அத்தியாயம் 4

அத்தியாயம் 4

காளிகாம்பாள் திருக்கோவில்..

பாறையை குடைந்தெடுத்து கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் அது.. அந்த ஊர் ஜனங்களின் நம்பிக்கையை சுமந்து கொண்டு கருவறையில் அனைவருக்கும் அருள் பாலித்தபடி வீற்றிருந்தாள் காளிகாம்பாள்..!!

தெய்வத்தை வணங்கி விட்டு பிரகாரத்தை சுற்றி வர தொடங்கினாள் அகமித்ரா.

தெய்வத்தின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் கிடையாது என்பதால் கோவிலின் ஒரு ஓரமாக தூணிற்கு அந்த புறம் அமர்ந்து கொண்டு தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.

அம்மா சொன்னார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான்..

மற்றபடி எப்பொழுதும் அவனுக்கு தெய்வ நம்பிக்கை இருந்ததில்லை தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவன்..

யாரிடமிருந்து மெயில் வந்திருக்கிறது ?? வாட்ஸ் அப்பில் என்ன செய்தி வந்திருக்கிறது என்று ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

முக்கியமான தொழில் விஷயங்கள் அனைத்தையும் சரி பார்த்து விட்டு மெதுவாக நிமிர்ந்து பார்த்தபோது அங்கே கண்ட காட்சி அவனுடைய கண்களை தீ கங்குகளாய் மாற்றியது..!!

காரணம்..

அங்கே அகமித்ரா யாரோ ஒரு வாலிபனுடன் சிரித்துக் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

அதை கண்டதும் இவனுக்கு கோபம் தலைக்கேறியது..

ஏதோ ஒப்பந்தம் போல அவளை திருமணம் செய்து கொண்டு வந்திருந்தாலும் , அவள் மீது என்னதான் வெறுப்பு இருந்தாலும், அது என்னவோ தெரியவில்லை அவள் வேறு ஒருவனுடன் சிரித்து பேசுவதை அவனால் பார்க்கவும் முடியவில்லை..அதை ஏற்றுக் கொள்ளவும் மனமில்லை அவனுக்கு..

கண்டதும் காதலா என்று கேட்டால் சத்தியமாக கிடையாது..

பின்னே ஈர்ப்பா?? என்று கேட்டால் அதற்கு அவனிடம் பதில் கிடையாது..

ஆனால் அவன் விரும்பிய பொருள் அவனுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற மனோபாவம் சிறுவயதிலிருந்தே அவனிடம் உண்டு. சிறுவயதில் ஆசைப்பட்ட சின்ன பொம்மையிலிருந்து ஆரம்பித்து இப்பொழுது பெரிய பிசினஸ்மேன் ஆன பிறகு பெரிய பெரிய கம்பெனியின் டீலர்ஷிப் வரைக்கும் அனைத்துமே தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற சுயநலம் அவனுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது…!!

அதே குணம் தான் இப்பொழுது அகமித்ரா விஷயத்திலும் செயல்படுகிறது…

தன்னிடம் மட்டும் தள்ளி நின்று பேசுவதும் பயத்தோடு ஒரு பார்வை பார்ப்பதும் நடுங்கி நடுங்கி பதில் அளிப்பதுமாக இருக்கும் இவளா இப்படி சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள், அதுவும் வேறு ஒருத்தரோடு ?? என்று நினைக்கும் போதே அவனுக்கு கோபம் பொங்கி எழுந்தது..!!

கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்தவன் வேகமாக அவள் அருகே சென்றான்..

” மித்து போகலாமா..”, என்று கேட்டபடி அவள் அருகே வந்து அவளை இடையோடு அணைத்து நின்றான்..

எதிர்பாராத நேரத்தில் அருகில் வந்து தன்னை அனைத்தபடி நின்று கொண்டிருக்கும் தன் கணவனை விசித்திரமாக பார்த்தாள்..

அதைவிட விசித்திரம் என்னவென்றால் , அவன் புதிதாக அவளுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயரை பார்த்து தான் அவளுக்கு ஆச்சரியமே..

எல்லோரும் அவளை மித்ரா என்று அழைப்பார்கள், இல்லையென்றால் அகமத்ரா என்று முழு பெயரை சொல்லி அழைப்பார்கள்.. இவன் என்ன வித்தியாசமாக ‘ மித்து ‘ என்று அழைக்கிறான்?? என்று ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்தாள்.

” என்ன பேபி அப்படி பாக்குற?? வா போலாம் நேரமாச்சு இல்லையா ??ஆமா இவங்க யாரு??”, இயல்பாக பேசுவது போல காட்டிக்கொண்டான் தீரன்.

” இ.. இவன் என்னோட நண்பன் அருண்.. என் காலேஜ் ஃப்ரெண்ட்..”, திக்கி திணறி வார்த்தைகளுக்கே தடுமாறினாள் அவள்.

