இதுவரை…
வீர், வைஷ்ணவியை தொடர்ந்து தன்னுடனே வைத்துக் கொள்ள, அவளோ தன்னை ஆட்டிப் படைக்கிறான் என கோவம் கொண்டாள். டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவியை ஒருவன் அழைக்க, அவனை கண்டதும் அவள் வியக்க காரணம்..?
இனி…
“ வைஷூ..?”
நீயா..!”
தன் பெயரை அழைத்தவனின் முகத்தை வைஷு நிமிர்ந்து பார்க்க, அதிர்ந்து போனாள்.
“நீ எப்படி இங்க ”
“என்ன வைஷூ, நான் ஒருத்தன் இருக்கேன்னு சுத்தமா மறந்துட்ட போல ஆனா என்னால உன்னை பார்க்காம இருக்க முடியலை. ஐ மிஸ் யூ..”
அவளைப் பார்த்து ரொமான்டிக்காக பேசியவாறு நெருங்கி வந்தவன் அணைக்கவும் செய்தான்.
அச்சமயம் தான் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கி முடித்த வீர், வைஷ்ணவியை தேடி வந்தான். சரியாக அவன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்கின் மறுபுறம் வந்து நிற்க, அச்சமயம் வைஷூ கையில் தான் வாங்க வேண்டிய பொருளின் விவரங்களைப் படித்துக் கொண்டிருந்தாள்.
“ இங்க வேற யார் கூடயாவது பேசிட்டு இருந்தியா..?”
” இங்கே என்னை தவிர உன்னுடைய கண்ணுக்கு யாராவது தெரியுறாங்களா..” என்ன அவள் கேட்க,
” இல்லை..”
” அப்புறம் ஏன் இப்படி கேக்குற நகரு பில் போடணும் ..”
ஆனால் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது போல் சத்தம் கேட்டு தான் இவன் வந்தான். அந்த இடத்தை ஒருமுறை நன்கு கவனித்தவன் பில் கவுண்டர் சென்றான்.
ஏற்கனவே வீர் வாங்கிய பொருட்களுக்கு பில்லை போட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் வைஷு அவள் கொண்டு வந்த பொருட்களை அருகில் வைக்க,
“எல்லாத்துக்கும் ஒரே பில்லா போட்டுருங்க..” என்றான் வீர்.
“எனக்காக நீ பணம் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. என்னுடைய பில்லை நானே கட்டிக்குவேன்..”
வீராப்பாய் பேசினாள் வைஷூ, வீர் தன்னுடைய பில்லிற்க்கான பணத்தை கொடுத்து விட்டு அவளுக்காக காத்திருந்தான்.
“மேடம் உங்களுடைய பில் Rs.540 ”
“Gpay பண்றேன்..” என தன் போன் அக்கவுண்டை ஓப்பன் செய்தவள் பேலன்ஸ் ஜீரோ காண்பித்ததை அப்போதுதான் மீண்டும் நினைவு கொண்டாள்.
அவளின் போனை எட்டிப் பார்த்த வீர் கண்டும் காணாதது போல் எங்கோ வேடிக்கை பார்த்தான்.
‘இப்போ என்ன பண்றது..? நம்ம அக்கவுண்டில் பணம் இல்லைங்கிறதை மறந்துட்டு இவன்கிட்ட வீரப்பாய் பேசிட்டோமே..’
“மேடம் சீக்கிரம் பே பண்றீங்களா உங்களுக்கு அப்புறம் ஆளுங்க நிக்கிறாங்க..”
கையில் பணம் இல்லை எனக் கூறினால் அசிங்கமாக போகுமே என வெட்கம் கொண்டாள். வீர்-ஐ திரும்பி நோக்க அவனோ கண்டும் காணாதது போல் எதார்த்தமாய் நின்றான்.
“Sorry, நான் இந்த பொருள் எல்லாத்தையும் ரிட்டர்ன் வச்சிடறேன் பில் போட வேண்டாம்..”
அவள் பொருட்களை கையில் எடுக்க வீர் அதை பிடுங்கி வைத்தான்.
“நான் பணத்தை கொடுக்கிறேன்.. ”
வீர் உடனே தன் மொபைலில் இருந்து 540 யை செலுத்தி பொருட்களை வாங்கிக் கொண்டான்.
