அந்த நியூயார்க் நகரம் அடை மழை வெளியே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க
அடுக்கு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தனது அறையில் நின்று கண்ணாடி ஜன்னல் வழியே அதை பார்த்துக் கொண்டிருந்தவன் தனது கையில் இருந்த சிகரெட்டை ஊதிக் கொண்டே கண்ணாடி வழி மழையை ரசித்து அல்ல அல்ல அதை வெரித்து பார்த்து நின்று இருந்தான் கரண் மனோகரன் கதையின் நாயகன்…
அப்பொழுது அவனுக்கு பின்னால் சத்தம் கேட்க திரும்பி பார்க்காமல் “என்ன விஷயம் சொல்லு ஜெனிஃபர்?” என்றான் கடுமையான குரலில்.அவனுடைய அசிஸ்டன்ட் ஜெனிபர்.
“மீட்டிங் இருக்கு சார்! இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாரும் தயாரா இருக்காங்க சார் !” என்றால் .
அதில் எரிச்சல் அடைந்தவன் திரும்பி ஜெனிபரை பார்க்க அவள் சிரித்த முகமாக நின்று இருக்க
அதில் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டவன் அவள் நிற்பதை பொருட்படுத்தாமல் தனது சிகையை கோதிக் கொண்டே வெளியேறினான்.
காரிடாரில் நடக்கும் பொழுது கரணுக்கு ஒரு போன் கால் வர, அதை அட்டென்ட் செய்தவன் திரும்பி ஜெனிபரை பார்த்தவன் நீ செல் நான் பின்னாலே வருகிறேன் என்பது போல் ஜெனியப்பருக்கு சைகை செய்ய
அவளும் உணர்ந்து கொண்டு மீட்டிங் அறைக்கு சென்றுவிட கைபேசி வழியாக கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தவன்” நான் வர வரைக்கும் ஒன்னும் ஆகாம பார்த்துக்கோ நான் இந்தியா வரவேண்டிய நேரம் வந்துடுச்சு நினைக்கிறேன்!” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
அடுத்து ஒரு மணி நேரம் மும்முறமாக அந்த மீட்டிங் பிரசன்டேஷன் உடன் சென்று கொண்டிருக்க மீட்டிங்கை வெற்றி கரமாக முடித்தவன் அங்கே இருந்தவர்களிடம் “எல்லாரும் நல்லா வேலை பாருங்க ஆல் தி பெஸ்ட் !” என்று மட்டும் கூறியவன் அறையை விட்டு வெளியேற மற்றவர்கள் அவன் சொல்வதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குழப்பத்துடன் அங்கிருந்து கலைந்து தங்கள் இருக்கைக்கு சென்றனர்.
ஜெனிபர் அவன் பின்னாலே பைலை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய அப்பொழுது அவனுக்கு மற்றொரு கால் வர அதில் father என்று இருப்பதை பார்த்தவன் அழைப்பை துண்டித்தான். ஆனால் கைப்பேசியோ ஓயாமல் மீண்டும் மீண்டும் அழைப்பு வருவதைக் கண்டு எரிச்சல் அடைந்தவன் அட்டன் செய்து காதில் மட்டும் வைத்திருந்தான் எதுவுமே பேசவில்லை.
“கரண் எப்படிப்பா இருக்க? உன்ன பாக்கணும் போல இருக்கு!” என்றார் அவனுடைய தந்தை செந்தில்நாதன்.
“அதுதான் உங்க ஆசை புள்ள நவீன் இருக்கானே அப்புறம் என்ன என்னைய பாக்கணும்னு சொல்றீங்க?” என்றவன் குரலில் இருந்த கேலி அவருக்கு புரிந்தது.
அதில் அவர் எரிச்சல் அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நீயும் என் புள்ள தான் நீ தான் முதல் பையன் ப்ளீஸ் பா இப்போ கண்டிப்பா அப்பாவுக்கு உன்னுடைய ஹெல்ப் வேணும்!” என்றார்.
“என்ன விஷயம்னு டக்குனு சொல்லுங்க! உங்களுடைய வீணான பேச்ச கேக்குறதுக்கு எனக்கு நேரமில்லை ” என்றான்.
