அத்தியாயம் 03 (ANK)

அத்தியாயம் 03 (ANK)

 

ஆதித்தோ நகுலன் கேட்ட கேள்விக்கு தயங்கியபடியே, “அது வந்து சார், அன்னைக்கு என் பி.ஏ ரீட்டா கூட வன் நைட் ஸ்டேண்ட் பிளான் பண்ணியிருந்தேன்”

 

என்று தட்டுத்தடுமாறி கூற நகுலனுக்கோ அத்தனை ஆத்திரம் வந்தது., “யூ இரெஸ்பான்சிபிள் இடியட், உனக்கெல்லாம் ஒருநாள் கூட பொத்திட்டு இருக்க முடியாதா? அதுக்காக உன் கார்ட்ஸையும் இழுத்துட்டு போய்ட்டியா?”

 

என்றதும் அவனோ தலைக் குனிந்தபடி, “மூணு நாலு கார்ட்ஸ” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அவன் கன்னத்தில் நகுலனின் கை இடியென இறங்கியது.

 

மீண்டும் எதையோ சிந்தித்தவன், “ஓகே நீ தாத்தாவ கூட்டிட்டு கிளம்பு தேவைப்படும் போது கூப்பிடுறேன்”

 

என்று அனுப்பி வைக்க தானாவுக்கோ இவனது செய்கை ஒன்றுமே பிடிபடவில்லை.

 

“என்னடா அவன போகலாம்னு அனுப்பி விடுற? என்னடா பிளான் பண்ணுற?”

 

என்றதும் அவனோ, “வெயிட் அண்ட் வாட்ச்” என்று விட்டு அங்கிருந்து நகர ஆதித்தோ ஆரியநாதனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட அவரோ அதிர்ச்சியில்

 

“என்னடா இது? என்னடா ஆதி ஆச்சு? எல்லோரும் எங்க?” என்று சுற்றியும் முற்றியும் தேட ஆதித்தோ கண் கலங்கியபடி,

 

“எல்லாம் முடிஞ்சு போச்சு தாத்தா, முடிஞ்சு போச்சு” நாதனோ,

 

“எப்பிடிடா? உசுரு தான் வேணும்னா என் உசுர எடுத்திருக்கலாமே” என்று அந்த வயோதிபர் மனமுடைந்து அழுக நகுலனோ அவரை உணர்ச்சியற்று கல்லும் மண்ணும் போல் பார்த்துக் கொண்டே,

 

“தாத்தாவும் பேரனும் கிரைம் சீன கண்டமினேட் பண்ணாம இங்கேயிருந்து சீக்கிரம் கிளம்புறீங்களா?”

 

என்று நக்கலாக கேட்க அங்கிருந்த அத்தனை பேருக்கும் என்ன மனிதன் இவன்? இவனுக்கு உணர்ச்சிகளே இல்லையா? என்று தோன்ற அவனை தான் அத்தனை பேரும் கண்வெட்டாமல் பார்த்திருந்தனர்.

 

அதை கவனிக்க தவறினால் அது நகுலன் இல்லையே அவர்களை திரும்பி ஒரு பார்வை பார்த்தது தான் தாமதம் அனைவரும் ஒருவித நடுக்கத்துடனேயே வேலைகளை தொடர,

 

ஆதித்தை பின் தொடர்ந்த நகுலனோ, “இந்த பங்களாவோட மாஸ்டர் கீ எனக்கு வேணும் இப்போவே ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு போற இடத்துக்கு போங்க”

 

என்று அதிகாரமாக கேட்க ஆதித்தோ மறு வார்த்தை பேசாது சாவியை ஒப்படைத்திருந்தான்.

 

அதை கையுறை அணிந்த கைகளால் வாங்கியிருந்தவன், “குட்” என்று விட்டு பங்களாவினுள் போய் மறைய அப்போது தான் ஆதித்துக்கு நிம்மதி பெரு மூச்சே வந்தது.