பொருட்களை பையில் போட்டுக்கொண்டு வீர் அங்கிருந்து நடைபோட இவள் பின்தொடர்ந்தவாறு கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள்.
“இங்க பாரு நீ ஒன்னும் எனக்காக பணம் கொடுக்க வேண்டாம். அப்புறம் இதுக்கும் சேர்த்து வீட்டுக்கு வந்து என்கிட்ட வேலை வாங்குவ, எனக்கு ஏற்கனவே டயர்டா இருக்கு இதுக்கு மேல முடியாது..”
“உனக்கு என்ன பிரச்சனை அமைதியா வண்டியில் உட்காரு..”
பொருட்களை பின் சீட்டில் வைத்துவிட்டு காரை ஓட்டுவதற்கு தயாராக அமர்ந்தான். வேறு வழியின்றி இவளும் மனமுனுத்துக் கொண்டே அருகில் அமர்ந்தாள்.
“உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..? எனக்கு தான் எல்லா பிரச்சனையும், இவன் வேற என்னை தேடி வந்துட்டான்..”
“என்ன..? இப்ப என்ன சொன்ன..”
“நான் ஒன்னும் சொல்லலையே உன்னால எனக்கு தான் பிரச்சனைனு சொன்னேன். முதலில் காரை எடு வீட்டுக்கு போலாம்…” என்றாள்.
பதற்றமாய் பேசியவள் டிபார்ட்மென்ட் ஸ்டோரை பார்த்தவாறு தயங்கி அமர்ந்திருந்தாள்.
அவற்றை எல்லாம் கவனித்தவாறு வீர் காரை ஓட்டினான்.
“இங்க பாரு, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு போய் சமைக்க முடியாது சாப்பாடு வெளியே வாங்கிட்டு போலாம்..”
“அப்படிலாம் விட முடியாது. சும்மாவா உனக்கு மாசம் இருபதாயிரம் சம்பளம் தரேன்..”
“நீ ரொம்ப மோசம், சரியான கொடுமைக்காரன் உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன் பாரு…”
அவள் சிணுங்கிக் கொண்டே காரில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் அப்பார்ட்மெண்ட்டை நெருங்கினர். வீட்டிற்குள் சென்றதும் சமையல் வேலை செய்ய வேண்டுமா என்று அலுப்புடன் அறைக்குள் நுழைந்தவள் அப்படியே டயர்டாக படுத்துக் கொண்டாள்.
என்னவோ தெரியவில்லை இவனின் படுக்கை அறை தான் அவளுக்கு பழக்கமானதாக இருக்கிறது. அதே வீட்டில் மற்றுமொரு படுக்கையறை காலியாக இருந்தாலும், இவனின் அறைக்குள் தான் அவளின் கால்கள் தானாக செல்கிறது.
அசதியில் கண் அயர்ந்தவளின் உறக்கத்தை அவளின் தந்தை ஐயாசாமி கலைத்து வைத்தார்.
மொபைலின் ரிங்டோன் சத்தத்தில் திடுக்கிட்டு கண்விழித்தவள் எரிச்சலோடு அழைப்பை ஏற்றாள்.
“யோவ் … என்ன உன் கையில் செலவுக்கு காசு இல்லையா..”
“என்னம்மா, நீ தான் அப்பாவுக்கு ஒரு போன் கூட பண்ணலை பாசமா நான் கூப்பிட்டாலும் முகத்தில் அடிச்ச மாதிரி பேசுறியே..”
“ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத எல்லாம் உன்னால தான் ,உன்னால தான் நான் இந்த வீர் கிட்ட மாட்டிகிட்டு அவதிப்படுறேன்..”
“ஏன்மா அவன் உன்னை அடிச்சு கொடுமை செய்றானோ..”
“இன்னும் அவன் அதை வேற செய்யணும்னு நீ ஆசைப்படுறியா..”
“நான் எதுக்கு அப்படியெல்லாம் ஆசைப்பட போறேன் நீ அங்கே இருக்க வேண்டாம் முதலில் கிளம்பி வந்துடு..”
