அத்தியாயம் 14

அத்தியாயம் 14

விமலா காம்ப்ளக்ஸ் வந்த மித்ரா நேராக உள்ளே சென்று அங்கிருந்த தன் நண்பன் அருணை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை பின்தொடர்ந்து வந்த அவளுடைய கணவன் தீரன்..

அவள் அவனுடன் பேசுவதை கண்டதும், உச்சி முதல் பாதம் வரை அவனுக்கு தீப்பற்றிக் கொண்டு எரிந்தது..

கோவம் தாங்காமல் அவளை பின்தொடர்ந்து அவர்களை கையும் களவுமாக பிடித்து விடலாம் என்று நினைக்கையில் அவர்கள் இருவரும் லிஃப்டிற்குள் சென்று விட்டார்கள்..

அவர்களை பிடிக்க முடியாத கோபத்தில் சுவற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் நான்கு நான்கு படிகளாக வேக வேகமாக ஏறினான்..

முதல் தளத்தில் லிஃப்டிலிருந்து வெளியே வந்த இருவரும் நேராக அங்கிருந்த கடைசி அறையை நோக்கி சென்றார்கள்.

பின்னாடியே வேகமாக வந்த தீரன்.. அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டான்.

என்ன காரணம்ன்னு தெரியல இவ இவன் கூட பேசினாலே எனக்கு கோவம் வருது.. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் எனக்கு நடந்தது இல்லை எல்லாமே புதுசா இருக்கு டாமிட்..!!

அவ யார் கூட பேசினா எனக்கு என்ன?? ஏன் என்னால அதை கடந்து போக முடியல ஈஸியா.. அப்படி என்ன இருக்குனு அவன் கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுறா?? ஏன் என்கிட்ட மட்டும் முகத்தை காட்டுறா?? அப்படி என்ன அந்த அருண் என்னை விட உயர்ந்தவனாக போயிட்டான் ?? என்று மனதிற்குள் கருவி கொண்டவன் வேக வேகமாக அவள் பின்னாடியே தொடர்ந்து செல்ல.. அவளோ அவனை விட வேகமாக அந்த அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள் அருணுடன்..!!

உள்ளே நுழைய முடியாதப்படி வேகமாக அந்த கேபின் கதவை முகத்தில் அறைந்து சாற்றுவது போல் சாற்றி விடவே.. அவன் நின்று வேடிக்கை பார்க்கும் நிலை உண்டானது இப்போது..

அந்த கதவிற்கு வெளியேவே மேனேஜிங் டைரக்டர் விஸ்வநாதன் என்ற பெயர் பொறிக்க பட்ட போர்ட் தொங்கப்பட்டிருந்தது..  

இவரை எதுக்காக பார்க்க வரணும் இவ?? என்ன விஷயமா இங்க வந்திருக்கா என்கிற யோசனையும் கூடவே சேர்ந்து வந்தது அவனுக்கு..

உள்ளே..

“ குட் மார்னிங் சார்.. இன்டர்வியூ இருக்கிறதா அருண் சொன்னார் அதனால தான் கிளம்பி வந்தேன்”

” உட்காருங்க”, மூக்கு கண்ணாடியை கழட்டி டேபிள் மீது வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் ஆழமாக ஒரு பார்வை பார்த்தார் விஸ்வநாதன் புன்னகையுடன்.

“ உண்மைதான் அம்மா இப்போ இந்த கம்பெனியில் வந்து வேக்கன்சி இருக்கு.. நீங்க விருப்பப்பட்டா இங்க வேலை பார்க்கலாம்..”

” நிஜமா நான் வேலை பார்ப்பேன் சார்.. நான் வேலைக்காக தான் காத்துட்டு இருக்கேன் எல்லா பக்கமும் அப்ளிகேஷன் கொடுத்து வைத்திருந்தேன்.. அருண் தான் அவருடைய கம்பெனியில் வேலை காலியா இருக்கிறதா சொன்னாரு அதனாலதான் வந்தேன்.. இதுதான் என்னோட குவாலிஃபிகேஷன் சர்டிபிகேட்.. இது என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்.. “, என்று கூறியவள் தன் கையில் இருந்த ஃபைலை நகர்த்தி டேபிள் மீது வைத்தாள் அவர் முன்பு.

மெதுவாக ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்தவர் பிறகு அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகை புரிந்தார்.

“ நல்ல மார்க் வாங்கிருக்கீங்க சந்தோஷம்.. இந்த கம்பெனியில் எதுக்காக வொர்க் பண்ணனும்னு ஆசைப்படுகிறீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா??”

