அத்யாயம் -17
திருக்குறள்
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1287
லலிதா இயல்பிலேயே கலகலப்பானவர். ராஜி வெளியில் இருப்பதால் யாரிடமும் பேச தயக்கம் இருந்ததில்லை. பேச்சு பெரும்பாலும் வந்தனா பற்றி தான் இருந்தது. லலிதா தன்னுடைய மகளைப் பற்றி நிறைய பேசினாலும் ராஜி ஏனோ ரவிப் பற்றி எதுவும் வாய் திக்கவில்லை. மாறாக வந்தனாவின் சிறு வயது சேட்டைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, ராஜிக்கு மகனின் நினைவு வராமலா இருக்கும்?
அங்கே ஒருத்தரு இட்லி தக்காளி சட்னியை சாப்பிட்டு கை கழுவிட்டாரு,. இங்க குழந்தைகள் பத்தி பேச்சு வந்ததும் அங்கே அவரு பொண்டாட்டி அவரு குழந்தையோட தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. என்ன சொன்னேன் ? அவரு குழந்தையா?
சரி போனா போகட்டும். அப்படியே இருக்கட்டும். ஆனா அம்மா இதயா தான்.
இந்த கேரக்டர் இன்னும் அங்க மரத்தடில வெயிட்டீங்க்ல தான் இருக்கு. சின்ன நினைவூட்டல் தான் இந்த பத்தி ….
மாலை சிற்றுண்டி அனைவருக்கும் தயாரானது. பெரிசா எல்லாம் எதுவும் இல்ல. ரவா கிச்சடி தான். இங்க எல்லாரும் ரொம்ப சமத்து. யாரும் உப்புமாவுக்கு போர் கொடி தூக்க மாட்டாங்க. கூட கொஞ்சம் சர்க்கரை., முடித்ததும் ஒரு காபி. இது போதும் அனைவருக்கும். லலிதாவின் பிடிவாதம் வந்தனாவின் அன்புக் கட்டளை கீர்த்தியின் வருகை இந்த காரணங்களை சொல்லிக் கொண்டு ரவி இங்கே கண்ணால் காதல் மொழி பேசிக் கொண்டிருந்தான் .
வருங்கால மனைவியின் காதல் பார்வையில் அவள் பின்னோடு சென்றவன் அவளை இடையோடு கட்டிக் கொண்டான். மாலை நேரம். லேசான தென்றல், கிளி கூண்டு தொங்கட்டான் அதே போல் கழுத்துக்கு செயின், பிங்க் வர்ண சேலை கன்னங்களில் இன்னும் நிறத்தை கூட்டியது. காது தொங்கட்டானை அசைத்துக் கொண்டு பேசினான் அவன். இவர்கள் இங்கே இருப்பது பெண்களுக்குத் தெரியும். இருப்பினும் பிள்ளைகளின் பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ரொம்ப அழகா இருக்க தனா ” சொல்லியவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அவன் கன்னத்தை காட்டினாள் . அவள் ஒரு கன்னம் காட்டியதற்கு அவன் இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைத்தான்.”
அவன் பார்வை மாறியது.
“தனா ப்ளீஸ்..”
“இப்ப வேண்டாம் ரவி . கல்யாணத்துக்கு அப்புறம்..”
“என் நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைச்சியா? அவன் குரலில் இப்போது கோபம் இருந்தது .
“இல்ல ரவி. ஏற்கனவே ஒரு கல்யாணம் நிச்சயம் வரை வந்து நின்னு போயிட்டுது. மனசுக்குள்ள ஏதோ பயம். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. “
அவளின் நிலை அவனுக்குப் புரிந்தது. இருப்பினும் அவளின் இதழில் லேசாக இதழ் பதித்தவன்., “எனக்கு புரியுது. இந்த பாழாய் போன ஆசைக்கு புரியல” என்றான். புன்னகையுடன் முகம் திரும்பியவள் காது கிளி கேண்டில் மீண்டும் அவன் காய் வந்தது.
