அத்தியாயம் 5

அத்தியாயம் 5

காயப்படுத்தி அழுக வைத்து விட்டு அதை ரசிக்க வேறு செய்கிறானே எப்பேர்ப்பட்ட சைக்கோ இவன்?? என்று யோசிக்க தொடங்கினாள் மித்ரா..!!

” சும்மா சொல்ல கூடாது மற்ற நேரத்தில் இருப்பதைவிட நீ அழும்பொழுது இன்னும் அழகாகத்தான் இருக்கிற.. அதனால இனிமே நீ என்ன பண்ணு.. அடிக்கடி அழுதுடு.. அப்போதான் அழுது அழுது உன்னுடைய கன்னங்கள் சிவந்து இயற்கையாகவே ரூஜ் தடவின மாதிரி அழகா மாறிடும்.. எனக்கும் மூடு வரும் ஓகே வா?? ..சரி சரி அழுதது போதும் வா”, என்றான் அவளின் கையை பிடித்திழுத்து கட்டிலில் படுத்தபடி.

” என்ன??”, என்று கேட்டாள் அதிர்ச்சியாக..!!

” என்ன அப்படி பாக்கிற?? என்னுடைய தேவைகளை தீர்ப்பதற்காகத்தான் உன்னை கல்யாணம் பண்ணிருக்கேன் ஞாபகம் இருக்குல்ல.. ?? இப்போ என்னுடைய தேவையை நீ தான் தீர்க்கணும்.. வாடி”, என்றவன் அவளை கட்டிலில் இழுத்து போட்டான் இரக்கமே இல்லாமல்…!!

” என்ன பண்றீங்க?? கையை விடுங்க”, என்றாள் பதட்டமாக..

வேகமாக கட்டிலிலிருந்து இறங்கபோனவளை  மிகவும் அழுத்தமாக அவளுடைய கை மணிக்கட்டை பிடித்து இழுத்தான் அவன்.

” என்ன பண்றேன் ??எதுக்காக கூப்பிடுறேன்னு உனக்கு தெரியாதா?? அதுக்காக தானே பத்து லட்சம் வாங்குன , மறந்து போயிட்டியா?? ” என்று கூறி அவளின் பின்னந்தலையை இழுத்து அவள் முகத்தை தன் முகத்தோடு ஒட்டி வைத்தான்.

வன்மையாக அவளின் இதழ்களை சூறையாடியவன்.. அவளை பேசவிடாமல் தடுத்தான் என்று சொல்லுவதை விட பேசுவதற்கு அவன் அனுமதியும்  அளிக்கவில்லை இடைவேளையும் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்..!!

அடுத்தடுத்து தன் இதழ்களால் அவள் மேனி எங்கும் முத்திரை பதித்தவன்.. அவளின் சினுங்கலையும் கண்ணீரையும் கண்டுகொள்ளாமல் முன்னேறினான் அவனுடைய இலக்கை நோக்கி..

குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக அவளுடைய பொன்மேனி முழுவதும் புண்ணாக்க தொடங்கினான்..

அழுத்தமான நக கீறல்களும், பற்களின் தடமும் தீரனின் வெறியை உணர்த்தியது அவளுக்கு..!!

நீண்ட நேர இதழ் முத்தத்தின் நடுவே அவளுடைய ஆடைகளை களைந்தான் மூர்க்கமாக.. !!

” உடம்பெல்லாம் வலிக்குது ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..”, கைகூப்பி வேண்டிக் கொண்டாள் கெஞ்சுதலாக.

மூச்சு வாங்குவதற்காக சிறிய இடைவேளை விட்டிருந்தான் முத்த போரில்.. அந்த சாக்கில் தன் வேதனையை வெளிப்படுத்தினாள் அவள்.

அவளுடைய கண்ணீரையோ கெஞ்சுதல்களையோ அல்லது வேதனையையோ.. எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை..!!

அவனைப் பொறுத்தமட்டில்.. இப்பொழுது ,அவள் அவனுக்கு வேண்டும் அவ்வளவு தான்..