” எனக்கு வேலை வேணும்.. உங்களுக்கு வேலை செய்ய ஆள் வேணும்.. இப்படி நம்மளோட தேவைகளை பூர்த்தி செய்கிற ஒரே இடமாக தான் நான் இதை பார்க்கிறேன்.. அதனாலதான் நான் வேலை பார்க்க விரும்புகிறேன் இங்கே”, என்றாள் புன்னகையுடன்.

” புத்திசாலித்தனமா பேசுறதா  நினைப்போ.. இருந்தாலும் சரி தான் நீங்க சொல்றது.. அவரவர்களின் தேவையை பொருத்து இங்கே ஒவ்வொரு வேலையும் நியமிக்கப்படுகிறது.. இங்கே டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்கு ஆள் தேவை.. நீங்க இங்க ஒர்க் பண்ண முடியுமா நாளையிலிருந்து..??”, புருவங்களை ஆச்சரியமாக உயர்த்தி அவளைப் பார்த்து கேள்வி கேட்டார் விஸ்வநாதன்.

சந்தோஷம் தாங்காமல் மலர்ந்த புன்னகையுடன் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே..

“கண்டிப்பாக வருவேன் சார்”, என்று பதிலுரைத்தாள் மித்ரா.

“ அப்போ ஓகே மிஸ் அகமித்ரா.. நாளையிலிருந்து நீங்க வேலையில் ஜாயின் பண்ணிக்கலாம்..”

அவர் அவளை மிஸ் அகமத்ரா என்று அழைப்பதற்கு காரணம் இருந்தது.. 

காலையில் அவசர அவசரமாக தன் கணவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவந்ததில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைக்க மறந்து போயிருந்தாள் அவள்.. போதாத குறைக்கு அவள் கழுத்தில் இருந்த தாலி சரடு மறைத்த வண்ணம் அவளுடைய கூந்தல் முன்பக்கமாக வந்து விழுந்திருந்தது..

அதுவும் இல்லாமல் சர்டிஃபிகேட்டில் எல்லாம் அவளுடைய பெயர் மிஸ் அகமித்ரா என்று தான் இருந்தது எல்லாம் திருமணத்திற்கு முன்பு படித்து முடித்து வாங்கிய சர்டிபிகேட் அல்லவா அதனால் தான்..

” தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச்”, என்று கூறியவள் கை கூப்பினாள்..

அவள் செல்வி அல்ல திருமதி என்பதை ஏனோ சொல்ல மறந்தாள்.. அல்லது சொல்ல தோன்றாமல் விலகினாள் என்றே சொல்ல வேண்டும்..

” நீங்க நன்றி சொல்றதா இருந்தா உங்க நண்பர் அருண் கிட்ட தான் நன்றி சொல்லணும் ஏன்னா அவர் இல்லன்னா நிச்சயமா நீங்க இங்க இன்டர்வியூக்கு வந்திருக்க முடியாது..”, என்றார் அவர்.

அடுத்த நிமிடமே நன்றி உணர்வுடன் தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் நண்பனை ஒரு பார்வை பார்த்தாள்.

” பரவாயில்லை விடு”, என்பது போல கண் ஜாடை காட்டி விட்டு அவளை அழைத்துச் சென்றான் அருண்.

உள்ளே சென்ற இருவரும் எப்போது வெளியே வருவார்கள் என்று குட்டி போட்ட பூனை போல.. இல்லை இல்லை..

சிறு திருத்தம்.. 

குட்டி போட்ட புலி போல அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தான் தீரன்..!!

கதவை திறந்து கொண்டு எப்பொழுது இவர்கள் இருவரும் வந்தார்களோ.. அந்த சத்தத்தை கேட்டு விட்டு அப்போதே வேகமாக அந்த பக்கமாக திரும்பியவன் தன் மனைவியை எரிக்கும் பார்வை பார்த்து வைத்தான்..!!

அந்த நேரத்தில்.. அந்த இடத்தில்.. அதுவும், அவளை பின்தொடர்ந்து தன் கணவன் வந்திருப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை..

அதனால் அவளுடைய முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தென்பட்டது..!!

அவள் மீது அவனுக்கு இருந்த கோபத்திற்கு நேராக அவள் அருகே சென்று அவளின் கன்னத்தை பதம் பார்க்க துடித்தது அவனுடைய இரும்பு கரங்கள்..

ஆனால் பொது இடமாக இருக்க போய் அமைதியாக நின்று விட்டான்..

அவள் அருகே அவளின் தோள் உரசி கொண்டு நின்று கொண்டிருந்த அருணை பார்க்க பார்க்க.. தீரனுக்கு பற்றி கொண்டு வந்தது அடி வயிற்றிலிருந்து தீ பிழம்பு!!