“என்ன இது அவ்ளோ அழகா இருக்க?”
“ம்! கீர்த்திக்கு இது மாதிரி ஒன்னு வாங்கணும் “
“நீங்க வாங்க வேணாம். எங்க அம்மாவே அவங்க மருமகளுக்கு வாங்கி வச்சுருக்காங்க “
“அதுக்கு இன்னும் கீர்த்தி சம்மதம் சொல்லவே இல்லை. “லேசாக அவள் தலையில் தட்டினான்.
“நீங்க என்ன நினைச்சீங்க . அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எங்க அண்ணா அவ்ளோ ஈஸியா எல்லாம் யாரையும் பாக்க மாட்டான். என்னோட பிரண்ட்ஸ் எத்தனை பெரு எவ்ளோ அழகா இருப்பாங்க தெரியுமா? யாரையும் பார்த்தது கிடையாது.
உங்க தங்கச்சி மட்டும் என்னவாம். அண்ணாவை பாக்கும் போது அவ கண்ணுல அவ்ளோ லவ் . காலைல எங்க அண்ணா அம்மாவுக்கு முத்தம் கொடுத்துட்டு கிளம்பும் போது உங்க தங்கச்சியும் எங்க அம்மாவுக்கு முத்தம் கொடுத்தா தெரியுமா?இன்னும் கேட்டா இங்க இந்த வீட்டுல இவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க . நான் தான் இன்னும் இடத்தை காலி பண்ணல. “
“சரி அதுனால என்ன. இப்பவே நம்ம வீட்டுக்கு வந்துடு “
“எப்படி இப்பவே வந்துட்டு சீமந்தம் வளைகாப்பு அது கூடவே கல்யாணமும் சேர்த்து வச்சுக்கலாமா? “
‘வச்சுக்கலாமே . எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்ல”
“ஆசைதான் “
பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை . பறவைகளின் சத்தம் தான் அங்கே வந்தது.
“கீர்த்திக்கு மனசுல சொல்ல முடியாத ஏதோ விஷயம் இருக்கு ரவி. அதை அவ கார்த்திக் கிட்ட மனம் விட்டு பேசினா தான் சரி செய்ய முடியும்.”
“வேற என்ன விஷயம் தனா . பயம் தான் .”
“ம் ! புரியுது ரவி. நம்ம கல்யாணம் ஆகட்டும். எப்படியாவது அவங்களை சேர்த்து வச்சுடனும் .”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியில் சென்ற தந்தை வந்து விட்டார். கை நிறைய பூவுடன் வந்தவர், உள்ளே நுழையும்போதே லலிதா என்ற அழைப்பு தான்
அப்பா வந்துட்டாரு. வந்தனா வாயிலுக்கு வந்தார் .
“அப்பா இங்க நானும் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் தான். என்னையும் கொஞ்சம் பாக்கலாம் “
“ஏம்மா நான் என் பொண்டாட்டிய பாக்கறேன். உன்ன பாக்கதான் மாப்பிளை இருக்காரே” மாமனார் சொல்லவும் மருமகனுக்கு லேசான புன்னகை. மீசைக்குள் மறைத்துக் கொண்ட புன்னகையுடன் மயக்கியவனை மனதிற்குள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாள் வந்தனா .
லலிதா, “இந்தா இதுல பூ இருக்கு. தங்கச்சி! கீர்த்தி முல்லை பூ வச்சுப்பாளா ? “தயாளனின் தங்கச்சி என்ற உரிமையான அழைப்பில் ஒரு நொடி தடுமாறி விட்டார் ராஜி. பிறந்த வீட்டில் கூட காதல் திருமணத்துக்கு பிறகு தன்னை யாரும் இத்தனை உரிமையாக அழைத்ததில்லை . அது மட்டுமா இப்போதெல்லாம் கீர்த்திக்கு பூ வைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை. அப்படி என்ற விஷயம் அன்னைக்கு மறுக்கப் பட்ட ஒன்று என்றால் பெண்ணுக்கு மறக்கப் பட்ட ஒன்று.
