அத்தியாயம் 05 (ANK)
இங்கு ஹன்ஸாவுக்கு பயத்தில் கைகள் நடுங்கியது. இருந்தும் தைரியத்தை வரவழைத்தபடி, மெதுவாக நடைபோட்டவள் காதில், ‘க்ரீச்’ என்ற சப்தத்தை தொடர்ந்து
‘தட்’ என்ற சத்தத்துடன் அவள் கடந்து வந்த பிணவறை கதவு மூடப்பட அவளுக்கோ பயத்தில் இதயம் வெளியில் வந்து விடுமளவுக்கு,
துடிக்கவாரம்பித்தது நெஞ்சை ஒரு கணம் நீவிக் கொண்டவள் தனக்கு தானே, ‘ஹன்ஸா ஆல் இஸ் வெல் ஆல் மார்ச்சரில ஒர்க் பண்ற யாராவதா இருக்கும்’
என்று முணுமுணுத்தபடி தங்களது வேலைத் தளத்தை நோக்கி நடக்க காலடி எடுத்து வைத்தவளுக்கு பிணவறைக்குள் ஸ்ட்ரெச்சர்களும் லாக்கர்களும் அங்குமிங்கும் அசைக்கப்படும் ஓசை கேட்க
அவளது மனதுக்குள், ‘யாரு இது இந்த நேரத்துல ஒருவேளை அந்த கெனிபல் சைக்கோவா இருக்குமோ?’
என்ற எண்ணம் வேறு தாறுமாறாக ஓட அவளுக்கு உடலில் ரத்தம் வடிந்த உணர்வு ஆம் அவள் பரிசோதனை செய்த பதார்த்தம் ஒன்றும் சாதாரணகறி அல்ல மனிதக்கறி அல்லவா?
அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் சைக்கோ கொலையாளி இல்லையில்லை கொலையாளிகளின் கூட்டம், ஆம் கூட்டமாக தான் இருக்க வேண்டும்.
அக் கூட்டம் கொலை மட்டுமல்ல மனித மாமிசத்தை உண்ணக் கூடிய ‘கேனிபல்’ என அழைக்கப்படும் கூட்டமல்லவா ஹன்ஸாவுக்கு பயத்தில் உடல் விறைத்தது.
அதுவும் மிகவும் பெரிய பின்புலம் கொண்ட பணக்கார குடும்பத்தின் மேல் கை வைக்க கூடியவர்கள் என்றால் தனது நிலைமை என்று அச்சம் கொண்டவள்
வைகார்தனுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்ல உத்தேசித்தவளாக வேகமாக நடக்க அவளை பின் தொடர்ந்து யாரோ வருவதை போன்ற உணர்வு வேறு அவளுக்கு ஒருவித கிலியை கொடுக்க
கிட்டத்தட்ட அங்கிருந்து ஓட தொடங்கிய சமயம் பின்னால் கேட்ட பாத சுவடுகளில் சத்தம் வேறு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவதை உணர்ந்தவளுக்கு கண்களில் கண்ணீர் வேறு தாரை தாரையாக வழிய ஒருவாறு தனாவின் அறையை அடைந்திருக்க
இருளில் ஒழுங்காக சாவித் துவாரம் வேறு தெரியவில்லை அவளுக்கு அருகில் ஒரு உருவம் வேறு மிகவும் நெருங்கி வருவதை உணர்ந்தவளுக்கு
பயத்தில் கைகள் வேறு நடுங்கியது. வேண்டாத தெய்வங்களுமில்லை., ஆனால் அந்த உருவம் நெருங்கி வருவது நிற்கவில்லை.
எப்படியோ ஒருவாறு கதவை திறந்தவள் உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டு இரண்டு மூன்று பெருமூச்சுகளை வெளியிட்டவள்
அழுதபடி அங்கேயே குந்துகாலிட்டு அமர்ந்தும் விட்டாள். அவள் தைரியமானவள் தான் ஆனால் இன்று கண்டெடுத்த பிணங்கள் அதனுடன் கிடைக்கப்பெற்ற தடயங்கள் அது மட்டுமா? இப்போது அவளுக்கு நடந்த அசம்பாவிதம் என ஒவ்வொன்றும் அவளை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. என்று தான் கூற வேண்டும்.
