திருக்குறள்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1283
அத்யாயம் -13
இவள் இங்கே அவனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டிருக்க அவனோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தான் . இந்த புதுப் பழக்கம் வந்தனாவுக்கே
புதுசு தான் . எல்லாம் காதல் செய்யும் மாயம் தான் இல்லையா?
” ஒரு வேளை உங்க வீட்டுல ஓகே சொன்னா.,
எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு வந்தனா. ஒன்னு ஜோசியம் பார்த்து கல்யாணம் செய்யறது எனக்கு இஷ்டம் இல்ல . பார்த்து தான் ஆகனுன்னு நீங்க நினைச்சா அது உங்க விருப்பம் . அதே மாதிரி இன்னொரு விஷயமும் இருக்கு வந்தனா …”
சில நொடிகள் தன்னை சமன் படுத்திக்கொண்டு சொன்னான்.
“கீர்த்தியோட லைப் என்ன ஆகப் போகுதுன்னு தெரிலை. அவளுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும். அவளை புரிஞ்சுக்கிட்டவனா, அவளை மனசு நோகடிக்காதவனா பார்த்து தான் அவளுக்கு செட்டில் பண்ணனும். எப்ப நான் டாக்டருக்கு படிக்க முடியாதுன்னு சொன்னேனோ அப்பவே நான் ஒரு அனாதை மாதிரி ஆகிட்டேன். தாய்க்கு அப்புறம் தாரம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு எல்லாமே என்னோட கீர்த்தி தான். கல்யாணத்துக்கு அப்புறம் எந்த சமயத்துலையும் அவளை யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லிடக் கூடாது. நீயோ அல்லது உங்க வீட்டுலேர்ந்தோ அவளை யாராவது ஒரு வார்த்தை சொல்லிட்டாக் கூட என்னால தாங்க முடியாது வந்தானா. நான் இந்த விஷயத்துல ரொம்ப சென்சிடிவ். அது மட்டும் நீ புரிஞ்சுக்கிட்டாப் போதும். இந்த ரெண்டு தான் என்னோட சைட்லேர்ந்து . எனக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் செய்தா கூட ஓகே தான். மற்றபடி எல்லாமே உங்க முடிவுதான்.”
நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். உனக்கு ஏதாவது கேட்கணுமா வந்தனா? “
“எனக்கு இப்ப ஒரு கிஸ் வேணும். கொடுக்கவாப் போற? சுத்தி கொஞ்சம் பாருடா . ஒத்தை காபி வாங்கி கொடுத்துட்டு சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொன்னியே ஒரு வார்த்தை, நீ அழகா இருக்கேனு சொன்னியாடா பக்கி ?’ மனதில் அவனை வறுத்து எடுத்தாலும் வெளியில் பனிக்கூழ் போலவே பேசினாள் .
“எனக்கு இப்ப கேக்க எதுவும் இல்ல. ஏதாவது தோணினா கால் பண்றேன்.”
“ஓகே. அப்ப கிளம்பலாமா?”
“ஓகே சார் “
அவன் பில்லிற்கு காசு கட்டினான் . இவள் பார்வையை சுழல விட்டாள் . அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் காதலர்கள்தான். ‘இவன் எனக்கு யாரு?’ யோசித்தவளுக்கு அவனோடு இதே இடம் வர வேண்டும் காதல் செய்ய., சிரித்துப் பேச., அவனின் கண் சிறைக்குள் அகப்பட்டு தன்னைத் தானே பார்த்துக் கொள்ள என்று பல ஆசைகள் வந்துசேர்ந்தது மனதில்.
அப்போதே அவனை கண்ணுக்குள் சிறை எடுத்தவள் அமைதியாக இருந்தாள் .
இருவரும் எழுந்துக் கொண்டார்கள்.
வெளியில் வருமுன் உள்ளே ஒரு முறை பார்வையை சுழல விட்ட்டவள் மனதில் சிரித்துக் கொண்டாள் .
“என்ன தனா ? ஏதாவது மிஸ் பண்ணிடீங்களா ?”
அவனின் தனா என்ற அழைப்பு அவளுக்கு இப்போது தான் உரைத்தது .
முதலில் இல்லை என்றவள் பிறகு,”ஆம்” என்று தலை ஆட்டினாள்.
என்னதுன்னு சொல்லுங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்.
“இல்ல எதுவும் இல்ல. சாரி”
“ஆர் யூ சியூர் ?”
“ம் !”
தன்னுடைய வண்டியில் ஏறி ரிவெர்ஸ் எடுத்தவன் நிச்சயம் அழகன் தான் .
