அத்யாயம் -16

 

அத்யாயம் -16

 

திருக்குறள்

 

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1286

லலிதா சென்று படுத்ததும்.,

கீர்த்தி குடித்த பால் கப்பையும் வாங்கி அவன் கழுவி வைக்க, லலிதா கொடுத்த வந்தனாவின் நைட்டியை மாற்றிக் கொள்ள சென்றாள் இவள் .

வந்தவளிடம் தன்னுடைய படுக்கையை அவளுக்கு கொடுத்து விட்டு இவன் ஹாலில் வந்து படுத்துக் கொண்டான்.

நான் ஹாலில் படுத்தகேரன். நீங்க இங்கேயே படுங்க என்றவளிடம் அசால்ட்டாக,

எப்ப உங்க அண்ணா வந்து பொண்ணு கேட்டாரோ அணையிலிருந்து கார்த்திக் ஹாலில் தான் வாசம் தெரியுமோ ? என்று அவன் நீட்டி முழக்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

“கார்த்திக் எவ்ளோ கேரிங் ” மனதிற்குள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள் .

இது அவன் அறை . அவன் படுக்கை. இவளுக்கு  என்னவோ மாதிரி இருந்தது . அருகே இன்னொரு கட்டிலில் வந்தனா இருந்தாலும் அறை முழுவதுமே அவனின் வாசம் தான் இவளுக்குத் தெரிந்தது.

இரவு நேரம். யாரும் இல்லாதத் தனிமை. அவன் நினைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவளுக்கு அவன் கொடுத்த முத்தங்களும் அணைப்பும் கூட அந்த நேரத்துக்கு தேவையானது தான். அவளை தைரியப் படுத்த தான் என்பது அவளுக்கு ப் புரிந்தது. நான் ஏ ன் கார்த்திக் உன்ன முன்னாடியே பாக்கல? நீ ஏண்டா என்னோட வாழ்க்கைல முன்னாடியே வரல? என்னை ஏண்டா யாரோ ஒருத்தர் கைல மாட்டி விட்ட? இவள் மனதிற்குள் அவனிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருக்க ,கார்த்திக்கின் குரல் ஹாலில் கேட்டது.

‘யாராக இருக்கும்? ஏன் பேசாம “ம்” கொட்டறான். ஏதாவது கேள் பிரண்டா இருப்பாளோ ?’ பூனை போல அடி எடுத்து வைத்து ஹாலிற்கு வரவும் அங்கே இவன் போனை அணைத்து விட்டு இவன் பப்ஜி விளையாட ஆரம்பித்தான்.

இவள் வரவும்,

“வா கீர்த்தி.. என்ன தூக்கம் வரலியா?”

பார்வை இவளிடம் இல்லை.

“என்ன மூஞ்சி கொடுத்து கூட பேச மாட்டாரோ ?”

“தண்ணி வேணுமா ?” கீழே இருந்த பாட்டிலை அவளிடம் கொடுத்தான்.

தண்ணீரைக் குடித்தவள் எதுவும் பேசாமல் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் .

சில நொடிகள் அமைதியாக இருந்தவள் ,

“நீ.. நீங்க எப்படி வீட்டுக்கு வந்தீங்க?” என்று தயக்கத்துடன் கேட்டாள் .

“மனசு ஏதோ சொல்லிச்சு. ரவிக்கு போன் போட்டேன். ரவியும் உங்க அம்மாவும் வெளியூருக்கு போய் இருக்கீங்கன்னு வந்தனா தான் சொன்னா . அது தான் சின்ன பொண்ணு  தனியா இருக்கியே. தைரியமா இருக்குறீயான்னு கேட்க தான் நான் கால் பண்ணன். “

“தேங்க்ஸ் கார்த்திக் . அப்ப ரொம்ப பயந்து போய்டேன். நீங்க வரலைன்னா அவங்க வீட்டுக்குள்ள கூட வந்துருக்கலாம்”

“இனிமே இப்படிப்பட்ட எந்த தப்பான முடிவும் எடுக்க கூடாது. சரியா?”

“ம்!”

அங்கே சிறிய மௌனம் … டிக் டிக் என்று சுவர் கடிகாரம் மட்டும் தன்னுடைய  வேலையை செய்ய ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது .

“கீர்த்தி.. இப்ப இங்க நீயும் நானும் தான் இருக்கோம்.. நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாலும் சரி இல்ல வேற எந்த முடிவு எடுத்தாலும் சரி., நீ எப்ப வேண்ணுனாலும் இந்த  வீட்டுக்கு உரிமையா வரலாம் . எதுவும் யோசிக்காத. சரியா ?”

