அபியின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தால் அபி. அங்கே கரனும் அவனுடைய நண்பர்கள் மூவரும், நின்று இருக்க, பின்னால் ஒரு ஸ்கூட்டியில் வந்தனா மற்றும் சமிக்ஷா இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி இருந்தனர்.
தனது சீனியர்களையும் தோழியர்களையும் பார்த்த அபி உற்சாகமாக அவர்களை வரவேற்று தாய் தந்தை மற்றும் அக்காவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க தன்னவள் தலைக்கு குளித்து அதை லூசாக கிளிப் எடுத்து போட்டு கண்களுக்கு மையிட்டு தனக்காகவே ஒப்பனை செய்து அழகு மயிலாக இருப்பவளை அதுவும் வீட்டில் அணியும் பாவாடை சட்டையில் பார்ப்பதற்கு அழகு மயிலாக இருந்தவள் செல்லும் பாதையில் அவன் கண்களும் பயணிக்க, மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளையும் கண்களில் பருகிக் கொண்டு இருந்தான்.
அவன் ஜூஸ் குடித்துக் கொண்டே தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அபி அவனைப் பார்த்து சட்டென்று கன்னடித்துவிட்டு எதுவும் தெரியாதவள் போல் சென்றுவிட, அதில் அதிர்ந்தவனுக்கு புற ஏறி விட “என்ன டா சின்ன குழந்தை மாதிரி குடிக்கிற யாரோ உன்னை நினைக்கிறாங்கடா” என்ற தேவன் அங்கே செல்லும் அபியை பார்த்து சிரித்தான்.
கதிர்வேலும் வந்தவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தவர், கரணை அழைத்து தனது அறைக்கு சென்றவர் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்னோட பொண்ணு எல்லாமே சொன்னாப்பா! அவளை நீங்க காப்பாத்தி என் பொண்ணு பத்திரமா எனக்கு இருக்கீங்க அவ இன்னிக்கு உயிரோடு இருக்குறதுக்கு நீங்க தான் காரணம் . ரொம்ப நன்றிப்பா” என்று உணர்ச்சிவசப்பட்டு பேச அதை கண்டு திகைத்தவன் “அங்கிள் விடுங்க இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?” என்றான்.
“இல்லப்பா யாரா இருந்தாலும் அந்த நேரத்துல காப்பாற்ற முயற்சி செஞ்சிருப்பாங்க! இல்லன்னு சொல்லல ஆனா நீங்க அவளையும் காப்பாத்தி இருக்கீங்க ஆனா அதனால உங்களுக்கு கை அடிபட்டு இருந்ததுன்னு சொன்னா! அது கூட பொருட்படுத்தாம அவ மேல சின்ன அடி கூட விழாம காப்பாத்தி இருக்கீங்க. இப்ப எல்லாம் சரியா போச்சா? வலி இன்னமும் இருக்கா?” என்று அக்கறையாக கேட்டார். இத்தனை வருடத்தில் உணராத தனக்காக ஒருவர் அக்கறைப்படுவதை முதன்முதலாக உணர்ந்தவன் மனதிற்குள் ஏதேதோ உணர்வுகள் தோன்றியது. அனைத்தையும் மறைத்துக் கொண்டு தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டவன், “இப்ப எதுவும் பிரச்சனை இல்லாமல் நல்லாதான் இருக்கேன் ! நீங்க கவலைப் படாதீங்க” என்றான்.
அவனைப் பார்த்தவர் “அபி எங்ககிட்ட எல்லாத்தையும் சொன்னா நீங்களும் அவளும் காதலிக்கிறத!” என்ற உடன் அவன் திகைத்துப் பார்க்க, அதில் சிரித்தவர் “எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லப்பா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும் .ஆனா உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஸ்டேட்டஸ் தான்!….” என்று அவர் இழுக்க,
அவரது கைகளை தற்பொழுது இவன் இறுக்கமாக பிடித்துக் கொண்டு “அங்கிள் நீங்க கவலைப்படாதீங்க எங்க குடும்பத்து நிலைமை சொன்னாளா இல்லையா எனக்கு தெரியல. அவங்களுக்கும் எனக்கும் எப்போதும் ஆகாது. ஆனால் நான் படிப்பு முடிஞ்சு கூடிய சீக்கிரம் தனியா வந்துருவேன். என்னோட தகுதி கண்டிப்பா உயர்த்தி கிட்ட வந்து அப்போ பொண்ணு கேக்குறேன். நீங்க கட்டி கொடுங்க அவங்களால இந்த பிரச்சனையும் வராது அவங்க காசு நம்பியும் நான் கிடையாது . அதனால கிட்டத்தட்ட நானும் நீங்களும் ஒரே ஸ்டேட்டஸ்ல தான் இருக்கோம் என்னோட அபிவோட அன்புக்கு முன்னாடி காசு எல்லாம் ஒண்ணுமே கிடையாது” என்றான்.