 

அவனது முகத்திலிருந்த பயத்தையும் பதற்றத்தையும் தற்போதிருந்த ஆசுவாசத்தையும் கவனித்த நகுலனோ கொடுப்புக்குள் சிரித்தபடி,

 

“தனா, இங்கே கலெக்ட் பண்ண எல்லா பிங்கர் ப்ரிண்ட்ஸும் தாத்தன் கூடவும் பேரன் கூடவும் மேட்ச் ஆகுதானு பாரு”

 

அதற்கு வைகர்த்தனோ, “டேய்! பெரும்பாலும் மேட்ச் ஆகும்டா ரெண்டு மூணு நாள் இந்த வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க அப்டி இருக்கும் போது”

 

என்று தடுமாற நகுலனோ, “சொல்லுறத பண்ணு மச்சி, பிறகு என்ன செய்யணும்னு சொல்லுறேன்”

 

என்று கூறியபடி ஒவ்வொரு பிணங்களும் கண்டெடுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆராயத் தொடங்கியிருந்தான். குளியலறையில் சுடுநீரில் பாதி உடல் வெந்து கொப்புளங்களுடன் கிடக்க இந்த பிணத்திலும் தொடையும் வலதுகையும் இருக்கவில்லை.

 

அதை பார்த்தபடியே, “மிஸ். ஹன்ஸா”என்று குரல் கொடுத்தவன் அங்கு ஹன்ஸா வரவும்

 

“ஹன்ஸா இங்கேயுள்ள எல்லா பாடீஸ்லயும் ரைட் ஹேண்ட் அப்பறோம் லெஃப்ட் தை மிஸ்ஸிங்கா?”

 

என்று கேட்க ஹன்ஸாவோ, “இல்ல ஸார், ஒவ்வொரு பாடிலயும் ஒவ்வொரு பார்ட்ஸ் மிஸ்ஸிங் சிலதுல கண், அதே சில பாடீஸ்ல ஹெட் கூட மிஸ்ஸிங்”

 

என்று கூற நகுலனோ எதையோ சிந்தித்தபடி, “ஓகே” என்று விட்டு அங்கிருந்த கண்ணாடியை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்தவன் அதில் ஒரு ரத்தம் தோய்ந்த கையச்சு படிந்திருக்க,

 

அதை வித்யாசமாக பார்த்தவன், ‘மர்டர் நடந்தது மிட் நைட்டா இருக்கலாம் ஆனா ஏன் இன்னும் அந்த பிளட் காயாம இருக்கு, அடுத்து இது யாரோட கை தடம்னு தெரியலையே’

 

என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் சட்டென ஹன்ஸாவிடம், “இந்த ரூம்ல ஏதாவது பொண்ணோட பாடி ரெக்கவர் பண்ணீங்களா?”

 

என்று கேட்க அவளோ, “இல்ல சார்” என்றவள் சட்டென ஏதோ யோசித்தபடி, “சார் இங்கே ஒரு யூனிக்கான விஷயம் இருக்கு, செத்த பெரும்பாலானோர் ஆண்கள் தான்”

 

என்று கூற நகுலனோ, “அப்போ பீமேல்ஸ் யாருமே இல்லையா?” என்றான் அதிர்ச்சியாக,

 

அதற்கு ஹன்ஸாவோ, “அப்படி ஒரேயடியா சொல்லிற முடியாது சார் ஆனா இப்போதைக்கு கிடைச்ச ஒரு மூணு பாடிஸ தவிர மத்ததெல்லாம் மேல்ஸ் தான்”

 

என்று கூற நகுலனுக்கு ஏதோ தவறாகவே பட்டது. ஒரு வீட்டில் அதுவும் சொந்தபந்தங்கள் ஒன்று கூடி விருந்தோம்பும் நிகழ்வில் சம அளவில் பெண்கள் இல்லாவிடிலும் ஓரளவு கூடவா பெண்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

 

என்று சிந்தித்துக் கொண்டிருந்த சமயம், இங்கு அபர்ணதியோ கையில் ஏதோ ஒரு புகைப்படத்தை சுருட்டி வைத்தபடி சேலை வாங்க வந்த இடத்திலும் சுற்றியுள்ள எதையும் கவனித்தாலில்லை அந்த படத்தை தான் வெறித்திருந்தாள். அப் புகைப்படமோ அவள் உள்ளங்கை வியர்வையில் நனைந்து போக அவளை சுய உணர்வுக்கு மீட்டு வந்ததோ மீனாட்சி அம்மாள் தான்,

 

“நதிம்மா! நதிம்மா! உனக்கு பிடிச்ச புடவைய எடும்மா ஏன் அப்படியே உட்கார்ந்திருக்க?”

