முற்புதற்குள் சற்று தள்ளி எட்டிப் பார்த்தாள் தேன் நிலா.
முகத்தில் உடலிலும் ரத்த காயங்களோடு மயங்கிய நிலையில் கிடந்தான் ஒருவன் அவனைப் பார்த்து திடுக்கிட்டவள் , “உயிர் இருக்கா என்னன்னு தெரியலையே? “என அவன் அருகே குனிந்து அவன் கையைப் பிடித்து நாடியை பார்க்க துடித்துக் கொண்டிருந்தது,
“நல்லவேளை உயிர் இருக்கு இவர எப்படியாவது காப்பாத்தணும் ” என அவள் தனக்குள் கூறிக் கொண்டிருக்க.
“சீக்கிரம் தேடுங்கடா அவன் மட்டும் இன்னைக்கு கிடைக்கலன்னா நம்மள சார் உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்” என பேச்சு குரல் கேட்டதும்.
வேகமாக அவளும் அந்த முற்பதுக்குள் நுழைந்து ,, வெளியில் தெரிந்த அவன் கையை உள்ளே இழுத்து கொண்டாள் தேன் நிலா.
அவனைத் தேடி வந்த அந்த அடியாட்கள் “டேய் ! அவன் எங்கன்னு தெரியலையே டா, நம்ம தேடிட்டே தான் வரோம் , அவன் எங்க? போனான்னே தெரியலையே?” என்றான் ஒருவன் .
“அவன் இருந்த நிலைமைக்கு கண்டிப்பா இந்த காட்டை விட்டு போய் இருக்க வாய்ப்பே இல்ல , நம்மளுக்கு பணம் கிடைக்கலைனாலும் பரவாயில்லை, நாம உயிர் பிழைக்க அவன் கண்டிப்பா வேணும் அவனை இன்னக்கி கொல்லாம விட கூடாது ” என வெறி கொண்டு அவனை தேடி கொண்டிருந்தார்கள்.
“இவர தான் அவனுங்க தேடிக்கிட்டு இருக்காங்க போலையே, ! ஏற்கனவே இவருக்கு ரொம்ப அடி பட்ருக்கு , கடவுளே! அவனுங்க இந்த பக்கம் வர கூடாது “என அவள் சாமியை வேண்டி கொண்டிருக்க, antha வழியே ஒருவன் வர , காயம் பட்டவனை நெருங்கி அமர்ந்து மூச்சு கூட விடாமல் அமைதியாக இருந்தாள்.
“அந்த பக்கம் போய் பாப்போம் வாங்கடா” என ஒருவன் கூற , சிறிது நேரம் கழித்து மெல்ல எட்டிப் பார்த்தாள் அவர்கள் சென்று விட்டார்கள் என்பதை உறுதி செய்ததும் மெல்ல வெளியே வந்தவள் அவன் கையைப் பிடித்து புதருக்கு வெளியே இழுத்தாள், அப்புறம் மெது மெதுவாக அவன் உடலை முழுவதுமாக வெளியே இழுத்தாள்.
அவன் மெதுவாக மூச்சு விட்டுக் கொண்டிருக்க அவன் கன்னத்தை தட்டியவள் ” கண்ணைத் திறந்து பாருங்க” என்றாள் , அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் மெதுவாக கேட்டது, ஆனால் அவனால் கண்களை திறக்க, அசைய கூட முடியாமல் இருந்தது.
“இப்ப என்ன?பண்றது இவர் கண் திறக்க மாட்டெங்குறார் , சரி நம்மளே எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் “என நினைத்தவள் அவனை மெதுவாக தூக்கி உட்கார வைத்து மெதுவாக மெதுவாக மெல்ல தூக்கி அவனது கையை தன் தோள்பட்டையில் போட்டு மெதுவாக நகர்த்திக் கொண்டு வர.
அவனும் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து மெதுவாக நடந்து வந்தான் , கண்களை திறக்காமல்.