“அதுக்கு என்ன அண்ணா . நீங்க குடுத்தா வைச்சுப்பா. “ராஜி இத்தனை நீளமாக பேசியது ரவிக்கு ஆச்சர்யமாக இருந்தது .
“இந்தா வந்தனா”என்று சில பொட்டலங்களை அவள் கையில் வைத்தார். சூட்டை வைத்தே கண்டு பிடித்துவிட்டாள் மகள். சூடான பஜ்ஜியும் சமோசாவும் பிரமாதம் தான்.
அன்னையும் மகனும் அதை உண்டுக் கொண்டிருந்தாலும் மனம் கீர்த்தியின் பக்கம் தான் யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள் இருவரும் நுழையவும் சரியாக இருந்தது.
“அண்ணா வா வா சீக்கிரம். கீர்த்தி இந்தா சீக்கிரம் காய் கழுவிட்டு வாங்க என்ற துள்ளல் நடையுடன் அவர்கள் இருவருக்கும் தட்டில் எடுத்து வைத்தாள் வந்தனா .
“வாங்க அத்தை. வாங்க ரவி ” சொல்லிக் கொண்டே கார்த்திக் உள்ளே நுழைந்தான்.
“கார்த்திக் தாங்ஸ் எ லாட் கார்த்திக் . எனக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை . “எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தான் ரவி. ராஜியும் நிறைவாய் முறை நன்றி சொல்லி விட்டார் .
“அசோ இவ்ளோ புகழ்ந்தா எனக்கு வெக்கமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டு ஓடி விட்டான் கார்த்திக்.
“கீர்த்தி நீங்களும் சீக்கிரம் வந்துடுங்க. இல்லாட்டி உங்களுக்கு எதுவுமே இருக்காது.” கீர்த்தியை விரட்டினாள் வந்தனா .
‘பல மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் சிரிக்கிறோம். மனதிற்குள் ரவிக்கு ஒரு பூரிப்பு. இதுக்கு காரணம் என்னோட வருங்கால பொண்டாட்டி ‘
கொஞ்ச நேரம் பேசிவிட்டு அன்னையின் மடியில் உரிமையாக படுத்துக்கொண்டான் கார்த்திக் .
அதை பார்த்த ரவிக்கு ஏக்கமாக இருந்தது.
வந்தனா வந்து லேசாக அண்ணாவின் தோளில் கிள்ளவும் புரிந்து கொண்டவன், நான் குளிக்கப் போறேன் “
தன்னுடைய பையை ரெடி செய்ய வந்த சென்ற போது கார்த்திக் குளித்துவிட்டு டவலோடு நின்று தனக்கு உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான்.
லேசாக அவள் கதவைத் தட்டவும் ,
“ஓ கீர்த்தி., ப்ளீஸ் ரெண்டு நிமிஷம். “
அமைதியாக வெளியில் வந்து விட்டாலும் அவனின் தோற்றம் அவளை ஏதோ செய்தது. அண்ணனுடன் பிறந்தவள் தான். இருப்பினும் இது என்ன மாயம். ஏதோ உரிமை இல்லாத உறவுக்கு மனம் ஏங்குகிறது?
“இந்தாங்க கீர்த்தி . உங்க டிரஸ் எல்லாம் இதோ இருக்கு.
“தாங்ஸ் அண்ணி “
இரவு உணவை முடித்துக் கொண்டு இவர்கள் கிளம்புவதற்கு முன் , கீர்த்தி கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்தாள் . நான் போகணுமா ? கண்களில் ஏக்கம் இருந்தது.