 

என்று கேட்க அபர்ணதி “ஹான்” என்று பேந்த பேந்த விழிக்க,

 

நதியின் தாய் தான், “அதெல்லாம் ஒண்ணுமில்ல சம்பந்தி நேத்து நைட் ஷிஃப்ட் பார்த்ததாலயா இருக்கும்” என்று சமாளித்தபடி,

 

நதியிடம், “ஏன்டி இப்போ மூஞ்ச இப்டி வச்சிருக்க? பெத்த ரெண்டும் சரியில்ல”

 

என்று கடிய அவ்வளவு நேரம் சோர்வாக இருந்த நதியின் கண்கள் கோபத்தையும் வன்மத்தையும் தத்தெடுக்க அவ்வளவு நேரம் கீழே வெறித்தபடி அமர்ந்திருந்தவள்,

 

சட்டென தன் தாயின் முதுகை வன்மத்துடன் வெறிக்க வெறிக்க பார்த்திருந்தாள்.

 

அதேசமயம் அவள் முன்னால் கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் பையன் குளிர்ப்பானத்தை நீட்ட அதையெடுத்தவளுடைய கைகள் அதை அழுத்தி பிடிக்க அந்த கண்ணாடி போத்தல் நொறுங்கி அவள் கையை கிழித்திருந்தது.

 

கைகளில் ரத்தம் சொட்ட நின்றவள் கையில் தெரிந்த கூர்மையான வலியாலோ என்னவோ மீண்டும் தன் பார்வையை மாற்றிக் கொண்டு, கையை பற்றிக் கொண்டு,

 

“ஆஆ ஆஆவ் அம்மா ஸ்ஸ்” என்று ரத்தத்தை பார்த்ததும் மயக்கமடைவது போல் பாவனை செய்ய

 

ரேவதி தான், “ஐயோ அக்கா” என்று தாங்கி பிடித்திருந்தாள்., ஒரு நிமிடத்தில் கல்யாண கலை கட்டியிருந்த இடம் களேபரமாக மாறியது.

 

இதே சமயம் கொழும்பில் பண முதலைகள் மாத்திரமே வசிக்கும் ‘சினமன் கார்டன்’

பகுதியில் வானளவு உயர்ந்த மாளிகையில் ஷவரினடியில் ஏதோவொரு ஆங்கில பாடலை முணுமுணுத்தபடி புற முதுகு காட்டி நின்றது ஒரு ஆண் உருவம் ஐந்தே முக்காலடி உயரத்தில் கட்டுக்கோப்பாய்

 

செதுக்கிய உடல், கபில நிறக் கண்கள் அளவாக வளர்ந்த தாடி மீசை என ஆணழகன் தான். குளித்து முடித்து இடையில் பூந்துவாலையை சுற்றியபடி வெளியில் வந்தவனை பார்த்து பயந்து பதுங்கியபடி தன் போர்வைக்குள் ஒழிய முயன்றது ஒரு பெண்ணுருவம்,

 

அதை கண்டுக்கொண்டவனுடைய முகத்தில் ஏளனச் சிரிப்பு, “என்ன அம்மு? என்னாச்சு?” என்றபடி அருகில் வர அப்பெண்ணோ பயந்து நடுங்கியபடி

 

“ஐயோ! சார் என்ன விட்ருங்க ப்ளீஸ்” என்றபடி பின்னால் போய் ஒடுங்கி கொள்ள அது தானே அவனது மூர்க்கத்தை தூண்டும் முதல் செயல் அவள் அவனை பார்த்து பயந்து ஒடுங்குவது தான் அவனுக்கு பிடிக்காத செயல்,

 

அவளது தன்னுடலை போர்வை கொண்டு மறைத்திருக்க அதை பிடுங்கி எறிந்தவன்

 