கை முஷ்டிகள் இறுக கண்களை மெல்ல மூடி திறந்தான் அவன்.

” நீங்க.. நீங்க… எப்…படி இங்க??”, தட்டு தடுமாறி கேள்வியை உதிர்த்தாள் மித்ரா.

” இங்க வந்ததால தானே பல விஷயங்கள் எனக்கு புரிய ஆரம்பிச்சுருக்கு”, என்று ஆழமாக அவளையும் அருணையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கூறினான்.

” அது.. அது.. வந்து..  நான் இங்க வந்ததுக்கு காரணம்..”, என்று அவள் முழுதாக கூறி முடிக்கும் முன்னமே அவளுடைய கை மணிக்கட்டை இறுக்கமாக பிடித்தவன் தரதரவென்று அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான்.

இவனின் நடவடிக்கையை விசித்திரமாக பார்த்தான் அருண்…

யார் பார்த்தால் என்ன?? யார் பார்க்கா விட்டால் என்ன ?? என் மனைவியை நான் இழுத்து செல்கிறேன் அதை தட்டிக் கேட்பதற்கு யாருக்குமே உரிமை இல்லை என்பது போல வேக வேகமாக அவளை இழுத்துச் சென்றவன், காரில் அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு திரும்ப எண்ணியவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை வீட்டிற்கு போக இருந்த காரை திசை திருப்பி நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்றான்..!!

அவன் இருக்கும் கோபத்தில் அம்மாவின் முன்பு சண்டை போட்டு அவளை திட்டினால் மேலும் தன் அன்னைக்கு தான் வருத்தம் உண்டாகும்.. 

எதற்காக அவர் முன்பு சண்டை போட வேண்டும் என்று எண்ணிவிட்டானோ என்னவோ?? அதனால் நேராக ஓட்டலுக்கு சென்று ஒரு ரூமை புக் பண்ணியவன் அவளை தரதரவென்று இழுத்துச் சென்றான் அந்த அறைக்குள்…!!

காரில் வழி நெடுக கேள்வியாய் கேட்டு தொலைத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அவனை..

எதுக்காக இப்படி பண்றீங்க?? எல்லார் முன்னாடியும் ஏன் என்னை இப்படி பிடிச்சு இழுத்துட்டு வர்றீங்க?? எல்லோரும் என்ன நினைப்பாங்க?? முதல்ல அருண் என்ன நினைப்பான்?? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்..

ஒரு கட்டத்தில் கார் வீட்டிற்கு செல்லாமல் திசை திருப்பி கொண்டு வேறு பக்கம் செல்லவும்..

“என்னை இப்போ எங்க கூட்டிட்டு போறீங்க?? “, என்று கேட்டுக்கொண்டே வந்தாள்..

எந்த பதிலும் கூறாமல் கவனத்தை சாலையைப் பதித்து வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்த கணவனிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அச்சத்தில் அப்படியே அமர்ந்திருந்து விட்டாள் மித்ரா.. 

ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று அவளை அந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைக்கவும் அவளுக்கு மூச்சே நின்றது போல் ஆகிவிட்டது..!!

அடக்கடவுளே வீட்டில் நம்மை போட்டு பாடா படுத்துவது பத்தாதுன்னு இப்ப ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி வேற நம்மளை தொல்லை பண்ண போறானா?? 

இல்ல.. இவன் என்னை திட்டி அடிச்சு கொடுமை பண்ண போறானா?? அதெல்லாம் அத்தைக்கு தெரியக்கூடாது அவங்க பாக்க கூடாது அப்படிங்கிறதுக்காக சாமர்த்தியமா என்னை இங்கே தனியா கூட்டிட்டு வந்திருக்கானோ?? என்று தன் கணவனை எடை போட தொடங்கினாள் அகமித்ரா..!!

“ எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?? வீட்டுக்கு போகாம நாம ஏன் இங்க வரணும் என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க ?? ”

” ஏய்.. நானும் வந்ததுல இருந்து பாத்துட்டே இருக்கேன் எப்ப பார்த்தாலும் சும்மா தொன தொனன்னு ஏதாவது பேசிட்டு இருக்க.. கொஞ்ச நேரத்துக்கு வாய மூடிட்டு பேசாம இருடி..”, பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவளை வேகமாக சுவற்றோடு சுவராக நிப்பாட்டி விட்டு இரண்டு பக்கமும் தன் கரங்கள் கொண்டு அணை கட்டினான் அவன்..!!

அவனுடைய செயலால் அச்சத்தில் மிடறு விழுங்கியவள்.. ஆழமாக அவனுடைய கண்களை ஊடுருவினாள்..!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page