அத்யாயம் -8

 

 

திருக்குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -18

அத்யாயம் -8

தன்னுடைய குழந்தையைப் பற்றிய எண்ணம் ஓடும்போது மனதில் ஏதோ ஒரு வாசம் வரத் தான் செய்கிறது ….

 

அது சரி அடியேங்கிறதுக்கு பொண்டாட்டியக் காணுமாம். அதுக்குள்ள ஏழாவது புள்ளைக்கு இவரு பேரு வைச்சுடுவாரு போல இருக்கே . இதை எல்லாம் வீட்டை விட்டு பொண்டாட்டிய விரட்டறதுக்கு முன்னாடி இந்த அறிவு இருந்திருக்கணும்

 

 ஏன் என்றுத் தெரியவில்லை இன்று அவனுக்கு அவளின் நினைப்பாகவே இருக்கிறது. காலை இட்லி கடையில் போட்டிருந்த கோலம் முதல் இதோ கண்ணில் தெரியும் குழந்தைகள் வரை அவளையே நினைவுக்கு கொண்டு வருகின்றன.

வேண்டாம். அவள் நினைவு எனக்கு வேண்டாம். ராட்சசி., நம்ப வைச்சு ஏமாத்தின துரோகி ..

அவனது இந்தக் கோபத்திற்கு காரணம் அவள் தானா அல்லது முந்தைய நாள் அவனுக்கும் அவனை தம்பி அதாவது சித்தப்பா மகனுக்கும் நடந்த சண்டையாக காரணமாக இருக்குமா  ?

 

 என்றுமே அவன் தன்னுடைய சித்தப்பா மகனை தன்னுடைய சொந்த தம்பியாகவே தான் எண்ணி கொண்டிருக்கிறான். அவன் மீது தனக்கு முழு உரிமை உண்டு என்று அண்ணன் நினைத்தாலும் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் ஆதவன் காட்டிக் கொண்டிருக்கிறான். தொழில் முறை சந்திப்புகளுக்கு உடன் அழைத்துச் சென்றபோது,

” உங்க மூஞ்சிய பாக்கவே அருவருப்பா இருக்கு, எனக்கு போகரை எந்த இடத்துலயும் மரியாதை இல்லை. இனி நான் உங் கூட எங்கையும் வரமாட்டேன்” என்று தெளிவாக்கினான் . அது முதல் அவனை இவன் எங்கும் அழைக்கவும் இல்லை. அழைத்துச் செல்வதும் இல்லை.

அவன் சென்னையில் எங்கோ தனியார் நிறுவதில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பது தான் தெரியும். மற்ற விவரம் இதும் சூர்யாவுக்குத் தெரியாது. ஆனால் முன்பு ஒரு முறை அவன் தன்னுடைய தோழர்களுடன் வந்து தங்கி இருந்தான். அப்போது தாமரையும் வீட்டில் இருந்தாள் . தாமரை இவனிடம் சொன்னது.

“என்னங்க நான் வாசல்ல கோலம் போட்டுக்கிட்டு இருந்தேனா ? அப்பா ஜம்முன்னு கோரல் கிறீன் கலர்ல பட்டுப் புடவை காட்டிகிட்டு ஒரு உருவம் மெஜந்தா கலர் பார்டர். காஞ்சிபுரம் பட்டு புடவைய கட்டிக்கிட்டு ..என்று ஆரம்பித்தாள்.

அவள் கையில் இருந்த டப்பாவை வாங்கி கீழே வைத்து விட்டு

அவளை தன் மடி மீது அமர வைத்துக் கொண்டான் .

“காஞ்சிபுரம் பட்டுபுடவை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு வந்து நின்னாளாம் . அதுனால என்னோட ஜில்லுவுக்கும் காஞ்சிபுரம் பட்டு வேணுமாம். சரியா?”

