“அண்ணா எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. என்ன பண்றது?” கண்ணீரை அடக்கிக் கொண்டு நதியா கேட்டிட, “சார் நல்ல மூட் ல இருக்கும்போது கேளு, கூப்பிட்டு போவார்” விஷ்ணு ஹஸ்கி வாய்ஸில் சொன்னான்.
“என்ன விச்சு.. நீ எப்போ வந்த?” குளித்து டிரெஸ்ஸிங் ரூமில் ரெடியாகி வந்த மிதுன் கேட்டிட, ” சார்.. நான் இப்போதான் வந்தேன்” என்று சமாளித்தான்.
“என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க?” ஒற்றைப் புருவம் உயர்த்தி மிதுன் வினவிட, “ரகசியம்லாம் ஒண்ணும் இல்ல சார். அன்னைக்கு வாங்கின திங்க்ஸ் கரெக்ட்டா இருக்கான்னு கேட்டுட்டு இருந்தேன்” விஷ்ணு சொல்வது பொய் என்று அவனுக்குத் தெரியும், அவன் எப்படியும் கண்டுபிடித்திடுவான் என்று விஷ்ணுவுக்கும் தெரியும். இருவருக்குமான வேவ் லென்த் அப்படி. தவிர விஷ்ணு ஒன்றும் தவறு செய்யவில்லையே மிதுனை பார்த்து பயப்படுவதற்கு.
அன்று மாலை ஏதோ ஒரு சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த நதியா தெரியாமல் கட்டிலில் காலை இடித்துக் கொண்டாள். கனமான தேக்கு கட்டிலில் இடித்ததால் பெருவிரல் நகம் உடைந்து நிறைய ரத்தம் வெளியேறியது.
வலியில் காலை ஊன்ற முடியாமல் ஊன்றி, அங்கிருந்த முதலுதவி பெட்டி எடுத்து விரலைத் துடைத்து மருந்திட்டுக் கட்டுப் போட்டாள். ‘அய்யோ கால் வேற வலிக்குதே. இவன் வேற வந்து பாடா படுத்துவானே’ உரிமை இல்லாத ஒருமையில் அவனை மனதிற்குள் திட்டினாள்.
மிதுன் அறைக்கு வந்ததும் கொஞ்ச நேரம் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். “அண்ணா இந்த மாசம் அவிநாசி பிராஞ்ச் அக்கவுண்டஸ்” என்றவாறு உள்ளே நுழைந்த தேவ், நதியாவை பார்த்ததும் அமைதியானான்.
“சொல்லு தேவ்..” லேப் டாப்பில் இருந்து கண்ணெடுத்து நிமிர்ந்து பார்த்த மிதுன், அவன் தயக்கத்தைப் புரிந்தவனாய், “நதியா கொஞ்ச நேரம் வெளில போய் இரு” என்றான்.
மெதுவாக எழுந்து வெளியே சென்றவள், பால்கனியில் அமர்ந்து ஹெட்போனில் பாடல்களைக் கேட்டவாறு அங்கிருக்கும் பூந்தோட்டத்தை ரசித்தாள்.
தேவ் வழக்கமாக மாதம் ஒருமுறை அவன் பொறுப்பில் இருக்கும் கிளைக் கணக்குகளை, அங்கு நடக்கும் விஷயங்களை, சில நேரம் ஆபீஸில், சில நேரம் வீட்டில் அண்ணனிடம் வந்து சொல்வான். அன்றும் அதற்குத்தான் வந்திருந்தான்.
இருவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். “அண்ணா பெங்களூர்ல ஜித்தன் எண்டர்பிரைசஸ் ஓனர் ரொம்ப பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காரு. புரொடக்ட்ஸ் வாங்கிட்டு ஒழுங்கா பணம் அனுப்புறதில்ல, கேட்டா நல்லா இல்லன்னு ரிட்டர்ன் பண்ணிடுறாரு. அதனால அக்கவுண்டஸ் குளோஸ் பண்ண முடியல. அவர் வேணும்னே பண்ற மாதிரி தெரியுது” தன்னால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அண்ணனிடம் ஒப்படைத்து விடுவான் தேவ்.
“நான் பார்த்துக்கிறேன். நீ ரிலாக்ஸா இரு” தம்பியின் மனதை அமைதிப்படுத்தினான் மிதுன்.
