அத்யாயம் -14
திருக்குறள்
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1284
அடுத்த நாள் அலுவலகத்தில் வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தன .
கார்த்தி கீர்த்தியின் பக்கம் திரும்பக் கூட இல்ல.
தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்தவனுக்கு சூர்யாவிடமிருந்து போன்.
“கார்த்திக்! அந்த சுகர் பாக்டரிக்கு மெயில் அனுப்பியாச்சா?”
” இதோ பாஸ் நான் செக் பண்ணறேன். “
“ம்!” என்று வைத்து விட்டான்.
“ரெண்டு மணிக்கு சுகந்தம் ரெசர்ட்ஸ் கூட பாஸுக்கு கால் இருக்கே ?
கைக் கடிகாரம் நின்றிருந்தது .
“கீர்த்தி டைம் என்ன ?”
“ஏன் கார்த்திக் சார் இவ்ளோ சீபா பிகேவ் பண்ணறீங்க?”
நேற்று வந்தனா பேசியப் பிறகு ரவி வீட்டில் பேசி இருந்தான் . ஒரே சமயத்தில் இருவருக்கும் திருமணம் என்றால் ராஜிக்கு ஓகே தான். ஆனால் கீர்த்தி தனக்கு திருமணம் வேண்டாம்., என்று முடிவாக சொல்லி விடவும், கார்த்திக் தன்னிடம் வந்து பேச ஏதோ காரணம் தேடுவதாக நினைத்து விட்டாள் கீர்த்தி.
அவளின் கேள்விக்கு முறைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான் கார்த்திக் .
அனைவரும் உணவிற்கு செல்ல இவனோ சூர்யாவுடன் இருந்தான் .
“பாஸ் மீட்டிங்க முடிய எவ்ளோ நேரம் ஆகும்னு தெரில. அதுனால நீங்க இப்பவே லஞ்ச் முடிச்சிருங்க, சூர்யாவிடம் சொல்லி விட்டு அவனுடைய மடிக் கணணியை எடுத்துக் கொண்டு அவனுக்கு த் தேவையானது எல்லாம் தயார் செய்ய ஆரம்பித்தான் கார்த்திக் .
“அதுவும் சரிதான். நீ?”
“இல்ல பாஸ். நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறம் பார்த்துக்கறேன்.”
“ஆர் யூ சியூர் ?”
“எஸ் பாஸ் “
வேலைகளை முடித்து விட்டு சூர்யாவிடமும் அனைத்தையும் விளக்கி விட்டான். எப்போதுமே இவன் சூர்யாவுக்கு இவன் உடன் இருப்பான் தான். சில நேரங்களில் இது போல வரும் சில பேர் தனக்கு பிரைவசி வேண்டும் என்று எதிர்பார்த்தால் எதற்கும் இருக்கட்டும் என்று எப்போதுமே இதுபோல செய்து விடுவான்.
சுகந்தம் ரிசோர்ட்ஸ் எம் டீயும் அவரது காரியதர்சியும் வந்தார்கள். கையில்லாத குர்தி டாப்ஸ், விரித்து விட்ட குட்டி கூந்தல் என்று சினிமா அழகி போலவே இருந்தாள் . பெரிய தலைகள் இருவரும் பேச ஆரம்பித்தவுடன் நடு நடுவே அவள் இவனிடம் சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தாள் .
சூர்யாவின் பார்வையைப் புரிந்துக் கொண்டவன், அவளை தன்னுடைய இடத்துக்கு அழைத்து வந்து தேவையான விஷயங்களை பேசினார்கள்.
“உங்களுக்கு பிரெஷ் ஜூஸ் சொல்லவா?”