“ப்ச்! அது இல்லங்க..பட்டு புடவை கட்டிகிட்டு வந்தது பொண்ணு இல்ல. பையன்.” அவள் விழி விரிக்கவும் …

“ஜில்லு எனக்கு பொறுமை போகுது. கிளைமேட் சேன்ஜ் உன்ன ரொம்பப்படுத்துது போல என்று சொல்லி விட்டு ஜாகிங் ஷுவை காலில் போட்டுக் கொண்டு லேஸைக் கட்டினான்.

“நான் சொல்லறதை நீங்க நம்பினாலும் சரி இல்லன்னாலும் சரி அது தான் நிஜம். உங்க தம்பியோட பிரண்டு போல. அது பாய் பிரண்டா இல்ல கேள் பிராண்டான்னு கூட தெரியல கருமமே.” என்று முகத்தை சுளித்துக் கொண்டாள் .

“என் ஜில்லு நீ கூடவா இப்படி நினைக்கற. ஒரு வேளை அந்த மாதிரி இருந்தாலும் அதுல அவங்க குததம என்ன? இல்ல என்னோட தம்பி அவங்ககிட்ட நட்பா இருக்கறதுல உனக்கு என்ன பிரச்சனை?

“இயற்கையா அந்த மாதிரி பிறக்கறவங்க மேல எனக்கு எந்த அருவருப்பும் இல்ல. ஆனா அதையே செயற்கையா பண்ணா என்னால மென்டலா ஏத்துக்க முடியலைங்க “

“சரி அந்த பையன் இயற்கையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்?”

“இயற்கையா இருக்கறவங்க இந்த மாதிரி நம்மளை ஏளனமா பாக்க மாட்டாங்க. அந்த பையன் பார்த்த அந்த பார்வை இருக்கே. ஒரு நிமிஷம் நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா? கீழ அழகா ப்ளீட்ஸ் வச்ச பட்டுப் புடவை. அட யாருடா இதுன்னு தலை நிமிர்ந்து பார்த்தேன். மேல குர்தா. கிராப்பு தலை. முகத்தை பார்த்து ஆடிப் போய்ட்டேன்.”

அன்று அவள் சொன்னபோது இவன் நம்பவில்லை. ஆனால் அந்த பையன் திரும்பி வரும்போது இவளே காட்டவும்தான் நம்பினான். இதைப் பற்றி

சித்தப்பாவிடம் கேட்டபோது,” நம்ம பையன் தானே. எந்த தப்பு வழிக்கும் போக மாட்டான் என்றார். அப்படியே அவன் ஏதாவது தப்பு செய்தாலும் சின்னப் பையன் தானே விட்டு பிடிப்போம்” என்பார்.

சித்தியோ கேக்கவே வேணாம்.

“ராஜா! அவன் எந்த தப்பு செய்தாலும் அவனைக் கண்டிக்கற உரிமை உங்களுக்கும் இருக்கு. ஆனா அதே சமயம் அவன் உங்களை விட ஆறு வயது சின்னவன். நீங்க கையில வாங்கினப் பிள்ளை அதை மட்டும் மறந்துராதப்பா” என்பார்.

இதையே சொல்லிச் சொல்லி அவனை தன்னுடைய தம்பி என்பதை விடவும் தன்னுடைய முதல் குழந் தை என்றே நினைக்க ஆரம்பித்து விட்டான் சூர்யா. என்னதான் இருந்தாலும் அவன் நேற்று செய்தது மிகப் பெரிய தவறு தான். அது தவறா? தப்பா ?

