அத்தியாயம் 3
“ லட்சுமி என்ன பண்ணிட்டு இருக்க இங்க. சம்மந்தி வீட்டுக்காரவுகல பாக்கலையா நீ. அங்க உன்ன தான் தேடிட்டு இருக்காங்க வா வா . ”
“ டேய் நீ என்னடா பண்ணிட்டு இருக்க ”
“ இல்லப்பா தண்ணி குடிக்கலாம்ன்னு வந்தேன். ”
” குடிச்சாச்சுல கிளம்பு கிளம்பு யார் யார எந்தெந்த இடத்தில் வைக்கணும்ன்னு தெரியாது” என்று ஒரு உறுமல் உறுமி விட்டே அவர் அந்த இடத்தை விட்டு செல்ல,
அவர் பேசியதை கேட்டு கீர்த்தியின் முகம் சுருங்கினாலும், சுற்றி இருந்தவர்கள் அவளை பார்த்ததும் உடனே புன்னகைத்தவள்.
“ சரி சரி நீங்க எல்லாம் போங்க. டிராவல் பண்ணி வந்தது. கொஞ்சம் கசகசன்னு இருக்கு குளிச்சிட்டு நானும் ரெடி ஆகி வரேன். ”
“ எப்புடியும் இன்னும் நிச்சயத்துக்கு வொன் ஹவர் இருக்கு இல்லையா அக்கா. ”
ரம்யாவோ சலிப்புடன் ஆம் என்று தலையாட்ட,
“அப்ப சரி கிளம்புங்க எல்லாரும் ” என்றதும், அனைவரும் கிளம்ப ரம்யா மட்டும் செல்லவில்லை.
“என்ன ரம்யா வரலையா நீ.”
“அம்மா நான் கீர்த்தி கிட்ட பேசிட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் போங்க”
சரி என்று அவர்களும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு கதவை சாத்திவிட்டு வந்த கீர்த்தி.
“அக்கா நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். உன் மூஞ்சியே சரியில்லையே என்ன ஆச்சு. ”
“ நீ எப்ப வருவன்னு தான் காத்துகிட்டு இருந்தேன் கீர்த்தி. யார்கிட்டயும் என்னால எதுவுமே சொல்ல முடியல. ”
“அக்கா என்ன பாரு” என்று ரம்யாவின் கண்களை பார்த்து, “சொல்லுக்கா ”
“அப்பாவுக்கு தெரிஞ்சுருமோன்னு மறைச்சி மறைச்சி வச்ச ரகசியம் ஒன்னு இருக்கு கீர்த்தி. ”
“ரகசியமா!!! அது என்ன கா ?என்கிட்ட கூட இதுவரை நீ சொன்னது இல்ல”
“சொல்றதுக்கான சந்தர்ப்பம் அமைஞ்சதே இல்லை கீர்த்தி. ”
“சரிக்கா ஒன்னும் பிரச்சனை இல்ல இப்ப சொல்லு என்ன ரகசியம் அது. ”
“ அது நான் ஒருத்தர லவ் பண்றேன் கீர்த்தி ”
“ வாட் அக்கா. என்ன லவ்வா அதுவும் நீயா?”
“ ம்ம்….. நான் காலேஜ் படிக்கும் போது, எங்க டிபார்ட்மென்ட் சீனியர் விக்ரம். அவர எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா நான் அவர்கிட்ட ஒரு நாளும் சொன்னது இல்ல. அது ஒன் சைடு லவ்வாவே முடிஞ்சு போச்சுன்னு தான். நான் இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருந்தேன் கீர்த்தி. ஆனா இப்ப இடையில என் கல்யாணமெல்லாம் முடிவாகி ஷாப்பிங் போகும்போது தான் அவர திரும்ப பார்த்தேன். ”
“சரி என்ன ஆச்சு அவருக்கு. ”
அத்தியாயம் – 4
“அவரு நல்லா தான் இருக்காரு கீர்த்தி. இப்ப ஒரு ஹோட்டல் வச்சி நடத்துறதாகவும், பிசினஸ் நல்லா போயிட்டு இருக்குன்னு தான் சொன்னாரு. ”
“சரிக்கா அப்புறம் என்ன?”
