அத்தியாயம் 9
கையில் இருந்த சிகரெட் முழுதாக கரையும் முன்பே வாசல் கதவை யாரோ திறப்பது போன்ற ஒலி கேட்கவும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தான் தீரன்..!!
ஒருவேளை அம்மாவாக இருக்குமோ என்று பயந்து கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு நசுக்கி விட்டு அவன் நிமிர்ந்து பார்க்கும் பொழுது தான் தெரிந்தது அங்கே நின்று கொண்டிருந்தது அவனுடைய அன்னை அல்ல அகமித்ரா என்று..!!
“இவளை நினைச்சாலே டென்ஷன் ஆவுது.. இவ எதுக்கு இப்போ என் கண்ணு முன்னாடி வந்து நிற்கிறா?? இருக்கிற கோபத்துக்கு இவளை…..”, என்று மனதிற்குள் மட்டுமே அவனால் கடிந்து கொள்ள முடிந்தது ஆனால் நேருக்கு நேராக அவளை பார்க்கும் பொழுது அவனுடைய இதழ்களிலிருந்து வார்த்தை முத்துக்கள் ஒன்று கூட உதிர வில்லை..
அவனைப் பார்த்ததும் தலை குனிந்த படி நேராக படுக்கைக்கு சென்று உறங்கி விடுவாள் அல்லது ஏதாவது தேவையான பொருளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விடுவாள், வேகமாக தன் முகத்தை கூட பார்க்காமல் என்று தான் அவன் நினைத்திருந்தான்.
ஆனால், வந்தவள்.. வழக்கம்போல் சங்கடமாக அவனைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து போவதற்கு மாறாக நேருக்கு நேராக அவனை ஆழமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே நெருங்கி வந்தாள்..
அன்ன நடை போட்டு அவள் மெதுவாக நடந்து வருகையில்.. சிக்கென்றிருந்த அந்த சுடிதார் , அவளின் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக எடுத்துக்காட்டியது..!!
சிற்பியின் கை வண்ணத்தால் உருவான அழகிய சிலை போல அவனை நோக்கி வந்து கொண்டிருந்த மித்ராவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
எப்பவுமே நம்மளை பார்த்தால் பயந்து ஓடி விடுவாள்.. இதென்ன அதிசயமாக இப்படி நேருக்கு நேரா தைரியமா பார்த்துக்கிட்டு நெருங்கி வராளே ?? அதுவும் கொஞ்சம் கூட கண்ணை அங்குட்டும் இங்குட்டும் அசைக்காமல் என் கண்ணையே பார்த்தபடி வருகிறாளே..எப்படி?? ஏன்?? எதுக்காக??
இப்படி பல கேள்விகள் அவனுடைய மனதிற்குள் எழும்பியது ஆனால் எதற்கும் அவனுக்கு பதில் தெரியவில்லை அதற்கெல்லாம் பதில் கூறுவது போல அவன் முன் வந்து நின்ற மித்ரா வாய் திறந்து பேச தொடங்கினாள்..
அழகிய செர்ரிப்பழ இதழுக்குள் மறைந்திருந்த வெண்ணிற முத்து பற்கள் தெரிய வாய் திறந்து மெல்ல எதையோ கூற வந்தாள்..
அவள் என்ன கூற வந்தாளோ தெரியவில்லை அதை கவனிப்பதற்கு அவனுடைய மனம் மூளை எல்லாம் முன் வந்ததோ இல்லையோ ஆனால் அவளுடைய இதழின் அழகை ரசிப்பதற்கு மட்டும் அவனுடைய மனம் மண்டியிட்டு காத்திருந்தது..💓💓
ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்..
ஆமாம் அந்த கண்களில் தெரிந்தது எல்லாம் ஆச்சரியமும் அதிசயமும் மட்டுமே..!!
“என்ன?? ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போல பார்க்கிறாளே என்னவா இருக்கும்?? பக்கத்தில் வந்து இப்படி நின்னுக்கிட்டு எதுவுமே பேசாமல் இருக்காளே.. ஏதோ பேச வரான்னு தெரியுது ஆனா என்னனு தெரியல.. சீக்கிரமா பேசி தொலையேண்டி இந்த சுடிதார்ல பார்க்கும்போது உன்னுடைய அழகு சும்மா அள்ளுது..!!