அந்த பஞ்சு சிலையிடம் மூர்க்கத்தனமாக அணுகினான், அந்த இரும்பன்….!!

விட்டால் இப்படியே பேசிக் கொண்டே இருப்பாள் என்று எண்ணி விட்டானோ என்னவோ மீண்டும் அவளை ஆவேசமாக தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டு தன்னுடைய ஆலிங்கனத்தை  தொடங்கினான்..

அவனுடைய உள்ளங்கைகள் எத்தனை வலிமையானது என்பதை அவளின் கனகமும் , மலைவிடரகமும், அகடும் உணர்ந்து கொண்டு தவித்து நின்றது..!!

தன்னுடைய எதிர்ப்பை காட்ட அவளும் எத்தனையோ முயற்சித்தாள்.. 

ஆனால் , அவனுடைய மொத்த என்பது கிலோ எடையையும் அவள் மீது போட்டுவிட்டு அவளை எங்கும் நகர விடாதபடி சிறை பிடித்திருந்தான்..

முடிந்த மட்டும் அவன் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளி விட முயற்சி செய்தாள்.. ஆனால், அடுத்த நிமிடமே ஏனடா முயற்சி செய்தோம் என்று எண்ணும் அளவிற்கு அவளுடைய இரு கரங்களையும் அழுத்தமாக பிடித்து தலைக்கு மேலே தூக்கிப் தன் கைகளால் அவளின் கைகளுக்கு சிறையிட்டான் ..

வலுக்கட்டாயமாக தன் அனுமதியின்றி தன் மீது படர்ந்து தன்னை ருசிக்க தொடங்கும் தன் கணவனை அடக்கும் வழி தெரியாமல் தவித்து போனாள் அந்த பேதை..

எத்தனை கதறினாலும் , எத்தனை கண்ணீர் விட்டாலும்.. அது பற்றி எனக்கு கவலையே இல்லை.. நீ எனக்கு ஒரு பொருட்டே கிடையாது.. என்னுடைய லட்சியம் தான் முக்கியம் எனக்கு.. என் ஆசை நிறைவேற வேண்டும் அவ்வளவு தான்..என்பது போல மிகவும் சுயநலமாகவும் அரக்கத்தனமாகவும் நடந்து கொண்டான் தீரன்.

எந்த பெண்ணிடமும் கிடைக்காத திருப்தியும் நிம்மதியும் இவளிடம் கிடைத்து விடாதா ?? என்பது போல ஆவேசமாக அவனுடைய சந்தோஷத்தை அவள் மேனியில் தேட தொடங்கினான்..

அவன் தேடியது கிடைத்ததோ இல்லையோ ஆனால் அவளுடைய கதறலை கேட்க கேட்க.. அவன் காதுகளுக்கு தேன் பாய்ச்சியது போல இருந்திருக்க வேண்டும்..

அதனால் மீண்டும் மீண்டும் அவளை நாடி அவளை துன்புறுத்தினான் அவன்..

ஒருவழியாக மனம் வந்து இப்போதைக்கு இது போதும் மிச்சத்தை சில மணி நேரங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு இறுதியாக அவளுடைய தேனிதழ்களை அழுத்தமாக தீண்டினான் தீரன்…

அழுது அழுது ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போய்விட்டாள்..

சிறிது நேரம் நன்றாக படுத்து தூங்கட்டும் சோர்வில் இருக்கிறாள் போல என்று நினைத்துக் கொண்டான் அவன்..

அதனால் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே சென்று சிகரெட்டை பிடிக்க தொடங்கினான்..

எப்பேர்பட்ட அழகியாக இருந்தாலும் ஒரு முறை தான் அவளோடு உறவாடுவேன்.. ஆனால் இவளை மட்டும் என்னால் ஏன் விட முடியவில்லை ??ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி அவளை நோக்கி என்னையும் என் மனதையும் இழுக்கிறது..

நான் தேடிய திருப்தி இன்னமும் அவளிடம் கிடைக்கவில்லை ஆனால் இவளிடம் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது அந்த பொக்கிஷம் என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது.. அதை தேடி கண்டுபிடித்து அதை அடையும் வரை என் மனமும் உடலும் ஓயாது, என்று நினைத்துக் கொண்டான் தீரன்..

