அத்தியாயம் 7

கௌரி கிட்சனில் பர பரப்பாக வேலை செய்தார். பொதுவாக பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இரண்டு கைகள் தான். ஆனால் இந்த இல்லத்தரசிகளுக்கோ உடம்பு முழுவதும் கைகள் தான். 

 

ஹேய் அந்த பாயாசத்தை பாரு டி என்றார் கௌரி. 

 

அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து கொண்டு கிட்சனில் தாய் அருகில் நின்ற நம் அகிலாவோ உச்ச கட்ட கோபத்தில் இருந்தாள். வாயை இறுக்கி மூடி இருந்தாள் . 

 

என்ன தான் கோபத்தில் இருந்தாலும் தன் கோபம் தான் பெருசு என்று அகிலா வாய் திறந்தால் கண்டிப்பாக கௌரி அகிலாவின் கன்னங்களை பழுக்க வைப்பார் என்பது உண்மை. 

 

அந்த பாயசத்தை பாரு என்றதும் ” கோபத்தில் கையில் உள்ள சில்வர் கிண்ணத்தை சத்தம் கேட்பது போல் டொம்மென்று வைத்தாள் நம் அகிலா. 

 

கௌரியின் கண்கள் ரத்த சிவப்பாக மாறியது. அகிலாவும் பதிலுக்கு கண்கள் சிவக்கும் வரை தாயை மொறைத்தாள். வாய் திறந்தால் தானே தாங்கள் என் மீது கை வைப்பீர்கள். வாய் திறக்காமல் என் கோபத்தை காட்டுவேன் என்பது போல் தாயை சரிக்கு சமமாக மொறைத்தாள். 

 

ஒரு நிமிடம் சிறிய மகளை உறுத்து விழித்த கௌரி ” போ போய் அக்காவை ரெடி பண்ணு ” என்றார். 

 

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பது போல் கோபமாக அக்காவின் அறைக்குள் சென்றாள் அகிலா. 

 

அபிராமி எப்பொழுதும் பள்ளிக்கு கிளம்பும் போது எப்படி தாயாராகி இருப்பாளோ அது போல் தயாராகி இருந்தாள். 

 

தாய் தந்தை கேட்கும் பொழுது திருமணத்திற்கு சம்மதம் சொன்னது கூட பெற்றவர்களுக்காக தான். 

 

ஒரு வயது வந்த பெண்ணை தாய் தகப்பன் எவளோ நாள் வீட்டில் வைத்து இருக்க முடியும். தன் திருமணம் முடிந்து விட்டால் தாய் தந்தை இருவரும் நிம்மதி அடைவார்கள். தனக்கு பின் இருக்கும் தங்கைக்கும் நல் முறையில் திருமணம் நடக்கும் என்பதற்காகவே இத்திருமணத்திற்கு ஒப்பு கொண்டாள். 

 

வாய் வழியாக ஒப்பு கொண்டாலும் அவளின் மனது அதை முழுமையாக ஏற்று கொள்ளவில்லை. இம்முறையும் திருமணம் நிச்சயம் நின்று விடும் என்று தோன்றியது நம் நாயகிக்கு. 

 

பலத்த யோசனையில் உழன்று கொண்டிருந்தாள் அபிராமி. 

 

அக்கா என்று சிணுங்கி கொண்டு வந்தாள் அகிலா. 

சொல்லு அகி ” வந்துட்டாங்களா அவங்க? ” என்று கேட்டாள். 

உனக்கு நிஜமா ஓகே வா அக்கா? 

 

எதுக்கு டி? 

 

தெரியாத மாதிரி கேட்காத? அவருக்கு ஒரு குழந்தை இருக்குக்கா என்றாள் அகி. 

 

ம்ம் ஓகே தான் அகி என்றாள் அபிராமி. 

 

பொய் சொல்லாத. உனக்கு விருப்பம் இல்லை. உன் முகமே காட்டி தருது என்றாள் அகிலா. 