இவ்வளவு நேரமா பக்கத்தில் வந்து இப்படி பேசாம இருக்கியே.. இத்தனை நாட்களில், முதல் முறையாக அவளே என்னை நெருங்கி வந்திருக்கிறாள் அதுவும் இப்படி ஒரு ஆச்சரிய பார்வையோடு!!
பக்கத்தில் இவ இருக்க இருக்க என்னுடைய எண்ணங்கள் தறிகெட்டு போகுதே ஆண்டவா… கட்டுப்படுத்திக்கணும் தீரா கட்டுப்படுத்திக்கோ..”, என்று தனக்கு தானே கடிவாளம் போட பார்த்தான்.
துப்பட்டா விலகிய அவளுடைய அழகை காணும் பொழுது அவனுக்கு கைகள் பரபரத்தது கண்களும் அலைபாய்ந்தது.. உதடுகள் உணர்ச்சிவசத்தால் துடித்தது..!!
மேலும் அவளை நெருங்கி அவளின் இடையை அவன் தொட முயல..
அதற்குள்..
” ரொம்ப தேங்க்ஸ்..”, என்ற முத்துக்கள் அவளுடைய இதழ்களிலிருந்து உதிர்ந்தது..
“பே..”, என்று பார்த்து கொண்டிருந்தான் அவன்.
“என்ன??”
“ நன்றி என்று சொன்னேன்.. உங்களுக்கு தான்.. ரொம்ப நன்றி”
“ நீ சொல்றது நன்றின்னு எனக்கு நல்லாவே தெரியுது ஆனா எதுக்காக சொல்ற??”
” எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்”, என்று கூறியவள் அவனை மேலும் கீழுமாக விசித்திர பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
‘என்னாச்சு இவளுக்கு ??இவ பாட்டுக்கு வந்தா நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னா.. அப்புறம் மேலேயும் கீழேயும் ஒரு பார்வை பார்த்துட்டு அப்படியே போக பாக்குறா??’, என்று எண்ணியவன்.
அடுத்த கணமே அங்கிருந்து போக இருந்தவளின் கையை இறுகப்பற்றி அவளைத் தடுத்து நிப்பாட்டியவன், வேகமாக அவளை தன்னருகே இழுத்து வைத்துக்கொண்டான்..!!
முரசு கொட்டுவது போல அவளுடைய இதயத்துடிப்பு இப்பொழுது அவள் காதருகே கேட்கத் தொடங்கியது..!!
படுபாவி பயல், கொஞ்ச நேரத்துக்காவது நல்லவனா இருக்கிறானா பாரு??!!
இப்பதான் நன்றி சொன்னேன் அதுக்குள்ள இப்படி பண்றானே?? அப்பப்போ பயப்படுற மாதிரி இப்படி ஏதாவது ஒன்னு செஞ்சு வச்சுடுறான் அதுக்கப்புறம் நமக்கு ஏற்படுற படபடப்பு குறையறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.. இதெல்லாம் இவனுக்கு ஏதாவது புரியுதா?? இவன் பாட்டுக்கு முரட்டுத்தனமா நடந்துக்கிறான்.. பாதிப்பு நமக்குத்தானே?? என்று மனதிற்குள் அவனை கருவி கொண்டே அவனுடைய கரு விழிகளை உற்று நோக்கினாள்.
“ நீ பாட்டுக்கு வந்த.. பாத்த.. பேசின.. போய்கிட்டே இருக்க என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல??”
“ நான் ஒன்னும் நினைக்கலையே”
” அதான.. ஏதாவது நினைச்சிருந்தா பரவால்ல எந்த பிரச்சினையும் இருந்திருக்காது.. நீதான் எதுவுமே நினைக்க மாட்டியே சரியான ஜடம் ஆச்சே..”, என்றான் பற்களை கடித்தபடி..
உடனே கண்களில் நீர் கோர்க்க தலை குனிந்து நின்றாள் அவள்.
அதை கண்டதும் அவனுக்கு மனம் துணக்குற்றது மீண்டும் அவளை காயப்படுத்தி விட்டோமே என்று மனம் பதறியது ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை அவனுக்கு..
இப்பொழுது மன வருத்தத்துடன் நின்று கொண்டிருக்கும் அவளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது..!!