 அவனை நேற்று கண்டிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஏன்? அவன் எல் ஜி பி டி க்யூ என்னும் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டான். அவனின் முகத்தை தொலைக்காட்சிகளும் கைபேசியில் வரும் செய்திகளும் என்று எல்லா இடங்களிலும் பரவலாகவே காண முடிந்தது. முக்கியமாக பலவிதமான போஸ்டர்களிலும் அவனுடைய முகத்தை காண முடிந்தது .சென்னையில் ஒட்டப் பட்டிருந்த அந்த போஸ்டர்கள் கூட செய்திகளில் வலம் வந்தது. அதைப் பற்றி சில மக்களிடம் மைக்கை நீட்டி நீட்டி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவருமே அருவருப்பானது தான் பதில் அளித்தார்கள். பலர் இதுங்க இந்த மாதிரி திரியுதுங்களே வீட்டுல இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சும் இப்படி திரிய விட்டுருக்காங்களா ? இது குடும்பத்திற்கு எத்தனை பெரிய அவமானம் ?

ஒரே பால் இன சேர்க்கை என்பது சரியானது தான் என்பது போலவும் அத்தகையவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும் இவர்களின் போராட்டம் இருந்தது. அதுவும் இல்லாமல் இதை சித்தி சித்தப்பாவால் தாங்க முடியுமா விஷயத்தை பெரியவர்களிடம் சொல்லாமல் தானே கையாள்வது என்று முடிவு செய்துவிட்டு தான் அண்ணன் தம்பியிடம் சென்று இதைப் பற்றி பேசியது .அதற்கு அவன் கேட்ட கேள்விகளும், கொடுத்த பதில்களும் மிகவும் அதிகம் தான். அதை விட அவனின் பேச்சு இவனுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது .

“முதல்ல என்ன வந்து கேள்வி கேக்க நீங்க யாரு? அப்பா அம்மா இல்லாத அனாதை நீங்க. போனா போகுதுன்னு என்னோட அம்மா உங்களுக்கு சோறு போட்டு வளர்த்தாங்க. அம்மா இல்லாத நீங்க என்னோட அம்மா முந்தானைல வந்து ஒளிஞ்சுக்கிட்டீங்க. அன்னிக்கே எங்க அம்மாவும் அப்பாவும் உங்களை வீட்டை விட்டு தொரத்தியிருந்தா சொத்து இருந்தாலும் தெருல தான் இருந்திருப்பீங்க .

 எங்க அம்மா உங்களை தலைல தூக்கி வச்சு ஆடினத்துக்கு நீங்க என்ன கொடுத்தீங்க பதிலுக்கு ?

அவங்களோட பெத்த புள்ளைக்கு ஒரு வாய் சோறு கூட ஊட்ட விடாம என்ன இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாதுன்னு சொல்லி பார்சல் பன்னி அனுப்புனீங்க. நீங்க ஹாஸ்டலுக்கு போனீங்க. அதனால நானும் ஹாஸ்டலுக்கு போகணும் உங்களுக்கு அம்மா அப்பா இல்லாத அனாதை நீங்க அதனால ஹாஸ்டலுக்கு போனீங்க ஆனா நான் என்னுடைய அம்மா அப்பா எல்லாரும் என் கூடவே இருந்தும் நான் அந்த ஹாஸ்டல்ல அனாதை மாதிரி எத்தன நாள் அழுதிருக்கேன் தெரியுமா உங்களுக்கு? எத்தனை நாள் பயந்து போய் பயந்து போய் பெட்டுல யூரின் பாஸ் பண்ணி அடி வாங்கி இருக்கேன்னு தெரியுமா? எல்லாத்துக்கும் காரணம் யாரு நீங்கதான் . என்னோட வாழ்க்கையில அன்பு பாசம் எல்லாத்தையும் இழந்து அனாதை மாதிரி நான் சுத்திக்கிட்டு இருக்கேன்னா அதுக்கு காரணம் நீங்கதான். அது மட்டுமா ?உங்களுக்கு மனசுக்குள்ள என்னை பார்த்து பொறாமை. உங்களுடைய முகத்தில் இருக்கிற இந்த அசிங்கமான காயம் உங்களுடைய அசிங்கமான மூஞ்சி உங்ககிட்ட எந்த பொண்டையும் நெருங்க விடவில்லை. பட்! எல்லாரும் என்னுடைய அழகை பார்த்து எனக்கு பின்னாடியே வராங்க. அன்னிக்கு என்ன அழ அழ வச்சு ஹாஸ்டலுக்கு அனுப்பி வச்சீங்களே அந்த ஆதவன் இப்ப இல்ல. இப்ப நான் அடல்ட். எனக்குன்னு தனியா நிறைய கருத்துகளும் திங்கிங்கும் இருக்கும் உங்களுக்கு எங்க அதெல்லாம் பத்தி புரியப் போகுது? போங்க எப்ப பாத்தாலும் உங்களுடைய பிசினஸை கட்டிக்கிட்டு அழுங்க. ஒரு கல்யாணம் இல்லை பத்தாயிரம் கல்யாணம் பண்ணாலும் ஒருத்தியும் உங்க கூட இருக்க மாட்டா . என்னுடைய அழகுக்கும் அறிவுக்கும் பொண்ணுங்க மட்டுமில்ல பசங்களும் எனக்கு பின்னாலேயே சுத்தறாங்க தெரியுமா என்ற தாழ்ந்த குரலில் அவன் சொல்லவும் இவனுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.

