ராகுல் மிதுனைப் பார்க்க வந்திருந்தவன், நதியாவின் மொத்த வாழ்க்கை வரலாற்றையும் கொண்டு வந்திருந்தான். “யாருடா இந்த பொண்ணு?” எனக் கேட்ட நண்பனை, ‘உனக்கெதுக்கு?’ என்பது போல் அவன் பார்த்து வைக்க, மிதுன் பெண்கள் விஷயத்தில் தவறானவன் இல்லை என்பதை அறிந்த நண்பன் வாயை மூடிக் கொண்டான்.
“இந்த மாதிரி போட்டோ கொடுத்தா ஈஸியா கண்டுபிடிச்சு சொல்லலாம். முகமும் தெரியல, ஆளும் தெரியல. உனக்கும் சரியா தெரியலன்னு சொல்லுற. அப்புறம் எப்படிதான் அவங்களை கண்டுபிடிச்சு காதல் பண்ணப் போற?” விபத்தில் காப்பாற்றிய பெண்ணைப் பற்றி எப்போது பேசினாலும், அவன் கண்ணில் தெரிந்திடும் காதலை ஏற்கனவே நண்பனும் கண்டிருக்கிறான்.
ஆனால் இன்று சுரத்தையில்லாத குரலில் அவன், “ஹ்ம்ம்..” என்றிட, அவனிடம் ஏதோ ஓர் மாற்றத்தை உணர்ந்த நண்பன் அவனையே அழுத்தமாய் பார்த்திருக்க, மிதுனோ ராகுல் கொண்டு வந்த நதியா பற்றிய கோப்புகளைத் தான் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தான்.
“சரிடா மித்து.. நான் கிளம்புறேன்” என்று ராகுல் எழுந்து நிற்க, “எனக்கு அந்தப் பொண்ணு வேணும்” என்றிருந்தான் மிதுன்.
“கண்டுபிடிக்கிறேன் டா..” எத்தனை முறை சொன்னாலும் அதைக் காதில் வாங்காமல், அவள் வேண்டும் என்று பிடிவாதமாய் நிற்கும் நண்பனைப் பார்த்தவன், எரிச்சலோடு கிளம்பினான்.
மாலை.. சத்யாவின் திருமணப் பத்திரிகையைத் தர அவனுடைய அப்பாவும், அம்மாவும், அவர்களுடன் சத்யாவும் மிதுன் வீட்டிற்கு வந்திருந்தனர்.
மிதுனின் அம்மா அவர்களை அழைத்து உபசரித்துக் கொண்டிருந்தார். ருக்மணி நதியாவை இன்டர்காமில் அழைத்திட, அவள் வந்ததும் அவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தினார்.
ராதா அவளைப் பார்த்ததும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டவர், பற்களைக் கடித்தபடி ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக இருந்தார். மிதுன் ஏதோ முக்கியமான வேலையில் சிக்கிக் கொண்டதால், ‘வீட்டில் திருமணப் பத்திரிகையை கொடுத்து விடு’ என்று சொன்னதால், சத்யாவின் பெற்றோர் ராதா, ருக்மணியுடன், நதியாவையும் நிற்கச் சொல்லி பத்திரிகையைத் தர, ராதாவிற்கு ஆத்திரம் எல்லை மீறியது.
“விளக்கமாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேட்குது. தெருவுல கிடந்தவளுக்கு மரியாதைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. எல்லாம் அவனால வந்தது” என்று நதியாவை அவர் ஜாடையாக பேசவும், மிதுன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
அவர் யாரை பேசுகிறார் என்று அங்கிருக்கும் எல்லோருக்கும் புரியத்தான் செய்தது. நதியா பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாள். மிதுன் உள்ளே வந்தவன், அந்த சூழலை இயல்பாக்கி எல்லோருடனும் பேசிக் கொண்டிருக்க, ராதா அறைக்குள் சென்று விட்டார்.