கண்ணீரை துடைப்பதற்கு வலிய கரங்கள் மட்டுமே போதும் என்பதை அந்த வலியவன் அறியவில்லை போல..
கண்ணீர் துடைத்து ஆறுதல் கூறுவதாக எண்ணிக்கொண்டு அவளை வேகமாக கட்டி அணைத்து ஆவேசத்தோடு இதழ் முத்தம் பதித்தான்..!!
முரட்டுத்தனமான அவனுடைய செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவள் ஒரு நிமிடமே பொறுத்திருந்தாள்.. அதற்குப் பிறகு அவனை பிடித்து வேகமாக தள்ளிவிட்டு விட்டு ஒரு அடி பின்னாடி சென்று விட்டாள் அவள்..!!
காயப்பட்ட தன் இதழ்களை துடைத்து கொண்டவள் கண்ணீருடன் அவனைப் பார்த்து கோபமாக பேசத் தொடங்கினாள்..
“ என்ன மனுஷன் நீங்க ??கொஞ்சம் கூட அடுத்தவங்களோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா ??எப்பவும் உங்களுக்கு உங்க சந்தோஷம் மட்டும்தான் முக்கியமா ??அடுத்தவங்க என்ன சூழ்நிலையில் இருக்காங்க என்ன மனநிலையில இருக்காங்க இதைப்பற்றி யோசிக்கவே மாட்டீங்களா ??உங்களுக்கு உங்க சந்தோசம் மட்டும் தான் முக்கியமா?? அவ்வளவு சுயநலகாரரா நீங்க??”
” ஏய்.. என்னடி விட்டா இஷ்டத்துக்கு உன் பாட்டுக்கு பேசிக்கிட்டே போற?? கன்னத்தில் ஒரு அறை விட்டேன்னு வை அப்புறம் தெரியும் சேதி.. ஏதோ அழுதுட்டு நின்னுட்டிருக்கியே போனால் போகுது பாவம் என்று சமாதானப்படுத்துவதற்காக கிட்ட வந்தா ரொம்பத்தான் ஓவரா பண்ற.. என்னமோ இந்த ஊர் உலகத்திலேயே இல்லாத பேரழகி அப்படின்னு நினைப்பா உனக்கு??
நீ ஒன்னும் அவ்ளோ அழகெல்லாம் கிடையாது.. ரொம்பவே சுமார் தான் இதுக்கே இந்த ஆட்டம் போடுற இன்னும் நீ ரொம்ப அழகா கலரா இருந்துட்டா அவ்வளவுதான்.. உன்னை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது.. அம்மாடியியோவ், இப்பவே இந்த ஆட்டம் போடுறியே.. என்னவோ உன்னை கட்டி பிடிச்சு உன் கூட நான் குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்க போற மாதிரி ஃபீல் பண்ற??
உன் கூட நான் தொடர்ந்து ஒரு அரை மணி நேரமாவது சந்தோஷமா இருக்க முடியுதா? அதுக்கு முதல்ல நீ எனக்கு ஒத்துழைக்கிறியா ??காசு மட்டும் பத்து லட்சம் வாங்குனியே ஞாபகம் இருக்கா ?? உதவின்னு வரும்போது மட்டும் என்னுடைய நினைப்பு வந்துச்சு.. அப்ப நான் உதவினேன் , உன் கண்ணுக்கு நல்லவனா தெரிஞ்சேன், அந்த பணத்துக்கு ஈடா நான் ஒரு விஷயத்தை கேட்டு டீல் பேசும்போது அப்போதைக்கு சரி சரின்னு தலையாட்டிட்டு இப்போ வந்து சிணுங்குற??
இதெல்லாம் என்னடி நியாயம்?? என்னவோ நான் குற்றவாளி மாதிரி எப்ப பார்த்தாலும் கண்ணீர் வடித்த படி சோகமா ஒரு பார்வை பார்க்கிற?? நீ பண்ற வேலையெல்லாம் பார்த்தா என்னவோ நான் தான் பெரிய கொடுமைக்காரன் நீ ரொம்ப அமைதியான நல்ல பொண்ணு அப்படிங்கற மாதிரி இல்ல நடந்துக்குற.. ??
