கேண்டீனில் பேசிய பிறகு இரண்டு நாட்களாக தாராவின் வகுப்பறைக்குச் செல்லாத சூர்யா, அன்று மதியம் சென்றிருந்தான். அவள் கோபமாக எழுந்து அவனுக்கருகில் வந்திட,
“இங்க பாரு நீ என்னைத்தான் காதலிக்கணும்னு நான் கட்டாயப்படுத்தல. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. என்னோட ஒரே சந்தோஷமே தினமும் உன் முகத்தைப் பார்க்குறதுதான். உனக்கும் என்னைப் பிடிச்சா லவ் பண்ணு, பிடிக்கலையா கண்டுக்காத. இன்னும் ஆறு மாசத்துல எனக்கு கோர்ஸ் முடிஞ்சிடும், அதுக்கப்புறம் தொந்தரவா இருக்கமாட்டேன். சும்மா அட்வைஸ் பண்ணி என் மூடைக் கெடுக்காத” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
‘என் தாரா என் தாரா… நீயே என் தாரா…’ அவன் நகர நகர, அந்தச் செல்போன் ரிங்டோனின் சத்தமும் மெல்லத் தேய்ந்து மறைந்தது.
நதியா மறுநாள்தான் ஷீலாவை அலைபேசியில் அழைத்துப் பேசினாள்.
“சாரிடி நேத்து பேச முடியல. என்ன பண்ணிட்டு இருக்க?”
“லஞ்ச் டைம் ஃப்ரீ தான் நதியா. நீ சொல்லு உன்னோட ஆசை மச்சான் என்ன பண்றார்? நாம 8th ஸ்டாண்டர்ட் ஸ்கூல் படிக்கும்போது அவர் காலேஜ் படிச்சுட்டு இருந்தார்ல”
“ஆமா… கார்த்தி மாமா அழகா இருப்பான். லேசா அரும்பு மீசை வச்சு, நல்ல கலரா இருப்பான். அவனோட குரல் இனிமையா இருக்கும், சூப்பரா பாட்டு பாடுவான். அவனோட காலேஜ் புக்ல நிறைய கவிதை எல்லாம் எழுதி வச்சிருப்பான்”
“அடேங்கப்பா… அவ்வளவு காதலா! உன் லவ்வ அவர்கிட்ட போய் சொன்னியா இல்லையா?”
“அந்தக் கொடுமையை ஏன் கேட்குற? ஸ்கூல் படிக்கும்போது அவன் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான். அம்மா முன்னாடி ஜாலியா என்னை கிண்டல் பண்ணுவான். நானும் வாடா மாமா, போடா மாமான்னு வம்பிழுப்பேன். நான் ஏஜ் அட்டென்ட் பண்ணதும், என் அம்மா, ‘மாமாவா இருந்தாலும் அவன்கிட்ட பேசக்கூடாதுன்னு’ ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.
“அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுக்கு வந்தாலும், நான் ‘வாங்க…’ அப்படின்னு கூப்பிட்டுட்டு ரூமுக்குப் போயிடுவேன். ரொம்ப வருஷம் கழிச்சு ஒருநாள் அவனை குலதெய்வ கோவில்ல பார்த்தேன். அன்னைக்கு நான் தாவணிலாம் உடுத்திட்டுப் போயிருந்தேன். நான் சாமி கும்பிட்டுட்டு இருந்தப்போ பயபுள்ள என்னையவே பார்த்துட்டு இருந்தான்.
“என் மனசுக்குள்ள தௌசண்ட் (1000) பட்டர்பிளைஸ் பறக்க ஆரம்பிச்சுருச்சு. நானும் அவனையே பார்த்துட்டு இருந்தேனா… அப்போ கார்த்தியோட பார்வை வேற எங்கேயோ போச்சு. எங்க பார்க்குறான்னு திரும்பிப் பார்த்தா, அவன் அவ்வளவு நேரமா சைட் அடிச்சது என்னை இல்லடி… எனக்குப் பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட பெரியம்மா பொண்ணை” நதியா பெருமூச்சோடு சொல்லி முடிக்க,
“அடப்பாவி… என்னடி இப்படி பண்ணிட்டான். அப்புறம் என்ன ஆச்சு?” ஆர்வமாய் கேட்டாள் ஷீலா.