தேவ் சென்றதும் மிதுன் நதியாவைத் தேடி வெளியே வந்து பார்த்தால், அவள் பால்கனியில் வீசிய இனிமையான குளிர் காற்றுக்கு சோபாவில் படுத்து தூங்கியிருந்தாள். “நதியா, வேக்கப்..” அருகில் சென்று கத்திப் பார்த்தான், தோளைத் தட்டி எழுப்பிப் பார்த்தான். நம்மாளு தான் கும்பகர்ணி ஆச்சே.
மிதுனின் பொறுமை பறந்து போயிருக்க, அவளை சோபாவில் இருந்து தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான். இதை தேவ்வும் ரூபிணியும் பார்த்திருக்க,
“மித்து அண்ணன் வீட்டுக்குள்ளேயே லவ் பண்றதை பாரு” குறும்பாய் சிரித்தான் தேவ். அவள் ஒரு மார்க்கமாய் அவனை பார்த்திட, “அய்யோ நீ நல்லா குட்டி பூசணிக்காய் மாதிரி இருக்க. உன்னைலாம் என்னால இப்படி தூக்க முடியாது” மனைவியின் எண்ணம் தெரிந்து தேவ் கிண்டலாகப் பேச, அவள் முறைத்தாள்.
கோபமாக அறைக்குள் நுழைந்தவளை அப்படியே தூக்கிக் கொண்டவன், ” கோபப்படும் போதுதான் நீ ரொம்ப அழகா இருக்க ரூபி” நெற்றியோடு நெற்றி மோதி அவளை சமாதானம் செய்திட, அவள் வெட்கத்தில் சிரித்தாள்.
மிதுன் நதியாவை அறைக்குள் தூக்கிச் சென்றவன் நேராக பாத்ரூமிற்குச் சென்று ஷவரை திறந்து அவளை நிற்க வைக்க, குளிர்ந்த நீர் அவள் மேல் பட்டதும் திடுக்கிட்டு விழித்தாள்.
“ஸ்டுப்பிட்.. எழுப்புனா எழுந்திருக்கறதில்ல.. சீக்கிரமா குளிச்சுட்டு வா” தான் செய்தது நியாயம் என்ற தொனியில் சொல்லி சென்றான். “ரோபோ.. சைக்கோ.. லூசு.. பைத்தியம்.. டார்ச்சர்.. இந்நேரத்துக்கு பச்சை தண்ணில வந்து நனைய வச்சுட்டான்” பாதி தூக்கத்தில் எழுப்பியவனை மனதிற்குள் திட்டினாள்.
தண்ணீர் பட்டதில் அவள் கால் விரல் காயம் வின்வின்னென்று தெறித்திட, கூடலின் போது கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் சேர்த்து அவனை மனதிற்குள் வசை பாடினாள்.
காலையில் எழுந்து குளித்து வந்தவள், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து காலில் இருந்த பேண்டஜை கழற்றி துடைத்துக் கொண்டிருக்க, டிரெஸ்ஸிங் அறையில் இருந்து கிளம்பி வந்த மிதுன் அவளுடைய காலில் இருந்த காயத்தைப் பார்த்தான்.
தண்ணீர் நிறைய பட்டதால் காயத்தில் கொஞ்சம் சீழ் பிடித்திருந்தது. “என்னாச்சு?” டையை கட்டியவாறு எங்கேயே பார்வையை செலுத்திக் கேட்டான். “கட்டில்ல காலை இடிச்சுக்கிட்டேன்” அவளும் நிமிர்ந்து பார்க்காமலே காயத்திற்கு மருந்து போட்டவாறு பதில் சொன்னாள். “ஏதாவது எமர்ஜென்ஸினா விஷ்ணு கிட்ட சொல்லு. டாக்டர் வந்து பார்ப்பாங்க” தகவலாய் சொல்லிவிட்டு கிளம்பினான்.
“ரொம்பத் தான் அக்கறை. நைட் லாம் மனுஷனை இம்சை பண்ணிட்டு நல்ல பிள்ளையா பேசுறதை பாரு” பேண்டேஜை போட்டவாறு புலம்பினாள்.
காயத்தில் வலி இருந்ததால் சாப்பிட்டதும் தூங்கினாள்.வேலையாள் மதிய உணவு கொண்டு வர, எழுந்து வாங்கி வைத்தவள் சாப்பிடவில்லை. அவளுக்கு காய்ச்சல் அடித்தது, சோர்வாகவும் இருந்தது. விஷ்ணுவிற்கு போன் செய்யலாம் என்றால் டேபிளில் இருந்த போனை எடுக்கக்கூட முடியவில்லை. அப்படியே மெத்தையில் படுத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து மிதுன் ஒரு லேடி டாக்டருடன் அறைக்கு வந்தான். அவர் தூக்கத்தில் இருந்தவளை சோதனை செய்து கொண்டிருக்க, யாரோ கையை பிடித்து இழுப்பதை போல் தோன்ற, சட்டென அவர் கையை பிடித்தவள் கண் விழித்துப் பார்த்தாள்.