தெரியாம தான் கேட்கிறேன் உன் கூட சந்தோஷமா நான் வாழ்ந்தா மட்டும் நீ எனக்கு பிள்ளை பெத்து கொடுத்துடுவியா என்ன?? முதல்ல உனக்கு அதுக்கான தகுதி இருக்காடி?? உனக்கு தான் அந்த தகுதியே கிடையாதே..
தெரிஞ்சு தானே எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்ட?? இப்பேற்பட்ட குறையை வச்சுக்கிட்டு எப்படி உன்னால தைரியமா என்கிட்ட எதிர்த்து பேச முடியுது.. குழந்தையை பெத்துக்க கூட உனக்கு இல்லை நீ எல்லாம் என்கிட்ட வாய் பேசுறியா?? இந்த லட்சணத்தில் நான் கை பிடிச்சு இழுத்தா உனக்கு கோவம் வருது சண்டை போடுற.. பொம்பளைங்களுக்கு அழகே குழந்தையை பெற்று தாய்மை அடைவது தான்.. அந்த அடிப்படை தகுதியே உனக்கு இல்லாத போது நீ எல்லாம் என்னை பார்த்து கைநீட்டி பேசவே கூடாது.. நான் என்ன சொல்றேனோ அத கேட்டுட்டு கம்முனு கிடக்கணும்..”, கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை சரமாறியாக அள்ளி வீசிவிட்டான் தீரன்..!!
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதயத்தில் விஷக்கத்தியை வேகமாக இறக்கியது போல இருந்தது..!!
தெரிந்து தான் திருமணம் செய்து கொண்டான்..ஆனால் ஒரு நாளும் இந்த விஷயத்தை சொல்லிக்காட்டி அவளை காயப்படுத்துவான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை இப்பொழுது அவன் குத்தி காட்டுவது போல இந்த விஷயத்தை பற்றி பேசவும் அவளுக்கு மனம் வெகுவாக வலித்தது..!!
அடிபட்ட வேதனை அவளுடைய கண்களில் தென்பட.. அதைப் பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் உண்மை புரிந்தது.. தான்,அவளை பார்த்து என்னவெல்லாம் பேசிவிட்டோம் கோபத்தில் என்று..!!
எப்பொழுதும் அடுத்தவருடைய மைனஸ் தான் நமக்கு பிளஸ் ஆக மாறும்..
அதேபோல அடுத்தவரின் வீக்னஸ் என்னவென்று தெரிந்து வைத்துக் கொண்டு தொழிலில் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களை வீழ்த்தி விடுவான் தீரன்..
இது வழக்கம் தான், தொழில் ரீதியாக பார்க்கும் பொழுது இது ஓகே தான்..!!
ஆனால் இப்பொழுது அதே யுக்தியை தன் சொந்த வாழ்விலும் அவன் கையாண்டது தான் மிகப்பெரிய தவறாகி போய் விட்டது..!!
எந்த ஒரு சூழ்நிலையிலும் அவளுடைய இந்த குறையை வைத்து அவளை மட்டம் தட்ட வேண்டும் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை..
எப்பேர்பட்ட விஷயத்தை இப்படி சொல்லி விட்டோமே??!!
அவளுக்கு எவ்வளவு மனம் வேதனை அடைந்ததோ தெரியவில்லையே.. இப்படி கண்ணீர் வடிக்கிறாள்??!!
இப்போது என்ன செய்வது?? கோபத்தில் என்ன பேசுறதுன்னு தெரியாம இப்படித்தான் பேசுவியா? என்னடா பண்ணப் போற தீரா?? என்று தனக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டான் வேதனையோடு.
அவன் கேட்ட கேள்வியில் அவள் எந்த அளவுக்கு காயப்பட்டாளோ அதே அளவுக்கு அவனுக்கும் வேதனை நிரம்பியிருந்தது மனம் முழுக்க..
அவன் பேசிய பேச்சைக் கேட்டு உறைந்து போய் சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவள் பிறகு சுய நினைவுக்கு வந்தவளாய் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..
“மித்… “, அவளை அழைப்பதற்காக அவன் வாயெடுக்கும் முன்னமே அவள் அந்த அறையை விட்டு வெளியே சென்றிருந்தாள்..!!
– தொடரும்..