“அப்புறம் என்ன என் மனசுல பறந்த பட்டர்பிளை எல்லாம் அடிச்சு சாகடிச்சுட்டு வேற வேலையை பார்க்கப் போயிட்டேன். அவனோட கல்யாணத்துக்குப் போய் ‘எங்கிருந்தாலும் வாழ்க..!’ அப்படின்னு அட்சதையை தூவி வாழ்த்திட்டு, என் கண்ணுல வராத கண்ணீரைத் துடைச்சுட்டு வந்துட்டேன்டி” நதியா சோகமாய்க் கூறியதும், ஷீலா சத்தமாகச் சிரித்துவிட்டாள். மிதுனோ சிரிப்பை அடக்கி, உதட்டை மடித்து சத்தமில்லாமல் சிரித்தான்.
“ஏன்டி என் காதல் கதையை கேட்டா உனக்கு சிரிப்பு வருதா?!”
“நீ பண்ணதுக்கு பேர் காதல். அதுக்கு என்னை அழச் சொல்றியா நதியா? நீ சொன்ன மாடுலேஷன்ல தான் எனக்கு சிரிப்பு வந்தது. அது சரி உங்க மாமா பையன் பாலாஜி மேல கூட உனக்கு கிரஷ் இருக்குன்னு சொல்லியிருந்த. அவர் என்ன ஆனார்?”
“அதுவா… அதுவும் நான் 8th படிக்கும் போது நடந்த சம்பவம் தான். என் சித்தி பொண்ணு ‘அவதான் பாலாஜி மாமாவை கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொன்னா. நான் ‘முடியாது… அவன் என்னோட மாமா, நான்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொன்னேன். ரெண்டு பேருக்கும் சண்டையாகிடுச்சு. அந்த கோபத்துல நாங்க ஒரு கல்யாணத்துக்குப் போனப்போ, அவன் என்கிட்ட ஆப்பிள் கேட்டதுக்கு தர முடியாது போடான்னு சொல்லிட்டேன். அப்போ அவன் 10th ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தான்.
“அந்த விஷயத்தை ஞாபகம் வச்சிருந்த பக்கி, அவனுக்கு கல்யாணப் பேச்சு எடுத்தப்போ என்னைப் பத்திக் கேட்டதுக்கு, ‘நதியா திமிர் பிடிச்சவ. அன்னைக்கு எனக்கு ஆப்பிள் தரல, அவ எனக்கு வேணாம்னு’ சொல்லிட்டானாம். ஆப்பிள் தந்த அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டான். சரிதான் போடான்னு நான் அவனோட கல்யாணத்துக்கே போகலையே” என நதியா கூறியதும்,
“ஒரு ஆப்பிள் உன் காதல்ல விளையாடிருச்சே…” விழுந்து விழுந்து சிரித்தாள் ஷீலா. நதியாவின் பேச்சில் மிதுனின் இதழ்கள் நீண்டு விரிந்திருந்தன.
“ஆமா அதென்ன காதலா ஜஸ்ட் அவனுங்க மேல கிரஷ். ஆனா ஒண்ணு நான் யாரையாவது காதலிச்சா அவங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகிடும்”
“எப்படி சொல்ற?”
“எனக்கு அந்த நடிகரை பிடிக்கும். நான் அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சேனா… உடனே அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு”
“நடிகரை லவ் பண்ணா எப்படி சக்சஸ் ஆகும்?”
“அட அது இல்லடி. நான் காலேஜ் படிக்கும் போது என்னோட சீனியர் ஒருத்தனை எனக்குப் பிடிச்சிருந்தது. கருப்பாத்தான் இருப்பான். ஆனா கட்டையா மீசை வச்சு மேன்லியா இருப்பான். அவனை அப்பப்போ பார்த்து சைட் அடிச்சுட்டே இருந்தேன். காலேஜ் முடிக்கிறதுக்குள்ள திடீர்னு அவன் வேற பொண்ணை லவ் மேரேஜ் பண்ணிட்டான்டி”
“ஹையோ… என்னால சத்தியமா முடியலடி. உன்னோட காதல் கதை எல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாத”
“ஏன்டி… என்னை தப்பா நினைச்சுப்பாங்களா?”
“உன்னை வச்சு காமெடி பண்ணிடுவாங்க” அவளை பங்கமாய்க் கலாய்த்தாள் தோழி.
“போடி எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு”
“சரி நீ ஃபீல் பண்ணிட்டே இரு. எனக்கு லஞ்ச் டைம் ஓவர். நான் ஈவ்னிங் பேசுறேன்” ஷீலா போனை கட் செய்தாள்.
மிதுன் சத்தமில்லாமல் மனதிற்குள் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனம் லேசாகியிருந்தது. ‘இந்த மாதிரியான அவளது குறும்புத்தனமான பேச்சில் தான் வைஷு மயங்கியிருப்பாளோ!’ என யோசித்தவன், தன்னுடைய மடிக்கணினியை எடுத்து அதில் அலைபேசியை இணைத்து, அவள் செல்போனில் இருக்கும் கேலரியை திறந்து பார்த்தான்.