அதில் தயக்கத்துடன் தனது கம்பெனியில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார்.
அதைக் கேட்டு நக்கல் புன்னகை செய்தவன் ” நவீன் தான் எல்லாத்தையும் ஒழுங்கா பாத்துகுவான்னு அவன் கிட்ட கொடுத்தீங்க இப்ப எதுக்காக என்னைய கூப்பிடுறீங்க?” என்றான்.
” உன்கிட்ட கொடுக்காதது தப்பு தான். அவன் சரியா நான் கொடுத்த வேலையை பண்ணல. இப்பதான் எனக்கு என்னோட தப்பு புரியுது ! நீ தான் வந்து இந்த கம்பெனி விஷயம் எல்லாத்தையும் ஏற்று நடத்தணும்!” என்றார்.
” நான் நீங்க சொல்றத பண்ணனும்னா எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு அதை ஒத்துக்கிட்டா நான் இந்தியா கிளம்பி வருவேன்!” என்றான்.
அவரும் என்னவென்று கேட்க தன்னுடைய கண்டிஷனை கூற அதில் அதிர்ந்தாலும் ’சரி பார்த்துக் கொள்ளலாம் ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட செந்தில்நாதன் “சரிப்பா நான் ஒத்துக்கொள்கிறேன்!” என்றார்.
அதைக் கேட்டு சிரித்தவன் நீங்க மட்டும் இல்ல எல்லாரும் எந்த விஷயத்துக்கு ஒத்துக்கணும் என்றான் அழுத்தமான குரலில்..
அதில் அவர் பல்லை கடிக்க அது இவனுக்கு கேட்டது போல . “என்ன எல்லாரும் ஒத்துக்குவாங்களா அதுக்கு நீங்க கேரண்டி தரீங்களா?” என்றான் வேண்டுமென்றே!.
“சரிப்பா ஒத்துக்கிறோம்!” என்றார் கடுப்பை மறைத்துக் கொண்டு.
அதில் மர்ம புன்னகை செய்தவன் “சரி ஓகே!” என்று மட்டும் கூறிவிட்டு காலை கட் செய்துவிட
” இந்தியா போகணும் டிக்கெட் போட்டுட்டு நான் வேலையை ரிசைன் பண்றேன் ஒரு ரெசிக்னேஷன் லெட்டரும் டைப் பண்ணி என்கிட்ட கொண்டு வா!” என்று அசிஸ்டன்ட் ஜெனிபர் இடம் கூறியவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
இன்னும் ஜெனிபர் செல்லாமல் இருப்பதில் நிமிர்ந்து பார்க்க “சார்…” என்று அவள் தயங்க” போ நான் சொன்னதை செய் !” என்று கத்தினான்.
அவளும் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவன் சொன்னதை அடுத்த அரை மணி நேரத்தில் செய்து கொண்டு வந்து கொடுத்தாள்.
அவனுடைய ரெசிக்னேஷன் லெட்டரை தயார் செய்து கொடுத்தவள் ” சார் இதையும் சைன் பண்ணி குடுங்க !” என்று இன்னொரு பேப்பரை அவன் முன் வைக்க , அதைப் பார்த்து குழப்பம் அடைந்தவன் ” எதுக்காக நீ வேலை ரிசைன் பண்ற?” என்றான்.
“இல்ல சார் இத்தனை வருஷம் உங்க கூடவே வேலை பண்ணிட்டேன்! எப்படியும் நீங்க இந்தியா போனா அங்கேயும் ஏதாவது ஒரு இடத்தில் வேலை செய்வீங்க. எனக்கும் உங்களுக்கு கீழ வேலை பார்க்கணும்னு ஆசை ப்ளீஸ் சார் என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போக முடியுமா கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப்ஃபா இருப்பேன் என்னை நம்பலாம்! ” என்றால் பாவமான குரலில்.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “அப்புறம் உன் இஷ்டம் என்று மட்டும் கூறி இரண்டு லெட்டரிலும் சைன் செய்தவன் ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு தன்னுடையதை எடுத்துக் கொண்டு அந்த கம்பெனியின் எம்டியின் அறைக்குள் நுழைந்தான்.