மதிய விருந்து முடிந்து அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அபியின் வீட்டினரிடம் சொல்லிக் கிளம்ப கௌரியும் கரண் கைகளைப் பிடித்துக் கொண்டு “அடிக்கடி வீட்டுக்கு வா தனியா உணராத நாங்கல்லாம் உனக்கு இருக்கோம் புரிஞ்சுதா ?” என்று செல்லமாக கூறினார் .
அதில் நெகிழ்ந்தவன் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே தலையசைப்பை கொடுத்து விட்டு நண்பர்களுடன் விடை பெற்றான். செல்லும்பொழுது தன்னவலை பார்த்த கண்ணடிக்கவும் மறக்கவில்லை.
அபியின் பெற்றோர் சம்மதம் கிடைத்ததால் அவளை வெளிப்படையாக காதலிப்பதற்கு கரணுக்கு கசக்கவா போகிறது. சந்தோஷமாக தன்னவளுடனும் நண்பர்களுடனும் நாட்களை கழித்தான்.
இருவருடைய காதல் பேச்சுகளும் ஒன்றாக சுற்றும் தருணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக இதை பார்த்த ஆராதனாவுக்கு பயங்கரமாக கோபம் வந்தது..
தான் அவள் வீட்டிற்கு போட்டோக்கள் அனுப்பியும் இன்னும் இருவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒருநாள் அபி தனியாக வரும் பொழுது அவளை வழி மறைத்து நிற்க, வந்தனாவையும் சமிக்ஷாவையும் மற்றவர்கள் அடக்கி விட, இவளை சற்று தள்ளி கொண்டு சென்றவள், “என்ன உன் வீட்ல படிக்க அமைச்சிருக்காங்க நீ என்ன எப்ப பாரு காதல் காதல் கரண் பின்னாடியே சுத்திட்டு இருக்க இதெல்லாம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா?” என்றாள் .
அவள் தங்கள் காதலைப் பற்றி பேச உடன் கைகளை கட்டிக் கொண்டு தைரியமாக ஆராத்யாவை நோக்கிய அபி “நீங்கதான எங்க வீட்டுக்கு நாங்க இருக்கிற போட்டோஸ் அனுப்பி வச்சது?” என்றால்.
அதில் சற்று ஜர்கானாலும் தனது கெத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால் “ஆமா நான் தான் அனுப்பி வச்சேன் இப்ப அதுக்கு என்ன ?” என்ற உடன், அதைக் கேட்டவுடன் அபி சிரிக்க ஆரம்பித்தால்.
அவள் சிரிப்பில் இருந்த நக்கல் ஆராத்யாவை எரிச்சல் படுத்த, “எதுக்கு இப்ப சிரிக்கிற ஒழுங்கா சொல்லிட்டு சிரி பைத்தியம் மாதிரி பண்ணாத?” என்றவுடன்,
” இல்ல இவ்வளவு பேச்சு பேசுற நீங்க from address இல்லாம அனுப்பி இருக்கீங்க அப்ப தெரிஞ்சது உங்களோட தைரியம்!” என்றவள், “அவர்தான் உங்களை வேணா வேணான்னு சொல்றார் இல்ல ஏன்னா நீங்க அவருக்கு வேணாம். அதனால எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறத விட்டுட்டு வேற ஏதாவது வேலை இருந்தால் பாருங்க” என்று அங்கிருந்து செல்ல முயல, அவளை தடுத்து நிறுத்தியவள் “இதுதான் உனக்கு கடைசி வார்னிங் ஒழுங்கா அவனை விட்டு பிரிஞ்சிடு இல்லன்னா நீ உன்னோட லைஃப்ல நினைச்சு முடியாத அளவுக்கு கஷ்டத்தை அனுபவிப்ப ஞாபகம் வச்சுக்கோ!” என்றவுடன் “உங்களுக்கு கூடுதலா ஒரு தகவல் சொல்லட்டுமா? நீங்க அனுப்பின போட்டோவால எனக்கு நல்லது தான் நடந்திருக்கு” என்ற உடன்,
ஆராத்யா அவளை குழப்பமாக பார்க்க மீண்டும் லேசாக புன்னகை புரிந்தவள் “எங்க அப்பா என்னோட காதல் விஷயம் தெரிஞ்சு பயங்கரமா திட்டினாரு ஆனா அதுக்கு அப்புறம் அவர் கிட்ட உண்மையெல்லாம் சொல்லி என்னைய டான்ஸ் ப்ரோக்ராம் நடக்கிறப்போ லைட் விழாமல் காப்பாத்தி இன்னைக்கு நான் உயிரோட இருக்குறதுக்கு காரணம் என்னுடைய காதலன் கரன் தான் அப்படின்னு சொல்லி எங்க அப்பா கிட்ட உண்மையை எல்லாம் சொன்னேன் !” என்ற உடன் அவள் அதிர்ந்தால்.