மாலை மங்கி சந்திர பகவானும் தரிசனம் தந்து விட்டார்..

ஆனால் இன்னமும் மித்ரா எழவே இல்லை..

போர்வை போர்த்திய வெற்றுடலுடன் படுத்திருந்தாள் அவள்..

இவனோ மொபைலை குடைந்த வண்ணம் அமர்ந்திருந்தான் எதையும் கண்டு கொள்ளாமல்..

இரவு 9 மணி..

” டேய் தீரா.. மித்ரா ரெண்டு பேரும் சாப்பிட கீழே வாங்க..”, கீழிருந்து ஒலிக்கும் தன் அன்னையின் குரலை கேட்டவன் கட்டிலில் படுத்திருக்கும் தன் மனைவியை திரும்பி பார்த்தான்.

என்னாச்சு இவளுக்கு இன்னமும் எந்திரிக்காமல் இருக்கிறாளே..?? என்னவாக இருக்கும் ?? ஒருவேளை நம்மளோட சாகசத்தில் மயங்கி விட்டாளோ ??, என்று நினைத்தவன் அவள் அருகில் வந்து நின்றான்.

” ஏய் உன்ன தான்டி எந்திரி.. இத்தனை நேரம் ஆகியும் இன்னும் எந்திரிக்காமல் இருக்க ??அப்படி என்னடி உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு ?? அம்மா வேற கீழ கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க காதில் விழலையா?? எந்திரி”, என்று கத்தியவன் அவளின் தோள் பற்றி இழுத்தான்.

அப்பொழுதும் அவள் கண் விழிக்கவில்லை.. அசையாமல் பொம்மை போலவே படுத்திருந்தாள்.. அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தாளே ஒழிய கண்களும் திறக்கவில்லை அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தென்படவில்லை..

என்னாச்சு இவளுக்கு?? என்று யோசித்துக் கொண்டே அவளுடைய கன்னத்தை மெதுவாக தட்டிப் பார்த்தான்..

அப்பொழுது தான் அந்த அரக்கனுக்கு உணர்வு வந்ததோ என்னவோ அவளுடைய உடல் முழுக்க தீயாக கொதித்து கொண்டிருப்பதை உணர்ந்தான்..!!

அடக்கடவுளே, இது என்ன இப்படி கொதிக்குது உடம்பெல்லாம்?? இப்படியா காய்ச்சல் அடிக்கும், காலையில் நல்லா தானே இருந்தா?? அப்புறம் எப்படி இப்படி ஆச்சு ??, என்று யோசித்தான்..

ஒருவேளை மதியம் நம்ம அப்படி நடந்துக்கிட்டதுனால தான் அவளுக்கு இப்படி ஆயிடுச்சு போல?? கொஞ்சம் மூர்க்கத்தனமா தான் நடந்துகிட்டோமோ?? என்று முதல் முறையாக அவன் மனதிற்குள் குற்ற உணர்வு லேசாக தலை தூக்கியது..!!

பதட்டத்துடன் அவளின் கன்னங்களை தட்டி தட்டி பார்த்தான் , ஆனால் அவள் கண் விழிக்கவே இல்லை..

” ஏய் இங்க பாரு.. கண் முழிச்சு பாரு என்னை பாரு..”, வேதனையுடன் அவளுடைய உடல் காயத்தை பார்த்தவன்..

எத்தனை மூர்க்கமாக நடந்து கொண்டு விட்டோம்.. ?? எத்தனை வேதனையில் துடித்து போனாளோ தெரியவில்லை.. அதனால் தான் காய்ச்சல் கண்டுவிட்டது இவளுக்கு என்று எண்ணினான்..

உடனே தங்கள் குடும்ப டாக்டரான ரகுராமனை போனில் அழைத்து தகவல் சொல்லி உடனடியாக வீட்டிற்கு வரவழைத்தான்.

திடீரென்று எதற்காக டாக்டர் வந்திருக்கிறார் என்று குழப்பத்துடன் மாடிக்கு வந்தார் வசுந்தரா.