“ஆமா இவர் பெரிய ராஜதுரை, இவர் சொல்லிட்டா ஒன்னும் பிரச்சனை கிடையாது முதலில் நீ எதுக்கு கால் பண்ணனு சொல்லு…”
“ அது, நம்ம ஹாஸ்டல் உடைய கரண்ட் பில் கட்ட வேண்டியது இருக்கு. இன்னைக்கு காலையிலேயே பியூஸ் புடுங்கிட்டாங்க, இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் சமாளிச்சுக்கோங்கன்னு ஹாஸ்டல்ல தங்கியிருக்க பிள்ளைங்க கிட்ட எல்லாம் சொல்லி அனுப்பிருக்கேன். நாளைக்கு காலையில் கரண்ட் வரலைனா…”
“அதானே பார்த்தேன் நீயாவது பாசத்தில் கால் பண்றதாவது அவங்க கிட்ட இருந்து வாங்கின பணத்தை குடிச்சே காலி பண்ணல்ல, இப்ப நீயே கரண்ட் பில் கட்டு என்கிட்ட ஒத்த பைசா இல்லை..”
“என்னமா இப்படி என்கிட்டயே பொய் சொல்ற, அந்த சித்து உனக்கு 10 லட்சம் கொடுத்தானே, நீ கூட அப்பாகிட்ட சொன்னியே..”
“எல்லாம் நாடகம், கொடுத்த மாதிரி கொடுத்துட்டு என்னுடைய அக்கவுண்ட்டை ஹேக் பண்ணி பணத்தை திரும்ப எடுத்துக்கிட்டான். எனக்கு தேவையான பொருள் கூட வாங்க காசு இல்லாம அந்த வீர் தான் பணத்தை கொடுத்து பொருளை வாங்கி கொடுத்தான் ரொம்ப அவமானமா போச்சு…”
“ஓ, அவன் உனக்கு பணம் கொடுக்குறானா, அப்போ ஏன் இந்த கரண்ட் பில்லையும் அவன் கிட்ட கேட்டு பார்க்க கூடாது..”
“யோவ் வாயில் நல்லா வந்துடும் முதல்ல போனை வை..”
“அம்மாடி அம்மாடி…”
ஐயாசாமி கெஞ்சி கொண்டிருந்த சமயமே அழைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது தான் அறைக்குள் உணவு வாசனை நுழைந்ததை அவள் மோப்பம் பிடித்தாள். எழுந்த பசிக்கு வயிற்றை தடவியவாறு அவள் வெளியே வர மேசையில் இரவு உணவை அடுக்கிக் கொண்டிருந்தான் வீர்.
‘பரவாயில்லையே அவனே சமைச்சுட்டான். நாம் செத்தாலும் எழுந்து வந்து சமைக்க சொல்லுவான்னு நினைச்சேன்..’
தோசையை சுட்டு சுடச்சுட தட்டில் போட்டுக் கொண்டவன், அந்தத் தட்டுடன் நாற்காலியில் அமர்ந்தான். தயார் செய்த சட்னியை தட்டில் வைத்து உணவை ருசிக்கவும் செய்தான்.
“மனசாட்சி இல்லாதவன், காலையில் நான் செஞ்ச சாப்பாடு நல்லா இருக்குன்னு வயிறார சாப்பிட்டான். இப்போ ஒரு வார்த்தையாக சாப்பிட கூப்பிடுறானா பாரு…”
அவனை திட்டிக் கொண்டே முறைத்தவாறு அறையை நோக்கி அவள் திரும்ப,
“உனக்கும் சேர்த்து தான் தோசை சுட்டிருக்கேன் வந்து சாப்பிடு..” என ஹாட் பாக்ஸ் திறந்து காண்பித்தான்.
அவன் கூறியதும் தான் நேரம், இருந்த கோபம் எல்லாம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. சூடு சொரணையை மறந்து உடனே தட்டை கையில் எடுத்து விட்டாள்.
வேகவேகமாக இரண்டு தோசையை பரிமாறி உணவை ருசிக்க ஆரம்பித்தவள் இடைவெளி விடாது அடுத்தடுத்து தோசைகளை உண்டாள்.
இவனும் ஹாட் பாக்ஸில் இருந்ததை சுட சுட எடுத்து அவளுக்கு பரிமாறிக் கொண்டே இருந்தான்.
