அத்யாயம் -23

 

திருக்குறள்

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292

 அத்யாயம் -23

இங்கே அரண்மனையில் ……..

தனக்கு மனைவியாக வந்தவள் யாரென்று கண்டு பிடித்துவிட்ட அவளின் கள்வன் , “ஏய்! நீ சின்ன பொண்ணு தானே என்று கேட்கவும், ஆமாம் என்று அமைதியாக தலையாட்டியவள் , அவன் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு சொன்னாள்  

 “நீங்க எனக்கு சாமி. உங்களோட எச்சில் எனக்கு பிரசாதம்.”

இதே வார்த்தையை  அவள்  சின்ன பெண்ணாக இருந்த போது சொல்லி இருக்கிறாள் அது அவனுக்கு எப்போதும்  பசுமரத்து ஆணி போல நினைவில் இருந்தது .

அமைதியாக அமர்ந்திருந்ததவன் இப்போது அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டான். “நீ என் உரிமை” வாயால் சொல்லாதவன் அவளை இடையோடு கட்டிக் கொண்டு பின் கழுத்தில் முகம் வைத்துக் கொண்டான். இது காதல் என்று சொல்லி விட முடியவில்லை. அதே சமயம் இது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.

பழைய நினைவுகளில் இருந்தவனை அவள் குரல் தீண்டியது.

“சார் !” அவளின் பின் தோளில் முகம் புதைத்தவனுக்கு அவளிடம் ஆசையாய் பேச வேண்டிய பல கதைகள் அவனுக்கு இருந்தன. காட்டுவதற்கு பல மெடல்கள், சான்றிதழ்கள், புகைப் படங்கள் நிறைய இருந்தன. சித்தி சித்தப்பாவிடம் காட்டி இருந்தாலும், தன்னுடைய உறவுகள் தான் அவர்கள் என்றாலும் அவன் மனதில் ஏதோ ஒரு குறை இருந்துக் கொண்டே தான் இருந்தது.

“ராஜா சொல்லுடி!” லேசான உதட்டின் அசைவு ., அவளின் தோளில் மீசை உரச அவளை என்னவோ செய்தது .

மற்றவர்களும் அவனை ராஜா என்று தான் சொல்வார்கள். ராஜாவாகவே நடத்துவார்கள் அத்தனையும் சித்தப்பாவின் கட்டளை. இருப்பினும் இவள்.. .. அவளின் மழலை மொழியில் கொஞ்சி சொல்வதை கேட்பதில் இவனுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம்.

மற்றவர்கள் ராஜா ராஜா என்று சொல்லி சொல்லி இவனால் யாரிடமும் நெருங்க முடிந்ததில்லை. ஆனால் இவளோ,

“ராஜா இது என்ன? ராஜா அது என்ன? தொன தொனவென்று பேசிக் கொண்டே இருப்பாள். யாருக்கும் இவனிடம் அத்தனை பேச இத்தனை தைரியம் வந்தது இல்லை. சிறு குழந்தைகளை வேலைக்கு வைக்கக் கூடாது. எத்தனை முறைதான் சித்தியிடம் சொல்வது? இவள் மட்டும் வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். மற்ற சிறுவர்கள் யாரும் வேலைக்கு இல்லை .

“அவ இங்க வேலைக்கு வரலப்பா. அவ அம்மா அப்பா ரெண்டு பேருமே இங்க தான் அரண்மனைல இருக்காங்க . அவங்க இங்க வேலை செய்யும் போது பள்ளி முடிச்சுட்டு அவளும் இங்கே வந்துருவா. வேலைக்குன்னு அவ இங்க வர்றதில்லை . சாக்கு சொன்னார் சித்தி. உண்மை என்று நம்பியவன் ,சரி என்று விட்டான் . அவன் வருடா வருடம் ஹாஸ்டலில் இருந்து வரும் விடுமுறை நாட்கள் எல்லாம் அவள் தான் அவனுக்கு பொழுது போக்கு.

“ராஜா சொல்லுடி “

அவன் கன்னத்தை அமர்ந்த வாக்கிலேயே அவள் கன்னத்தோடு சேர்த்துக் கொண்டவள் அவனைக் கொஞ்சினாள் .

