அத்தியாயம் – 6
” மாமா ரொம்ப முக்கியமான விஷயம் ” என்று சொல்லி சுற்றி முற்றி பார்த்தவள். யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவனது காதருகே சென்று விஷயத்தை கூற போக,
அவள் அருகில் வந்ததும் பத்தடி தள்ளி நின்றவன். ” நீ எதா இருந்தாலும் தள்ளியே நின்னு சொல்லு புள்ள ” என்று அவன் பயந்தபடி பேச,
அவளுக்கோ குமரனை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு. பாவம் அது தான் அவள் சிரிக்கும் கடைசி சிரிப்பு என்று அவள் அறியவில்லை.
“போதும் புள்ள இப்ப எதுக்கு கெக்க புக்கன்னு சிரிக்கிறவ ”
“ ம்ம் அது வேற ஒன்னும் இல்ல. என் மாமனோட இந்த பயத்தை நினைச்சு தான் சிரிக்கிறேன். அங்க எல்லாரும் இருக்கும்போது விலகி போனீங்க. இப்ப எதுக்கு விலகி போற மாமா. இங்க யாருமே தான் இல்லையே ”
“ யாருமே இல்லனா அதுக்குன்னு இப்படி பக்கத்துல வருவியாக்கும் ”
“ஏன் மாமா. என்ன தப்பு பக்கத்துல வந்தா ” என்று அவள் கூறியபடி மீண்டும் பக்கத்தில் வர,
“போதும் புள்ள அப்புறம் அடிச்சு புடுவேன் பாத்துக்கோ”
” என்ன என்னோட மாமா. என்ன அடிச்சிடுவாரா? எங்க அடிங்க, எங்க அடிங்க ” என்று அவள் மீண்டும் மீண்டும் அவன் அருகே செல்ல,
குமரனோ ” நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் கிளம்புறேன் என்ன வம்பு இழுக்கிறதுக்கு தான் நீ வந்தியாக்கும் ” என்று குமரன் செல்ல பார்க்க,
உடனே கீர்த்தி தன் விளையாட்டை கைவிட்டுவிட்டு, “ மாமா சரி சரி வா வா விஷயத்தை சொல்றேன்.”
“ போ நீ விஷயத்தை சொல்ல மாட்ட”
“ சத்தியமா சொல்றேன் மாமா. ”
“ சரி நீ அங்கனயே நின்னு சொல்லு. ”
“ மைக் வெச்சு வேணா சொல்லட்டுமா? ஆள பாரு சீக்ரெட்னு சொல்றேன். இங்க நின்னே சொல்லணுமா? உன்ன தொடலா மாட்டேன். பக்கத்துல வந்து நில்லு.”
சரியென்று அவளுக்கு எதிரில் ஒரு கதிரையை போட்டு அவன் அமர்ந்தவுடன், அவனை சிரித்தபடியே பார்த்தவள். “ ஏன் மாமா ஏன் நான் உன்னை தொடக்கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லயா? ”
“அதெல்லாம் இருக்கு புள்ள ”
“ அப்புறம் ஏன் விலகி விலகி போற ”
“ அது எனக்கு ஒரு மாதிரி இருக்கு புள்ள. அது உனக்கு சொன்னா புரியாது. நீ கண்டதையும் பேசாம விஷயத்தை சொல்லு”
” சரி ஓகே விஷயத்துக்கு வரேன். அப்புறம் நீ திரும்ப எந்திரிச்சு ஓடிருவ. நம்ம ரம்யா அக்கா இருக்குல்ல ரம்யா அக்கா “என்று இவள் ஆரம்பிக்கும் பொழுதே,
தூரத்தில் இருந்து ஒரு குரல், “எலேய் குமாரு “என்று சொந்தக்காரர் ஒருத்தர் அழைக்க,
இவனோ இங்க இருந்து “சித்தப்பு எப்ப வந்த “என்று குரல் கொடுத்துவிட்டு,
“கீர்த்தி என்னோட சித்தப்பு வந்திருக்கு ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கு. கொஞ்ச நேரம் இரு பேசிபுட்டு மட்டும் வந்துடறேன்.”
அவளோ பாவமாக முகத்தை வைத்து, சரி என்று தலையாட்டி வைத்தாள்.
குமரன் அந்த சித்தப்பாவிடம் சென்று நலம் விசாரித்துக் கொண்டிருக்க,
கீர்த்தி அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்க, இவளோ எழுந்து சென்று சுற்றி முற்றி பார்க்க எதுவும் தென்படவில்லை.