 

லூசு என்றவள் தன் தங்கையின் தலையில் வலிக்காமல் கொட்டினாள். 

 

சீரியஸான நேரத்துல சிரிக்காத. அப்பறம் செம்ம கடுப்பாயிருவேன் அக்கா.  

 

என் முகம் அப்படி என்ன காட்டி தருது உனக்கு ? தங்கையின் கன்னங்களை கிள்ளினாள் அபிராமி. 

 

நான் வரும் போது நீ எதோ யோசிச்சிட்டிருந்த! உன் நெற்றி,  புருவம் கூட சுருங்கி இருந்துச்சு என்று பதில் தந்தாள். 

 

நம் தங்கை நம்முடைய முகத்தை வைத்து கண்டுபுடிக்கிறாளா? என்று நினைத்தாள் அபிராமி. 

 

ப்ளீஸ் அக்கா புரிஞ்சிக்கோ . நீ கல்யாணம் பண்றது எனக்கு பிடிக்காமல் இல்லை. ஆனால், நீ இவரை மட்டும் கல்யாணம் பண்ண வேணாம் அக்கா. கெஞ்சி கேட்குறேன் உன்கிட்டே என்று தன் மனதில் இருக்கும் விஷயத்தை கூறி அழுதாள் அகிலா. 

 

தங்கையின் அழுத முகம் அபிராமியை வதைத்தது. தங்கையின் கை பிடித்து கட்டிலில் அமர வைத்தாள். ” அகி அக்கா முழு மனசா தான்மா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன் ” என்று தங்கையின் அழுகையை நிறுத்த எண்ணி பொய் கூறினாள். 

 

சரிக்கா. நீ உன் முடிவுல தெளிவா இருக்க. நான் என்ன சொல்ல முடியும் என்று கண்களை அழுந்த துடைத்தாள் . 

 

திடீரென்று நியாபகம் வந்த கௌரி, அபிராமியின் அறைக்கு ஓடி வந்தார். “ஹேய் அகி  வெளியே வா ” என்றார். 

 

ஏன் மா? அபிராமி சத்தம் தந்தாள். 

 

அவள் உன்னோட மனச கலச்சிருவா என்றார் கௌரி. 

 

சட்டென்று எழுந்த அகி ” ஆமா அது அஞ்சு புள்ளி கோலம் கலச்சி விடுறதுக்கு ” வழியை விட்டு தள்ளி நில்லுங்க என்று தாயை மொறைத்து சென்று ஹாலில் போடப்பட்ட சோபாவில் அமர்ந்தாள். 

 

வாசலில் கார் வந்த சத்தம் கேட்டது. “எங்கயும் நிம்மதி இல்லை ” என்று காட்டதோடு கூறி விட்டு ” பஜ்ஜி சொஜ்ஜி எடுத்துட்டு வா அகிலா அப்படினு என்னைய கூப்பிட்டிங்க அப்பறம் இருக்கு உங்களுக்கு ” என்று கடுப்போடு கூறிவிட்டு தன் அறைக்கு சென்று அடைந்து விட்டாள். 

 

நீ இருந்தா தான் டி எனக்கு பயமா இருக்கும் என்று முனு முனுத்து சென்ற கௌரி வாய் எல்லாம் பல்லாகவும் முகம் முழுதும் தௌஸண்ட் வாட்ஸ் பல்பு வெளிச்சம் பரவ புன்னகை முகமாக ” என்னங்க அவங்க வந்துட்டாங்க ” என்று கணவரை அழைத்து கொண்டு வாயிலில் போய் நின்று வந்தவர்களை வரவேற்று உபசரித்தார். 

 

****

திருமணம் வேண்டாம் என்று சொன்னானே இப்பொழுது எப்படி வந்தான் நம் நாயகன்? 

 

திருமணம் வேண்டாம் என்று சொன்னால் விட்டு விடுவாரா! பாரிஜாதம். 