“நதியா.. சாரி.. அம்மாவுக்கு இன்னும் என்மேல இருக்கிற கோபம் குறையல. அதனால தேவையில்லாம உன்னை திட்டுறாங்க. நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத” அனைவரின் முன்பும் அவன் மனதார மன்னிப்புக் கேட்டிட, நதியா திகைத்தாள்.
அனைவரின் முன்னிலையில் பேசினால் அவர்களின் முன்பு தானே மன்னிப்பும் கேட்க வேண்டும். ‘நண்பனின் பெற்றோர்கள் இருப்பதால், அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று மன்னிப்பு கேட்கிறார் போல’ என நதியா நினைத்துக் கொள்ள, மிதுனோ அவளை நேசிக்க ஆரம்பித்திருந்தான்.
அவனின் நேசம் கொண்ட மனது அவளை காயப்படுத்த, அவமானப்படுத்த விடாமல் பாதுகாக்க நினைக்கிறது. இது நதியாவிற்குப் புரியவில்லை. ஆனால் மிதுனிடம் நிச்சயம் ஏதோ மாற்றமிருக்கிறது என்று மட்டும் புரிந்துகொண்டாள்.
அவர்கள் கிளம்பியதும் நதியா அறைக்குச் சென்றுவிட, மிதுன் ராதாவை பார்க்கச் சென்றான். ‘அவன் குழந்தைக்காகத்தான் நதியாவை திருமணம் செய்து கொண்டதையும், ஏன் அவசரமாகக் குழந்தை வேண்டும் என்பதற்கான காரணத்தையும்’ தன் அம்மாவிடம் சொல்லியவன், ‘இனி அவளை பேச்சால் காயப்படுத்த வேண்டாம்’ என்றும் அவரிடம் வேண்டுகோள் வைத்தான். ஒப்பந்தக் கல்யாணம் என்பதை மட்டும் தாயிடம் மறைத்து விட்டான்.(சார் நீங்க இன்னும் நதியாவை கல்யாணமே பண்ணிக்கல)
ராதா மனம் மாறவில்லை. ஆனால் மிதுன் பக்க நியாயத்தையும், அவன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பையும் புரிந்து கொண்டார்.
மறுநாள் இரவு..
நைட் ட்ரெஸ் அணிந்திருந்த நதியா, காதில் ஹெட் போனை மாட்டி பாடல்களைக் கேட்டவாறு, லேசாக ஆடிக் கொண்டே நடந்து கொண்டிருக்க, மிதுன் அறைக்குள் நுழைந்ததை, அவள் பின்புறம் திரும்பி நின்றிருந்ததால் கவனிக்கவில்லை.
வேகமாக அவளுக்கு அருகில் சென்றவன், பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டு, ஆடைக்குள் கை விட்டு அவளது வெற்று இடையில் கை வைத்திட, திடுக்கிட்டு திரும்பியவளின் இதழோடு இதழ் கோர்த்து சுவைக்க ஆரம்பித்தான்.
அவளது உடலை மட்டுமல்லாமல் உயிரையும் தீண்டிய அந்த இதழ்முத்தம் அவளுக்கு கண்ணீரைத்தான் தந்தது. அவளின் கன்னத்தை ஏந்தியிருந்தவன் கைகளை, அவளுடைய கண்ணீர் நனைக்க, சுயம் உணர்ந்தவன் விலகி நின்றான்.
“நதியா.. சாரி..” குற்ற உணர்வில் அவன் கண்கள் பணிந்திட, “இல்ல.. நான் தான் சாரி சொல்லணும். சாரி சார். அது வந்து, நீங்க திடீர்னு வந்து கிஸ் பண்ணாதால..” அவளோ அவனுடைய வருத்தத்தைப் போக்க எண்ணினாள்.