அவனைப் பார்த்தவர் “வா கரண் ! என்ன மீட்டிங் எல்லாம் எப்படி போச்சு?” என்றார்.
“எல்லாம் நல்லா போச்சு சார்!” என்றவன் தனது கையில் இருந்த லெட்டரை அவர் டேபிளில் வைக்க, அதை எடுத்து பார்த்தவர் கண்கள் அதிர்ச்சியில் விரிய “கரண் வாட் இஸ் திஸ் இப்படி சொல்லாம கொள்ளாம நீ வேலைய விட்டு போகலாமா?” என்றார்.
“நான் உங்ககிட்ட சேரும்பொழுது எப்ப வேணாலும் வேலையை விட்டு நிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்படலாம்னு சொன்னேனே மறந்துட்டீங்களா?” என்றான் அசால்டாக.
அவன் அப்படித்தான் அவரிடம் பேசுவான் அந்த கம்பெனி மிகப்பெரிய துன்பத்தில் இருந்த பொழுது வேலைக்கு சேர்ந்தவன் அவனுடைய உழைப்பால் தான் தற்பொழுது கம்பெனி பெயர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உயர்ந்திருப்பது அவனே முழு முதல் காரணம். அதனால் அவனை தன்னுடைய மகன் போல் தான் பார்ப்பார். அந்த உரிமையில் தான் அவரிடம் இப்படி பேசுகிறான்.
“ அது புரியுதுப்பா இருந்தாலும்…” என்று இழுக்க “ஃபேமிலி காலிங் வேற ஒன்னும் இல்ல போய் தான் ஆகணும் எனக்கு அங்க நிறைய வேலைகள் இருக்கு நீங்களும் ஃபிரீ ஆனா இந்தியாவுக்கு வாங்க!” என்றவன் அவரிடம் சில விஷயங்களை பற்றி பேசிவிட்டு கைகுலுக்கி விட்டு வெளியேறுவதற்கு முன்பு “கரண்!” என்று அழைத்தார் .
“சொல்லுங்க சார் என்று திரும்ப ”ஐ மிஸ் யு டா !” என்றவர் அவனை இருக அனைத்து கொள்ள லேசாக புன்னகையை உதிர்த்தவன் அவரது தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வெளியேறினான்.
மாலை வேலை கம்பெனி வேலைகள் முடிந்தவுடன் ஏழு மணி போல் வீட்டிற்கு வந்தவன் உணவை எடுத்துக்கொண்டு அவன் எப்பொழுதும் குடிக்கும் மதுபானத்தையும் குடிக்க ஆரம்பித்தான்.
செல்போன் அடித்து ஓய்ந்தது. நாலாவது முறை முழு ரிங் சென்று கடைசி ரிங் சென்று கொண்டிருக்க எடுத்து காதில் வைக்க “சார்!” என்று தயங்கிய ஜெனிபர் குரலில் எரிச்சல் அடைந்தவன் என்ன விஷயம் என்று குழரலாக கேட்டான்.
“நாளைக்கு நைட்டு பத்து மணிக்கு பிளைட் இருக்கு அதை சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன்!” என்றால்.
“சரி! என்னை கூட்டிட்டு போக வந்து!” என்றவன் தன்னுடைய படுக்கையறைக்குள் சென்றவன் குவளையை கையில் எடுத்துக் கொண்டு அங்கே இருந்த ஒரு தனிப்பட்ட அறைக்குள் நுழைந்தவன் விளக்கை ஒளிர வைக்க நடுநாயகமாக மிகப்பெரிய ஒரு புகைப்படம் இருக்க அதற்கு முன்பு ஒரு சோபாவும் போடப்பட்டிருந்தது.
அதற்கு முன்னால் அமர்ந்தவன் அழகோவியமாக இருக்கும் பெண்ணவளை பார்த்து கோபத்துடன் அமர்ந்திருந்தவன் மெது மெதுவாக மதுபானத்தை குடிக்க அவனின் மனமானது . அவளை முதலில் பார்த்த தருணத்திற்கு செல்ல அப்படியே கண்ணை மூடியவன் உறக்கத்திற்கு சென்றான்…
மறுநாள் அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்தவன் இல்லத்திற்கு விரைந்து தன்னுடைய பைகளை எடுத்துக்கொண்டு அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியே வர அவனுக்கான கார் வந்து நிற்க,
அதிலிருந்து கீழே இறங்கிய ஜெனிபர் அவனுடைய பைகளை வாங்கி தன் லக்கேஜ்களுடன் உள்ளே வைத்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் ஏர்போர்ட் வந்து இறங்கி செக்கிங் செய்துவிட்டு இந்தியா செல்லும் விமானம் நோக்கி தங்களது பயணத்தினை ஆரம்பித்தனர்..