“நோ கார்த்திக்! நான் இன்னும் லஞ்ச் சாப்பிடலை. எனக்கு ஏதாவது கர்ட் ரைஸ் மாதிரி சிம்பிளா ஏதாவது இருந்தா கூட போதும். என்னால பசி தாங்க முடியாது “
“இப்ப ஆர்டர் பண்ணி வர நேரமாகும். நீங்க என்னோடது எடுத்துக்கோங்க”என்று உரிமையாக அவன் தன்னுடைய உணவு டப்பாவை எடுத்துக் கொடுத்தான். புதிய பெண் ஆசையாக உண்டுக் கொண்டிருக்க இவன் கண்கள் எதைச்சையாக கீர்த்தியைப் பார்த்தது. அவ காதிலிருந்து வரும் புகை பிரத்யேகமாக இவனுக்குத் தெரிந்தது .
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான் மனதில் .
“செம்ம லஞ்ச் கார்த்திக். உங்க மனைவிகிட்ட சொல்லிடுங்க. “
“இல்லாத மனைவிகிட்ட எப்படி சொல்லறது ?”
“ஓ ! இன்னும் கல்யாணம் ஆகலையா ? “
பிறகு இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வேலை விஷயமாகத் தான். கார்த்திக் எப்போதுமே யாரிடமும் தெளிவாகப் பேசுவான். ஆண் பெண் எந்த வேறுபாடும் பார்க்க முடியாது.
‘இது நாள் வரை அவன் யாரிடமும் பேசியபோது வராத ஒரு உணர்வு இப்போது தனக்கு ஏன் வர வேண்டும்? எனக்கு அவனைப் பிடிக்கிறதா? சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வில் தத்தளிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.
மீட்டிங் முடிந்து இவன் உணவு உண்ண செல்லும்போது மூன்று மணி ஆகிவிட்டது.
உணவுப் பையை எடுத்துக் கொண்டு அவன் தனியாகச் செல்வதைப் பார்த்த கீர்த்தி அவனைத் தனியே விட முடியாதவளாக அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் ஒரு கப் காபியுடன் . அவள் அவனைப் பார்த்தாலும் அவன் என்னவோ அவளை துளியும் கண்டுக்க கொள்ளவில்லை . உணவில் மட்டும் கவனம் செலுத்தியவன் விரைவாக உணவை முடித்துக் கொண்டு சென்றுவிட்டான் . அதற்கு மேல் அவளால் அவனை நாள் முழுவதும் பார்க்க முடியவில்லை.
அதுவே அடுத்த நாள் மாலையில் அவள் பேருந்து நிறுத்தத்தில் வீடு வர காத்திருந்தவளை , “கீர்த்தி வாங்க வந்து வண்டில ஏறுங்க ” என்றான் கார்த்திக்.
“இல்ல வேண்டாம்”
அவன் முகத்தை கூட பார்க்காமல் அவள் வேறு பக்கம் முகம் திருப்பி சொல்லவும்,
“என்ன என்னை பொம்பளை பொறுக்கின்னு நினச்சுட்டுயா? மழை வர மாதிரி இருக்கு. உன்ன கொண்டு வந்து வீட்டுல விட முடியுமான்னு உங்க அண்ணா தான் கேட்டாரு. இல்லாட்டி உன் மேல எனக்கு எந்த இண்ட்ரஸ்டும் இல்ல. வரியா இல்லயா ?”
வீம்பாக பேசாமல் நின்றவள் மீது பெரிய தூறல் ஒன்று விழுந்தது. அமைதியாக அவனுடன் பிரயாணிக்க ஆரம்பித்தாள். ஒற்றை வார்த்தை பேசவில்லை இருவரும். அவன் கவனம் முழுவதும் சாலையில் இருந்தாலும், அங்கே இங்கே என்று பல காட்சிகள் கண்களில் வில்லத் தனத்துடன் வந்து விழுகின்றன .
பெரும்பாலும் பெண்கள் பின்னே அமர்ந்து கொண்டிருந்தால் பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள். முன்னே அமர்ந்திருப்பது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. இவர்கள் கவலையேப் படுவதில்லை.
மனதில் யார் யாரையோ திட்டிக் கொண்டு வந்தாலும் கீர்த்தியை சரியாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்தான் கார்த்தி.
“வாயில் வரை வந்த ரவி, வாங்க வாங்க கார்த்திக். உள்ள வாங்க.” அவனும் அப்போது தான் வந்தான் போலும்.