“அப்படித்தான் மெதுவா வாங்க, என் தோள்ல இறுக்கமா பிடிச்சுக்கோங்க” என்று அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் இப்பொழுது தெளிவாக கேட்டது.
“யார் இவ ?எங்கிருந்து வந்தா ?என அவன் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க.
இங்கு அவளை காணாமல் தேடிக் கொண்டு வந்தார் அவள் பாட்டி தூரத்தில் தன் பேத்தி தோளில் ஒருவன் கை போட்டு வருவதை பார்த்து ” இவ என்ன சொன்ன மாதிரியே இவனையாவது கடத்திட்டு வந்துட்டாளா? என புரியாமல் அவளை பார்த்துக் கொண்டே நிற்க.
” ஏய் ! கிழவி அங்க என்னத்தை பார்த்துக்கிட்டு நிக்கிற வா வந்து இவரை ஒரு கைப்பிடி ” என கத்தினாள்.
அவர்கள் அருகில் வந்த பாட்டி அவன் மற்றொரு கையை தன் தோளில் போட்டுக் கொண்டு இருவரும் அவனை மெதுவாக நடத்தி தங்கள் வீட்டுக்கு கூட்டி வந்து அவனை கட்டிலில் படுக்க வைத்தார்.
அவர் தான் அந்த ஊரில் வைத்தியம் பார்ப்பவர், அதனால் தான் தேன் நிலா மூலிகை பறிக்க தினமும் மலைக்குச் செல்வது வழக்கம்.
இப்போது பாட்டி நிலாவை கேள்வியாக பார்க்க.
” என்ன ? அப்படி பாக்குற பாட்டி”.
“யாருடி?இந்த தம்பி.”
“எனக்கு என்ன?தெரியும் , நான் மூலிகை பறிக்க போனேனா, அப்போ இவரு அடிபட்டு கிடந்தாரு. அதனால் தான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன், உனக்கு ஒன்னு தெரியுமா? இவரு இப்படி அடிபட்டு கிடக்கும் போதும் இவரை விடாமல் துரத்திட்டு வந்தாங்க நான் தான் இவரை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்”.
” அப்படியா!! நீ நல்ல வேலை பண்ணியிருக்” என்றார் பாட்டி.
“சீக்கிரம் வைத்தியம் பாரு பாட்டி.”
“இதோ “என்றவர் அவன் உடைகளை அகற்றி அவனது ரத்ததை துடைத்து , அவனுக்கு வேட்டியை கட்டி விட்டவர் ,
“நான் சொல்றத மட்டும் எடுத்துக்கொடு “என என்றார் நிலாவிடம்.
பாட்டி கேட்ட மூலிகைகளை ஒவ்வொன்றாக எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொடுத்தாள் அவள், அவன் உடலில் இருந்த ரத்த காயங்களை நன்றாக துடைத்துவிட்டு மருந்து போட்டு கட்டி விட்டார்
” பாட்டி இவருக்கு எப்படி ? இருக்கு”.
“இரு சொல்றேன்”.
சற்று நேரம் கழித்து மீண்டும்” சீக்கிரம் சொல்லு பாட்டி இவருக்கு எப்புடி ? இருக்கு”.
“ஏன் டி? இப்படி தொண தொண னு கேட்டுட்டே இருக்க கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு ” , ரெண்ட மணி நேரம் அவனுக்கு வைத்தியம் செய்து முடித்தவர் வெளியில் வர.
” இப்பவாச்சும் சொல்லு கெளவி” என கத்தினாள் தேன் நிலா.
” இந்த தம்பிக்கு உடம்பு எல்லாம் ரொம்ப அடிபட்டு , காயமாகி இருக்கு நிறைய ரத்தம் போயிருக்கு”.
“அச்சச்சோ! ” என்றாள் பதறி.
“காயம் சரியாக எப்படியும் ஒரு மாசம் ஆகும், அதுவரைக்கும்”.
“என்ன? சொல்லு பாட்டி , ஏன்? இழுக்கிற”.
அதுக்குள்ள என்ன ? வேணா நடக்கலாம் காப்பாத்துறது கொஞ்சம் கஷ்டம் “என்றார் பாட்டி.