“என்னாச்சு எங்க ராஜாவுக்கு?”

“தெரில டி. மனசுக்குள்ள எதோ ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் “

சிறிது நேரம் அப்படியே மௌனமாக அமர்ந்திருந்தார்கள் . இருவருமே இது வரை இந்த மாதிரி எண்ணத்தில் இருந்ததில்லை. ஒரே அலுவலகத்தில் வேலைப் பார்த்த போதும் கூட.

“ராஜா !”

“ம் !”

நான் எழுந்துகட்டுமா ?”

“ஏண்டி ?”

“உங்களுக்கு கால் வலிக்கும் “

“நீ என்னடி தக்கையா தானே இருக்க?அதெல்லாம் வலிக்காது “
“பயில்வானா இருந்தாலும் சின்ன கரண்டியை எவ்ளோ நேரம் தூக்க முடியும்?”

பிடிவாதமாக அவன் கையை விலக்கிவிட்டு எழுந்துக் கொண்டாள் அவள்.

பிறகு வந்த சில நேரங்கள், சில பொழுதுகள் இப்படித் தான் எதுவும் பேசாமல் மனதோடு மனதாக எதுவும் பேசாமல் அமர்ந்துக் கொள்வான் . அப்போதெல்லாம் அவனுக்கு ஏதோ அலுவலகத்தில் பிரச்சனை என்றுப் புரிந்துக் கொள்வாள் .

அன்றைய இரவுகளில் அளவுக்கு மீறிய தேடுதல் இருக்கும் அவனிடம்.

சின்னப் பெண்ணிடம் நான் எப்படி அப்படி நடந்துக் கொண்டேன். அவர்கள் முதல் தேடல் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு குற்ற உணர்ச்சியை விட வெட்கம் தான் வந்து தொலைத்தது .

“வேண்டாண்டி!” அவன் சொன்ன போதும் வேணும் என்று சொல்லி அவனை அவளுடையவனாக அவள் மாற்றிக் கொண்டதா அல்லது அந்த நேரத்திலும் வெட்கம் கொண்டு கண் மூடாமல் அவனையே விழி விரித்துப் பார்த்து கன்னத்துத் தழும்பில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டு கடித்து சேட்டைகள் செய்ததா? எப்போதுமே காலையில் எழுந்துகொண்டு கண்ணாடியில் பார்க்கும் போது அவன் அத்தனை எல்லாம் அவன் முகத்தை ரசித்ததில்லை. பெயருக்கு பார்த்துக் கொள்வான் . தலை சீவுவான். அவ்வளவுதான்.

வெளியில் செல்லும் நேரங்களில் கார்த்திக் உடன் வந்தால் அவனைப் பெண்கள் பார்க்கும் விதம் என்ன? தன்னை பார்க்கும் விதம் என்ன? அவனுக்குத் தெரியும். பல நாட்கள் அதைப் பற்றி கவனிக்காதவன் மனதில் சில நாட்கள் வருத்தம் தானாகவே வந்துவிடும் . ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன? மனம் என்பது பாடாய் படுத்துகிறதுதான்.

விபத்து நடந்த இடத்தில் நதன்னுடைய பழைய கால நினைவுகளை நினைத்துக் கொண்டே இருந்தவன், இப்போது நிலவரம் என்ன என்று நிகழ் உலகத்திற்கு வந்தான் .

அங்கே இருந்த இரு சக்கர வாகனங்கள் நகர்நது நகர்ந்து அருகில் இருந்த ஏதோ சந்துகளில் புகுந்து செல்ல ஆரம்பித்தார்கள். இன்னும் சில ட்ராபிக் போலீஸ் அங்கே வந்து இறங்கினார்கள். வேறு சில காவல் அதிகாரிகளும் தான். அங்கே பரபரப்புடன் வேலை நடந்துக் கொண்டிருந்தது. தன்னுடைய வீட்டிலும் இதே போல ஒரு நாள் காலை இவன் உடற் பயிற்சி முடித்து விட்டு வந்த நேரம் அவன் மனைவி சாமி அறைக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு விட்டு அவன் அருகில் வந்தாள் . இவளை சாமியறைக்குள் செல்லக்கூடாது என்று சித்தி அன்று மிரட்டியதை பற்றி அவள் ராஜாவிடம் எதுவும் சொன்னதில்லை. அதே போல தான் சமையல் அறையும். அவர்களைப் பற்றி அவனிடம் எதுவும் பேசக் கூடாது என்று இல்லை. பேசினால் மறு நொடி தான் அங்கே இருக்க முடியாது என்பது அவளுக்கு நன்றாகவேத் தெரியும். அவர்களின் பாசம் என்ற பிணைப்பிற்குள் அவனை சங்கிலி இல்லாமல் அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள். மீறியும் ஏதாவது சொன்னாலும் அதைப் பற்றி எல்லாம் இவன் கவலை கொள்பவன் இல்லை .