“இல்ல பரவல்ல இருக்கட்டும் ரவி . அப்புறம் பாக்கலாம். வந்தனா வீட்டுக்குப் போய்ட்டாளா ?”
“நான் உங்களுக்கு கால் பண்ணாதே உங்க வீட்லேர்ந்து தான். இவன் நம்பர் தான் ரீச் ஆகலை. உங்களை அனாவசியமா தொந்தரவு செய்து விட்டேன். ரொம்ப சாரி கார்த்திக். “
“அதுனால என்ன ரவி.” சொல்லிக் கொண்டிருந்தாலும் பார்வை கீர்த்தியை ஒரு முறை முறைத்து விட்டு தான் வந்தது. ரவி புரிந்து கொண்டான்.
“நான்தான் உங்க வீட்டுல உக்காந்து நல்ல போண்டாவும் டீயும் குடிச்சுட்டு வந்தேன். நீங்க தான் உள்ள கூட வர மாட்டேங்கறீங்க. ப்ளீஸ் உள்ள வாங்க “
“யாரு வந்துருக்கா ? ஓ கீர்த்தி வந்தாச்சா? “
“இவரு யாரு கீர்த்தி ? உள்ள வாங்க தம்பி. கீர்த்தியோட பிரண்டா ?”
உள்ள வாங்க அழைத்து கீர்த்தி தான். வேகமாக மழை வரவும் கார்த்திக்கும் வேறு வழி இல்லாமல் அவர்கள் வீட்டுக்குச் சென்றான்.
அன்னை கொடுத்த இஞ்சி டீயை கொண்டு போய் கார்த்திக்குக்கு கொடுத்தாள் கீர்த்தி.
அவளை பார்ப்பதை கார்த்திக் தவிர்த்து விட்டான். அன்றைய இரவில் கீர்த்திக்கு கார்த்திக் தான் மனதில் நின்றான். அவனை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை. வேண்டும் என்று ஏற்கவும் முடியவில்லை அவளால் .
தன்னால் தன்னுடைய அண்ணனுக்கு கிடைக்கப் போகும் நல்ல வாழ்க்கை தடை பட்டு விடுமோ என்ற பயமும் அவளை ஆட்டி படைத்தது.
ஒரு வேளை தான் இதே வீட்டில் திருமணமாகாமல் இருந்தால் அது வர போகும் அண்ணியின் வாழ்க்கையை நிச்சயம் வீணாக்கி விடும். அன்னையின் குணம் அறிந்தவள் தான் கீர்த்தி. பார்க்க அன்னை நல்லவள் தான். இருப்பினும் தந்தையின் உடல் நல பாதிப்புக்குப் பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தும் அன்னையின் குணத்தை வெகுவாக மாற்றி இருந்தது. பேசாமல் அண்ணாவை தனிக்குடித்தனம் அனுப்பி விட்டால் என்ன ? அதற்கு அண்ணா நிச்சயம் சம்மதிக்க மாட்டான். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு தான் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டு போவது தான்.
ஏற்கனவே திருமண விஷயங்களை அவள் மறக்க மிகவும் சிரமப்பட்டாள் . திருமணம் செய்துக் கொண்டவனோ ஆண் பிள்ளைக்கான அத்தனை அம்சங்களுடன் அழகாக இருந்தான். திருமண வரவேற்பில் அந்த தேக்கு மர தேகத்திற்கு இந்த கொடியா என்று தோழிகள் கிண்டல் செய்த போது எத்தனை வெக்கமாக இருந்தது.
முதலிரவுக்கு எப்படி எல்லாம் அன்னை என்னை தயார் செய்து அனுப்பினார்கள் . நர்ஸாக இருந்த அன்னை எத்தனை அறிவுரை சொல்லி அனுப்பினார். மனம் படபடக்க முதலிரவுக்கு சென்றவள்., கண்டது கணவன் தன்னுடைய லேப்டாப்பில் வேறு யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தான். அடுத்த சில நாட்களும் இப்படித் தான். பிறகு வந்த நாட்களும் அவன் இவளை கண்டு கொள்ளவே இல்லை. விருந்து மருந்து என்று தலை நிறைய பூ சூடி பெண்ணவள் பதுமையாக நின்றாலும் அவனுக்கு அவளை பிடிக்கவில்லை.