” ஓஹோ காலேஜ் ஃபிரண்டா?? சரிதான் ஓகே பேசியாச்சு இல்லையா?? அப்ப வா போலாம்”, என்று சொன்னபடி அவளை இடையோடு கை போட்டு இறுக்கமாக அணைத்தபடி அவளை அழைத்துச் சென்றான் அவளின் அனுமதியின்றி..

“ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? அதுவும் பொது இடத்தில் வைத்து இப்படித்தான் கட்டி பிடிக்கிறதா? முதலில் கையை விடுங்க.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?? அவன்கிட்ட நான் சொல்லிட்டு கூட வரல.. அதுக்குள்ள நீங்க கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் நீங்க பாட்டுக்கு என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க அவன் என்ன நினைப்பான்??”

” புருஷன் பொண்டாட்டி ரொமான்ஸ் பண்ண போறாங்கன்னு நினைப்பான்..  கண்டவன் எல்லாம் என்ன நினைக்கிறான்னு நினைச்சு நீ ஏன் கவலைப்படுற?? அவ்ளோ முக்கியமா போய்ட்டானா அவன்??”, பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்பியவனின் முகத்தை அருகில் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவளால்..

தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணமாக இருப்பது போல் தான் தெரியும்.. ஆனால் அருகில் நின்று கொண்டு அவனுடைய ரியாக்ஷனை பார்ப்பவளுக்கு மட்டுமே அவன் எப்பேர்பட்ட கோபத்தில் இருக்கிறான் என்பது நன்றாக புரியும்.. அதுவும் அவனுடைய குரலிலிருந்து வெளிப்பட்ட அந்த ஆவேசம் , அவளுக்கு பயத்தை வரவழைத்தது..!!

தரதரவென்று அவளின் அனுமதியின்றி அவளை இழுத்துச் சென்றவன் வாசலில் நிற்கும் தன்னுடைய கருப்பு நிற பிஎம்டபிள்யூ காரில் மூட்டையை ஏற்றுவது போல அவளை தள்ளிவிட்டான் உள்ளே..

மறுபக்கம் வந்து கதவை சாற்றி ஸ்டியரிங் பிடித்தபடி அவள் அருகில்   அமர்ந்தவன் அவளை ஒரு கோப பார்வை பார்த்தான்..🔥🔥

அவள் மீது இருக்கும் கோபத்தை ஸ்டியரிங்கில் காண்பித்தவன்.. வண்டியின் ஸ்பீடு நூறை தாண்டி செல்லும் வரை வேகமாக செலுத்தினான்..!!

அங்கும் இங்கும் ஆடியபடி கார் வேகம் எடுத்துப் போக பயத்தில் ஒரு கட்டத்தில் சீட் பெல்ட் எடுத்து அணிந்து கொண்டாள் அவள்..

டயர் கிரீச்சிட்ட வண்ணம் வீட்டின் அருகே வந்த கார் பிரேக்கிட்டு நிற்க..

வேகமாக அவளை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்..

வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் வேலைக்காரர்கள் ஒரு புறம் இவனின் செயலை பார்த்து வாயை பிளந்தபடி நின்று கொண்டிருந்தார்கள்..

இன்னொரு புறம்,  டிவி பார்த்துக் கொண்டிருந்த வசுந்தரா தன் மகனின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்..

“டேய் தீரா நில்லு.. என்ன பண்ணிட்டிருக்க??”

தன் அன்னையின் கோபமான கேள்விக்கு கூட நின்று பதிலளிக்காமல் வேகமாக அவளை இழுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினான்.

” எல்லாரும் பாக்குறாங்க தயவு செஞ்சு என்னை விடுங்க.. எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு.. ஏன் இப்படி பண்றீங்க?? கோயில்லயும் அப்படி தான் நடந்துக்கிட்டீங்க.. இப்பவும் இப்படி பண்றீங்க உங்களுக்கு என்னதான் ஆச்சு??”, அவனிடமிருந்து விடுபட போராடிக் கொண்டே அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் அவள்..

” வாய மூடிட்டு பேசாம என் பின்னாடியே வா”, என்றான் கர்ஜனையாக.

மிக வேகமாக படி ஏறுயதில், ஒரு படிக்கட்டு தவறி கால் பதிக்க.. தடுமாறி விழப் போனவளை கண்டுகொள்ளாமல் , தாங்கி பிடித்து உதவியும் செய்யாமல், வேண்டுமென்றே வேகமாக இழுத்துச் சென்றான் அந்த மாபாதகன்…!!

புயலென அறைக்குள் நுழைந்து அவளை கட்டிலில் தள்ளி விட்டு அறை கதவை சாற்றி தாளிட்டான்..

” எதுக்காக இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கிறீங்க??”, கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே கேள்வி கேட்டாள் மித்ரா.

