அத்தியாயம்-13

நமது கரண் வந்து இறங்கியவுடன் முதலில் அவன் கால் செய்தது அபிக்குதான். 

அதைப் பார்த்த தேவன் “ஆரம்பிச்சிட்டாண்டா எப்ப இவன் போன கீழே வைப்பானே தெரியாது!”  என்று சொல்லிக்கொண்டே கழிவறைக்குள் நுழைந்த தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தளர்வான உடை அணிந்து பெட்டில் படுத்துக் கொண்டான். 

ஸ்ரீ நந்தனும்  நண்பன் வந்த பிறகு அவனும் ரெஃப்ரெஷ் ஆகி வர இவன் கால் செய்தவுடன் கட் செய்து அபி ’10 மினிட்ஸ் கழிச்சு கூப்பிடுறேன்’ என்று மெசேஜ் அனுப்பி விட்டாள். 

அதற்குள் இவனும் ஸ்ரீ நந்தன் வந்தவுடன் ரிப்ரஷ் ஆகிவிட்டு வர இரண்டு மிஸ்டு கால்கள் கரண் செல் போனில் அபியிடம்  இருந்து வந்திருந்தது.

அதைப் பார்த்தவன் “ஏண்டா போன் அடிக்கிறப்பவே என்ன கூப்பிட வேண்டியதுதானே ?” என்று சொல்லிக் கொண்டே கால் செய்தான். 

“எப்படியும் நீ வந்து போன தானே முதல்ல பாப்பே அதனால தான் சொல்லல !” என்ற நந்து தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான்..

அவன் எப்பொழுதுமே அமைதியாக இருப்பவன் அப்பா அம்மா தொழிலதிபர்கள் என்பதால் இவனுக்கு பேசத் துணை சிறுவயதில் இருந்து யாரும் இல்லாமல் இருந்ததால்  காலேஜ் வரை அமைதியாக இருப்பான். அதுவே அவன் வழக்கமாகி போய்விட்டது. 

 இவர்களிடம் மட்டும் தான் சகஜமாக இருப்பான் அதுவும் அவர்கள் எது செய்தாலும் கூட இருப்பானே ஒழிய வாய் திறந்து அவ்வளவாக பேசமாட்டான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தான் அவனிடம் வரும்..

அதுதான் அவனுக்கு இங்கே அதிக வசனங்கள் இல்லாமல் இருக்கும். தேவனோ தன்னுடனே வீட்டில் இருந்து இருந்தால் எப்பொழுதும் இருக்கும் தேவியை மிகவும் மிஸ் செய்தான் உடன்பிறப்பாயிற்றே…

ஆனாலும் ஃபேமிலியுடன் வந்தால் ஒரே அறையில் தங்கலாம் இது கல்லூரியில் இருந்து வந்திருப்பதால் இப்படித்தான் இருக்க முடியும் என்பது அவனுக்கும் நிதர்சனம் புரிந்ததால் அமைதியாக இருந்தான். 

அவர்கள் இருவரும் ஆண் பெண்ணாக இருந்தாலும் ஒரே கருவறையில் இருந்து பிறந்ததால் அவளை  விட்டு பிரியாமல் இருப்பான் வீட்டிலும் சரி எங்கே சென்றாலும் தனது உடன் பிறப்புடன் தான் செல்வான். 

சரி இப்ப நம்ம கரண்  என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்.

 போன் கால்  வரவே மாட்டேங்குது என்று போனை பார்த்துக் கொண்டிருந்தவன் பொண்டாட்டி காலிங் ஆமாம் அப்படித்தான் சேவ் செய்து வைத்திருந்தான் அவன். 

வந்தவுடன் காலை அட்டென்ட் செய்தவன் வீடியோ கால் என்பதால் அங்கு இருந்த பால்கனியில் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 அவளிடம் சந்தோஷமாக மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தாலும் முகத்தில் இருவருக்கும் லேசான கவலை இருந்தது. 

தன் முகத்தில் இருக்கும் கவலை அவன் முகத்திலும் பிரதிபலிப்பதே உணர்ந்த அபி “ஏன்  கரன் சோகமா இருக்கீங்க?”  என்றால். 

“உன் பக்கத்துல இல்ல ல அதனாலதான்!”  என்றவன் முகம் அவளை அணு அணுவாக ரசித்தது. 

 அதில் வெட்கம் ஏற்பட்டுவிட தலை குனிந்தவலை பார்த்து சிரித்தவன் “நிமிர்ந்து என்ன பாரடி நேர்ல பார்க்க முடியல என ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் வீடியோ கால்லயும் நீ உன் முகத்தை காட்டாமல் கீழே குனிஞ்சு கிட்டேனா நான் என்ன பண்ணுவேன்?”  என்றான் ஏக்கமான குரலில். 

“சரி சரி எப்படி ட்ராவல் எல்லாம் நல்லா இருந்ததா நல்லா என்ஜாய் பண்ணிங்களா?”  என்றால்.

 பஸ்ஸில் நடந்த அனைத்தையும் சொன்னவன் “ரூமிற்கு வந்து விட்டோம்! இனிமேட்டு நைட்டு எட்டு மணிக்கு தான் சாப்பிட போகணும்!  அதுவரைக்கும் ரெஸ்ட் தான்!”  என்றான் .