“நீ என்ன எப்ப பார்த்தலும் பூ வச்சு, புடவை கட்டிக்கிட்டு. உனக்கு மாடர்னா டிரஸ் பண்ண தெரியாதா ?”
மாடர்ன் என்றால் ?அவன் எதிரிபார்ப்பு என்ன? புரியாதவள் , அவனிடமே “நீங்க வாங்கி தரீங்களா ?”என்றாள் .
வெட்கபட்டுக் கொண்டு சொன்னவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் அவன். எதற்காக அவளிடம் அவனுக்கு இத்தனை எரிச்சல்? எதற்காக பிடிக்காத திருமணம்?
அவன் வெளிநாட்டுக்குச் சென்ற பிறகும் இவள் மாமியார் வீட்டில் தான் சில மாதங்கள் இருந்தாள் . வழக்கம்போலத் தான். சம்பளம் இல்லாத வேலைக்காரி ஆகி விட்டாள் இவள் .
“நல்ல படிப்பும் இல்ல. பைத்தியம் வேற. உன்ன வச்சுக்கிட்டு அவன் அங்க என்ன பண்ணுவான் ?”
மாமியாரிடமிருந்து வந்த முதல் தேள் கொடுக்கான வார்த்தை.
“ஏம்மா வீட்டுல சும்மா தான் இருக்க? துணியெல்லாம் கைல துவைச்சு போடு ” இது மாமனார் . அவரே, ” வீட்டுல சும்மாதானே இருக்க. விதவிதமா சமைக்க கத்துகிட்டா மூளையாவது கொஞ்சம் வேலை செயுமில்ல?” என்கிறார்.
ஒரு புறம் இவர்களின் குத்தலான பேச்சு, அவமானப்படுத்தும் சொற்கள் இதற்கு இடையில் கணவனிடம் பேசவும் முடியாது. ஏதோ சில சமயம் அவன் அம்மா கூப்பிட்டு போனை கொடுப்பார் . உனக்கு யாரு கிட்ட எப்படி பேசணுன்னு கூட தெரியல. சரியான பைத்தியம் என்பார் மாமியார். அவர்கள் வீடு எந்த விசேஷங்களுக்கும் இவள் அனுமதி இல்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் கூட வீட்டு வேலைக்காரி என்று இவளை நினைக்கும் விதத்தில் தான் இவள் தோற்றம் இருக்கும். நல்ல உடை உடுத்த கூடாது. தலை வாரி பின்னல் போட்டுக் கொள்ளலாம் . பூ வைக்க அனுமதி இல்லை. பெற்றவர்களைப் பார்க்க அனுமதி இல்லை. பேசலாம். ஒரு நிமிடம் முடிவதற்கு முன்பே மாமனார் அல்லது மாமியாரிடமிருந்து அழைப்பு வந்து விடும். நேரடி நாத்தனார் இல்லை. மாமியாரின் அக்கா மகள் நாத்தனார் ஸ்தானத்தில் வந்து அமர்ந்து விடுவாள். மாமியாரின் அக்காவும் தான். அந்த உடம்பை தாங்க முடியாத கால்களை கொண்டு அசைந்து வந்தால் எளிதில் தன்னுடைய வீட்டிற்கு செல்ல மாட்டார்.
அனைவருமே இவளை பைத்தியம் பைத்தியம் என்று சொன்ன சொல்லில் இவளுக்கு எங்கே தான் மீண்டும் பைத்தியம் ஆகிவிடுவேனோ என்ற பயமே வந்து விட்டது. அவளின் உருவம் அவளை பயமுறுத்தியது. கண்ணாடி பார்ப்பதை நிறுத்திவிட்டாள் .அப்போது தான் ரவி எதேச்சையாக அவர்கள் வீட்டுக்கு வந்தது.
