய வாழ்க்கை செட்டில் ஆகிடும்.
நான் மிரட்டலை ஒரு யோசனையா தான் இதை சொல்றேன் நீ தான் பதில் சொல்லணும்…”
சித்து அமர்ந்த இடத்தில் எந்த பதிலும் கூறாது தன் போனை ஒற்றை விரலால் தட்டியவாறு யோசனையில் இருந்தான்.
“ஓகே கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனால் கல்யாணம் முடிஞ்ச கையோடு வீர் எழுதிக் கொடுத்த சொத்துக்களை என் பெயருக்கு மாற்றனும் சம்மதமா..”
“எனக்கு ஒரு செட்டிலான வாழ்க்கையை கொடுக்க போற, ஆப்ட்ரால் இந்த பாதி சொத்தை உனக்கு தர மாட்டேனா சித்து.. ”
“ஓகே அப்போ நாளைக்கு நமக்கு கல்யாணம்.. ” என சித்து கூற
“நாளைக்கே வா…!!! ”
😉