வண்டியில் அவள் சென்றுக் கொண்டிருந்தாலும் தனா என்ற அவனின் அழைப்பே அவள் காதில் ரீங்காரமிட்டது.
அவனுக்கோ அவளின் கன்ன சிகப்பு ஆயிரம் வாரத்தைப் பேசியது. அப்பா! என்ன அப்படி ஒரு பார்வை பாக்கறா! முழுங்கற மாதிரி. அவளை ரசித்துக் கொண்டே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் .
தனாவின் வீட்டில்…
வீட்டுக்கு வந்தவளிடம் மற்ற மூவரும் என்ன விஷயம் என்று கேட்டுத் துளைத்து எடுத்துவிட்டார்கள்.
விஷயத்தை சொன்னாள் . கீர்த்தியின் விஷயம் இங்கு யாருக்கும் எதுவும் பெரியதாக தெரியவில்லை. இருப்பினும் அவளுக்குத் திருமணம் ஆகாமல் எப்படி என்ற கேள்வியும் வந்தது. அப்போது கார்த்திக் சொன்னது தான் ஹை லைட் .
“அப்ப கீர்த்தியை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.”
“என்னடா இது?”
“ம்மா ஓவரா ஸீன் போடாத! அன்னைக்கு அவளைப் பார்த்ததுமே மனசுல ஆசை வந்ததா இல்லையா ?”
“இரு! இரு! நீ எதுக்கு அம்மா மேல பழி போடற? உனக்கு தான் வேற மாதிரி எண்ணம் இருக்கும்போல ” வாரினாள் வந்தனா .
“ஏய் சில்வண்டு உனக்கு என்னை பத்தி தெரியாதா ?” லேசாக தங்கையின் பின் தலையில் தட்டினான்.
“எனக்கு அந்த மாதிரி எல்லாம் எந்த எண்ணமும் இல்ல. ஏன் எனக்கு அவளைப் பத்தி நல்ல எண்ணம் கூட இதுக்கு முன்ன இல்ல. என்னோட பர்த்டே கேக் கூட கைல கொடுத்தபோது வேண்டான்னுட்டா. ரொம்ப திமிரு பிடிச்சவன்னு தான் எனக்கு மனசுல எண்ணம். கொஞ்சம் அழகா இருந்தாலே இந்த பொண்ணுங்களை கைல பிடிக்க முடியாது . அதுல இவ பாக்க வெள்ளையா வேற இருக்கா. அந்த திமிரு தான்னு நினச்சேன். ஆனா எப்ப அவ நம்ம அம்மாவை தோளில் தாங்கினாளோ அப்ப தான் அவ மேல ஒரு எண்ணமே வர ஆரம்பித்தது . அதுலயும் ரவி வந்து நம்ம வதுவை பொண்ணு கேட்டதுக்கு அப்பறம் எனக்கு ஒண்ணுமே புரியலை. அவ அண்ணா சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் தான் அவ இவ்ளோ கஷ்டப்பட்டுருக்கான்னு தெரியுது. நம்ம குடும்பத்துல ஒரு கஷ்டம்னு அவங்க ரெண்டு பேருமே வந்து நின்னுருக்காங்க. நம்ம அப்பாவுக்கு ஒன்னுண்னதும் அவரு இவ்ளோ பெரிய முடிவு எடுத்துருக்காரு. அதுவும் உனக்கு தோஷம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்.
கார்த்திக் சொல்வது அவன் அன்னைக்கும் சரியாகப் பட்டது. இருந்தாலும் இரண்டாம் திருமணமா என்ற எண்ணமும் தான் வந்தது. இருப்பினும் அவளை பார்த்தாலும் தப்பாகத் தெரியவில்லை. திருமணம் என்பது இரண்டு மனம் மட்டும் சேர்வது என்றால் அது ஒரு விதமான சுய நலமில்லையா?
இரண்டு குடும்பமும் உங்களுக்கு நாங்க இருக்கறோம் என்று கைப் பிடித்து இளையவர்களை வழி நடத்தும் அமைப்பு குடும்பம் இல்லையா ?
அடுத்த விஷயம் கீர்த்தியின் மன நலம், அவளது திருமணம் இது பற்றி எவ்வளவு தூரம் யோசிக்க வேண்டும்? முதல் திருமணத்தில் அவள் செய்த தவறு எதுவுமே இல்லையே?
தான் என்ன நினைத்தாலும் கணவன் என்ன சொல்லுவாரோ என்ற பயமும் இருந்தது. கணவனிடம் இது பற்றி பேசினார்.
இவர்கள் பயந்தது போல இல்லாமல், அவரோ அதை மிக எளிதாக எடுத்துக் கொண்டார்.