இதில் சில நிமிடங்கள் அங்கே அமைதியாக நின்ற உருவம் சட்டென இனிமையான குரலில்,
“எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதை எல்லாம்
மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்”
என்று பாட ஹன்ஸாவுக்கு பயத்தில் உடல் வெலவெலத்து போக, தட்டுதடுமாறி திக்கி திணறி, “யாரு? யா..ரது என் கூட விளையாடுறது? என் ஹஸ்பண்ட் போலீஸ் ஆபிஸர்”
என்று கூற அப் பக்கம் நின்ற உருவமோ, மெலிதாக சிரித்து விட்டு சுத்தியலை கொண்டு கதவை உடைப்பதற்காக ஓங்கி அடிக்க
என்று மீண்டும் பாட ஹன்ஸாவோ, “ஏ..ய் நீ நீ ஆதித் தானே நீ தான் அவங்கள கொன்னியா? “
என்று கதைத்தபடியே வைகர்த்தனுக்கு அழைப்பையேற்படுத்த அப் பக்கம் நின்ற உருவமோ, “குட் கெஸ் ஹன்ஸா, அப்டியே அந்த எஸ்.பிக்கும் உன் பியான்ஸேக்கும் கால் பண்ணி வர சொல்லுறது” என்று சற்று இடைவெளி விட்டு,
“இல்ல ஐ கெஸ் நீ இப்பயும் கால் பண்ணிருப்ப எத்தனை பேர பார்த்திருப்பேன் நீயும் உன் டீமும் எனக்கு ஜுஜுபி என்கிட்ட இருக்க காச வச்சு ஜெயிலுக்கு போன அடுத்த நிமிஷமே வெளிய வந்துருவேன்”
என்று ஆதித் பேசிக் கொண்டிருக்க ஹன்ஸா அவனது வாக்குமூலத்தை அங்கிருந்த இன்னொரு பழைய அழைப்பேசியில் பதிவேற்றியபடி மீண்டுமீண்டும் வைகர்த்தனுக்கு அழைப்பையேற்படுத்த,
மின்னிணைப்பும் மீண்டும் வந்திருந்தது. ஆனால் ஆதித்தோ தனது முயற்சியை கைவிட்டானில்லை. கதவை உடைக்கும் அதே சமயம் அவளுடன் வேலைப்பார்க்கும் சக ஊழியர்களும் வந்து சேர அங்கு அவர்களுக்கு காண கிடைத்தது என்னவோ
மயங்கி கிடந்த காவலர்களும் வெறி பிடித்தவன் போல் கதவை உடைத்துக் கொண்டிருந்த ஆதித்தும் தான் அங்கு வந்தவர்கள் துரிதமாக செயற்பட்டு ஆதித்தை பிடிக்க முற்பட்டு கொண்டிருக்க அதே சமயம் நகுலனும் அந்த இடத்தை வந்தடைந்திருந்தான்.
அங்கு வந்தவன் சற்றும் தாமதிக்காது ஆதித்தின் கால் பகுதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த ஆதித்தோ கத்தியபடி அவ்விடத்திலேயே மயங்கி சரிந்திருந்தான்.
அதே சமயம் ஆரியநாதனின் உடல் தொடைகளும் கண்களும் அகற்றப்பட்டு கிட்டத்தட்ட எலும்பு தோல் போர்த்திய உடலாக பிணவறை முன் கிடக்க அதை கவனித்த நகுலனோ,
“ஓ ஷீட், என்ன நடக்குது இங்க? உடனே அம்பியூலன்சுக்கு கால் பண்ணுங்க மேக் இட் பாஸ்ட்”
என்று துரிதப்படுத்த வைகர்த்தனனோ ஹன்சாவிடம் ஓடி வந்தவன் அவளை இறுக அணைத்தபடி, “ஹன்ஸ் ஆர் யூ ஓகே?, காயம் பட்டிருக்கா?”