கையில் தெர்மா மீட்டருடன் நின்றிருந்த டாக்டர் அவளை பார்த்து சிரித்திட, அதிர்ந்து போய் எழுந்தாள். “என்ன மிதுன், உங்க மிஸஸ் ரொம்ப பயந்திருக்காங்க போல” டாக்டர் சிரித்துக் கொண்டே, அவள் காயத்தில் இருந்த பேண்டேஜைக் கழற்றி துடைக்க, “ஆஆ.. அம்மா” என்று வலியில் கத்தினாள்.
“காயம் தண்ணி பட்டு இன்பெக்ஷன் ஆகியிருக்கு. தண்ணி படாம பார்த்துக்கோங்க. அப்போதான் சீக்கிரம் சரியாகும்” டாக்டர் அவள் காயத்திற்கு மருந்து போட்டு கட்டு போட்டார்.
“காயத்துனால தான் காய்ச்சல் வந்திருக்கு. ரெஸ்ட் எடுங்க சரியாகிடும்” சொன்ன டாக்டர் காய்ச்சலுக்கு ஊசியும், வலிக்கு ஊசியும் இடுப்பில் போட்டதும், அதற்கும் கத்தினாள். “எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்காங்க, தூக்கத்தில எழுப்பினா எழுந்திருக்கவே மாட்டேங்கிறாங்க. அந்த வியாதிக்கு எதுவும் மெடிசின், ட்ரீட்மென்ட் இருக்கா டாக்டர்” சிரிக்காமல் மிதுன் கேட்ட கேள்வியில் டாக்டர் சிரித்து விட்டார்.
‘நைட் எல்லாம் தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு கிண்டல் பண்றான்’ தன்னோடு புலம்பி அவனை முறைத்தாள்.
டாக்டர் சென்ற பிறகு, நதியா அவன் முகத்தையே கோபமாய் பார்த்திருக்க, “சாப்பிட்டு டேப்லெட் போட்டு தூங்கு. நைட் தூங்கி வழியாத. காயத்துல தண்ணி படாம குளிச்சு ரெடியா இரு. நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்” மிதுன் சொல்லிட, “டாக்டரை கூப்பிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்” கேலியாய் தான் சொன்னாள்.
அவன் கிளம்பியதும், ‘ரெண்டு நாள் நீ சும்மா இருந்தாலே நான் சரியாகிடுவேன். நைட் அவன் வேலை நடக்கணும்னு டாக்டரை கூப்பிட்டு வந்துட்டான். இருக்கிற வலியில ரெண்டு ஊசி வேற. அய்யோ அம்மா உடம்பெல்லாம் வலிக்குதே’ யாருமில்லாத அறையில் தனியாய் புலம்பினாள்.
மறுநாள் காலை “ஹாய் அண்ணா, என்ன பண்றீங்க?” கேட்டவாறு மிதுன் அறைக்குள் சூர்யா வந்திட, “என்ன சார் காத்து எங்க ரூம் பக்கம் வீசுது?” கிண்டலாக கேட்டான் அண்ணன்.
“சும்மா தான் அண்ணா.. அம்மா ஏன் இன்னும் உன் மேல கோபமா இருக்காங்க?” என்று கேட்டவாறே மிதுனுக்கு அருகில் சென்றான். நதியா வெளியே செல்ல முற்பட, “அண்ணி நீங்க எங்க போறீங்க. நாங்க ஒண்ணும் ரகசியம்லாம் பேசல. நில்லுங்க” என்று அவளுக்கு அருகில் சென்றான்.
அவள் மெலிதாய் புன்னகைக்க, “அண்ணி.. நான் சூர்யா. உங்க மச்சினன், கொழுந்தன் ஏதோ சொல்வாங்களே, அதான். ஆனா நாம ஃப்ரெண்ட்ஸ் ஓகே” என்று கைக்குலுக்க அவன் கையை நீட்ட, நதியா மிதுனை திரும்பிப் பார்த்தாள்.