“ எனக்கு நிச்சயம் ஆகிருக்குன்னு அவருக்கு அப்போதைக்கு தெரியாது. அதனால அவரு ஒரு விஷயத்த என்கிட்ட சொன்னாரு. ”
“என்ன விஷயம் கா”
“காலேஜ்ல அவரும் என்னை லவ் பண்ணாராம். என்கிட்ட சொன்னா நான் ஏத்துக்காம போய்டுவேனோன்னு பயத்துல சொல்லாமலே விட்டுட்டாராம். ”
“இப்பொழுது கீர்த்தி அதிர்ச்சியாக தன்னுடைய அக்காவை பார்க்க ”
“ ஆமாடி அதையும் அன்னக்கி தான் என்கிட்ட சொன்னாரு. அப்புறம் அவரோட நம்பர் என்கிட்ட கொடுத்தாரா ”
“ நீ உடனே வாங்கிருப்பியே ”
“ நீயே சொல்லு கீர்த்தி. நான் விரும்பின ஒருத்தர் என்னைய விரும்பி இருக்கிறார்ன்ற உண்மை தெரிஞ்ச பிறகும் நான் எப்படி அமைதியா இருப்பேன். நம்பர் மாத்திகிட்டோம் நம்பர் மாத்திகிட்ட அப்புறம் அடிக்கடி இரண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சோம். போன வாரம் தான் ரெண்டு பேரும் ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டோம். ”
“வாவ் சூப்பர் அக்கா கல்யாணத்த அடுத்தவாரம் வச்சிக்கிட்டு ப்ரபோஸிங்கா”
“ ஆனால் காதல சொல்லிக்கிட்டதிலிருந்தே ரெண்டு பேருக்குமே டென்ஷன் இருந்துட்டே தான் இருக்கு ”
” அதானே எப்படி டென்ஷன் இல்லாம இருக்கும் ”
“எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுன்னு அவர் கிட்ட சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரு மனசுலயும் புதைஞ்சிருந்த காதல் வெளிய வந்தா அது யார் தப்பு கீர்த்தி. ”
“வெளிய முரட்டு மீசை வச்சிட்டு வேலுசாமின்னு ஒருத்தர் ஒக்காந்து இருக்காரே அவர் தப்பு தான் ”
“ கீர்த்தி அப்பா கிட்ட சொன்னா கண்டிப்பா கொன்னே போட்டுருவாரு. என்னால இந்த கல்யாணத்தை ஒருக்காலும் பண்ணிக்க முடியாது. எனக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்லு கீர்த்தி. இப்ப நிச்சயத்துல வந்து நிக்கிது. விடிஞ்சா கல்யாணம் இளா இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாதுடி. அப்படி அப்பா பார்த்த மாப்பிள்ளை என் கழுத்துல தாலி கட்டிட்டா , கண்டிப்பா நான் பாய்சன் குடிச்சுட்டு தான் மணமேடையே ஏறுவேன் அந்த முடிவோட இருக்கேன்”
” அக்கா என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க ”
“வேற என்ன பண்ண சொல்ற , நான் தானே தப்பு பண்ணேன். மாப்பிள பார்த்ததுக்கு அப்புறம் ஒருத்தர் மேல காதல் வருதுனா. அப்போ என்மேல தான தப்பு ”
“ யாருக்கா அப்படி சொன்னா. காதல் யாருக்கு எப்படி வேணாலும் வரலாம். அதுவும் இல்லாம நீ ஏற்கனவே காதலிச்சவர திரும்ப பார்க்கும் போது, அவர் மேல உனக்கு காதல் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம். அவர் என்ன சொன்னாரு அக்கா ”