அவன் கொஞ்சம் நகர்ந்திட, “சார்.. நான் இன்னைக்கு மென்..ஸஸ்.. ஆகிட்டேன். சா..ரி..” தயக்கத்தோடும் நடுக்கத்தோடும் சொன்னாள். “இட்ஸ் ஓகே.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாத. ரெஸ்ட் எடு” அவளைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னவன், குளியலறைக்குள் நுழைந்தான்.
கடந்த மாதம் நடந்ததை நினைத்து, மிதுன் ஏதாவது சொல்வான் என பயந்துபோய் இருந்தவள், இப்போது அவன் சொல்லிச் சென்றதில் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் குளித்து உடைமாற்றி மெத்தைக்கு வந்ததும், “சார்.. நான் கொஞ்ச நேரம் பால்கனிக்குப் போகட்டுமா?” அவள் அனுமதி கேட்க, அவன் சரியெனத் தலையசைத்ததும், பால்கனிக்குச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
‘நாளுக்கு நாள் மிதுனிடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. ஆனால் ஏன் இந்த மாற்றம்? அவர் பார்வையிலிருந்த கோபமும், முகத்திலிருந்த இறுக்கமும், பேச்சிலிருந்த கடுகடுப்பும் எங்கே மறைந்தன என்று தெரியவில்லை. ஒருவேளை என்னைக் காதலிக்கிறாரா?’ தனக்குள் நினைத்தவள் பதறிப் போனாள்.
அதைக் காதல் என்று கருதி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை. ‘ஒரு சாதாரணப் பெண், பெரிய கம்பெனி சிஇஓவைத் திருமணம் செய்வதெல்லாம் கொரியன் டிராமாக்களில் மட்டுமே சாத்தியம்’ தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், கண்களை மூடி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சோபாவில் சாய்ந்திட, எங்கிருந்து வந்தானோ, அவன் வேகமாக அவளுக்கு அருகில் வந்தமர்ந்திட, மிதுன் மடியில் தான் நதியா தலையைச் சாய்த்திருந்தாள்.
அவள் கண் திறந்ததும் பார்த்தது, அவன் வயிற்றைத்தான். அவள் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் அவனது அகன்ற மார்பும், குனிந்து தன்னை நோக்கியிருக்கும் முகமும் தெரிய, பதற்றத்துடன் எழுந்து அமர்ந்தாள். “சா..ரி.. சார்.. நீ..ங்க இருக்..கிறது தெரி..யாம” அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரச் சதி செய்தன.
“கமான் நதியா.. ஏன் என்னைப் பார்த்து இவ்ளோ பதட்டப்படுற? என் மேல எதும் பயமா?” அவன் கேட்டதும், மறுப்பாய் தலையசைத்தாள்.
அவனது பழுப்பு நிற விழிகளிலும், அவன் இதழ்க்கடையோரம் சிந்திய மென்புன்னைகையிலும் தொலையவிருந்தவள் தோள்களைக் குலுக்கியவாறு வேறு பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.
“இங்கேயே தூங்கிடாத நதியா.. அப்புறம் உன்னைக் கஷ்டப்பட்டுத்தான் தூக்கிட்டு போகணும்” என்றவன் எழுந்து அறைக்குச் சென்றிட, ‘அப்போ இவர் தான் அன்னைக்கு என்னை ரூமுக்கு தூக்கிட்டுப் போனாரா?’ ஆச்சரியத்தோடு அவனையே பார்த்திருந்தாள்.
இரவு தூக்கத்தில் வயிற்று வலியில் அவள் புரண்டு படுத்தபடி இருக்க, அவனுக்குச் சட்டென விழிப்பு தட்டியது. “நதியா.. என்ன பண்ணுது?” அவளது தோளைப் பற்றித் திருப்பினான்.
“டாக்டரை வரச் சொல்லட்டுமா?” அவன் பதற்றமாய் அவளைப் பார்த்திருக்க, “வேண்டாம் இது எப்பவும் வர்ற பெயின் தான்” என்றுவிட்டு திரும்பிக்கொண்டாள்.