அதில் ஒரு வீடியோவைப் பார்த்தால் வெள்ளை நிற ஜார்ஜெட் புடவை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து ‘கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை’ பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து நதியா குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள்.
இன்னொரு வீடியோவில் அதே சேலையில் ‘இப்போ சாத்து நடை சாத்து’ பாடலுக்கு மீனாவைப் போல் இடுப்பை வளைத்து ஆடியிருந்தாள். அவரைப் போலவே நளினமாக நடந்து, இடையை வளைத்து ஆடியிருந்தாள்.
நீ போடு காதல் விண்ணப்பம்…
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்!
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்…
அழகாக பாடும் ஏஞ்சல் நான்!
தரையிலே தரிசனம்
தருகிற நிலவிது…
அறையிலே அபிநயம்
புரிகிற மலரிது!
செக்காக என் பின்னே
சுத்தாத ஆள் இல்லை…
எல்லாரும் என் பேரை
சொல்லாத நாள் இல்லை!
அவளோ ஒரு கையை தூக்கி பாடிக்கொண்டே ஆடிட, மெய்மறந்து போனான். அவள் நடனமாடும் காணொளியை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு, கன்னத்தில் கை வைத்து அவளது இடையை இமைக்காமல் ரசித்திருந்தான். நதியா ஏதோ பொழுதுபோக்குக்காக வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தாள். அது மிதுன் கண்களுக்கு விருந்தாகும் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
இரவு… மிதுன் வீட்டிற்குச் சென்றதும் அறைக்குள் நுழைந்தவன், நதியாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் தடுமாறினான். ‘அவள் தனக்கு சொந்தமில்லாத போது, அவளுடைய அனுமதியின்றி அவளை திருட்டுத்தனமாகக் கண்டு ரசித்தது தவறுதானே?!’ என்ற உறுத்தல் அவனுக்குள்.
நள்ளிரவில் தூக்கத்தில் இருந்தவன், யாரோ அறைக் கதவின் கடவுச்சொல்லை அழுத்தும் சத்தம் கேட்டு விழித்துப் பார்க்கையில், நதியாதான் எழுந்து வெளியே சென்றுகொண்டிருந்தாள்.
அவளுக்குத் தெரியாதவாறு மெதுவாகப் பின்தொடர்ந்தவன் கண்ட காட்சி… நதியா பால்கனி கதவைத் திறந்து அங்கு பெய்து கொண்டிருந்த மழையில் நனையத் தொடங்கினாள்.
மிதுன் அவளைப் பார்த்திருக்க, அவளோ மறுபக்கம் திரும்பி இவனுக்கு முதுகு காட்டியபடி, அவளுடைய மனதிற்குள் ‘நன்னாரே’ பாடல் ஓடிக்கொண்டிருக்க, அதற்கு ஏற்றார்போல இசை ஏதுமின்றி நனைந்தவாறு ஆடிக்கொண்டிருந்தாள்.
மழையில் ஆடி, ஓடி, தொப்பலாக நனைந்து அவள் திரும்பிட, மிதுன் பால்கனி வாசலில் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிச் சாய்ந்தவாறு நின்று அவளைப் பார்த்திருந்தான். அவனைக் கண்டு புன்முறுவல் செய்தவள் அறைக்குத் திரும்ப, அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.
அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டவன், வேகமாக அவளது கையைப் பிடித்து இழுக்க நதியா திரும்பிப் பார்த்தாள். கோவைப்பழமாய் அவள் இதழ்கள் சிவந்திருக்க, நனைந்ததனால் அவை மெல்லிய நடுக்கத்தில் இருந்தன.
நடுக்கத்தோடு விரிந்திருந்த அவளது இதழ்களைத் தன் அதரங்களுக்குள் பூட்டிக் கொண்டவன், அவள் இதழமுதத்தைச் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
திடுக்கிட்டு விழித்தவள் உறைந்துபோயிருக்க, பகலெல்லாம் அவன் விழிகளைக் கொள்ளைகொண்டிருந்த அவளது மெல்லிடையை, உடையை விலக்கித் தன் வலிய விரல்களுக்கு விருந்தாக்கினான்.
அவன் தந்த இதழ்முத்தமும், அவனது தீண்டலும் மழையில் குளிர்ந்திருந்த அவள் மேனிக்குள் மோக வெப்பத்தை ஏற்றிக்கொண்டிருக்க, மனதோடு உருகும் அவளின் உடலைத் தாங்கிட, மிதுனின் தோள்களை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டாள்.