 

அவன் பெற்ற பச்சிளங்குழந்தையை அவனின் கைகளில் கொடுத்தார். இங்க பாருப்பா ” நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான், உன் அப்பா ரெண்டு பேரும் செத்துறோம் என்று கண் கலங்க கூறினார். 

 

ஏற்கனவே மனைவியை இழந்து விட்டான். இப்பொழுது தாயும் தந்தையும் இல்லை என்றால் அவன் மட்டும் எப்படி உயிர் வாழ்வான் . அதோடு அவன் பெற்ற செல்வம் என்று கையில் உள்ள தன் பொக்கிஷத்தை பார்த்தான் அஸ்வந்த். 

 

நம்ப பையன நல்லா பார்த்துக்கோ டா அஸ்வந்த். ஆசைப்பட்டு பெத்தேன். ஆனால், அவனோட என்னால வாழ முடியல. நம்ப எப்படி எல்லாம் அவனை வளர்க்கணும்னு நினைச்சோமோ அது மாதிரி நீ அவனை வளர்த்துரு. நான் இல்லைனு நீ எப்பவும் ஃபீல் பண்ண கூடாது டா அஸ்வந்த் என்ற சுகன்யாவின் வார்த்தைகள் அஸ்வந்த்தின் காதுகளில் ரீங்காரம் இட்டன. 

 

சுகன்யாவை நினைக்கும் போதெல்லாம் அவனின் உள்ளம் ஒவ்வொரு துகள்களாக உடைகிறது. 

 

சரி கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் அஸ்வந்த்.

 

பெற்றோர்கள் இருவரும் நிம்மதி மூச்சு விட்டனர். இந்த ஒரு வார்த்தைக்காக மருத்துவமனை வரை செல்ல விட்டு விட்டானே. அது சரி! மருத்துவமனை செல்லும் நிலை வரவில்லை என்றால் நம் நாயகன் நிச்சயமாக அறைக்குள் அடைந்தே தான் வாழ்நாளை கழித்திருப்பான் என்பது சத்தியமான உண்மை. 

 

என் பையனுக்காகவோ இல்லை எனக்காகவோ இல்லை. உங்களுக்காக மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னேன். ஆனால் என் விருப்பம் இல்லாமல் அவள் என் குழந்தையை தொட கூடாது. அது மாதிரி என் ரூம்குள்ளயும் அவள் வர கூடாது என்றான் முடிவாக. 

 

டேய் இது உனக்கே ஓவரா இல்லை என்று சங்கர் மனதில் நினைத்தார். அவரால் சொல்ல தான் முடியவில்லை. 

 

சரி ப்பா. அவள் நீ சொன்ன மாதிரி நடந்துப்பா என்றார் பாரிஜாதம். 

 

சங்கர் மனைவியை வெறுமை பார்வை பார்த்தார். 

 

பாரிஜாதம் ” தன் கணவரை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தார்”. 

 

****

 

இதோ இப்பொழுது அபிராமி தவிப்போடு அமர்ந்திருந்தாள். 

அனைவரையும்  அமர சொன்னார் கல்யாண். 

 

நம் நாயகனை பெற்றவர்களுக்கும் நாயகியை பெற்றவர்களுக்கும் தான் முகத்தில் எவ்வளவு சந்தோசம். அவர்களின் சந்தோசத்தை வார்த்தையால் விவரிக்க இயலவில்லை. 

 

தன் கைக்குள் பேரனை அடக்கிய பாரிஜாதத்தின் பற்கள் வெண்ணிறமாக இருந்தது. 

 

கௌரி கிட்சனில் இருந்து டீ எடுத்து வந்தார். 

 

பாரிஜாதம், சங்கர் மற்றும் நம் நாயகன் மூவருக்கும் கொடுத்தார். 

 

அஸ்வந்த்தின் முகம் சோகத்தால் நிரம்பி இருந்தது. நம் மனைவிக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் வந்தது. குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான். 