மறுநாள் காலை நதியா உறக்கத்திலேயே இருக்க, மிதுன் குடும்ப டாக்டருக்கு போனில் அழைத்து, அவரை வரச் சொன்னவன், ஆபீஸுக்குக் கிளம்பினான். தூக்கத்திலிருந்து விழித்தவள் ஃப்ரெஷ்ஃப் ஆகி வந்ததும், காலிங்பெல் சத்தம் கேட்க அவள் திறந்து பார்த்தால் டாக்டர்தான் வந்திருந்தார்.
“டாக்டர்.. வீட்ல யாருக்கு என்னாச்சு? யார் வரச் சொன்னாங்க?” அவள் குழப்பத்துடன் வினவ, “உங்க ஹஸ்பன்ட் மிதுன் தான் உங்களுக்கு வயித்து வலின்னு போன் பண்ணினார்” என்று டாக்டர் கூறியதும் ஒருகணம் உறைந்து நின்றாள்.
டாக்டர் அவளைப் பரிசோதித்தபின் வலிக்கு ஊசியும் விட்டமின் மாத்திரைகளும் தந்தார். “டாக்டர் எங்களுக்குக் குழந்தை வேணும். நான் ஒவ்வொரு மாசமும் மென்சஸ் ஆகிடுறேன். என்ன பண்றது?” என நதியா கேட்க, “இந்த டைம் பீரியட்ஸ் முடிஞ்சதும் ஹாஸ்பிடல் வாங்க. செக் பண்ணிடலாம்” என்றுவிட்டு சென்றார்.
மிதுன் நதியாவைப் பற்றி இவ்வளவு யோசிக்கும்போது, அவளுக்காக இதெல்லாம் செய்யும்போது, அவளும் அவனுக்கானதைத் தர வேண்டும் அல்லவா?!
நதியா விஷ்ணுவை உடன் அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு, குழந்தைப் பேற்றுக்கான வழிமுறைகள், ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டவள், மருந்துகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். இப்போது அவளின் இந்த மாற்றத்தில் மிதுன் வியந்து போனான்.
மிதுன் ‘அவளை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்’ என நினைத்திருக்க, நதியா ‘தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்தபின் சீக்கிரம் கிளம்ப வேண்டும்’ என்ற நினைப்பில் இருந்தாள். யார் நினைத்தது நடக்கும்?!
அன்று காலை ஆபீஸுக்குக் கிளம்பிய மிதுன், “நதியா.. இன்னைக்கு குளிச்சு நல்லா ட்ரெஸ் பண்ணி ரெடியா இரு” சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றதும், ‘என்ன டயலாக்கை மாத்தி சொல்றார். அது சரி, எதுக்கு ரெடி ஆகணும்? எங்கேயும் வெளில கூப்பிட்டுப் போகப் போறாரா? இல்லை இன்னைக்கு பகல்லயே ஏதாவது?’ தன்னோடு பேசியவாறு அவன் சொன்னதையும் செய்தாள்.
மதியம்போல் வீட்டிற்கு வந்தவன், ஹாலிலிருந்த இண்டர்காம் மூலம் அவளுக்கு அழைத்து கீழே வரச் சொன்னான். யோசனையுடன் கீழே வந்தவள், கடைசிப் படிக்கட்டில் இறங்கியதும் அப்படியே சிலையாய் உறைந்து நின்றாள். ‘தான் காண்பது கனவா? நனவா?’ தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்திருந்தவள், வேகமாக ஓடிச் சென்று வீல் சேரில் அமர்ந்திருந்த தன்னுடைய அம்மாவை அணைத்துக் கொண்டாள்.
மிதுனுடன் அவன் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, அவருடைய வீல் சேரை பிடித்தவாறு விஷ்ணு அவருக்கருகில் நின்றிருந்தான். நதியா தன் தாயின் மடியில் முகம் புதைத்து, “அம்மா.. அப்பா..” எனக் கதறி அழுது கொண்டிருந்தாள்.