“எத்தனை தடவ சொல்லுறது உனக்கு? என்ன பார்த்து பயப்படாத நடுங்காதன்னு உன்ன என்னடி பெருசா பண்ணிட்டேன்”

 

என்று ஒருவித குரூரத்துடன் கேட்க, பெண்ணவளுக்கோ இவன் என்ன பண்ணவில்லை. என்று தான் தோன்றியது. தன் நண்பனின் காதலி என்று அறிந்திருந்தும் அவளை கடத்தி சிறை வைத்திருக்கிறான். அவளது விருப்பமோ சம்மதமோ இல்லாமல் திருமணத்தை பதிவு செய்திருக்கிறான்.

 

அவள் விரும்பிய துணையுடன் வெளிநாடு சென்று விட்டதாகவும் அங்கு தனது கல்வியை தொடர்வதாகவும் ஊராரையும் அவள் வீட்டாரையும் நம்ப வைத்திருக்கிறான். அவளது பெற்றோரை கூட மூளை சலவை செய்து அவளை வெறுத்து ஒதுக்க வைத்து விட்டான் இன்னும் அவன் என்ன செய்யவில்லை.

 

தினசரி அவள் விரும்பியோ விரும்பாமலோ கூடி கழிப்பவன் அவன், ஆனால் அவளுக்கு ஒரு நோய் என்றால் துடித்து போவான் இரவு பகலாக பார்த்து கொள்ளுபவனும் அவனே,

 

அவனது அதீத காதல் தான் அவளை பயமுறுத்தி வெறுப்படைய செய்கிறது. அவள் தன் மீன் விழிகளால் அவனை பயந்து பார்க்க அவனோ அவளது கபில நிற கண்களிலேயே ஒரு முத்தம் வைத்தபடி விலகிக் கொண்டான்.

 

அப்பெண்ணை பார்த்து “உன் சிஸ்டரோட மேரேஜ் இன்னும் வன் மன்த்ல”

 

என்றதும் தான் அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள்., அது அவளது உருவம் அபர்ணதியின் உருவத்துடன் நூற்றுக்கு நூறு விதம் ஒத்துப் போனது. ஆம் அவள் அபர்ணதியின் இரட்டை சகோதரி, அவந்திகா என்ற பெயரை கொண்ட அவந்தி,

 

அவனை ஏக்கமாக பார்த்தவள், “சார் ப்ளீஸ் என்ன அங்க கூட்டிட்டு போறீங்களா? என் பேமிலிய பார்த்து ரொம்ப நாளாச்சு”

 

என்று கெஞ்சிக் கேட்க அவனோ அலுவலகத்திற்கு கிளம்பியபடி, “அம்மு, என்னடா பேசுற? ஏன் என்ன சார்னு கூப்பிடுற நைட் கூப்பிட்டது மாதிரி ஆரோன் ஆரோன்னு கூப்பிடு இல்லாட்டி அத்தான்னு கூப்பிடுடா சும்மா சார்னு கூப்பிட்டா அப்பறோம் எனக்கு கோபம் வரும் பார்த்துக்க”

 

என்று தேன் குரலில் கொஞ்சியபடி கழுத்தில் மென் முத்தம் வைக்க அவளோ, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே”

 

என்று அவன் முகத்தை ஏக்கமாக பார்க்க அவனோ, “ம்ம் கூட்டிட்டு போகலாம் ஆனா செல்லம் நீ என்ன பத்தி ஊர் உலகத்துல குறை சொல்லாம இருக்கணுமே”

 

என்று கூறிக் கொண்டே அவள் காலை நீவி விட அவளோ, “ஐயோ! இதெல்லாம் நீங்க ஏன் பண்ணுறீங்க? விடுங்க ப்ளீஸ்”

 

என்று தடுமாற அதற்கு அவனோ அவள் தொடைகளை வருடியபடி, “என்ன செல்லம் நேத்து ரொம்ப வலிச்சிருச்சா? நான் இனிமே இப்டி பண்ணமாட்டேன் நீ என்ன விட்டு தள்ளி போறதால தான் எனக்கு கோபம் கோபமா வருது”