கண்ணில் கருவளையம் வந்து உடல் இளைத்து, களைந்த தலையுடன் இருந்தவளை பார்த்து விஷயம் புரிந்து கொண்டு விட்டான் ரவி. கண்கள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தவனுக்கு வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு தங்கையை அந்த நரகத்திலில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தான். அவளுடைய பள்ளி வாழ்க்கை முடிந்த போது நடந்த விஷயங்கள் மீண்டும் அவர்கள் வீட்டில் நடந்தது . மருந்து மாத்திரை , மருத்துவர்கள், மருத்துவம் உடன் கலந்த தந்தையின் இழப்பு., என்னவோ இப்போது அவள் இங்கே உறவுகளுடன் உயிருடன் இருக்கிறாள். மீண்டும் ஒரு திருமணம். மீண்டும் பைத்தியம் என்றால் மீண்டும் மீண்டும் .. வேண்டுமா? அதற்கு மேல் யோசிக்க முடியாதவள் அப்படியே தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள். அண்ணாவின் நெஞ்சில் சாய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் பிறகு தானே கால்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
‘நாளை வந்தனா வந்த பிறகு தனக்கு இந்த உரிமை இருக்குமா?’
துரத்த யாரும் இல்லாத போதும் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். நீ ஓடியது போதும் என்று நெஞ்சில் தாங்க கார்த்திக் வந்தாலும் அவளுக்கு பயமாகவே தான் இருக்கிறது.கார்த்திகை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று அவள் பிடிவாதமாக இருந்தாலும் அவன்தான் உனக்கு என்று மனம் அடித்து சொன்னது. அதை அவளே உணரும் நாள் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை
அடுத்த நாள் முதல் கார்த்திக் அவளிடம் பேசவும் இல்லை. முகம் பார்க்கவும் இல்லை. அவன் அவளிடம் எப்போதுமே சொந்த விஷயம் பேசியதில்லை . இருந்தாலும் அலுவலகத்தில் அவன் பேசிய நேரமெல்லாம் அவனை தள்ளியே வைத்தாள் . எல்லா ஆண்களிடமும் அப்படித் தான் என்றாலும் கார்த்திக் போல இவள் மனதை யாரும் தொந்தரவு செய்தது இல்லை.
இப்போது அதையே அவன் செய்த போது அவளுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.
கார்த்திக்கிடம் தானே வலிய சென்று மன்னிப்பு வேண்டினாள். அப்போதும் முகம் பார்த்தவன் அவளை கடந்து சென்று விட்டான். முகத்தில் அறை கொடுத்திருக்கலாம். “நான் தானே தப்பு செய்தேன் ” ஈகோவை விட்டு விட்டு மீண்டும் சென்று மன்னிப்பு கேட்டாள் வேறு ஒரு நாள்.
“இங்க பாரு கீர்த்தி. எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. நான் உன்னை கல்யாணத்துக்கு கேட்டேன். நீ முடியாதுன்னு சொல்லிட்ட. அது உன்னோட விருப்பம். நீ வேண்டான்னு சொன்னா உன்னோட பின்னாடியே சுத்தி டார்ச்சர் பண்ணற ஆளு நான் இல்ல. அது என்னோட கேரக்டர் இல்ல. எங்க அம்மா அப்பா என்னை அப்படி வளக்கவும் இல்ல. இனிமே என்னை தொந்தரவு செய்யாத “
பார்க்கிங்கில் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பவும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் அவனிடம் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டாள் . கண்களில் குளம் கட்டிய நீரை துடைத்துக் கொண்டு கிளம்பினாள் கீர்த்தி.
கணவன் அவளை ஒதுக்கியபோது கூட அவள் அழவில்லை . இவனின் சில வார்த்தைகள் அவளை அழ வைக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களின் சூடு சொல் கூட தாங்க முடிவதில்லை.
பிறகு வந்த நாட்களில் அவள் கார்த்திக்கை பார்க்கவே இல்லை.
ஏன் ? கணினியில் கவனம் இருந்தாலும் மனம் அவனிடம் தான் இருந்தது.
துடிக்கும் இதயம்……