இந்த சில மாதங்களில் அவளுக்கு எத்தனை போராட்டம், எத்தனை இழப்பு, எத்தனை வலி. ஆக்சிடென்டில் இறந்ததால் அப்பாவைக் கட்டியணைத்து அழக்கூட முடியாமல், அம்மா அருகில் இல்லாமல் அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்து, அப்பாவோடு இருந்த சொத்து, சொந்த பந்தம், நட்பு அத்தனையும் இழந்து, அம்மா பிழைப்பாரா? மாட்டாரா? என்று தெரியாமல், ஆறுதல் சொல்லக்கூட ஆளின்றி அவள் அடைந்த வேதனைகளை, துயரங்களை தாயின் மடியில் கண்ணீரில் கரைத்தாள்.
“நதியாமா அழாத டா.. அம்மா வந்துட்டேன்ல. எனக்கு ஒண்ணுமில்ல” அவர் மகளின் தலையை வருடித் தர, நிமிர்ந்து அவரை பார்த்தவள், “அம்மா.. நதியாமானு கூப்பிடுங்க. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்” இன்னும் அவள் அழுகை குறைந்தபாடில்லை.
இதையெல்லாம் பார்த்து எரிச்சலடைந்த ராதாவும், ரூபிணியும் எழுந்து அவர்களுடைய அறைக்குச் செல்ல, ரூபிணி தேவ்வையும் இழுத்துச் சென்றாள். சூர்யாவும், வைஷாலியும் கல்லூரிக்குச் சென்றவர்கள் இன்னும் வரவில்லை. ருக்மணி தான் அவர்களுக்கருகில் சென்று, “அழாத நதியா.. அதான் உன்னோட அம்மாவுக்கு சரியாகிடுச்சுல” அவரும் அவள் தலையை வருடினார்.
அப்போதுதான் அவள் இருக்கும் இடத்தையும், அருகிலிருக்கும் மனிதர்களையும் உணர்ந்தவள், எழுந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னுடைய சாந்திம்மாவை பார்த்துச் சிரித்தாள்.
“உங்களுக்கு இப்போ எப்படி இருக்கும்மா?” நதியா அவரை மேலும் கீழும் தவிப்புடன் பார்த்திட, “அவங்க நல்லா இருக்காங்க, ஹார்ட்ல ஸ்டென்ட் வச்சிருக்காங்க. இனி பிரச்சனை எதுவுமில்ல. மூட்டுலயும் எந்த பிரச்சனையும் இல்ல. தினமும் கொஞ்ச தூரம் மெதுவா நடந்துகிட்டே இருந்தாங்கன்னா, சீக்கிரமே பழைய மாதிரி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க” டாக்டரின் மருத்துவ அறிக்கையைப் போல சொன்னவனைப் பார்த்து சிரித்தவள், “அம்மா.. இது விச்சு.. என்னோட ஃப்ரெண்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
சிரித்தவாறு மிதுன் பக்கம் திரும்பி, அவனை நன்றியோடு பார்த்தவள், “அம்மா.. இவர்..” என்ன சொல்வது எனத் தெரியாமல் தயக்கத்துடன் பேச்சை நிறுத்தி, மெல்ல இழுத்தாள்.
“எனக்குத் தெரியும் நதியாமா. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இவர் உன்னோட கணவர். ‘உங்க மருமகன் தான் உங்களை இங்க அட்மிட் பண்ணியிருக்கார்’ அப்படின்னு ஹாஸ்பிடல்ல சொன்னாங்க. தம்பியும் என்னை அடிக்கடி வந்து பார்த்து விசாரிச்சுட்டு போவார். காதல் கல்யாணமா? நீ என்கிட்ட, அப்பாகிட்ட இவரைப் பத்தி சொல்லவே இல்ல?” சாந்தி பேசப் பேச நதியாவிற்கும், விஷ்ணுவுக்கும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் போலிருந்தது.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
