இதுவரை…
நீலாவதியை சமாளிக்கும் பொறுப்பை வீர் வைஷ்ணவியிடமே வழங்க தன் பித்தலாட்ட திறமையால் அதை சரியாக முடித்தாள் வைஷூ. வைஷூவின் நெற்றியில் கணவனாய் திலகம் வைத்தவன் தன்னுள் இருந்த அன்போடு அவளை நெருங்கி முத்தமிட்டான்.
இனி….
வீர்-ன் அத்தை நீலாவதி அனைவருடனும் கோவிலுக்கு கிளம்பும் முன், வீர் மற்றும் வைஷூவின் முதல் இரவிற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு சென்றிருந்தார்.
கோவிலில் வைஷூவின் நெற்றியில் வைத்த திலகம் இன்னும் அப்படியே இருக்க, அந்தத் தோற்றத்தில் வைஷூவை கண்டவனுக்கு அவள் மீதிருக்கும் கோபத்தையும் மறைக்க வைத்தது.
வீர் தந்த நெற்றி முத்தத்தில் அதிர்ச்சி கொண்டவள் அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் இதழ் முத்தத்தில் மயங்கி நின்றாள்.
வீர் கொடுக்கும் முத்தத்தில் அன்பு கலந்த ஏக்கம் மட்டுமே தங்கி இருந்தது.
முத்தம் மென்மையானதாக இருக்குமா இல்லை இவன்தான் அப்படி கொடுக்கிறானோ என அவளுக்குள் கேள்வி… முத்தத்தின் பாதை நின்றதும் மெல்ல கண்கள் திறந்தாள்.
தன் கன்னங்களை கையில் ஏந்தி எதிரே காட்சியளித்த வீர்-ன் முகத்தில் கண்கள் நீர் விட்டிருந்ததை கண்டாள்.
“ஏன் வைஷு..? நான் காதலிச்ச என்னுடைய வைஷ்ணவியா நீ அப்படியே இருந்திருக்கலாமே, இப்படி ஒரு ஏமாற்று வேலை உனக்குள்ள எதுக்கு வந்துச்சு..”
கண்ணீரோடு அவன் கேட்ட கேள்வியில் நினைவு திரும்பியவள், அவனை நெஞ்சில் கை வைத்து சட்டென விலக்கி விட்டாள்.
‘இவ்வளவு நேரம் இவன் கொடுத்த முத்தத்தைப் பெற்றுக் கொண்டு ஏன் அமைதியாக இருந்தோம்..’ என எரிச்சல் அடைந்தாள்.
“சொல்லு வைஷு, என்னுடைய வைஷ்ணவியாய் அப்படியே இருந்திருக்கலாமே ஏன் உனக்குள்ள இந்த ஒரு பொய் நாடகம் வச்சிருக்க..”
வேதனையோடு அவளின் கரங்களைப் பற்றி கேள்வி கேட்டான்.
“என்னை தொடாத விலகி நில்லு..”
சட்டென்று அவனை விலக்கி விட்டாள்.
“பாக்குற பொண்ணுங்க மேல எல்லாம் ஆசை வச்சு தப்பா நடந்துக்கிற நீ, என்னை கேள்வி கேட்கிறியா.. ” என அவள் கேட்க
“உன் வாயால் என்னைப் பார்த்து நீ இப்படிலாம் பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு வைஷூ…
சித்து என்னைப் பற்றி உன்கிட்ட என்ன வேணா சொல்லிருக்கலாம் . ஆனால் என் கூட பேசி பழகின பிறகும் நீ இப்படி பேசுறது தான் வருத்தமா இருக்கு..”
அவன் பேசும் போது அந்த கண்களை கவனித்தாள். அதில் இருக்கும் நீர் உண்மையா என கேள்வி எழுந்தது. ஒருவேளை இவன் நம்மை உண்மையாக காலித்தானோ என குழப்பம் கொண்டாள்.
‘ஆ…. வைஷூ அவன் கண்ணை பார்க்காத நீ ரொம்ப குழம்பி போற… ’
தனக்குள்ளேயே அறிவுரை கூறிக் கொண்டவள் அவனிடம் மேலும் பேசினாள்.