“சரி சரி நீங்க எந்த இடத்தில இருக்கீங்க?”  என்று விவரங்கள் கேட்க அவனும் கூறினான். 

அவர்கள் இருந்தது இரண்டாவது மாடி என்பதால் அங்கிருந்த பெங்களூர் சிட்டியை வீடியோ காலில் அவளுக்கு காண்பித்தான். 

அவளும் இதுவரை பெங்களூரு சென்றதில்லை என்பதால் அதையெல்லாம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள்.

 இப்படி அரை மணி நேரம் சென்று இருக்க அவளுடைய அம்மா அழைக்கும் குரல் கேட்டவுடன்” ப்ளீஸ் டி இன்னும் கொஞ்ச நேரம் பேசு!”  என்றான்.

அவளோ ” உங்களுக்கே அம்மா கூப்பிடுகிறார்கள் என்று தெரியுது இல்ல அப்புறமா இப்படி கேட்டுட்டீங்கன்னா என்னப்பா பண்றது?”  என்று அவள் கூறினாள்.

” எனக்கும் ஆசையாக தான் இருக்கு நம்ம நைட் பேசலாம்!”  என்று சொல்லிவிட்டு அவன் எதிர்பார்க்காத நேரம் போன் வழியாக முத்தம் ஒன்றையும் கொடுத்துவிட்டு அனைத்து விட 

இதுவரை இவன் கேட்டும்  கொடுக்காதவள் இன்று அவளாக கொடுத்ததில் அதிர்ச்சி அடைந்தவன் அதை பெறுவதற்கு முன்பு கால் கட் ஆகியதால் “அடச்ச மிஸ் பண்ணிட்டனே ஃபர்ஸ்ட் கிஸ்ஸ!”  என்னமோ நேரிலேயே கொடுத்தது போல் பீல் செய்தான் அதை அனுபவிக்க முடியாமல் சீக்கிரம் அவள் கால் கட் செய்ததை நினைத்து. 

முகத்தில் புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தவன் பெட்டில் படுத்துக்கொண்டு மொபைலில் இத்தனை நாட்கள் தன்னவலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தவன் அப்படியே சிறிது நேரம் கண்ணயர்ந்தான். 

அபி இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்கு வர பின்னாலேயே வந்த அவளது அக்கா பவித்ரா “என்னடி வர வர போனும் கையுமா இருக்க? இப்படி இருக்க மாட்டியே என்னாச்சு யாரையாவது லவ் பண்றியா?”  என்றால்.

 அதில் அதிர்ச்சி அடைந்தவள் முகத்தை மீண்டும் நார்மல் ஆகிக்கொண்டு “அதெல்லாம் இல்லக்கா !” என்று கூறியவள் ஃபோனை வைத்துவிட்டு அசைன்மென்ட் எழுத ஆரம்பித்து விட 

“நானும் உன்னோட வயசெல்லாம் கடந்து தான் வந்து இருக்கேன். எதுக்கும் ஜாக்கிரதையா இரு யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாதே அப்புறம் நீ தான் ஏமாந்து போவ !” என்றால்.

 தற்பொழுது தனது அக்காவை சந்தேகமாக பார்த்தவள் “என்ன அனுபவம் பேசுதா ?” என்றால் இவள்.

” அப்படின்னு வச்சுக்கோயேன் என்றவள்,  போர்வையே இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து விட அதை பார்த்து சிரித்தவள் தன்னவன் புகைப்படத்தை பார்த்த முத்தமிட்டு விட்டு அபியும் அசைன்மென்ட் எழுத ஆரம்பித்தால். 

அடுத்த நாள் காலை அழகாக விடிய மாணவர்கள் சீக்கிரமாகவே காலையில் எழுந்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு தயாராகி ரிசப்ஷனில் காலை ஏழு முப்பது மணி போல் அனைவரும் ஆஜர் ஆகினர். 

ஆசிரியர் அட்டனன்ஸ் எடுத்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவுடன் பேருந்தில் ஏற அவர்கள் செல்லவிற்கும் இடத்திற்கு பயணம் ஆகினர்.

 ஒரு மணி நேரம் கழித்து அந்த இடம் வந்து இருக்க அந்த மேனுஃபாக்சரிங் யூனிட் இருக்கும் இடம் சற்று இயற்கை எழிலுடன் இருந்ததால் சில்லென்ற காற்று வீச அனைவரும் அதை ரசித்துப் பார்த்து நின்று  இருக்க அதை பார்த்த பெண் ஆசிரியர் ஒருவர் ” இயற்கை அப்புறம் ரசிச்சுக்கலாம் எல்லாரும் உள்ள போய் பார்த்துட்டு வரலாம்!” என்று கூறியவர்  கல்லூரியில் இருந்த கொண்டு வந்திருந்த பர்மிஷன்  லெட்டரை அங்கே இவர்களுக்காக காத்திருந்தவரிடம் கொடுக்க அவர்களும் அதை பார்த்து மாணவர்களிடம் உள்ளே  எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை கூறிவிட்டு  அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 அப்படியே நேரங்கள் கடக்க 12 மணி போல் அனைவரும் மீண்டும் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர அங்கேயே அவர்களுக்கு உணவு வகை பஃபெட் முறையில்  ஏற்பாடு செய்திருக்க அனைவரும் நிம்மதியாக சாப்பிட்டு முடித்தனர்.