“என்னோட ஒன்னு விட்ட அக்கா பொண்ணு. இதே மாதிரிதான். உன் கூட வாழ புடிக்கலன்னு விவாகரத்து பண்ணிட்டான். அதுக்கு எங்க பாட்டி அந்த பொண்ணை அப்படியே விட கூடாது. இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனுன்னு சொல்லி அப்புறமா வேற பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சாங்க. இதுல பெரிய விஷயம் என்ன தெரியுமா? வந்த மாப்பிள்ளைக்கு இது முதல் கல்யாணம். பொண்ணு குணம் தான் முக்கியமுன்னு கல்யாணம் பண்ணி, இன்னிக்கு ரெண்டு புள்ளைங்களோட ரொம்ப சந்தோஷமா தான் இருக்காங்க.
அடுத்து அவளோட மன நலம் . எல்லாருக்குமே தான் இந்த காலத்துல இந்த ஸ்ட்ரெஸ் இருக்கு. சிலருக்கு ஹாண்டில் பண்ண முடியுது. அவளுக்கு அந்த வயசுல ஹாண்டில் பண்ண முடியல. ஏதோ விடாம படிச்சுருப்பா. ஸ்ட்ரெஸ் eடுத்துக்க முடியலை . அண்ணாவும் டாகடர் ஆகலை. அம்மா அப்பாவை திருப்திப்படுத்தனும் , அப்ப தான் குடும்பம் நார்மலா மாறும்னு தனக்குத் தானே போட்டுக்கிட்ட அதிகமான ஸ்ட்ரெஸ் தான். அதுவும் அவ அண்ணனுக்காக அந்த வயசுல யோசிச்சவ , நம்ம குடும்பத்துக்கு வந்தா நம்ம எல்லார் பத்தியும் யோசிக்க மாட்டாளா ?
இதோ இத்தனை வருஷமா நானும் தான் இருக்கேன். பொண்ணுக்கு தோஷம் இருக்குன்னு தெரியும். அதை மீறி வந்த வரன் கல்யாணத்தை நிறுத்திட்டாங்களேன்னு கவலைப் பட்டு ஆஸ்பத்திரில படுத்திட்டேன். ஏன் அவளுக்கு ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை தட்டி போகும் போது எல்லாம் அவளை எப்படி எல்லாம் திட்டி இருக்கோம்? நம்மளால இந்த வயசுல பிரச்சனைகளை ஹாண்டில் பண்ண முடியல. அந்த சின்ன வயசுல அந்தப் பொண்ணு என்ன பண்ணும் பாவம்?
அப்பவே அவங்க அப்பா அம்மா என்ன படிக்க முடியுதோ அதை படிங்க பிள்ளைங்களுக்கு சொல்லியிருந்தா இந்த கஷ்டமே வந்துருக்காது. “
“நாம இன்னொருத்தர் குடும்பத்தை பத்தி எதுக்கு பேசணும்? “என்றார் லலிதா.
அதை ஆமோதித்த கணவனும் ,பின்னர் தொடர்ந்தார்.
“அவளுக்கு ஒரு இயல்பான குடும்ப அமைப்பு கிடைச்சாலே போதும்.
முக்கியமா அன்பா பார்த்துக்கற மாமியார். “லேசாக மனைவியின் கன்னம் தடவினார் கணவன் . அந்த ஒற்றை விரல் தீண்டல் எத்தனை வயதானாலும் மனம் குளிர்ந்து தான் போகிறது. தன்னுடைய மகனும் அவன் மனைவியை இதே போல நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போனார் லலிதா.
“நீங்க நினைக்கறது எல்லாம் நடந்து விடுமா என்ன?” ஒரு கால் மடக்கி ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டு அழகான கொலுசுடன் இருந்த அந்த லலிதாம்பிகை சிரித்துக் கொண்டிருந்தார்.
இங்கே ரவியின் வீட்டில் பெரிய சண்டை நடந்துக் கொண்டிருந்தது. இங்கே மகள் வந்து அன்னையிடம் விஷயத்தை சொன்னதும் ரவியின் அன்னைக்கு அத்தனை கோபம்.
தங்கச்சியப் பத்தின கவலை இருக்கா இவன் தன்னோட சுகம் தான் முக்கியம்னு அவங்க வீட்டுல போய் தனக்குத் தானே பேசிட்டு வந்திருக்கான்.
அந்த பாவி மனுஷன் என்னை இப்படித் தனியா விட்டுட்டு போய்ட்டாரு. நன் இன்னும் இந்த கருமத்தை எல்லாம் பார்த்துகிட்டு இன்னும் உயிரோட இருக்கேனே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டார்.