” இதென்ன இதைவிட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு எங்க அப்பா அவரையும் அவங்க பிரண்ட்ஸையும் கூப்பிட்டு எங்க வீட்ல போன வாரம் தான் விருந்தே வச்சாரு! எங்க வீட்ல எங்க காதலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க . எனவே ரொம்ப தேங்க்ஸ் உங்களால தான் இந்த விஷயம் எங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு எப்படியோ சுமுகமா அவங்க கிட்ட இருந்து எனக்கு பர்மிஷன் கிடைச்சிருச்சு. இனிமே நான் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவரோட எங்க வேணாலும் சந்தோஷமா சுற்றித் திரியலாம் காதலிக்கலாம் எனக்கு நீங்க நல்லது தான் பண்ணி இருக்கீங்க! ” என்று அவளது கைகளை பிடித்து குலுக்கியவள், “ரொம்ப நன்றி சீனியர் நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவாங்க ஆனா ஆராத்யா சீனியர் கலகமும் நன்மைல தான் முடிஞ்சிருக்கு!” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே அவ்விடம் விட்டு சென்று விட்டால் அபி.
அனைத்தையும் கேட்க கேட்க ஆராத்யாவுக்கு பத்திக் கொண்டு வந்தது. “இந்த ஆளு என்ன முட்டாளா தன்னோட பொண்ணு இன்னொருத்தன் கூட படிக்காம காதல் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கா என்று தெரிஞ்சும் எந்த மிடில் கிளாஸ் அப்பா இப்படி விடுவாரு? இவங்க என்ன விசித்திரமான குடும்பமா இருக்காங்க ! வேற வழியே இல்ல இவ கிட்ட சாப்டா பேசினால் வேலைக்கு ஆகாது!” என்று அடுத்த தனது திட்டத்தை செயல்படுத்த மாலை வரை காத்திருந்தாள்.
மாலை கல்லூரி முடிந்ததும், தனது இல்லத்திற்கு வந்தவள் செல்போனை எடுத்து யாரோ ஒருவருக்கு அழைத்து பேசி விட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஒரு காபி ஷாப் நோக்கி சென்றால்.
அங்கே ஜெயந்தியும், அவருக்கு அருகில் ஜெயந்தியின் அண்ணா மேகநாதன் இருவரும் அமர்ந்திருக்க இவள் அவர்களின் புகைப்படத்தை வைத்து இனம் கண்டு கொண்டவள் அருகில் வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தால்.
அவளைப் பார்த்தவுடன் “நீதானம்மா ஆராத்யா?” என்றார் ஜெயந்தி.
நல்லவள் போல் “ஆமாண்ட்டி” என்றவள், “நான்தான் உங்கள பார்த்து பேசணும்னு சொன்னேன். இவர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றால் மேகநாதனை பார்த்து.
“அவரு என்னுடைய அண்ணன் . நீ விஷயத்தை சொல்லு எதா இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் பண்ணுவோம்! நீ கரண் லவ் பண்ற விஷயத்தை பத்தி சொன்னியே என்ன விஷயம்?” என்றவுடன் கரன் அபியை காதலிப்பதையும் தான் ப்ரபோஸ் செய்து மறுத்ததையும் சொன்னவள்
“எனக்கு கரண் வேணும் நான் அவனை ரொம்ப லவ் பண்றேன்!” என்றால்.
“ஏம்மா அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு நீ போய் அவனை காதலிக்கிற? என் பையன் நவீன் இருக்கான். உனக்கு பொருத்தமா இருப்பான் என்ன சொல்ற அவன் கூட பழகி பாரு பிடிச்சிருந்தா நீங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் என்ன பண்ணனும் பண்ணுங்க ” என்றவுடன், ஆராத்யாவுக்கு பயங்கரமான கோபம் வந்தது.
அவளுக்கு அவர்கள் குடும்பத்தை பற்றிய முழு விவரமும் தெரிந்துதான் பேச வந்திருக்கிறாள். அதனால் சுத்தி வளைக்காமல் “ஆன்ட்டி நீங்க என்னமோ கரண் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா எல்லாரும் சொல்லிக்கிறாங்க? ஆனா நீங்க என்னடான்னா அவனை பத்தி இப்படி பேசுறீங்க ?” என்று வேண்டுமென்றே கூறினால்.