“ம் ” என்று மட்டும் சொன்னவள் அவன் அருகில் தலைக் குனிந்து கொண்டு அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் .

அலுவலகத்தில் அவனைப் பார்ப்பது, பேசுவது  எல்லாவற்றையும்  தவிர்த்தவள் மனதில் அவன் முகம் நிழலாட ஆரம்பித்து இன்று அவனே அவள் மனதை  ஆக்ரமித்து விட்டான்.பெண் மனதில் ரூ ஆண் நுழைவது என்பது பெரிய விஷயமே அல்ல .கண்ணைப் பார்த்து  பேசும் தைரியமும்  நேர்மையும் இருந்தாலே போதும்.

கார்த்திக் கண்ணைப்  பார்த்து பேசினான். “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு திருமணம் செய்துக் கொள்”  என்று அவன் சொல்லி இருந்தால் கீர்த்தி அப்போதே சம்மதம் சொல்லி இருப்பாள் .

தன்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்தப் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண் கேட்டான். இப்போது இந்த தருணம் இருவரும் தனித்து இருக்கும் இந்த நொடி கூட, ‘என்னை பிடிக்கிறது’ என்று சொல்ல மாட்டாயா என்ற ஏக்கத்துடன் தான் அவன் முகம் பார்த்திருந்தாள் .

அவனின் நிலை அவளுக்கு என்னத் தெரியும் ? அன்னை, அத்தை இருவர் தான் பெண்கள் லிஸ்டில் அவனிடமிருந்து முத்தம் வாங்கிக் கொள்வது. இள வயது மங்கை முதன் முதலில் அவனிடமிருந்து பல முத்தங்களை வாங்கி கொண்டவளுக்கு எங்கே தன்னையும் மீறி இதழ் பதித்து விடுவேனோ என்ற எண்ணத்தில் அவன் அவளை அருகில் வைத்துக் கொண்டு கடினமாய் போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.
“நீ மட்டும் எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுடி . என்னோட விளையாட்டு எல்லாம் வேற மாதிரி இருக்கும்” என்று அவளிடம் சொன்னாலே போதும் செருப்படி நிச்சயம் . இதுல உனக்கு கிஸ்  வேற வேணுமா ராசா ? அவன் மனம் படுத்தும் பாடு அவனுக்குத் தான் தெரியும் .

அவள் முகத்தில் இருக்கும் கலக்கம் அவனுக்கு ஏதோ சொல்லி இருக்கவேண்டும்.

“இந்த நிமிஷம் உன்னோட எல்லா கவலை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு கீர்த்தி . இப்ப இங்க நீ நான் இந்த கடிகாரம். இது தான் நிஜம் ” மெதுவாக அவளின் கையை எடுத்து தன்னுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டான்.

பயத்தில் அவனைக் கட்டிக் கொண்டபோது ஏற்படாத  ஏதோ உணர்வு அவனின் கை  பட்டதுமே  அவளுக்கு மேனி சிலிர்த்தது.

தயக்கத்துடன் அவனிடம் கேட்டாள் . “இப்ப யாருகிட்ட பேசினீங்க? யாராவது பிரண்டா?”

அவள் கேட்டதன் உள் அர்த்தம் புரிந்துக் கொண்டவன்.,

“ஆமாம்” என்று தலையாட்டினான் .

இவளுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.

அதற்குப் பிறகு அவனிடம் எதுவும் பேசாமல்  சோபாவில்  இருந்த படியே கைப் பேசியை நோண்டிக் கொண்டே இருந்தவள்  அடுத்த சில நிமிடங்களில் உறங்கி விட்டாள் .

தன்னுடைய புஜத்தைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்து உறங்கும்  அவள் நிச்சயம் பைத்தியம் இல்லை. சிறிய குழந்தை தான் .  அவளை  அழகை தூக்கியவனுக்கு  விடவே மானம் இல்லை. சீக்கிரமா உன்ன இங்க உரிமையோடு தூக்கிட்டு வருவேன் செல்லம் நெற்றியில் முத்தமிட்டான். கூஸியது போலும். அவன் மார்பில்  முகம் புதைத்து  கொண்டாள் .

அடுத்த நாள் பொழுது இனிமையாகவே இருந்தது. காலையில் எழுந்து வந்தவளுக்கு அந்த இடமே சுவர்க்கம் போல இருந்தது. லலிதா குளித்து விட்டு சமையல் அறையில் இருக்க மற்ற மூவரையும் காணவில்லை. வந்தனா ஒரு குளியல் அறையில் அப்பா இன்னொரு குளியல் அறையில் இருந்தார்கள். பின் பக்கம் சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டாள் . அங்கே அவள் பார்த்த காட்சி எத்தனை அழகு?