ரவிக்கு மனம் விட்டுப் போனது
“சாரி கீர்த்தி! நான் அந்த சமயத்துல சுயநலமா யோசிக்கலை. ஏதோ நம்ம வீடு நிலைமையும் அங்க..” என்று ஆரம்பித்தவனுக்கு,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணா. அப்ப அந்த சமயத்துல நான் அங்க தானே இருந்தேன். என்னால புரிஞ்சுக்க முடியுது.”
“நான் இப்பவே அவங்க வீட்டுக்கு போனே செய்து சாரி சொல்லிடறேன் அவங்க வேற இடம் பாக்கட்டும் ” என்றான் ரவி.
“இல்லண்ணா! அவங்க ஏற்கனவே பாவம். இப்பதான் கல்யாணம் நின்னு போய் இருக்கு. ஏற்கனவே ரொம்ப மன உளைச்சல்ல இருப்பாங்க . நீங்க வேற போய் வேண்டான்னு சொன்னா பாவம். அவங்களும் சரி அவங்க வீட்டுலையும் சரி., தாங்க மாட்டங்க. முதல்ல அவங்க ஓகே சொல்லறாங்களான்னு பாக்கலாம். அதுக்கு அப்புறம் அவங்க சரின்னு சொன்ன ப்ரொசீட் பண்ணு.”
“அம்மா ?”
“நம்ம அம்மாதான. நான் பேசிக்கறேன் விடு.” எப்போதும் போல அவனுக்கு அவளே சமாதானம் சொன்னாள் .
அண்ணனுக்கு சமாதானம் சொன்னவள் அன்னையிடம் பேசத் துவங்கினாள் .
“அண்ணா என்னம்மா தப்பு பண்ணிச்சு? எதுக்கும்மா அவரை இப்படி நோகடிக்கறீங்க? பாவம் அண்ணா. உங்களுக்கு என்ன ஆசை? நீங்க என்ன யோசிக்கறீங்க? புரியல எனக்கு . அண்ணாக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கக் கூடாது. நமக்காக தன்னுடைய எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிகிட்டு வாழ அண்ணனுக்கு என்ன அவசியம் வந்தது? எனக்கு தான் தலையெழுத்து. அண்ணனாவது நல்ல பொண்டாட்டி குழந்தைங்கன்னு இருக்கக் கூடாதுன்னு நினைக்கறீங்களா ?”
“அதுக்குன்னு இப்படியா? வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வச்சுக்கிட்டு தனக்கு சம்பந்தம் பேசுவான்?”
ஆங்காரமாக அன்னையின் குரல் வரவும் கீர்த்தியால் கோபத்தை அடக்க முடியவில்லை.
“என்ன சொல்லற நீ? என்னைய மாதிரி ஒரு பைத்தியத்தை கட்டிக்கிட்டு அவரு காலம் பூரா தன்னோட உணர்ச்சியை அடக்கிட்டு சன்யாசியா வாழணுமா? ஏன் நீங்க காதல் கல்யாணம் பண்ணலை? அண்ணா செய்தா குத்தமா ? அவரு அந்த பொண்ணு வீட்டுல போய் பேசின போது அவன் எந்த நிலமைல இருந்தாங்க தெரியுமா? அவரு ஒன்னும் அந்த பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யூ னு நிக்கல கொஞ்சமாவது கண்ணை துறந்து பாரு. நீ கண்ணை மூடிக்கிட்டு இந்த உலகமே இருட்டுன்னு பேசாத “
ஓங்கி ஒலித்த தங்கையின் குரலில் ரவிக்கு மனம் உடைந்து போனது .
‘ஏன் தனக்கு இப்படி ? தனக்கோ அல்லது தன்னுடைய தங்கைக்கோ வாழ்வில் நல்லதே வராதா?’ மனம் விரக்தியடைந்தது.
இந்த உலகத்தில் எத்தனை பேர் சாபம் கொடுத்தாலும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப் படும் போது தான் அந்த பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும். அந்த விஷயத்தை நம்முடைய ராஜிக்கு யார் சொல்லுவார்கள் ? யாராவது ஒருவர் இந்த பூனைக்கு மணி கட்டத்தான் வேண்டும். அது வந்தனாவாக இருந்தால் இன்னும் சந்தோஷம் .
அப்போது அவன் தொலைபேசி அழைத்தது . அதில் அழைத்தது வந்தனா .
“இந்த நேரத்துல இவங்களா அச்சோ’ என்று கைபேசியை எடுத்துக் கொண்டு பின்புறத் தோட்டத்துக்குச் சென்றான் ரவி . அதில் வந்தனா சொன்ன செய்தி இவனுக்கு அதிர்ச்சியாக அதேசமயம் ஆனந்தமாகவும் இருந்தது .