“இங்க பாரு… நடந்த குழப்பத்துக்குலாம் அந்த சித்து தான் காரணம். உன்னை பழிவாங்க அவன் தான் இந்த நாடகத்தை போட்டான். உங்களுக்குள்ள தான் சண்டை. ஆனால் இதில் நான் பலியாடா மாறிட்டேன்..”
அவளின் பதிலில் சிந்திய தன் கண்ணீரை துடைத்து கொண்டான் வீர்.
” கடைசி வரை நீ உன்னோட தப்பை உணர மாட்டல்ல, அவன் உனக்கு எவ்வளவு பணம் கொடுத்திருந்தாலும் இன்னொருத்தரோட உணர்வுகளோட விளையாட நீ முடிவு செஞ்சிருக்க கூடாது. நான் உன் கையைப் பிடித்து என் காதலை சொன்னப்பயாவாது இந்த நாடகத்தை பற்றி எனக்கு சொல்லிருக்கனும்.
இப்ப வரை நீ நினைக்கிறது தான் சரின்னு நிக்கிற, உனக்கெல்லாம் இப்படி புத்திமதி சொன்னா வேலைக்காகது..”
அவன் ஆவேஷமாக பேசினான். அடித்து விடுவானோ என அச்சம் கொண்டாள்.
“இங்க பாரு என்னை அடிக்கற வேலை எல்லாம் வச்சிக்காத… ”
அவள் விரல் நீட்டி மிரட்டி கொண்டிருக்க அந்த இடைவெளியில் தன் சட்டையை கழற்றி எறிந்தான்.
என்ன செய்கிறான் என வியந்த நொடியில் அவளின் புடவை முந்தானை வீர் -ன் கை பிடிக்குள் இருந்தது.
“என்ன பண்ற… விடு என் புடவையை..”
“உனக்கு பணம் தானே முக்கியம் நானும் லட்ச கணக்கில் தரேன், அமைதியா எனக்கு ஒத்துழை… ”
“வேண்டாம் வீர், நான் அந்த மாதிரி இல்லை என்னை நெருங்காத…”
இவர்களின் வாய் விவாதம் ஒருபுறம் தொடர, வீர்-ன் கையில் சிக்கிய முந்தானை முழுதாய் அவனிடமே சென்றது.
வைஷூ இது நாள் வரை செக்ஸியாக தோற்றமளிக்கும் உடைகளை கூட அணிந்துள்ளாள். ஆனால் வழுகட்டாயமாக தன் புடவையை உறுவியதும் அவளின் கரங்கள் குறுக்காய் மறைத்து காவல் காத்தது. அதை பார்த்து சிரித்தான் வீர்.
“எதுக்கு வைஷு இப்படி நடிக்கிற, நான் தான் நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன்னு சொன்னேனே, உன் கையை இறக்கிட்டு வந்து என்னை கட்டிப்பிடி..”
“செருப்பு பிஞ்சிடும்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் செய்ய மாட்டேன் உன் பணம் வேணும்னு நான் கேட்டேனா ஒழுங்கா வெளிய போயிரு..”
“அட இவ்வளவு சொல்லியும் உன்னோட நாடகத்தை கண்டினியூ பண்ற, ஒரு வேலை பணத்தை பார்த்தால் தான் சம்மதம் சொல்வியா.. ”
அவளிடம் கேள்வி கேட்ட கையோடு தன் கையில் இருந்த புடவையை படுக்கையில் எறிந்தவன், கம்போர்டை திறந்து கட்டு கட்டாக பணத்தை வெளியே எடுத்தான். மார்பின் குறுக்காய் மறைத்திருந்த அவளின் ஒரு கையை இழுத்து உள்ளங்கையில் பண கட்டுகளை சத்தத்தோடு வைத்தான்.
“இந்தா இதுல ஒரு லட்சம் இருக்கு போதுமா இல்ல மறுபடியும் நாடகம் போட்டு பேரத்தை ஏத்த போறியா..”
அவன் கட்டிய மாங்கல்யம் அவளின் நெஞ்சை உராசியவாறு இருக்க, இவன் தந்த பணக்கட்டுகள் அதற்கு நேராய் அவளின் கையில் இருந்தது.