“ஹார்ட்டுக்கு போட்டுருக்க பூட்ட திறடி. நான் உள்ள வரணும். “
உதட்டில் தெரியாத புன்னகையுடன் கண்களில் பேசினான் அவளிடம். புக் செய்த கார் வந்து விட்டது. ரவி கீர்த்தி இருவருக்கும் கிளம்ப இஷ்டமில்லை சரி. ராஜிக்கு கூடவா? கிளம்புவதற்கு முன் ஓடி வந்து லலிதாவைக் கட்டிக் கொண்டாள் கீர்த்தி.
தான் வைத்து விட்ட பூ . நெற்றியில் இட்டு விட்ட விபூதி குங்குமம். அத்தனை அழகாக இருந்தாள் கீர்த்தி. ‘எங்க வீட்டுக்கே வந்துடு செல்லம்.’வார்த்தைகளை முயன்று முழுங்கி விட்டார் கணவனின் கை அழுத்தத்தில் .
ரவிக்கும் வந்தனாவுக்கும் ரிஜிஸ்டர் அலுவகத்தில் நல்லபடியாக திருமணம் நடந்தது.
வந்தனாவின் பிடிவாதத்தினால் கீர்த்திதான் நாத்தனார் முடிச்சு போட்டாள் .பிறகு வேறு ஒரு நாளில் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் ரிசப்ஷன் ஏற்பாடு செய்து விட்டார்கள்.
ரிசப்ஷன் நடந்துக் கொண்டிருக்க வழக்கம் போல கீர்த்தியைப் பற்றிய பேச்சுக்கள் வந்தன. யாரென்றே தெரியாத வந்தனாவுக்காக பரிதாபப்பட்டார்கள் . இந்த பைத்தியத்தை வைச்சுக்கிட்டு இந்த வந்தனா பொண்ணு என்னதான் பாடுபடப் போகுதோ? பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் தான் வாய்க்கு வந்த படி பேசிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே ரிசப்ஷனுக்கு தாங்கள் வர போவதில்லை என்று கீர்த்தியும் அவள் அன்னையும் சொல்லி விட்டார்கள். மனமுடைந்து போய் விட்டான் ரவி. வந்தனா தான் இருவரிடமும் பேசினாள். அப்போதும் சமாதானம் அடையாதவர்களை லலிதாவும் தயாளனும் சேர்ந்து கண்டிஷன் போட்டு வர வைத்தார்கள்.
அப்போதும் அவர்கள் ஓரமாகவே இருக்க வந்தனா தான் கீர்த்தியை தனக்கு அருகில் நிறுத்திக் கொண்டாள் பிடிவாதமாக.
இருப்பினும் சிறிது நேரம் கழித்து மாப்பிள்ளை பெண்ணுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் என்று சென்றவளை கார்த்தியின் கண்களும் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஊதா வர்ண டிசைனர் புடவையில் எந்த விதமான பெரிய அலங்காரமும் இல்லாமல் அட்டகாசமாக இருந்தவளை கார்த்தியின் கண்கள் மட்டும்மில்லை அவன் நண்பர்கள் என்று பல இள வட்டங்களின் பார்வையும் சுற்றிக் கொண்டிருந்தது.
மாப்பிளை பெண்ணிற்கு மாம்பழ பழரசத்தை கொண்டு வந்து கொடுத்தவளுக்கு சில சொந்தங்களின் பேச்சு காதில் விழவும் அழுதுக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றதை பார்த்து விட்டான் கார்த்தி. அவனுக்கு அவர்கள் பேச்சு நன்றாகவே காதில் விழுந்தது. இருப்பினும் சொந்தங்கள் என்றால் அப்படி இப்படி பேச தான் செய்வார்கள். தன் வீட்டு ஆளுங்களுக்கு கீர்த்தி பற்றி எதுவும் சொல்லவில்லை . பேசியவர்கள் அவர்கள் வீட்டு சொந்தங்கள் தான். என்ன செய்வது என்று யோசித்தவன்
ஏதோ சிறப்பாக செய்யப் போகிறான்…
துடிக்கும் இதயம் ..