கண்களை மூடி அந்த முத்தத்தை ஆழ்ந்து ரசித்திருந்தவன், தன் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்து, “இட்ஸ் அமேஸிங்… யூ டூ!” என்றான்.
அவனது இதழ் ஒற்றலில் அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ, மெல்ல அவனிடமிருந்து விலகினாள். “நதியா… டிரஸ் ரிமூவ் பண்ணிட்டுப் படு” என்றவனின் குரலில் அத்தனை குழைவு. “ஹான்…” திகைப்போடு அவனைப் பார்த்தவள், மோகத்தில் மூழ்கியிருந்த மிதுனின் விழிகளில் தானும் சிக்குண்டு போனாள் பாவை.
குளியலறைக்குள் சென்று ஈர உடைகளை மாற்றி வந்தவள், அவற்றைக் களைந்து படுத்துக்கொள்ள, எப்போதும்போல் அவள் மேல் விழுந்தும் விழாமலும் கூடலைத் தொடங்கினான். அவன் மனமெங்கும் நிரம்பியிருந்த மகிழ்ச்சியில்… முகமெங்கும் ஒளிர்ந்த ஒளியில் மயங்கியவள் அவனையே உற்று நோக்கியிருக்க, அவளைக் கண்டவன் மந்தகாசமாய் இதழ் விரித்திட… அதில் தொலைந்த கணம் அவளும் ஒரு மென் புன்னகையை அவனுக்குப் பரிசளித்தாள்.
புன்னகையில் மலர்ந்த பெண்ணவளின் செவ்விதழ் அவனை ஈர்க்க, அதைக் கவ்விக்கொண்டவன் முத்தத்தோடு தன் ஆக்கிரமப்பைத் தொடர்ந்தான். கொழுகொம்பு தேடும் கொடிபோல, மெத்தையில் அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்த அவள் கரங்களுடன் கரங்களைச் சேர்த்து, அவளது விரல்களோடு தன் விரல்களை இறுக்கினான்.
கூடலை முடித்து அவள் மார்பில் மூச்சுவாங்கி விழுந்தவன் சில நிமிடங்கள் அப்படியே இருக்க, நதியா தான் அவனைத் தள்ளினாள்.
மிதுன் அவள் இதழோடு இதழ் பொருத்தி மொத்தமாய் அவளை உறிஞ்சி எடுத்திருக்க, முதல் சுற்றிலேயே நதியா சோர்ந்து போனாள். இத்தனை நாட்களாக வலி மட்டுமே தந்த அவனது கூடல் இன்று அவள் பெண்மையைச் சிலிர்க்கச் செய்து, அவளுள் தாபத்தை எழுப்பியிருந்தது.
நதியா களைத்துத் தூக்கத்திலிருக்க, அவனோ அவள் இதழும் உடலும் தந்த மயக்கத்தில் இருந்தான். அவன் மனத்தை இதமாக்கிய அந்தப் பரவச உணர்ச்சிக்குப் பெயர் தெரியவில்லை; ஆனால், அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எதையோ அடைந்துவிட்ட திருப்தி அவனது மனதில்!
முதல்முறையாக மிதுன் தன்னுடைய மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, முழுக்க முழுக்க மனதின் கட்டுப்பாட்டில் இருந்தான். தன் மனம் விரும்பும் அத்தனையும் செய்து பார்க்கிறான். அதில் தோன்றும் பேரின்பத்தில் லயித்தும் போகிறான்.
அவன் மீண்டும் அழைப்பான் என்ற எண்ணத்தில், உடைகளை அணியாமல் அவள் அப்படியே போர்வை போர்த்தி உறங்கியிருக்க, போர்வை விலகி வெளிப்பட்ட அவளது பின்கழுத்தும், கொஞ்சமாய்த் தெரிந்த முதுகும் அவனுக்குக் கிறக்கத்தைத் தந்தன.
மிதுன் எழுந்து நதியாவிற்கு அருகில் சென்றவன், விரிந்திருந்த கருங்கூந்தலை விலக்கி அவளுடைய பின்னங்கழுத்தில் முத்தமிட்டு, முதுகிலும் இதழ் பதித்தான். அப்படியே போர்வைக்குள் நுழைந்து, ஆடையற்ற அவளது இடையின் மீது கையைப் போட்டு, பின்னிருந்து தன்னுடன் சேர்த்து அவளை இறுக்கியணைத்தவாறு உறங்கிப்போனான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