“வீட்டில் வேலை செய்வதற்கு என்று பல பேர் இருக்கும்போது என் மனைவி சமையல் அறைக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தான் சொல்லுவான் .அதுவும் இல்லாமல் அவளுக்கு ராஜா பற்றியும் நன்றாகவே தெரியும் அவனின் சித்தி சித்தப்பா பற்றியும் நன்றாகவே தெரியும் . அவர்களை இவள் தான் சிறுவயதில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாளே. கெட்டதில் ஒரு நல்லதாக இன்னும் அவர்களுக்கு இந்த சின்னப் பொண்ணு பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை .

எனோ சூர்யாவுக்கும் இவளைப் பற்றி அவர்களிடம் சொல்வதற்கு வாய் வரவில்லை. அது ஏன்?

சோபாவில் வந்து அமர்ந்து கால் மீது கால் போட்டு அமர்ந்துக் கொண்டவன் தினசரியை கையில் எடுத்துக் கொண்டான்.

பூஜையை முடித்து விட்டு அவள் அறைக்கு வரவும், இவனும் குளித்து முத்துவிட்டு வந்தான்.

ஈரத் தலையுடன் வந்தவனை கவனித்தும் பார்க்காதவள் தன்னுடைய தலையைத் தான் உலர்த்திக் கொண்டிருந்தாள் .

“என்னடி! ரொம்பதான் அலட்டிக்கற ? முதல்ல என்ன கவனி.” நாற்காலியில் அமர்ந்து கொண்டு இவளின் இடை பிடித்து இழுத்தான்.

அவன் நின்றுக் கொண்டால் இவள் நாற்காலி மீது ஏறி நின்று தான் துவட்ட வேண்டும். அது போன்ற நிகழ்ச்சிகளும் அவர்களின் வாழ்வில் நடந்திருக்கிறது.

“ப்ச். விடுங்க “

“ஏண்டி!”
அது இன்னிக்கு ஆடி ஆரம்பம்.”

“அதுக்கு “

பொதுவா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்குப் போவாங்க. எனக்கு தான் அம்மா வீடு இல்லையே ” அவளின் குரல் ஏக்கமாக வந்தது .

“அதுனால என்ன இப்ப? அதான் நான் இருக்கேனே “

“இல்லங்க அது இல்லங்க. இப்ப இந்த நேரம் கணவன் மனைவி சேரக் கூடாது,

“சேர்ந்தா என்னவாம்?” இத்தனை அழகாய் புருவம் ஏற இறங்க பார்த்தா மங்கை எப்படி தன்னை அடக்கிக் கொள்வாள்! அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து,

அப்புறம் குழந்தை சித்திரை மாதம் பிறக்குமில்லை?

“ப்ளீஸ் டீ ஜில்லு.என்னால முடியல “

“என்ன முடியல ?” புரியாதவள் கேட்டாள் .

“அந்த காலத்துல தடுப்பு சாதனங்கள் இல்ல. அதுனால் அப்படி வழக்கம் வச்சுருக்கலாம். இப்ப அப்படியா? உனக்கு எந்த டேஸ்ட் …” அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்கும் அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள் .

“சீ பகலில் என்ன இது அசிங்கமா?”

“ஓ நைட்டுன்னா ஓகேவா ?” லேசாக சீட்டி அடித்தான்.