 

“டீ எடுத்துக்கோங்க மாப்பிள்ளை ” என்ற சத்தத்தில் நிமிர்ந்தான் அஸ்வந்த். 

 

சிரித்த வதனமாக நின்று இருந்தார் கௌரி. 

 

எதையோ யோசித்த வண்ணம் டீயை எடுத்தான். 

 

பொண்ணை அழைச்சிட்டு வாங்க அண்ணி என்றார் பாரிஜாதம். 

 

அவரின் உரிமையான வார்த்தையில் நெகிழ்ந்து போன கௌரி ” இதோ போறேன் என்று அபிராமியை அழைத்து வந்தார்”. 

 

டீயை பருகிய அஸ்வந்த் அபிராமியை பார்த்தான். அவனின் நெற்றி சுருங்கி இருந்தது. தொண்டை குழியில் இன்ச் இன்ச்சாக டீயை இறக்கினான். 

 

அபிராமி பொதுவாக அனைவர் முன்னும் வணக்கம் வைத்தாள். 

 

” உட்காரு மா” அஸ்வந்த் அமர்ந்திருந்த சோபாவில் அமர சொன்னார் பாரிஜாதம். 

 

அபிராமியும் அமர்ந்தாள். பாரிஜாதம் எழுந்து வந்து தன் பேரனை அபிராமியின் கைகளில் கொடுக்க, அபிராமி சிரித்த முகமாக அவனை தன் கையில் வாங்கினாள். 

 

என்ன சொல்லி அழைத்து வந்தோம். ஆனால் இவர் இப்படி செய்து விட்டாரே என்று தன் குழந்தையை அபிராமியின் கைகளில் கொடுத்ததும் அஸ்வந்த் கோபத்தில் சிவந்தான். 

 

வாங்க அண்ணி என்று கௌரியை உரிமையாக அழைக்க,  கௌரியும் பாரிஜாதமும் அபிராமியின் அறைக்குள் சென்று ஏதோ தீவிரமாக பேசினார். 

 

மூன்று மாத குழந்தை தான் அது. அவள் கைகளில் வந்ததும் எவ்வளவு அழகாக சிரிக்கிறான் குழந்தை. அவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்து விட்டதோ? 

 

அச்சோ தங்கம்  வெல்லக்கட்டி மாதிரி அழகா இருக்குறீங்களே! என்று அபிராமி தன் சிப்பி வாயை திறந்து குழந்தையை கொஞ்ச கல்யாணும் சங்கரும் புண் முறுவல் கொண்டனர். 

 

ஆனால், நம் நாயகனோ காட்டமான முகத்துடன் நாயகியை பார்த்து சிந்தித்தான். 

 

அழகா தான் இருக்குறாள். ஆனால் ஏன் நம்பள சூஸ் பண்ணனும் என்று யோசித்தான். 

 

உண்மையாவே இவளுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தானா? என்று தீவிரமாக மூளையை குடைந்தான். 

 

கௌரியும் பாரிஜாதமும் அறையை விட்டு வெளியே வந்தனர். 

 

பாரிஜாதம்” கொடு மா” குழந்தையை என்றார். 

 

கொஞ்சி கொண்டிருந்த குழந்தையை தர மனம் இல்லாமல் கொடுத்தாள் அபிராமி. 

 

ஏங்க இந்த மாசமே கல்யாணத்தை முடிச்சிரலாம் என்றார் பாரிஜாதம். 

 

சங்கரும் ஆமோதிப்பாய் தலை அசைத்தார். 

 

“நம் நாயகன் எதற்கு அவசரம்” என்பது போல் விழித்து தாயையும் தந்தையையும் பார்த்தான். 

 

கௌரி வந்தவர்களுக்கு விருந்தை பரிமாறி, வயிற்றை நிரப்பி தான் அனுப்பி வைத்தார். 

 

தொடரும். 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
885 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page