மறுபக்கம் இவனுடைய அன்புக்கும் காதலுக்கும் வெறுப்புக்கும் காரணமானவள் கோயம்புத்தூர் சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
தன்னுடைய உயிரையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சுமந்து கொண்டு வாழ்க்கையே சூனியமாக அடுத்து என்ன செய்வது என்று கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவள் நிலைமையை கண்டு அந்த வானமே அழத் தொடங்கியது. அதுதாங்க மழை பெய்ய ஆரம்பிச்சுடுச்சு.
அது கூட நம்ம ஹீரோயின் அபி ரஞ்சிதாவுக்கு தெரியாம கால் போன போக்குல நடந்துட்டு இருக்க மழைக்காக எல்லாரும் ஒதுங்க ஆரம்பித்தார்கள். அதனால் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைய அப்பொழுது அவளை இரண்டு கார்கள் சூழ்ந்து கொள்ள
அந்த சத்தத்தில் தான் சுயநினைவு அடைந்தவள் தன்னை சுற்றிப் பார்க்க அங்கே இருந்தவர்களை கண்டு அச்சமுற்றவள் அவர்களுக்கு நடுவே வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சொட்டை தலையுடன் முகம் எல்லாம் பற்கள் போல் சிரித்துக் கொண்டே அவளை பார்த்து நெருங்கிய அந்த ஏரியா கவுன்சிலர் ஈஸ்வரன்.
” அட அட அட வீட்டில பார்த்தா ஒரு போதை ஏத்துற ரோட்டுல இப்படி மழையில முழுவதுமா பார்த்தா இன்னும் போதை ஏத்துற! உன்னை எந்த விதத்தில் பார்த்தாலும் உன் மேல எழும் காமம் குறைய மாட்டேங்குது! நானும் எத்தனையோ பொண்ணுங்களை அனுபவிச்சுட்டேன்! ஆனா எனக்கே அடங்காம எந்த ஆங்கில் இருந்து பார்த்தாலும் அழகோவியமா தெரியிற! கண்டிப்பா உன்ன அனுபவிச்சே ஆகணும் !” என்றவன் தனது அடியாட்களுக்கு கண்ணை காண்பிக்க அதில் மிரண்டவள்
“இல்ல ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! நான் இப்போ தனியாள் கிடையாது! என் வயித்துல ஒரு குழந்தை இருக்கு ப்ளீஸ் என்னைய விட்டுடுங்க! ” என்று கதறிய அவளை கண்டுகொள்ளாமல் அருகில் நெருங்க ,
” உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா உங்களுக்கு மக வயசு எனக்கு இப்படி அநியாயம் பண்றிங்களே!” என்று அழுது கொண்டே பின்னால் நகர
அவளுக்கு பின்னால் இருந்த அடியால் மேல் இடிக்க அதில் மீண்டும் முன்னால் நகர்ந்து நின்றவள் முன்பு வந்து பல்லை காட்டிக் கொண்டு நின்ற அந்த கவுன்சிலர் ஈஸ்வரன் பேய் சிரிப்பொன்றை சிரித்து விட்டு “அதனால தான் இன்னும் கூடுதல் அழகோடு இருக்கியா? அப்ப அது அனுபவிச்சு ஆகணும் !” என்றவன் அவளை காரில் தள்ளி அவளுடன் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு விரைந்தான்…
அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஃப்ளாஷ்பக் ஆரம்பிக்கும் விறுவிறு என்று கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த வகையில் பயணமாகும் கமெண்ட் செக்ஷனில் கதை பற்றிய உங்களை கருத்துக்களை தெரிவியுங்கள் சொந்தங்களே….