 அப்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் அனைவருக்கும் ஐஸ்கிரீமும் கொடுக்க போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டனர்.

 ஆராத்யாவும் தனக்கு பிடித்த பிளேவரை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பார்த்த அவளது தோழி “உங்க அப்பாவுக்கு தெரிஞ்ச கம்பெனின்னு சொன்னியேடி சாப்பாடெல்லாம் போடுற அளவுக்கு ரொம்ப நல்ல கம்பெனியா தான் சூஸ் பண்ணி இருக்க!”  என்றால் ஒரு தோழி. 

இவளும் அவங்க எல்லாம் ஒன்னும் போடல. நான் தான் சொன்னேன் வெளில சாப்பிடுறதுக்கு எனக்கு பிடிக்கல.  இந்த ஃபுட்டெல்லாம் எங்கிருந்து வந்திருக்கும் நினைக்கிறீங்க?  இங்கு எங்களுக்குன்னு ஒரு ஹோட்டல் இருக்கு . செவன் ஸ்டார் ஹோட்டல் அந்த ஹோட்டலில் இருந்து வர வெச்ச சாப்பாடு ! உங்க ஒவ்வொரு சாப்பாடும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு மேல வரும் அந்த சாப்பாடெல்லாம் இன்னைக்கு நீங்க ஃப்ரீயா சாப்பிட்டு இருக்கீங்க. என்ன அங்க அதுக்கு ஏத்த மாதிரி செட்டப்ல குடுப்பாங்க இங்க நம்மளுக்கு ஸ்டூடண்ட்ஸ்ன்னால அதே புட்டு இப்படி சிம்பிளா பரிமாறி இருக்காங்க அவ்வளவுதான்!”  என்றால் பெருமையாக.

 அதைக் கேட்டு அந்த தோழிகளும் அவளை ஆஹா ஓஹோ என்று புகழ வழக்கம் போல் அவர்கள் பாராட்டு மழையில் நனைந்தவள் அப்படியே இந்த விஷயம் ஒவ்வொருத்தர் காதிற்கும்  கேட்ட அனைவரும் வந்து ஆராதியாவிடம் நன்றி கூறிவிட்டு சென்றனர்.

அவள் எதிர்பார்த்ததோ கரண் தன்னிடம் வந்து பேசுவான் என்று தான் . ஆனால் அவனும் அதுவரை கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் இவள் ஏற்பாடு செய்தது தான் என்று கேட்டவுடன் அதை அங்கே இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட அவனது தோழர்களும் அவ்வாறு செய்தனர். 

 இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவுக்கு  மிகவும் கோபம் ஏற்பட்டது.

 “இருடா உன்னை வச்சிக்கிறேன் கண்டிப்பா என்னோட வலையில்  உன்னை விழ வைப்பேன்!”  என்று நினைத்துக் கொண்டவள் மாலையும் அதேபோல் வேறு ஒரு இடத்திற்கு சென்று பார்த்துவிட்ட அறைக்கு வந்தனர். 

 இரவு உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க வழக்கம்போல் அன்று இரவும் அபியிடம் இன்று நாள் முழுவதும் என்னென்ன நடந்தது என்று அனைத்தையும் கூறினான்.

 பேசி முடிக்கும் பொழுது “நேத்து ஒன்னு குடுத்தியே அது அனுபவிக்கவே இல்லடி இப்போ நல்லா குடு நிறுத்தி நிதானமா நீ மட்டும் கொடுத்தால் போதுமா? நானும் கொடுக்க வேண்டாமா?”  என்று  கொஞ்சலான குரலில் கேட்டான்.

” என்ன கொடுத்தேன் எனக்கு புரியல என்ன சொல்றீங்கன்னு?”  என்று தெரிந்தும் தெரியாதவள் போல் கேட்டால்.

” உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்  நடிக்காத நேத்து நீ பாட்டுக்கு எவ்வளவு நாள் கேட்டுட்டு இருந்த கிஸ் அசால்ட கொடுத்துட்டு போயிட்ட!  அதை நீ கொடுக்கிற என்று தெரியாமல் நான் அதை மிஸ் பண்ணிட்டேன். இன்னிக்கு எனக்கு டைரக்ட்டா கொடுக்க முடியலனாலும் போன்ல கொடுடி ப்ளீஸ்!”  என்ற கெஞ்சினான். 

 அவளும் தனது அக்கா அறைக்கு வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க “எங்கடி வேடிக்கை பாக்குற எனக்கு கிஸ் பண்ணு!”  என்றான். 

அடுத்த அவள் செய்த காரியத்தில் அவன் அதிர்ச்சியாகி விட்டான்…

அப்படி என்ன செய்திருப்பான் என்று அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page