“ம் ஹூம் ! “சொன்னவள் முகம் பார்க்க முடியாமல் இரு கைகளையும் முகத்தை மூடிக் கொண்டாள் அவள். அவன் அவள் கையை பிரித்து அவளின் வெட்கத்தை பார்த்த நேரம் அங்கே …

“வாங்க இங்க தான்.” இந்த மரம் தான் சித்தியின் அதிகாரக் குரலில் இருவருமே அவசரமாக பால்கனி வழியே எட்டிப் பார்த்தார்கள். அங்கே சித்தி ஏதோ ஒரு மரத்தை கைக் காட்டி வெட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியானவள் கீழே ஓடினாள். இவனும் அவள் அவசரமாக செல்ல உடைகளை போட்டுக் கொண்டு அவசரமாக அவள் பின்னே விரைந்தான்.

“அத்தை என்ன பண்ணறீங்க?” என்று இவள் குரல் உயர்த்தவும், பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து விட்டார் சித்தப்பா.

“என்ன டீ என் பொண்டாட்டி கிட்டையே குரல் உசரது ?”

“சித்தப்பா! சாரி சித்தப்பா” அவசரமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.

தலையை உலுக்கிக் கொண்டவள் தன்னுடைய பிரச்னையை ஓரம் ஒதுக்கி விட்டு, “எதுக்கு இவங்களை கூப்பிட்டுருக்கீங்க ? இந்த வேப்ப மரத்தை வெட்டவா ?”
அவளுக்கு குரல் வெளியில் வரவில்லை.

“ஆமா! என்ன இப்ப? நிறைய பூச்சி வருது. அதுதான் வெட்டறதுக்கு ஆளக் கூப்பிட்டேன்.” கூசாமல் சித்தியின் வாயில் இருந்து பொய் வந்தது. அந்த இடமும் அதை சுற்றி இருந்த இடங்களும் சேர்த்து மகனுக்கு ஒரு புல் வெளி கட்டுவதற்குத் தான் இப்போது இந்த அவசரம் .

வேப்ப மரத்தில் இருந்து பூச்சியா? இவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றுத் தெரியவில்லை. மனதில் நினைத்ததை அவள் வெளியிலும் கேட்டு விட்டாள் .

“தாமரை! நீ உள்ள போ. இங்க நிக்காத . “கணவனின் குரல் ஓங்கி ஒலித்தது. இதயா இப்போது தாமரை ஆகி விட்டது. வெறித்த பார்வையுடன், “நா எதுக்கு போகணும்? நான் எங்கையும் போய் ஓடி ஒளிய மாட்டேன். இந்த மரத்தை வெட்டக் கூடாது. இது நமக்கு குளிர்ச்சியான காத்து தருது. நான் என்ன ஆனாலும் சரி. வெட்ட விட மாட்டேன். “தீர்மானமாக சொன்னாள் .

குளிச்சியான காத்து வேணுன்னா ஏ சி போட்டுக்கோ. எத்தனையோ செலவு பண்ணற என்னோட பையன் உனக்கு ஒரு ஆயிரம் ரூபாக்கு கரண்ட் செலவ கேக்கப் போறானா என்ன? அது சரி. ஏ ஸி ன்னா என்னன்னு உனக்குத் தெரியுமா?”

பார்வையில் தான் எத்தனை இளக்காரம் !

இளக்காரமாக கேட்ட சித்தியை இவள் கேவலமாகப் பார்த்தாள் .

“நீ உள்ள போ இங்க நிக்காத” மீண்டும் சூர்யாவின் குரல்.

“இல்லங்க! நான் இங்கேயிருந்து போக மாட்டேன் . இந்த மரத்தை விடவும் விட மாட்டேன்.”

“இங்க பாரு தாமரை ஆப்ட்ரால் இந்த மரத்துக்காக நீ நம்ம உறவுல விரிசல் ஏற்படுத்தற “

“ஆப்டரால் மரமா ? இதோட விலை என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? “

“விலை தானே உனக்கு எவ்ளோ பணம் வேணுமோ உனக்கு நான் தரேன்”அவள் சொன்னதன் அர்த்தத்தை புரியாதது போல காட்டிக் கொண்டார் சித்தப்பா.

“என்ன மரத்துக்கு விலை பேசறீங்களா? அது ஒரு உசுரு. உங்களுக்கும் ஒரு பிள்ளை இருக்கு . நாளைக்கு அவருக்கும் கல்யாணம் ஆகி பிள்ளை குட்டியோட நல்லா இருக்கணும் . நினைவுல வச்சுக்கோங்க. அம்மனா வழிபடற வேப்ப மரத்தை யாராவது ஆடி மாசம் வெட்டுவாங்களா?”