தன் கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தவள், அதே வேகத்தோடு அவனின் கன்னத்தில் அறைந்தாள்.
நடப்பது அனைத்தும் அவனின் திட்டமாயிற்றே, அடியை வாங்கிக் கொள்வானா என்ன..? பாதி வழியிலேயே அவளின் கரத்தை தடுத்து பிடித்தான்.
“எதுக்காக என்னை அடிக்கிற..? நான் கொடுத்த பணம் உனக்கு பத்தலையா ..”
” உன் வாயை கிழிச்சிடுவேன் வீர் , என்னை பற்றி என்ன நினைக்கிற, நீ கொடுக்கிற அல்ப காசுக்காக உடம்பை விற்பேன்னு நினைக்கிறியா? எனக்குன்னு ஒரு மனசு இருக்கு, நானும் கல்யாணம் குடும்பம்னு நேர்மையா வாழ்ற வாழ்க்கையை தான் எதிர்பார்க்கிறேன். அதில் என் கணவனுக்கு மட்டும் தான் என் உடல் சொந்தம். இன்னொரு முறை நான் சொல்றதை புரிஞ்சுக்காம பணத்தை கொடுக்கிறேன் நடிக்காமல் கிட்ட வான்னு சொன்ன நான் மனுசியாவே இருக்க மாட்டேன்..”
அவளின் வார்த்தைகள் கேட்டு வீர்- ன் இதழ் ஓரம் நக்கலான புன்னகை வந்தது.
“உன்னுடைய நேர்மையை, உன்னுடைய கற்பை சோதிச்சா தாங்கிக்க முடியலைல, எனக்கும் அதே மாதிரி தான் இருக்கும். உன்னுடைய உடம்புக்கு ஆசைப்பட்டு தான் நான் காதலிச்சேன்னு நீ சொல்லும் போதெல்லாம் ஓங்கி அரையனும்னு தோணும்..”
அவன் கூறிய பதில் கேட்டு பிடிக்குள் மாட்டியிருந்த தன் கரத்தை சட்டென விலக்கிக் கொண்டு முறைத்துப் பார்த்தாள்.
“உன்னுடைய காதல் உண்மையோ பொய்யோ, அது எனக்கு தேவையில்லை. இப்படி என் புடவையை உருவி தான் நீ நிரூபிக்கணுமா …”
“நான் என்ன பண்றது வைஷு, எந்த விஷயத்தில் உன்கிட்ட நேர்மை இருக்குன்னு எனக்கு தெரியலை. நீ பாக்குற பார்வை… பேசுற பேச்சு… நடந்துக்கிற விதம்… எல்லாமே பொய்யா தான் இருந்திருக்கு. நேர்மைனா என்ன..? அதை குற்றம் சொன்னால் எவ்வளவு வலிக்கும்னு எப்படியாவது உனக்கு புரிய வைக்க நினைச்சேன். கடைசியா உன் கற்பு மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.
நல்ல வேலை எங்க நான் கொடுக்கற பணத்துக்கு மயங்கி எனக்கு ஒத்துழைச்சிடுவியோனு பயந்துட்டே இருந்தேன். அப்படி மட்டும் நீ செஞ்சிருந்த என் உயிரே போயிருக்கும்.
இதுலயாவது நீ கண்ணியமா இருக்கியே… “
பேசிக்கொண்டே வீசி எறிந்த அவளின் புடவையை எடுத்து அவளுக்கு போற்றி விட்டான். புடவையை மேலோட்டமாய் அணிந்து கொண்டவள் அவனை மீண்டும் பார்த்தாள்.
“நல்லா கேட்டுக்கோ வைஷு, இது வரைக்கும் நீ வாழ்ந்ததெல்லாம் இருக்கட்டும், இன்னையிலிருந்து நீயும் நானும் கணவன் மனைவி. இந்த பந்தம் எத்தனை நாட்களுக்கு தொடரும்னு நான் சொல்லும் வரை அதை முறிச்சிக்கிற ஆசை உனக்கு வரக்கூடாது. எல்லா தம்பதிகளை மாதிரியும் காதல், அன்பு அக்கறை, கோபம், காமம்ன்னு நமக்குள்ள எல்லாமே இருக்கும். காசுக்கும் மனித உணர்வுகளுக்குமான வித்தியாசத்தை நீ புரிஞ்சிக்கற காலமும் வரும்..”