“ அப்பா கிட்ட வந்து பேசவான்னு கேட்டாரு. அதெல்லாம் வேண்டவே வேண்டாம்ன்னு நான் சொல்லிட்டேன். நாளைக்கு மட்டும் கல்யாணம் நடந்துச்சு அதுக்கப்புறம் என்ன உயிரோடயே பாக்க முடியாதுன்னு அவரும் என்கிட்ட சொல்லிட்டு கோவமா ஃபோனை கட் பண்ணிட்டாரு. ”
ம்ம்
அதன் பிறகு வெகு நேரம் இருவரும் யோசனையோடு இருக்க, கீர்த்திக்கோ இதுதான் சரியென பட,
அக்கா என்று ரம்யாவை பார்த்து, “பேசாம நீ ஓடிருக்கா”
“என்ன கீர்த்தி இப்படி சொல்ற. அவரும் அது தான் சொன்னாரு. ஆனா இதுல நம்ம வீட்டோட மானமே இருக்கு. பிளஸ் அஸ்வினோட கல்யாணம் நல்ல படியா நடக்கணும். என் காதலுக்காக அவன் காதல பிரிச்சி வக்க சொல்றியா ”
“நீ எல்லாரையும் பார்த்தா, உன் வாழ்க்கையை நீ தொலைச்சுட்டு நிக்கிற மாதிரி தான் இருக்கும். எனக்கு தெரிஞ்சு அஸ்வின் அண்ணா, ஸ்வேதா கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ”
“ஆனா எனக்கு பார்த்து இருக்க மாப்ள பாவம் தானே கீர்த்தி ”
அதை கூறியதும் கீர்த்தி சத்தம் போட்டு சிரித்தவள். “வாட் அந்த வாசு உனக்கு பாவமா ”
“ ஏய் என்னடி அவர் பேர் சொல்லி கூப்பிடுற ”
“ அதுதானே அவனோட பேரு. நான் வேலை செய்ற கம்பெனியோட ஓனரே அந்த ஆளு தான். ”
“ என்ன அவரு கம்பெனியில் தான் நீ வேலை செய்றியா”
“ ஆமா உனக்கு எப்படிக்கா அப்பா இப்படி ஒரு மாப்பிள்ளைய பார்த்தாரு. நீ என்ன இப்ப தனியா பேச கூப்பிடலைன்னாலும், நானே உன்னை தனியா பேச கூப்பிட்டு இருப்பேன். நானும் இந்த கல்யாணத்தை நிறுத்த தான் பிளான் பண்ணி இருந்தேன். ”
“ என்ன சொல்ற கீர்த்தி. ஆமாக்கா அந்த வாசு சரியான பொம்பள பொறுக்கி, அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை. அவன் கம்பெனியில நான் புடிச்சா வேலை செஞ்சுட்டு இருக்கேன். நானும் அங்க இருந்துட்டே வேற கம்பெனில ஏதாவது வேலை கிடைக்குமான்னு தேடிட்டு தான் இருக்கேன். என் நேரம் எதுவுமே கிடைக்க மாட்டேங்குது. அவனை எப்பயாவது தான் பார்ப்பேன். அப்ப பார்க்கும்போது எனக்கு அறுவறுப்பா இருக்கும். அதுதான் நீ மாப்பிளன்னு அந்த ஆள சொன்ன உடனே எனக்கு மயக்கமே வந்துருச்சி. நீங்க எல்லாரும் ரவுண்ட் கட்டி எதனால் மயக்கம் போட்டேன்னு கேட்டுட்டு இருந்தீங்கல்ல. உண்மையான காரணம் இதுதான்.”
“என்ன கீர்த்தி சொல்ற ”
“ உண்மையதான் அக்கா சொல்றேன். இப்ப நீ லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் என் மனசே நிம்மதியா இருக்கு. இப்படி ஒருத்தன் கூட எவளும் வாழ மாட்டாக்கா. ஆனா எனக்கு இது மட்டும் தான் தெரிய மாட்டேங்குது. பொண்ணுங்க விஷயத்துல வீக், தண்ணி, தம்முனு இல்லாத கெட்ட பழக்கமே இல்ல. இருந்தாலும் இவன் எப்படி நம்பர் ஒன் பிசினஸ்மேன் ஆனான்னு.”
– தொடரும்