டாக்டர் வரும் முன்பாக அறையை சுத்தம் செய்தவன்.. மிக வேகமாக அவளுக்கு உடைகளை அணிவித்து அனைத்தையும் சீர்படுத்தினான்..

டாக்டர் வந்ததும் அவளை பரிசோதித்து பார்த்துவிட்டு கடும் காய்ச்சல் தான் வேறொன்றும் இல்லை என்று கூறி சில மாத்திரைகளை மருந்துகளையும் எழுதி கொடுத்துவிட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..

காலையில் நல்லா தானே இருந்தா இப்ப எப்படி காய்ச்சல் வந்தது என்று சந்தேகத்துடன் தன் மருமகளை பார்த்துவிட்டு உடனே தன் மகனை ஏறிட்டு பார்த்தார் அவர்.

அவன் முகத்தில் தெரிந்த குற்ற உணர்ச்சியை கண்டு, அங்கு என்ன நடந்திருக்க கூடும் என்று அவரால் யூகிக்க முடிந்தது..

” அம்மா.. டாக்டர் சொன்னது போல இவளுக்கு மாத்திரை மருந்து எல்லாம் கொடுக்குறியா??”, என்று கேட்டான் அவன்.

தன் மருமகளுக்கு செய்வதில் அவருக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தான்.. ஆனால் அவன் செய்த தவறுக்கு அவன் தான் பரிகாரம் தேட வேண்டும்.. இது செய்யும் பொழுதாவது அவர்களுக்குள் நல்ல எண்ணங்களும் இணக்கமும் பிறக்கட்டும் என்று மனதில் நினைத்து கொண்டார்.. 

அதனால்..

” உன்னுடைய பொண்டாட்டிக்கு நீ தான் எல்லாமே செய்யணும் என்னால முடியாது நான் ரெஸ்ட் எடுக்க போறேன்.. டாக்டர் சொன்னது போலவே அவளுக்கு எல்லாம் செஞ்சுட்டு அவ எப்படி இருக்கான்னு எனக்கு அப்பப்போ வந்து சொல்லு புரிஞ்சுதா?? “, என்றார் உத்தரவிடுவது போல.

பிறகு பதில் ஏதும் பேசாமல் கண்மூடி படுத்திருக்கும் தன் மருமகளை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மனவேதனையுடன் அறையை விட்டு வெளியேறினார் அவர்.

பூப்போன்ற பெண்ணை இப்படி துன்பப்படுத்துகிறானே?? இந்த பந்தம் எதில் போய் முடியுமோ தெரியவில்லையே ஆண்டவா.. நல்லது நடக்கும் என்று நினைத்து தானே திருமணம் செய்து வைத்தேன்..ஆனால் இவர்கள் மத்தியில் எதுவும் சரி இல்லையோ என்று தோன்றுகிறது.. எப்பொழுது இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்குமோ தெரியலையே என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டார் அவர்.

வேளா வேளைக்கு மருந்துகளை கொடுக்க வேண்டும் போதாக்குறைக்கு அவ்வப்போது அவளுக்கு தண்ணீரில் துணியை நினைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார் டாக்டர்..

அதன்படியே துணியை தண்ணீரில் நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுக்க தொடங்கினான் தீரன் ..!!

இந்த உலகிலேயே அவன் அதிகமாக மதிப்பதும் அன்பு காட்டுவதும் தன் தாயிடம் மட்டும் தான் அப்பேர்பட்ட தாய்க்கு உடல்நல குறைவு என்றால் கூட டாக்டரை வரவழைத்து கூடவே ஒரு நர்சை அப்பாயிண்ட் செய்து அவரை பார்த்துக் கொள்ள செய்வானே ஒழிய.. இப்படி கூடவே இருந்து அவருக்கு அவன் ஒருநாளும் சேவகம் செய்ததில்லை..

இதுவே அவன் வாழ்நாளில் முதல் முறையாக ஒருவருக்கு சேவகம் செய்வது.. அதுவும் குற்ற உணர்ச்சியோடு..!!

தொடரும்🔥🔥❤️❤️..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page