என்று அவள் உடலை ஆராய அவளோ தட்டுத்தடுமாறி பெரும்பாடுபட்டு கண்ணீரை அடக்கியவள், “நகுல் சாரோட கெஸ்சிங் சரி அந்த கில்லர்ஸ் கொலை பண்ணின பிறகு தான் சமைச்சு சாப்பிட்டிருக்கானுக”
என்றதும் வைகர்த்தனோ, “அதபத்தி பிறகு பேசலாம் முதல்ல வா”
என்று அங்கிருந்த சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று சூடாக தேநீர் வாங்கிக் கொடுக்க அங்கு அவர்கள் அருகே வந்த நகுலனோ ஹன்ஸாவின் கை தாறுமாறாக நடுங்குவதை பார்த்துக் கொண்டே,
“இவ்வளவு நடுங்குறவங்க போலீஸ் டிபார்ட்மென்டுக்கு வந்திருக்க கூடாது மிஸ். ஹன்ஸா, உயிர பணயம் வச்சா தான் குற்றவாளிய கண்டுப்பிடிக்க முடியும்”
என்று வகுப்பெடுக்க அதே சமயம் அவனது அழைப்பேசிக்கு மீனாக்ஷியம்மாவிடமிருந்து அழைப்பு வர அதையேற்றவன்,
“சொல்லுங்க, இப்போ என்ன பிரச்சனை?” என்று கேட்க அவரோ,
“உன் வருங்கால பொண்டாட்டிக்கு உடம்பு முடியல” என்று கூற அவனோ படு நக்கலாக,
“நான் போலீஸ் டாக்டர் இல்ல” என்று கூற அவரோ,
“கால், பண்ணி எப்படி இருக்கு? என்ன பண்ணுதுன்னு விசாரிடா? அக்கறையா அன்பா நாலு வார்த்தை பேசுடா”
என்று அறிவுரை கூற அவனோ, “நான் பேசுனா அவ குணமாகிடுவாளா? நான் என்ன தெரபிஸ்ட்டா? டாக்டர் மெடிசின் கொடுத்திருப்பார் தானே அதை போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க சும்மா சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு”
என்று அழைப்பை துண்டிக்க போக அவரோ, “டேய்! நாளைக்கு கார்ட் வச்சு பூசை போடுறோம்”
என்றதும் அவனோ, “சரி போட்டுக்கோங்க, இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்லுறீங்க தாலி கட்ட டான்னு வருவேன் அத கட்டினதும் என் வேலை முடிஞ்சது அது அந்த பெயரின் அபியா அனுவா?”
என்று நெற்றிப் பொட்டை அழுத்தி யோசிக்க மீனாக்ஷியே சுரத்தேயில்லாமல்,
“அபர்ணதி” என்க, நகுலனோ, “யெஸ் யெஸ் அந்த பொண்ணே தான் அவளுக்கும் தெரியும் சும்மா ட்யூட்டி டைம்ல கால் பண்ணி என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க”
என்று அழைப்பை துண்டித்து விட மீனாக்ஷிக்கு உலகமறியா பெண்ணின் வாழ்க்கையை சீர்குலைக்கின்றோமோ என்ற எண்ணம் வேறு ஊசியாய் குத்த,
இங்கு அவர் யாரை எண்ணி கவலைக் கொண்டாரோ அப்பெண் தன் கையிலிருந்த சுருட்டை இருவிரல்களுக்கிடையே வைத்து சுழற்றியபடி பற்ற வைத்து ஊத அவளோ காலுக்கு மேல் கால் போட்டபடி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க அதிலோ,
“கொழும்பு அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவறொருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பிரத்யேக அறையில் தூக்கிட்டு தற்கொலை”
என்ற செய்தியை ஒரு பெண் முகத்தில் உணர்ச்சியின்றி வாசிக்க திரையில் அப் பெண் மருத்துவரின் புகைப்படம் தோன்ற அபர்ணதியோ அப் புகைப்படத்திலிருந்த பெண் மருத்துவரை பார்த்து
“ரெஸ்ட் இன் பீஸ் ஸ்வீட்டி” என்றபடி ஒரு இசையை ஒலிக்க விட்டபடி மேற்கத்திய முறையில் தன் அறையில் நடனமாடியபடியே ஒவ்வொரு வெள்ளை நிற லில்லி மலராக தொலைக்காட்சியின் அருகே வைத்துக் கொண்டிருந்தாள்.
இதே சமயம் சற்று தன்னிலையை அடைந்திருந்த ஹன்ஸாவோ, “தனா நம்ம அங்க கலெக்ட் பண்ண பூட் சாம்பிள்ல ஹியூமன் மீட் இருக்கு நம்ம தேடுறது ஒரு தனி நபரா இருக்க முடியாது ஒரு பெரிய கேங்கா இருக்கனும்”
என்று கூற அங்கு வந்த நகுலனோ சேரை இழுத்து விட்டு தோரணையாக அமர்ந்தபடி,
“இதுக்கு மேல தெரியணும்னா ஆதித் தான் வாய திறக்கனும்” என்று கூற
வைகர்த்தனோ, “ஹன்ஸா வாட் அபவுட் அடாப்ஸி ரிப்போர்ட்”
என்று கேட்க ஹன்ஸாவோ, “காலையில கிடைச்சிரும் தனா” என்று கூற
நகுலனோ, “ஹன்ஸா! செக்கியூரிட்டி எல்லா இடமும் டைட் பண்ணி தானே இருக்கோம் இருந்தும் எப்படி இந்த ஆதித் மார்ச்சுவரி மட்டும் வந்தான்?”