அதில் சற்று ஜர்கானாலும் தன்னை நல்லவளாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதனால், “ஆமாமா ஆனா அவன் தான் உன்னையே உன்னோட காதல ஏத்துக்க மாட்டேங்குறானே ஆயிரம் தான் இருந்தாலும் அவனோட மனசு நம்ம புரிஞ்சுக்கணும் இல்லையா நீ சொன்ன மாதிரி தான் எனக்கு அவன் மேல ரொம்ப பாசம் இருக்கு. அதனால தான் அவனோட காதல மறுக்கக் கூடாதுன்னு நான் சொல்றேன் நீ வேணா என்னோட பையன் நவீன் கூட டேட்டிங் புடிச்சிருந்தா கண்டினியூ பண்ணுங்க இல்லனா வேண்டாம்!” என்றார் நல்லவள் போல்.
“இல்ல ஆண்ட்டி எனக்கு கரண் மட்டுமே போதும் இன்னொரு ஒரு முக்கியமான விஷயம்! நீங்க கரண் மேல அக்கறையா இருக்கிற மாதிரி நடிக்கிறது எனக்கு தெரியும். உங்களுக்கும் கரணுக்கும் ஆகவே ஆகாது ஏன் உங்க யார்கூடயும் அவன் பேசவே மாட்டான். அப்படிங்கிற எல்லா விஷயமும் எனக்கு தெரியும்!” என்றவுடன், அதிர்ச்சியாக அவளை பார்க்க , “என்ன நினைச்சீங்க நான் மினிஸ்டர் ஓட பொண்ணு ஒருத்தவங்கள பத்தி தெரியாம அந்த விஷயத்துக்குள்ள இறங்க மாட்டேன் அப்படி இறங்குவதாக இருந்தால் எல்லா டீடெயில்ஸ்யும் தெரிஞ்சுக்கிட்டு தான் இறங்குவேன் என்றவள்,
” நீங்க கரண நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினா கண்டிப்பா உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன் உங்களுக்கே தெரியும்! எங்க அப்பா மினிஸ்டர் நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணலாம். அதனால எதா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடுங்க!” என்றால்.
அவரும் சற்று யோசிக்க மேகநாதன் “நீ சொல்றது வாஸ்துவ தான்மா உனக்கு யாரை புடிச்சிருக்கோ அவங்களே நீ கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனால் கரண் தான் உன்னைய வேண்டாம்னு சொல்றானே?” என்றவுடன்,
” அதை மறுபடியும் மறுபடியும் சொல்லாதீங்க அந்த அபி வந்ததனால் தான் கரன் என்ன கண்டுக்கல. அவ என் அளவுக்கு அழகு இல்லை! என்றாலும் அவளும் ஒரு அழகுதான் அதுமட்டுமில்லாமல் மிடில் கிளாஸ் பீப்பிள் சோ ஈஸியா பணக்கார பசங்களை மயக்கறது அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. அதனால தான் அவன் அவ கிட்ட மயங்கி கிடக்கிறான் அதுக்கு நான் வேற பிளான் வச்சிருக்கேன் அதையும் நீங்க செஞ்சு கொடுத்தா பியூச்சர்ல நம்மளோட கோ ஆபரேஷன் இன்னும் பல முன்னேற்ற பாதைகளை நோக்கி செல்லும் அப்படிங்கறது நான் கேரண்டி!” என்றால் ஆராத்யா.
மேகநாதனும் “அத பத்தி அப்புறம் தனியா பேசிக்கலாம் இப்போ கரன் உன்னைய விரும்பல எப்படி அவன நம்ம வழிக்கு கொண்டு வர்றது?” என்றார்.
“அதுக்கு முதல்ல அவன் காதலிக்கிற அந்த பொண்ண ஒன்னு இந்த ஊர்ல இல்லாம பண்ணனும் இல்லனா அவளுக்கு அவன் கூட இருக்கிற ரிலேஷன்ஷிப் பிரேக்கப் ஆகணும் அப்பதான் என்னோட ரூட் கிளியர் ஆகும்!” என்றாள்.
“அதுக்கு நம்ம அந்த பொண்ணு வீட்ல தான் போய் பேசணும் அதை நீயே பண்ணி இருக்கலாமேமா நீ சொன்னா கேட்காம இருப்பாங்களா நீ எவ்வளவு பெரிய மேலிடம் ?” என்றார் ஜெயந்தி புரியாமல்.
உடனே தான் செய்ததை கூறியவள் “நான் செஞ்சது அவங்களுக்கு சாதகமா முடிஞ்சிருச்சு. அதனால இனிமே அவங்களா பிரிவாங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை கிடையாது! நீங்க என்ன பண்ணுங்க நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!” என்று தனது திட்டத்தை சொல்ல அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு அதுபடி செய்வதாக கூறிவிட்டு மூவரும் கலைந்தனர்.