தன்னுடைய மகன் பற்றி பேச ஆரம்பித்ததும் சித்தி இவள் அருகில் வந்து பளார் பளார் என்று அறைய ஆரம்பித்து விட்டார் .

சூர்யா வந்து அவரை தடுக்கவும் கோபம் கொண்ட சித்தப்பா சூர்யாவிடம் ,

‘இனி நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு” என்று கூறிவிட்டு வேகமாக அவர்களின் அறைக்குச் சென்று விட்டார்கள் .

“அண்ணா இப்ப இந்த மரத்தை வெட்ட வேணாம். “சொல்லி விட்டு கையில் இருந்த பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டான் சூர்யா.

கோபமாக அறைக்கு வந்தவன் பின்னோடே, “என்னங்க! என்னங்க!” என்று பின்னாடியே ஓடி வந்தாள் தாமரை.

அவள் குரல் அவனின் காதில் விழுந்ததா என்றுக் கூடத் தெரியவில்லை. அவள் திருமணம் ஆகி வந்த நாளில் இருந்தே அவளுக்கு நிறைய அவமானங்கள் தான். உடல் அளவில் எந்தக் கொடுமையும் அவளுக்கு நடக்கவில்லைஎன்றாலும் அவளை ஜாதி தெரியாத அனாதை நாய் என்று குத்திக் கொண்டே தான் இருந்தார்கள். சில மாதங்களில் அது பழகி விடும் என்றாலும் அவர்கள் சொன்ன ஒரு மாதத்திற்குள் அவளை இந்த வீட்டை விட்டு எப்படி வெளியில் அனுப்பப் போகிறார்கள் என்ற பயம் அவளுக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது அன்று சூர்யாவிடம் எனக்கு உன்னுடைய குழந்தை வேண்டும் என்று கேட்டவளுக்கு இப்போது அந்த எண்ணம் துளியும் இல்லை . தனக்கு இத்தனை மரியாதைக் கிடைக்கும் பொழுது அனாதையான தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் கதி என்னவாகும் அல்லது குழந்தை பிறக்க தான் விட்டுவிடுவார்களா அது வயிற்றிலேயே இவர்கள் அழிப்பதற்கு எதுவும் செய்வார்கள் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்து விட்டது .

“என்னங்க ப்ளீஸ் நான் சொல்லறதை கொஞ்சம் கேளுங்களேன்.” கெஞ்சியவள் கன்னங்களை அழுத்திப் பிடித்தவன்,

“இங்க பாரு! இந்த வீட்டுல என்ன நடந்தாலும் சரி என்னோட சித்தி சித்தப்பாவை எதிர்த்து நீ ஒரு வார்த்தை பேச கூடாது.” நொடியில் சிவந்திருந்த அவன் கண்கள் அவளுக்கு கிலியைக் கொடுத்தது.

“என்னங்க நான் என்ன தப்பு பண்ணேன். அவங்க தான் ..”

” இங்க பேருக்கு மட்டும் தான் நான் ராஜா. மத்தபடி இங்க அத்தனையும் சித்தப்பாவும் சித்தையும்தான் அவங்கதான் ராஜா ராணி அவங்க வச்சதுதான் சட்டம். அத மட்டும் மனசுல வச்சுக்கோ . என்னைக்குமே நீ இந்த வீட்டுக்கு ராணி ஆக முடியாது “

மீண்டும் ஏதோ சொல்ல வாய் எடுத்தவளை தடுத்தவன் ,

“வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு எப்படி மரியாதை குடுக்கனுன்னு உனக்கு தெரியுமா? அதுக்கு வீட்டுல நாலு பேரோட இருந்திருக்கணும். அது எல்லாம் ஆசிரமத்துல வளர்ந்த உனக்கு எங்க..”

“நீ அனாதை”என்பதை அவனே சொல்லி காட்டி விட்டான்.

அதற்குப் பிறகு வந்த நாட்கள் கணவன் மனைவி இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை.

துடிக்கும் இதயம் ……….

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page