“ஓகே வந்தனா . நீங்க சொல்றது கேட்கும்போது நல்லா தான் இருக்கு .ஆனா நான் இதை பத்தி கீர்த்திக்கிட்ட முதல்ல பேசணும். அடுத்த திருமணம் பத்தி நாங்க இன்னும் யோசிக்கவே இல்ல. “
“ரவி நீங்க சொல்லறது எனக்கு நல்லாவே புரியுது. நான் உங்களை கல்யாணம் செய்துகிட்டா நீங்க என்ன நல்லா பாத்துக்குவீங்களா ?”
” இது என்ன கேள்வி வந்தனா. கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன். என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன். எனக்கு இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு முக்கியம்கிறது ரொம்ப நல்லாவே தெரியும். நீங்க என்ன சந்தேகப்படுறீங்களா வந்தனா ?
” அதுக்காக கேட்கல . நீங்க என்னை எந்த அளவுக்கு கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பீங்களோ அதை விட எங்க அண்ணா உங்க தங்கச்சிய ரொம்ப நல்லா பார்த்து பாரு .உங்க தங்கச்சிக்கு இப்ப தேவை., வெறும் நல்ல கணவன் மட்டும் இல்லை. நல்ல மாமனார் மாமியார் நல்ல சுற்றுப்புற சூழ்நிலையும் தேவை. இது இப்ப உங்ககிட்ட நான் சொல்ற விஷயம் இல்லை நாங்க எல்லாரும் வீட்ல பேசிட்டு இருந்த விஷயம் தான் இது. எங்க அப்பா சொன்ன விஷயம் இது. அதுதான் இப்ப நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். உங்க தங்கச்சி வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு இருக்காங்க. அவங்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் அள்ளி அள்ளி கொட்டுவதற்கு எங்க அம்மாவும் அப்பாவும் தயாரா இருக்காங்க. ஒரே ஒரு கண்டிஷன் அதுக்கு அவங்களுக்கு உங்க தங்கச்சி நல்ல மருமகளாகவும் நல்ல மனைவியாகவும் இருக்கனும் . இது மட்டும் தான் எங்க சைடுல இருந்து இருக்கிற ஒரே டிமாண்ட் “
“யார் இப்படி சொல்வார்கள் ? Iந்த இடம் கிடைத்தால் தன்னுடைய தங்கையின் வாழ்வு நல்லபடியாக மாறி விடுமா? அப்படி இல்லை இல்லையென்றால்? இன்னொரு திருமணம் அவளின் வாழ்க்கையில் இன்னொரு பெரியா அடியாக மாறி விட்டால். அவளை உயிருடன் பாக்க முடியுமா? அடி மேல் அடி விழுந்துக் கொண்டே இருந்தால் அவளால் தாங்க முடியுமா?”
“ஓகே வந்தனா . நான் பேசிட்டு சொல்லறேன்.”
“ரவி இன்னொரு விஷயம் ..”
“சொல்லுங்க தனா ..”
“அது நீங்க வீட்டுல பேசிட்டு சொல்லுங்க. அப்புறமா பெரியவங்க பேசுவாங்க. என்னடா இது சின்ன பொண்ணு இவளே பேசறான்னு நினைக்காதீங்க “
“புரியுது தனா . உங்களை அப்படி கூப்பிடலாம் தானே “
“கூடாதுன்னு சொன்னா ?”
“எப்படி கூப்பிட சொல்லறீங்களோ அப்படி “
“ஏன் நீங்களாவே என்கிட்ட உரிமை எடுத்துக்க மாட்டீங்களா?”
“தனா … வீட்டுல பேசி ஒரு முடிவெடுக்கலாம் . நான் எப்படி உரிமை எடுத்துக்கறேன்னு அப்புறம் பாரு.”
“ரவி…போனை வைக்கட்டுமா ?
“ம் “
மனமே இல்லாமல் இருவரும் போனை வைத்தார்கள்.
இந்த நிமிடமே அவளை மடியில் அமர்த்தி ஆயிரம் முத்தங்கள் தர ஆசை இருந்தாலும் தன்னுடைய குடும்ப சூழ் நிலையால் தன்னை அடக்கிக் கொண்டான் இவன் .
இப்போதே அவன் மடியில் அமர்ந்து அவனை ஆயிரம் முறை தனா தனா என்று பிதற்ற வைக்க வேண்டும் என்ற கனவு இவளுக்கு.
இது சரியா வருமா? பார்க்கலாம்…