மிதுன் கண்ணசைக்க அவனிடம் கையை நீட்டி கைக் குலுக்கினாள். “அய்யோ ஹஸ்பன்ட் பர்மிஷன் தந்தா தான் கை கூட தருவீங்களோ? பயங்கரமான காதலா இருக்கே. அதுவும் கண்ணாலேயே பேசிக்கிறீங்க?” அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, ‘காதலாம் காதல் மண்ணாங்கட்டி. உங்க அண்ணன் எல்லாருக்கும் கண்ணால தானே ஆர்டர் போடுறாரு. எல்லாரையுமா லவ் பண்றாரு’ அவள் பாட்டுக்கு யோசனையில் இருந்தாள்.
“அண்ணா.. ப்ராஜெக்ட் காக கொஞ்சம் எக்யூப்மெண்ட்ஸ் வாங்கணும், ஒரு 50k தாங்க” விஷயத்திற்கு வந்தான் சூர்யா.
“உனக்கு மந்த்லி வர்ற அமவுண்ட் கிரெடிட் ஆகியிருக்குமே”
“அது லாஸ்ட் வீக், ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போயிட்டேன். செலவாகிடுச்சு”
“நான் விஷ்ணு கிட்ட சொல்லி பணம் போட சொல்றேன். பணம் தேவைப்பட்டா தான் அண்ணன் ஞாபகம் வருது” அம்மா கோபப்படும் போது தம்பிகள் தனக்காக பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் மிதுன் கேட்டிட,
“மித்து அண்ணா.. அப்படிலாம் இல்ல. நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினா அம்மாவோட கோபம் இன்னும் அதிகமாத்தான் ஆகும். அதனால தான் அமைதியா இருந்தோம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல. அஃப்கோர்ஸ் நான் லவ் மேரேஜ்க்கு எதிரியும் இல்ல. உங்க மேரேஜ் பார்க்க முடியலைங்கிற சின்ன வருத்தம் தான். டோண்ட் மிஸ்டேக்கேன் மீ ப்ரோ” அண்ணனை ஆதுரமாக அணைத்துக் கொண்டான் சூர்யா.
‘என்ன ஹிந்தி சீரியல்ல வர்ற சீன்லாம் காட்டுறாங்க’ தனக்குள் சிரித்துக் கொண்டாள் நதியா.
தம்பிகள் பேசியதால் வீட்டில் மிதுன் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது. முகத்தில் மென் புன்னகை தவழ வலம் வந்தான். ‘நம்ம சார் நல்ல மூட்ல இருக்கார் போல’ என்று நினைத்த நதியா, “சார்.. என்னோட அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. கூப்பிட்டு போறீங்களா?” ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் கேட்டாள்.
மடிக் கணினியில் கண்ணைப் பதித்திருந்தவன் நிமிர்ந்து பாராமலே “சரி போய் கிளம்பிட்டு வா” என்றதும் குளித்து வேகமாக அவளுக்கு பிடித்த வெள்ளை நிற சுடிதாரை அணிந்து தலைசீவி கிளம்பி அவன் முன்பு வந்து நின்றாள்.
“குட்.. 10 மினிட்ஸ்குள்ள கிளம்பிட்ட. நைட் மட்டும் குளிச்சுட்டு பெட்டுக்கு வர ஹால்ப் அன் ஹவர் ஆக்குற. அப்போ மேடமுக்கு இங்க ஒர்க் பண்ற ஆசையே இல்ல போல” அவன் இறுக்கமான குரலில் கேட்டிட, அதிர்ச்சியில் முகம் சுருங்கினாள்.
நமக்குள்ள இருக்கிறது பிசினஸ் டீல். உன் அம்மாவுக்கு ஒரு ஆபரேஷன் முடிஞ்சது. இன்னொரு ஆபரேஷன் கூட நான் தான் நிறுத்தி வச்சிருக்கேன். ஏன்னா நான் கேட்டது எனக்கு இன்னும் கிடைக்கலையே.
எனக்கு தேவைப்பட்டதை நீ கொடுத்தா தான, உனக்கு தேவைப்பட்டதை நான் தர முடியும். ஆம் ஐ கரெக்ட்? உன் ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆகட்டும், உன் அம்மாவை பார்க்க போகலாம். இங்க நீ சரியா நடந்துக்கிட்டா தான் அங்க உன்னோட அம்மாவுக்கு அடுத்த ஆபரேஷன் நடக்கும்.
நான் யார்கிட்டேயும் இவ்வளவு பொறுமையா பிசினஸ் பேசுனதில்ல. உன்கிட்ட பேச வேண்டிய நிலைமைல இருக்கேன்” மிதுன் பேசப் பேச நதியா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
❤️🔥மோகம் தீர்ப்பாள்❤️🔥