” மஹூ… உன்னை நான் காதலிப்பேனா.. ?நெவர். எனக்கு உன்னை கண்டாலே பிடிக்காது. உன்னை கணவனா ஏத்துக்கிற சூழ்நிலை வந்தா நான் தற்கொலையே செஞ்சிப்பேன்..”
“அவசரப்படாத வைஷு தேவைப்பட்டால் நானே உன்னை கொலை செய்வேன் அதுவரைக்கும் உயிரோடு இரு… அதுபோக எக்காரணத்தைக் கொண்டும் நம்ம கல்யாணம் எந்த சூழ்நிலையில் நடந்துங்கிற உண்மை என் அத்தைக்கு தெரிய வரக்கூடாது.
நான் சொன்னதை நினைவில் வச்சிக்கோ…”
விரல் நீட்டி மிரட்டியவாறு தன் மன எண்ணத்தை உரைத்த வீர் வெளியேறினான். அறை கதவில் கை வைத்தவன், திரும்பிப் பார்க்காமலேயே அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
“உன் அனுமதி இல்லாம புடவையை இழுத்ததுக்கு மன்னிச்சிடு.. ”
பதிலுக்கு அவளிடம் அவன் எதையும் எதிர்பார்க்கவில்லை. அறையை விட்டு வெளியேறியவன், ஹால் சோஃபாவில் அமைதியாக படுத்துக் கொண்டான்.
இவனின் அதிரடி மருத்துவத்தை பெற்ற அதிர்ச்சி தாங்க முடியாமல் படுக்கையில் அமர்ந்தாள் வைஷூ.
“இவன் என்ன பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கிறான். நல்ல வேலை எதுவும் நடக்கலை. இவன்கிட்ட இருந்து எப்படி விடுதலை வாங்கி கிளம்பலாம்னு நான் யோசிக்கிறேன். இதில் விட்டா என்னை அம்மா ஆக்கிடுவான் போல.. ”
புடவையை கட்டிக்கொண்டே அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.
“ஜாக்கிரதையா இரு வைஷு, அவனை கோபப்படுத்தாத சைக்கோ ராஜா இதே மாதிரி எல்லா சமயமும் விட்டுட்டு போவான்னு சொல்ல முடியாது.. ”
அரைகுறையாக தன் புடவையை கட்டிக்கொண்டு மீண்டும் அவன் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக உள்பக்கமாக தாழிட்டு விட்டு ஏசியை ஆன் செய்து உறங்கினாள்.
சில நிமிடங்களுக்கு வீர் நடந்து கொண்ட விஷயத்தை நினைத்து அவள் பதற்றத்தில் இருந்தாலும், சித்து உடன் நடந்த திருமண ஏற்பாட்டில் சரியாக உறங்காததால் இப்போது நிம்மதியாக உறங்க துவங்கினாள். ஆனால் ஹாலில் படுத்திருந்த வீர்-க்கு நடு இரவு தாண்டியும் உள்ளுக்குள் இருந்த ரணம் அவனை உறங்கவிடவில்லை.
அதிகாலை நேரத்தில் தான் அவனுக்கு உறக்கம் கட்ட கண் அயர்ந்தவன் சூரிய ஒளி முகத்தில் மட்டும் கூட எழவில்லை.
காலை விடியலில் வீர்-ன் பிளாட் காலிங் பெல்லை யாரோ தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர் . அறைக்குள் இருந்த வைஷ்ணவி உறக்கம் கலைந்து எழுந்து வந்தாள்.
“கும்பகர்ணன் போல தூங்குறதை பாரு இவ்வளவு சத்தமா பெல் அடிக்கிறாங்க எந்திரிச்சு போய் திறக்கிறானா..”
கண்ணை கசக்கியவாறு அவனை திட்டிக்கொண்டே கதவை திறந்தாள் வைஷ்ணவி. வெளியே நின்றிருந்த ஆளை பார்த்ததும் நொடியில் அவளின் முக பாவனை அதிர்ச்சியில் மாறியது. ஏனெனில் வந்திருந்தது அவளுக்கு..
😉