 

என்று முத்தமிட அவள் அவனை தடுக்கவில்லை. அவளது எதிர்ப்பை எதிர்பார்த்தவன் அது இல்லாமல் போக பாகாய் உருகி போனான். அவன்,

 

ஆரோன் சக்கரவர்த்தி, ஆரியநாதனின் இரண்டாவது பேரன் தான் அவன் ‘ட்ரிபிள்ஏ’ கம்பெனியில் இயக்குநர்கள் குழுவில் ஒருவன் அண்ணனை போல் பல பெண்கள் மீது மோகம் கொள்ளாதவன் தான் ஆனால் தான் ஆசைப்பட்ட பொருளையோ பெண்ணையோ யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன்,

 

கிட்டத்தட்ட ஒரு வருடம் அவனுடன் வாழ்ந்தவளுக்கு எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.

 

ஆனால் இத்தனை வருடத்தில் ஒன்று மட்டும் புரிந்தது அவன் கடிவாளம் அவள் கைகளில் தான் அதை தனக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென முடிவெடுத்து விட்டாள் அவள்,

 

இதே சமயம் காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் தேநீரை அருந்தியபடி அமர்ந்திருந்த நகுலனோ வைகர்தனிடம், “தனா எனக்கென்னவோ இந்த மர்டர்ஸ் எல்லாத்துக்கும் பின்னாடி வேற ஏதோ காரணம் பெருசா இருக்கோன்னு தோணுது”

 

என்றதும் தனாவோ, “ஏன்டா அப்டி யோசிக்கிற?” என்று புருவம் சுருக்க “உனக்கு இப்போ டூ இயர்ஸ் முன்னாடி நடந்த வர்தன விக்ரமசிங்க கேஸ் நினைவிருக்கா?”

 

என்றதும் தனாவோ, “அத எப்பிடிடா மறக்க முடியும் அந்த கேஸ் பத்தி கூட நிறைய தியாரிஸ் சொன்னாங்களே அதுமட்டுமா அத தொடர்ந்து தானே அவங்க பிரெண்ட்ஸ் ஒவ்வொருத்தரும் இறந்து போனாங்க”

 

என்று கூற நகுலனோ, “எக்ஸேக்ட்லி அந்த கேஸுக்கும் இந்த கேஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோனு தோணுது”

 

என்று நகுலன் புருவம் சுருக்க, “அந்த கேஸ தான் அக்னி சார் க்ளோஸ் பண்ணிட்டாரே அதும் அந்த ஐடன் தான் சைக்கோ கில்லர்னு ப்ரூப் பண்ணுனாங்களே”

 

என்று தனா கூற நகுலனோ, “ஆமா, ஆனா எனக்கு ஏதோ இந்த கேஸுக்கும் அந்த முடிஞ்சு போன கேஸுக்கும் சம்பந்தம் இருக்குமோனு தோணுது”

 

என்றான் ஏதோ யோசனையில் அதற்கு தனாவோ, “ஏன்டா அப்டி யோசிக்கிற?”

 

என்று வினவ நகுலனோ, “ஏன்னா ஆரியநாதனுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இல்ல ரெண்டு பையன் அதுல ஒருத்தர் தான் ஐடனோட அப்பா இப்போ அந்த ஆர்ட்ஸ் ஸ்கூல ரெனேவேட் பண்ணி ஸ்ரீ லங்கால பெரிய இன்ஸ்டியூட்டா மாத்துனது இந்த ட்ரிபிள் ஏ கம்பெனி தான் அதனால தான் சொல்லுறேன்”

 

என்று தீர்க்கமாக கூற வைகார்த்தனோ, “அப்படி கில்லர்ஸ்க்கு பெர்சனல் வெஞ்சேன்ஸ் தான் ரீசன்னா ஏன் ஆரிய நாதன கொல்லல”

 

என்று நகுலனை பார்க்க அவனோ, “அதான்டா எனக்கும் புரியல” என்று பெருமூச்செறிந்தான்.

 

                                                          தொடரும்…

 

                                                              

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!