“என்ன? இப்படி சொல்ற? என கேட்டாள் கண்கள் கலங்கியபடி.
“நா நெசமா தா சொல்றே , இந்த தம்பி நெலம மோசமா தான் இருக்கு என்னால காப்பாத்த முடியும்னு உறுதியா சொல்ல முடியாது தேனு.”
“அப்படி சொல்லாத பாட்டி , உயிரை காப்பாத்துறது தான உன் கடமை”.
“ஆமா , நானும் எத்தனையோ பேருக்கு வைத்தியம் பார்த்து காப்பாத்திருக்கேன்”, .
“அதே போல இவரையும் காப்பாத்து ” என அழுதுவிட்டால் அவள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டுதான் இருந்தவன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்றான்.
“கவலை படாத என்னால முடிஞ்சத நானும் கண்டிப்பா பண்றேன்”.
இன்றோடு அவர்கள் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆனது, அன்று காலையில் அவன் உடலை துடைத்து அவனுக்கு வந்து கையில் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் தேன் நிலா.
“நைட்டும் நீ சரியா சாப்பிடல இந்த சாப்பாடு” என பாட்டி அவளுக்கு சாப்பாட்டை கொடுக்க.
“வேணாம் , நான் அப்புறம் சாப்பிடுக்கறேன்”.
” உனக்கு என்ன? ஆச்சு, நீ ஏன்? இப்படி இருக்க “என பாட்டியும் அவளும் பேசிக்கொண்டிருக்க.
பக்கத்து வீட்டில் இருந்த பரமுவின் வீட்டில் சத்தம் கேட்டது.
“யார்? நீங்க எதுக்கு? இப்படி உள்ள வீட்டுக்குள்ள வரீங்க என கேட்டாள் பரமு.
“தேவை இல்லாம பேசாத ரெண்டு நாளைக்கு முன்னாடி அடிபட்ட காயத்தோட யாராவது இந்த ஊர்ல நீ பார்த்தியா?”.
“இல்லையே”.
“உன் வீட்டில யார் யார்? இருக்கீங்க “என கையில் துப்பாக்கியுடன் கேட்டான் ஒருவன்.
“நானும் என் புருஷன் என் குழந்தைங்க” என்றாள் பரமு பயத்துடன்.
” அப்படி எவனயாவது நீ புதுசா ஊருக்குள்ள பார்த்தா எங்க கிட்ட சொல்லணும் சரியா? “.
” சரி “என தலையசைத்தாள்.
அவர்கள் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருப்பது நிலாவின் வீட்டில் தெளிவாக கேட்டது.
பாட்டியும் நிலாவும் வாயை பொத்திக் கொண்டனர், அவர்கள் பரமு வீட்டை விட்டு வெளியேறியதும்” பாட்டி அவங்க இவரைத்தான் தேடி வந்திருக்காங்க”.
” இப்ப என்ன ? பாட்டி பண்றது , எனக்கு ஒன்னும் புரியலையே! ” என அவள் கை கால்கள் நடுங்க நின்று கொண்டிருக்க.
“பயப்படாத நான் இருக்கேன்” என்றவர்” நீ இங்க படு”.
“நீ என்ன? சொல்ற பாட்டி எனக்கு புரியல”.
“ஆபத்துக்கு பாவமில்ல , இந்த இந்த தம்பி பக்கத்துல படுத்துக்கோ”.
” என்ன ?பாட்டி சொல்ற, நா எப்படி? “என அவள் தயங்க.
“இந்த தம்பி உயிர காப்பாத்தணுமா வேணாமா? ”
“கண்டிப்பா காப்பாத்தணும்.”
“அப்போ கேள்வி கேக்காம நா சொல்ற செய்”.
“சரி “என்றவள் அவன் படுத்திருந்த பாயில் அவன் அருகில் படுக்க.