அது மண்டபத்தின் பின்புறம் என்பதால் பின்புறம் வழியாக மொட்டை மாடிக்கு அங்கு தான் இருந்தது. அந்த புறம் இருந்து தான் சத்தம் வர, இவளுக்கோ தனியாக அந்த இருட்டுக்குள் செல்ல பயமா இருந்ததால் அமைதியாகவே மீண்டும் வந்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
ஆனால் சத்தம் இன்னும் அதிகமாக, மனதில் சிறு தைரியம் வரப்பெற்றவளாக என்ன தான் சத்தம் இது என்று அந்த படிக்கட்டு மேலே ஏறியவளுக்கு சத்தம் இன்னும் பக்கத்தில் கேட்க, இங்கிருந்து தான் வருகிறது என்று உறுதியானது. கீர்த்தி அப்படியே ஏறி மொட்டை மாடிக்கே சென்று விட்டாள்.
அந்த புறம் சத்தம் இன்னும் அதிகமாக, மனதில் சிறு தைரியம் வரப்பெற்றவளாக என்ன தான் சத்தம் இது என்று அந்த படிக்கட்டு மேலே ஏறியவளுக்கு சத்தம் இன்னும் பக்கத்தில் கேட்க, இங்கிருந்து தான் வருகிறது என்று உறுதியானது. கீர்த்தி அப்படியே ஏறி மொட்டை மாடிக்கே சென்று விட்டாள்.
மொட்டை மாடியில் யார் இருக்கிறார் என்று அவள் பார்க்கவும். அந்த இருட்டில் அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. இப்படியே கீழே இறங்கி சென்றுவிடலாம் தான் என்று தான் நினைத்தாள். ஆனால் அந்த சத்தம் அவளை செல்ல விடாமல் மொச்சு மொச்சு என்று காதை கிசுகிசுக்க, தன்னுடைய ஃபோனிலிருந்த டார்ச்சை ஆன் செய்யலாம் என்று சென்றவளுக்கு அவர்களின் பேச்சு சத்தம் தெளிவாகவே அவளது காதை எட்டியது.
ம்க்கும் வாசு என்ன இது. என் லிப்ல ப்ளட் வந்துடுச்சு. இப்படியா கடிச்சு வைப்பீங்க என்று கொஞ்சலும், கெஞ்சலும் கலந்தது போல் ஒரு பெண்ணின் குரல் அவள் காதில் விழுந்த அடுத்த நொடியே,
வாசு மீண்டும் அவளின் கையை வலிக்கும் அளவு இறுக்கி பிடிக்க,
அந்த யுவதி வலி தாங்க முடியாமல் ஆஆ……. என்று கத்த, இந்த முறை அவள் வலியில் தான் கத்துகிறாள் என்பது அவள் கத்தலிலே தெரிந்தது.
ஆனால் அவனோ ஏய் எதுக்கு இப்படி கத்துற, இது எல்லாத்துக்கும் சேர்த்து தானே காசு வாங்குற, அப்ப இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என்று கூறி அடுத்த நொடியே மீண்டும் மொச்சு, மொச்சு என்ற சத்தம்.
லைட்டை ஆன் செய்யாமலே அங்கு என்ன நடக்கிறது என்று கீர்த்திக்கு தெளிவாக புரிந்து போயிற்று. அதுவும் வாசு என்ற பெயர் அவள் காதில் விழுகையில் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவது போல இருந்தது. கீர்த்தி முகத்திலோ அத்தனை அருவருப்பு. நல்ல வேளை இந்த இடத்தில லைட்டு இல்லை இல்லாட்டி இந்த கன்றாவிய எல்லாம் பார்த்து கண் அவிஞ்சு போயிருக்கும்.
கடவுளே எப்படியாவது நாளைக்கு நடக்க போற கல்யாணத்துல இருந்து, எங்க அக்காவை மட்டும் காப்பாத்திரு. முருகா பழனி படி ஏறி வந்து க உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன் என்று மனதில் வேண்டுதலை வைத்தவளுக்கு அந்த இடத்தில் நிற்கவே ஏதோ சாக்கடை மேல் நிற்பது போல இருக்க, உடனே கீழே இறங்கி விட்டாள்.
எதிரில் இருந்தவளின் முத்த கிறக்கத்தில் இருந்தவனுக்கு ஏனோ கீர்த்தி இறங்கி செல்லும் பொழுது அவன் காதில் கேட்ட அந்த கொலுசொலி அவனது கவனத்தை கலைக்க ,
எரிச்சலுடன் ஸ்டெல்லாவிடமிருந்து விலகியவன். “ டாமிட் இங்கயும் ஆளுங்க வந்துட்டாங்க போல ”
“யார் வாசு” என்று கூறியவளோ இப்பொழுது அவனை அட்டை போல் ஒட்டி இருந்தாள்.
“ஏன் உனக்கு அந்த சத்தம் கேக்லையா. அந்த கொலுசு சத்தம் ”
ஸ்டெல்லா காதை தீட்டி கேட்கும் பொழுது கீர்த்தி அந்த இடத்தை விட்டு சென்றிருந்ததால் அவளால் அந்த சத்தத்தை கேட்க முடியவில்லை.