 இது கட்டுப்படுத்தக்கூடிய அளவில் தான் இருக்கிறதா ? இருவருமே ஹாஸ்டலில் தங்கி படித்தாலும் அண்ணனுக்கு இருக்கும் கண்டிப்பு எப்போதுமே இவனுக்கு இருந்தது இல்லை . அவன் என்றால் தனி செல்லம் தான் இவன் வருடத்திற்கு இரண்டு முறை வரும்பொழுது அவன் வருடத்திற்கு நான்கு முறை வரும்படி அவனுக்கு பள்ளி அமைந்தது . இவன் இப்படி பேசுகிறான்? எப்போதுமே சித்தி இவனிடம் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தி தான் சூர்யா பார்த்திருக்கிறான். இப்போது கூட பெற்றவள் அழைத்ததன் பேரில் தான் அவன் இங்கே தங்குவதற்கு என்று இரு தினங்களுக்கு வந்திருக்கிறான்.

இத்தனை பெரிய விஷயத்தை எப்படி நான் சித்தி சித்தப்பாவிடம் வெளிப்படுத்துவேன் என்ற கவலையில் இரவெல்லாம் சரியாக உறங்கவில்லை சூர்யா .

இப்போது இந்த பிரயாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கலாம் ஆனால் அவனுக்கு இந்த பிரயாணம் இப்போது மிக அவசியம் அவனுக்கு வீட்டில் தம்பியுடன் இருக்க பிடிக்கவில்லை. எங்கேயாவது ஓடிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது அதுவுமில்லாமல் எங்கே., தான் அவனை மீண்டும் சந்தித்தால் அவனை அடித்து விடுவோமோ என்ற பயமும் சூர்யாவுக்கு இருந்தது. இவன் அடித்தால் வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் எல்லாம் இப்போது அவன் தம்பி ஆதவன் இல்லை என்பதும் புரிந்து போயிற்று. அதேப் போல அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது? எங்கேயாவது கொன்செலிங் அழைத்துப் போகலாமா? என்ற எண்ணமும் சூர்யாவுக்கு வரத்தான் செய்தது. இருப்பினும் எல்லாமே அவன் ஒத்துழைத்தால் தான் உண்டு. எங்கே எப்படி என்ன செய்வது என்று அவனுடைய வாழ்க்கையில் முதல்முறையாக தீர்மானமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தவித்துப் போய் இருக்கிறான் சூர்யா . அதுவே இப்போது அவன் கிளம்பி வருவதற்கான முக்கியக் காரணம் .

  இந்த பிரயாணம் அவனை பல முடிவுகளை எடுக்கவும் வைக்கும். எடுத்த முடிவுக்கு வருந்தி அழவும் வைக்கும் .

அவளுக்காக அவனின் துடிக்கும் இதயம்…….

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page