சட்டென்று அவளின் அருகே வந்தவன் அவளுடைய கழுத்தை பிடித்து நெறிக்க தொடங்கினான்..!!

விழிகள் இரண்டும் கோலிகுண்டு சைசுக்கு விரிய அவனை மிரட்சியுடன்  பார்த்தாள்..

“ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவன் கூட நீ சிரிச்சு பேசிட்டிருப்ப??”

“ நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. அவன் என்னுடைய காலேஜ் ஃப்ரெண்ட் ”

“ ஃப்ரெண்ட்ன்னா இப்படித்தான் நடுரோட்டில் நின்னுகிட்டு பல்ல இளிச்சுக்கிட்டு பேசிட்டிருப்பியா??”

அவன் ஸ்பரிசத்தில் அவளுக்கு பயம் உண்டானது.. காரணம், அவனுடைய கை விரல்களில் இருந்த நகம் அழுத்தமாக அவளுடைய கழுத்தில் பதிய தொடங்கியது.. அதிலிருந்தே தெரிந்து கொண்டாள் அவன் அவள் மீது எத்தனை கோபத்தில் இருக்கிறான் என்று..!!

வெறியோடு அவளின் கழுத்தை பிடித்து நெறித்தவனுக்கு, அவளுடைய கழுத்தை தான் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கூட அவனால் உணர முடியவில்லை.. அந்த அளவிற்கு கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தான் தலைவன்.

நகம் கூர்மையாக கழுத்தில் பட்டு காயமாகி இரத்தம் ஒழுக தொடங்கியது…!!

“ஆஆஆ….. வலிக்குது.. பிளீஸ் “, கண்ணீருடன் அவள் கெஞ்சவும் பிடியை தளர்த்தினான் அந்த தாரளக்காரன்..!!

கரும்பு மிஷினில் சிக்கியது போல படாத பாடு பட்டவள் இப்பொழுது விடுதலை கிடைத்தவுடன் அப்பாடா என்று உணர்ந்தாள் 

அவனுடைய கைகள் பட்ட இடம் நெருப்பாய் தகித்தது..🔥🔥

காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிவதை அவன் பார்த்ததும் , “அட கடவுளே இந்த அளவிற்கா கோபத்தை காண்பித்து விட்டோம்??”, என்று அவனுக்கும் மனம் ஒரு மாதிரியாகிவிட்டது..

உடனே அந்த அறையில் இருந்த கபோர்டை திறந்து ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து அவளின் காயத்திற்கு மருந்திட்டான்.

அரக்கனை போல நடந்து கொள்ளும் இவனுடைய குணமும், இப்பொழுது காயப்படுத்தி விட்டு அதற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கும் இவனுடைய செயலையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து போனாள் அவள்..

நல்லவனா?? கெட்டவனா ?? என்று யோசிக்கும் அளவிற்கெல்லாம் அவன் இல்லை.. 

அரக்கனா?? ராட்சசனா ?? என்று யோசிக்கும் நிலையில் தான் அவன் இருந்தான்..!!

அழுது அழுது கன்னங்கள் மட்டுமல்ல கண்களும் சிவந்து போய் கிடந்தாள் அவள்.

அவனையும் அறியாமல் அவனுடைய கரங்கள் அவளின் கன்னத்தை மெதுவாக வருடியது..

காயப்பட்ட அவளின் கழுத்தையும் மெதுவாக நீவி விட்டான்..

அவளின் கண்களை நேருக்கு நேராக ஊடுருவிக் கொண்டே கழுத்தை நீவிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் மேலும் அவளை நெருங்கி நின்றான்.

” எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி உயிரினமாக இருந்தாலும் சரி.. அது எனக்கு என்று முடிவு செய்துவிட்டால் அது எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்.. அதை வேறு யாராவது சொந்தம் கொண்டாடினால் எனக்கு சுத்தமாக பிடிக்காது.. ஏன் கண்ணால் அதை வேறொருவர் பார்த்து ரசிப்பதை கூட நான் அனுமதிக்க மாட்டேன்.. ஒரு விஷயம் எனக்கு என்று முடிவாகி விட்டால் அது எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் இறுதிவரை”, என்றான் தீர்க்கமாக.

பிறகு ஒரு நிமிடம் அவளின் கண்களை உற்று நோக்கியவன், “அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. அழும்போது நீ ரொம்பவே அழகா இருக்க” என்று பொறுமையாக அவளின் காதருகே கிசுகிசுத்தான், ஆனால் மிகவும் அழுத்தமாக உச்சரித்தான் ஒவ்வொரு வரிகளையும்..

கடைசி வரியை அவன் சொல்லவும் “என்ன மனுஷன் டா இவன்??“, என்பது போல அவனை மேலும் கீழுமாக  விசித்திர ஜந்துவை பார்ப்பது போல பார்த்து வைத்தாள் மித்ரா..!!

தொடரும்🔥🔥❤️❤️..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page