கார்த்திக் தோளில் இரண்டு அணில்கள் அமர்ந்து கொண்டு ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தன .

“இந்தா இது வேணுமா? செம்பருத்தி பூ கொய்யா என்று அவர்களிடம் சீரியசாக இவன் பேசிக் கொண்டிருந்தான். கோயா மாத்தில் அவர்கள் ஏறியதும் அருகில் இருந்த மாமரத்தில் இருந்து பறவைகள் இவனை அழைத்தனை. அவர்களுக்கு சில தானியங்களை உணவாக அழைத்து விட்டு இவன் திரும்பினான்.

“குட் மார்னிங் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ள அவனின் கைப் பேசி அழைத்தது.

“கீர்த்தி இந்தாமா காபி” என்று கொடுத்தார். நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ஆன்டி?”

“இன்னிக்கு நீயும் கார்த்திக்கும் வேலைக்கு போகணுமில்ல. அதான் சீக்கிரமாவே ரெடி பண்ணிட்டேன். இன்னும் ஒரு அரை மணி நேரம். எல்லாம் முடிஞ்சுடும். உனக்கு இப்ப காலைல இட்லியா தோசையா ?”

“உங்களுக்கு என்ன செய்யறீங்களோ அதுவே ஓகே தான் ஆன்டி “

“பிரிட்ஜுல இட்லி மாவு இருக்கும் எடுத்து கொடேன் “

புது வீடு புது ஆட்கள் என்ற எந்த வேறுபாடும் அவபாலுக்குத் தெரியவில்லை. எல்லாரும் இயல்பாக இருந்தார்கள்.

“கீர்த்தி அவனுக்கு எப்பவும் போல சாப்பிடு வைச்சிருக்கேன். இந்தா இது உனக்கு . லெமன் ரைஸ் வச்சுருக்கேன். “

“ஏன் ஆன்டி எனக்கு தனியா செய்துகிட்டு?”

“இல்லம்மா ஆஃபீஸுல ஒன்னா உக்காந்து சாப்பிடும் போது ஒரே சாப்பாடுன்னா எல்லாருக்கும் சந்தேகம் வரும். அது தப்பாகிடும் கீர்த்திமா. அதான் “

விழி விரிய பார்த்தாள் கீர்த்தி…

அன்பு இத்தனை அழகானதா? இதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. அமைதியாக சென்று விட்டாள் .

“என்ன ஆச்சு கீர்த்தி? அம்மா ஏதும் சொன்னார்களா ?” கேட்ட வந்தனாவிடம் மனதில் இருந்ததை அப்படியேச் சொன்னாள் .

அன்போடு அவளை தோளில் சாய்த்துக் கொண்டவள் கீர்த்தியின் முதுகை நீவினாள்.

“இந்த உலகத்துல அன்பை அனுபவிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கு கீர்த்தி.”

“தேங்க்ஸ் அண்ணி “

“சீக்கிரம் கிளம்புங்க அண்ணா வைட்டிங் .”

சிரித்துக் கொண்டே அவள் கிளம்பவும், வண்டியில் ஏறுவதற்கு முன் கார்த்திக் அன்னைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறிக் கொண்டான். அதைப் பார்த்த கீர்த்திக்கு ஆசை வர ஓடிச் சென்று அவளும் லலிதாவுக்கு மெல்லிய முத்தத்தை கொடுத்தாள் .

காதல் கனவுகள், வேலை, ஷாப்பிங் நேரம் பறந்தது திருமண நாள் வந்தது. நாள் நெருங்க நெருங்க பெண்ணுக்கும் மனா மகனுக்கும் ஏதோ ஒரு விதமான நெருடல் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. லலிதாவுக்கும்தான் .

திருமணம் என்று நிச்சயம் செய்து விட்டார்கள். வந்தன இங்கே வந்து தாக்கியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். இருப்பினும் இன்னும் ராஜியிடம் இவர்கள் யாருமே சரியாய் பேசவே இல்லை. அதனால் ரவி ராஜி இருவரும் வந்தனாவை அழைத்துச் செல்ல இவர்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள்.

“என்ன ரவி எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் ?”

“இல்ல மாமா நேத்து கார்த்திக் பண்ணது எவ்ளோ பெரிய உதவி தெரியுமா? அப்படியே போன்ல நன்றி சொன்னா சரியா இருக்காது. அன்னையும் மகனும் திரும்ப நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள் .இன்னும் கார்த்திக் கீர்த்தி இருவரும் வீட்டுக்கு வரவில்லை. “

துடிக்கும் இதயம் ……….

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page