“இவ்வளவு சாப்பிடுற ஆனா குண்டே ஆக மாட்டேங்குற, உன்னை மாதிரி தான் உலகத்துல நிறைய பேரு பாக்கியசாலியா இருக்காங்க…”
“சாப்பிடுறதை கண்ணு வைக்காத… ”
“நான் ஒன்னும் கண்ணு வைக்கலை சாமி நீ வயிறார சாப்பிடு… ”
அவள் உணவு உண்டு கொண்டிருந்த சமயம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சந்தித்த அந்த ரகசிய நபர் அழைப்பு விடுத்தான்.
அவனின் எண்ணை மொபைல் திரையில் கண்டதும் உடனே அவளுக்கு விக்கல் வந்தது.
தண்ணீரைக் குடித்த பிறகும் கூட அந்த விக்கல் நிற்கவில்லை.
“போன்ல யாரு …” என அவன் கேட்க
“என் அப்பா தான், நான் போய் பேசுறேன்..”
தட்டில் இருந்த மீத தோசையை வேகமாக உண்டு முடித்தவள் அரைகுறையாய் தட்டை கழுவி வைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
“அப்பா கிட்ட இருந்து வர காலுக்கு எதுக்கு இவ்வளவு தடுமாறுறா..”
வீர்-ன் சந்தேகம் அதிகரித்தது.
அறைக்குள் சென்று கதவை தாழிட்டவள் மீண்டும் வந்த அந்த எண்ணின் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ இப்ப எதுக்கு இப்படி ஓயாம கால் பண்ணிட்டே இருக்க…”
“ஏன் வைஷூ, நான் கால் பண்றது உனக்கும் உன்னுடைய புது புருஷனுக்கும் தொந்தரவா இருக்கா..”
“இங்க பாரு தேவையில்லாதது எல்லாம் பேசாத, எதுக்காக கால் பண்ணனு மட்டும் சொல்லு…”
“வேற எதுக்கு, நம்மளுடைய பழைய பழக்கத்தோட நினைப்பில் தான் உனக்கு கூப்பிட்டிருக்கேன். ஒரே ஒருமுறை நேரில் சந்திக்கலாமா..?”
“இங்க பாரு, நான் முன்ன மாதிரி கிடையாது அப்ப ஏதோ தெரியாம தப்பு நடந்துருச்சு, நான் அன்னைக்கே உன்கிட்ட அது எல்லாத்தையும் மறந்துடுன்னு சொல்லிட்டேன்..”
“வைஷு உன்னால எப்படி அந்த சம்பவத்தை அவ்வளவு ஈஸியா மறக்க முடியுது. வாழ்க்கையில் உனக்கும் அது முதல் முறை, எனக்கும் அது முதல் முறை நினைச்சு பார்க்கவே…. ”
ஏதோ வாயில் ருசியான உணவை வைத்தது போல் சுவைத்து சத்தமிட்டான், எதிர்முனையில் பேசியவன்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு கடுப்பாகியது.
“ஸ்டாப் இட், எனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் என் கூட நீ பார்த்தது என்னுடைய புருஷன்..”
“அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும், நீ மட்டும் நாளைக்கு காலையில் நான் சொல்ற இடத்துக்கு வரலை. உன் வீட்டை தேடி நானே வருவேன் அப்புறம் உன் இஷ்டம்..”
உடனே மறுமுனையில் பேசியவன் அழைப்பை துண்டித்தான்.
அவனை சமாதானம் செய்வதற்காக வைஷூ மீண்டும் அழைப்பு விடுத்தாள். ஆனால் அவன் ஏற்கவில்லை. நாளை சந்திக்க வேண்டிய இடத்தை மட்டும் மெசேஜில் பகிர்ந்தான்.
“அச்சோ கடவுளே, எப்பவோ பண்ண தப்பு எல்லாம் இப்ப என்னை விரட்டுது இந்த விஷயம் மட்டும் இந்த வீர்-க்கு தெரிஞ்சது என் கதி அவ்வளவுதான்…”
வீர் இவள் மீது வைத்த நம்பிக்கை மீண்டும் உடைய போகிறது…
😉