என்று கேட்க ஹன்ஸாவோ, “எனக்கும் அது தான் புரியல சீப்”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து ஓடி வந்த கான்ஸ்டபிள் ஒருவர்,
“சார்! சார்! அந்த ஆதித்த கண்ட்ரோல் பண்ண முடியல தன்னோட தலைய தானே மோதிக்குறான் டாக்டர்ஸ ட்ரீட் பண்ணவும் விட மாட்டேங்குறான்”
என்று கூற அங்கிருந்த நகுலனோ ஒரு கணம் தாமதிக்காமல் அவ்விடத்தை அடைந்திருந்தான்.
இங்கு ஆதித்தோ, “என்னைய சாக விடுங்க ஆஆ என்னால இந்த வலிய தாங்க முடியல”
என்று துள்ள அங்கு வந்த நகுலனோ, “இவன் மெண்டலி அன்ஸ்டேபிள் போல அவனை கட்டிப்போடுங்க”
என்று கட்டளை பிறப்பிக்க ஒருவித நீள அங்கி அணிந்த உருவம் ஆதித் தங்கியிருக்கும் அறையையே வெறித்தபடி நின்றிருந்தது.
இதே சமயம் கண்டியில் சற்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் தொடர்மாடி குடியிருப்பு என்று கூறிவிட முடியாது., ஆனால் மூன்று குடும்பங்கள் தங்க கூடிய வீட்டு தொகுதி,
நேரம் ஏழுமணியை கடந்திருக்க மழையோ வெளுத்து வாங்கியது ஒரு கையில் குடையையும் மறு கையில் தனது இரட்டையர்களான அருண், அனிதாவையும் அணைவாக குடைக்குள் அழைத்தபடி வீடு நோக்கி நடைபோட்டாள்.
லயா முகத்தில் பயமும் பதற்றமும் அப்பட்டமாக தெரிந்தாலும் எல்லாவற்றையும் உள்ளே விழுங்கிக் கொண்டு இரட்டையர்களுடன்
வீட்டிற்குள் நுழைய அவர்களுக்கு உணவூட்டி கதை சொல்லி உறங்க வைக்க சென்ற போது அவளது ஐந்து வயதே நிரம்பிய மகள் அனிதா கண்களில் ஆர்வம் மின்ன,
“அம்மா அம்மா எப்போ நம்ம அப்பா வீட்டுக்கு வருவாரு என்ன பார்க்குக்கு கூட்டிட்டு போவாரு”
என்று வழமையை போல் ஆர்வமாக பார்க்க லயாவுக்கோ இந்த முறை கோபம் தலைக்கேற, “அப்பா வேணுமா உனக்கு அப்பா அப்பா கேக்குதா இனி கேப்பியா?”
என்று அடி வெளுத்து தொடையில் கிள்ள குழந்தையோ அழுதுக் கொண்டே, “ஸாரிம்மா ஸாரி இனி கேட்கவேமாட்டேன் வலிக்குது” என்று அழ லயாவுக்குமே வலித்தது தான் ஆனால் என்ன செய்ய முடியும்?
லயா வேறுயாருமல்ல ஆரியநாதன் குடும்பத்தின் மூத்த மருமகள் ஆர்னவின் மனைவி அக் குடும்பத்தை பற்றி ஊர் உலகமறியாத ரகசியத்தை அறிந்தவள் அவர்களிடமிருந்து தன் குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் சாதாரண தாயின் தவிப்பு தான் கோபமாக அழுகையாக வெறுப்பாக அவளிடமிருந்து வெளிப்படுகிறது.
யாரை விட்டு விலகி இருக்க வேண்டுமென நினைக்கிறாளோ அவனை தானே மகள் நினைவுபடுத்துகிறாள் இப்படி குழந்தைகள் இருப்பதே அவனுக்கு தெரியக் கூடாது என எண்ணுபவள் ஆயிற்றே, இதற்கிடையில் மழையும் காற்றும் வேறு விடாது சுழற்றியடிக்க
அவளுக்குள் உள்ளுக்குள் பயம் அதிகமாகியதே தவிர குறைந்தபாடில்லை. அவளது உதடுகளோ,
“அவங்க வரப்போறாங்க மறுபடியும் அவங்க இடத்துக்காக வரப்போறாங்க” என்று முணுமுணுக்க இயற்கை சீற்றமும் அதற்கு ஒப்பாக அதிகரித்தது.
தொடரும்…