“இல்லையே வாசு”
” அப்படியா சரி ” என்றவன் அங்கு அவளை கசக்கி பிழிய ஆரம்பித்து விட்டான். ஒரு கட்டத்தில் அனைத்தும் முடிய, ஸ்டெல்லாவோ தன் உடைகளை சரி செய்த படியே அவன் அருகில் அமர்ந்தவள். அவன் நெஞ்சில் சாய்ந்த படி,
“ஏன் வாசு இப்படி திடீர்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க. நீங்க இப்படி கல்யாணம் பண்ணுவீங்கன்னு நான் நெனச்சு கூட பாக்கல. அப்படின்னா இன்னைக்கு தான் லாஸ்ட்டா. இனிமே என்ன நீங்க கூப்பிட மாட்டீங்களா.”
கூடலை முடித்து சிகரெட் புகையை வைத்து ஊதிக் கொண்டிருந்தவனோ அவள் கேட்டதை நினைத்து நக்கலாக சிரித்து, “ வாட் கல்யாணத்துக்கு அப்புறம் என்ன எனக்கு என்ன பெரிய கொம்பா முளைச்சிடும். இப்ப எப்படி இருக்கனோ அப்படியே தான் கல்யாணத்துக்கு அப்புறமும் இருப்பேன். சோ பி ரெடி பேப்”
அதைக் கேட்ட பிறகுதான் ஸ்டெல்லாவிற்கு உயிரே வந்தது. எங்கே தன்னை கழட்டி விட்டு விடுவானோ? தன்னுடைய வருமானம் கெட்டு விடுமோ ? என்று நினைத்து கலங்கி இருந்தவளுக்கு அவனின் வார்த்தை அத்தனை நிம்மதியாக இருந்தது.
“சரி இங்க எதுக்கு இப்ப என்ன அவசரமா வர சொன்னீங்க. யாராவது பாத்துட்டா பிரச்சனையா ஆயிடும் போகுது வாசு. ”
“அப்படியே ஏதாவது ஆகி இந்த கல்யாணம் நின்னாலும் எனக்கு சந்தோஷம் தான். ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாங்க ஸ்டெல்லா. ஒரு தம் அடிக்கவும் விடல, தண்ணி அடிக்கணும் விடல, ரூம்ல போட்டு இந்த டூ டேஸ் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயானேன். அதனால டென்ஷன குறைக்க தான் உன்ன கூப்ட்டேன். என்னோட ஸ்ட்ரஸ் பர்ஸ்டர் நீ தானே.”
“அப்படியா வாசு அப்ப அந்த மோனிஷா கிட்டயும் இததான் நீங்க சொல்லி இருக்கீங்களாம்”
“எஸ் டார்லிங் நீ என்ன வேலை பாக்குறியோ, அதையே தான் அந்த மோனிஷாவும் பாக்குறா அப்ப எனக்கு இந்த வேலை பாக்குற எல்லாருக்கும் ஒரே பேர் தான வைக்க முடியும். ”
உடனே ஸ்டெல்லாவோ சிறிது கலக்கமாக அவனை பார்த்து, “அப்படின்னா மத்தவங்களும் நானும் உங்களுக்கு ஒன்னா?,
“பின்ன வேறவேறயா? இந்த வாசுவோட கண்ணுக்கு என் கூட படுக்கிற எல்லா பெண்களும் ஒன்னு தான். இதுல நீ வேற அவ வேறன்னு பிரிச்சு பாக்குற வேலையே இங்க இல்லை. உன் வேலை முடிஞ்சது நீ கிளம்பு”.
“உன் வேலை முடிஞ்சது நீ கிளம்பு. உனக்கு சேர வேண்டிய பணம் இந்த இடத்தை விட்டு போன அடுத்த நிமிஷமே உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகும்” என்று கூறியதும் ஸ்டெல்லா சரியென்று அவனிடமிருந்து விலகியவள்.
தன்னுடைய ஹை ஃஹீல்ஸை காலில் போட்டு, ஹேண்ட் பேக்கையும் கையில் எடுத்தவள் “பாய் வாசு “என்று கூறியபடி அந்த இடத்தை விட்டு டொக் டொக் என்று நடந்து சென்றுவிட்டாள்.
வெகு நேரமாக குமரனுக்காக காத்திருந்தவளின் காதிலோ அந்த ஹை ஹீல்ஸ் சத்தம் விழுந்த அடுத்த நிமிடம், அந்த இடத்தை விட்டு மறைந்து நின்று கொண்டாள். ஆனால் அந்த மாடர்ன் யுவதியை நன்றாகவே பார்த்து விட்டாள். உடையையும் அவளையும் பார்த்த கீர்த்திக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
– தொடரும்