ஒரு போர்வையை எடுத்து அவன் மீதும் நிலாவின் மீதும் போர்த்தி விட்டவர் வெளியில் வந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த நான்கு பேர் , “ஏய்!! கிழவி இந்த பக்கம் அடி பட்ட காயத்தோட ஒருத்தனை பாத்தியா?” என கேட்டான்.
“யாரா?? பாத்து கெழவினு சொன்ன, வாயை கிழிச்சிடுவேன் ” என்றார் கோவமாக.
“டேய் , உன் வாயை வச்சுட்டு சும்மா இருடா” என்ற மற்றவன், “” பாட்டி இந்த பக்கமா யாராவது ஒருத்தன் ரொம்ப காயத்தோடு அடிபட்டு வந்ததை நீங்க பார்த்தீங்களா? “.
“அப்படி எவனையும் நான் பார்க்கலையே”.
” இல்ல இந்த ஊர்ல நீங்கதான் வைத்தியம் பாக்குற பாட்டின்னு சொன்னாங்க”.
” அப்டி யாரும் அடிபட்டு என் கிட்ட வைத்தியம் பாக்க வரல”.
“உங்க வீட்ல யார் யார்? இருக்காங்க.”
“நான் என் பேத்தி இருக்கோம் “”,
ஒருவன் வீட்டுக்குள் செல்ல போக,
ஏய், எங்க?போற ” என அவனை தடுத்தார் பாட்டி.
“உங்க வீட்டை சோதனை போட”.
“அதெல்லாம் நீ வீட்டுக்குள்ள போக கூடாது”.
“ஏன்?” என அவன் கேக்க.
“என் பேத்தி அவ புருஷன் வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருக்காங்க ” என்றார் வெக்கத்துடன்.
“அதுக்கென்ன” என அவன் கேட்க.
“அட முட்டா பயலே அவங்களுக்கு இப்ப தான் கல்யாணம் ஆகிருக்கு , நீ எங்க வீட்டுக்குள்ள போறேன்னு சொல்ற உனக்கு அறிவில்ல” என அவன் கன்னத்தில் பாட்டி இடிக்க.
அதை பார்த்த மற்றவர்கள் சிரிக்க.
அப்போது தான் , தன் பேச்சை நினைத்து அசடு வழிய நின்றவன், ” சரி சரி வாங்க டா போவோம் ” என அவர்கள் வேறு பக்கம் தேட செல்ல.
இங்கு வீட்டுக்குள் அந்த அடியாள் பேசியதை கேட்ட தேன் நிலா தன்னை அறியாமல் பயத்தில் கண் மூடி காயம் பட்டவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.
அவள் அணைத்ததில் அவனுக்கு மயக்கம் தெளிந்தது, நினைவு இருக்கு, ஆனால் கை அசைக்கவோ, கண் திறக்கவோ சற்றும் அசைய கூட அவனால் முடியவில்லை.
அந்த ரவுடிகள் திரும்ப வந்தாலும் வரலாம் என எங்கும் செல்லாமல் மூலிகையை அரைத்து கொண்டிருந்தார் பாட்டி.
அவள் கூந்தல் வாசம் உணர்ந்தான்,அவள் தொடுகையை உணர்ந்தான், உங்களுக்கு எதும் ஆகாது கவலை படாதீங்க நான் இருக்கேன் என அவள் பேசிய வார்த்தைகள் அவன் காதில் நன்றாக கேட்டது, முதன் முதலில் ஒரு பெண்ணின் நெருக்கத்தை, ஸ்பரிசத்தை உணர்ந்தான் அவன்.
அவள் உடலில் இருந்து வந்த சந்தனவாசல் அவனை மொத்தமாக வேறு உலகத்தில் இழுத்துச் சென்றது. உடலில் காயம் பட்டிருந்தாலும் அணையாத அவன் மார்பு நெருப்புக்கு அவள் தன் கண் இமை முடிகளால் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் தன்னை அறியாமல் தேன் நிலா.
♥️யார் இவன் , இவனை ஏன்? கொல்ல துடிக்கிறாங்க தெரிஞ்சுக்க அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க ♥️
