அத்யாயம் -9

திருக்குறள்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -19

 

அத்யாயம் -9

சூர்யாவுக்கு இப்போது இதைப் பற்றி யாரிடமாவது தனக்கு இப்போது பேசியேத் தீர வேண்டும். இல்லை என்றால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. யாராவது தனக்கு ஒரு தீர்வு சொல்ல மாட்டார்களா என்று அவன் மூளை குழம்பிக் கொண்டிருந்தது அவனுக்கு யோசனைக்கு வந்தது என்னவோ கார்த்திக் தான். இருப்பினும் கார்த்திக் இவனோடு இப்போது இல்லை. எத்தனையோ உயிராக, உயிர் நண்பனாக இருந்தவன் கார்த்திக் ஏதோ திடீரென்று தன்னுடைய மாமாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் சீரியஸ் ஆக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனே தான் செல்ல வேண்டும் என்று சென்றவன் கெட்ட நேரமாக தன்னுடைய மாமாவை இழந்து விட்டிருந்தான்.பிறகு அவனால் அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை அவன் இப்போது மைசூரில் தான் இருக்கிறான் . அத்தையின் தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் சொன்ன காரணம் உண்மைதான் இருப்பினும் இவனிடம் அவனுக்கு பெரியதாக தொடர்பு எதுவும் இல்லை அப்படியெல்லாம் தொடர்பை துண்டித்துக் கொண்டு போகிறவன் கார்த்திக் இல்லை.

 

இருப்பினும் ஏன் இந்த ஒதுக்கம் என்றும் இவனுக்கு தெரியவில்லை அதைவிடவும் அவன் விரும்பியே தன்னை விட்டு ஒதுங்கி செல்கிறான் என்னும் பொழுது இவனும் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து அழைத்து பேசி அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதனாலேயே முதலில் சிறியதாக இருந்த பிரிவு இப்போது ரொம்ப பெரிய பிரிவாக மாறிவிட்டது எப்படி?

 

சூர்யாவுக்கு என்று பெற்றவர்கள் இல்லை, பெரியதாக நண்பர்கள் வட்டாரம் இல்லை. இருந்த ஒருவனும் இப்போது பெரியதாக தொடர்பில் இல்லை., மனைவியை வெற்றிகரமாக வீட்டை விட்டு துரத்தியாகி விட்டது. இன்னும் என்ன மிச்சம்?

   

இவன் வாழ்க்கையில் என்ன நடந்தது?

 

கார்த்திக் இங்கே அலுவலகத்தில் தன்னுடைய முதலாளியிடம் பேசி விட்டு போனை வைத்து விட்டு தன்னுடைய வேலைகளில் மூழ்கி விட்டான். பாஸ் ஊரில் இல்லாத நேரம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களையும் சேர்த்து இவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் .

அவர் இருந்தால் அவருக்கு எந்நேரமும் வேலையில் கவனம் இருந்தாலுமே அவ்வப்போது கமெராவில் கவனம் இருக்கும். அதனால் யாரும் அவரை எளிதில் ஏமாற்றி விட முடியாது. இப்போது அந்த வேலையும் சேர்த்து இவன்தான் பார்க்க வேணும். அவர் இருக்கும்போது இருக்கும் கவனமும் கண்டிப்பும் மற்றவர்களுக்கு இவன் இருக்கும்போது இருக்காது. என்னதான் அனைவருமே இயல்பில் உண்மையாகவே இருந்தாலும், சில நேரங்களில் வேலைகள் மெதுவாக ஓடும்.

“இன்னிக்கு லஞ்ச் என்ன?” என்று ஒருத்தி ஆரம்பித்தால் போதும். பிறகு அவர்களை மீண்டும் வேலைக்குள் கொண்டு வர இவன் தான் பாடு பட வேண்டும்.

“பாஸ் இவங்களை எல்லாம் பார்த்துக்கற வேலைக்கு பதிலா நாலு எருமை வாங்கி கொடுங்க நான் சந்தோஷமா மேய்ச்சுக்கறேன்.”

தன்னுடைய மேக் புக்கை விட்டு விட்டு இவனிடம் கவனம் செலுத்தினான் சூர்யா .

“ஒரு பையன் புதுசா ஸ்கூலுக்கு போனானாம். அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சும் படிப்பே வரலியாம். அவன் வாங்கி இருந்த மதிப்பெண் பார்த்த ஆசிரியர். நீயெல்லாம் எதுக்குடா ஸ்கூலுக்கு வர? போய் நாலு எருமை மாட்டை மேயுன்னு சொன்னாராம்.”

 என்று சூர்யா ஆரம்பிக்கவும்,

“அதுக்கு அந்த பையன் எங்க அப்பா தான் உனக்கு மாடு மேய்க்க வரல. ஸ்கூலுக்கு போன்னு சொன்னாராம். அது வேற யாரோ இல்ல. நான்தான் நானேதான். ” என்று கார்த்திக் கடுப்பாக சொன்னாலும் சூர்யாவுக்கு சிரிப்பாகத் தான் இருந்தது.

அவன் சொல்வதும் சரிதான். ஆனால் அந்த பிரச்சனை இந்த அலுவகத்தில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் உண்டு தான்.

முக்கியமான அழைப்பு வர இவனின் கவனம் அங்குப் போய் விட்டது.

 

அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரையும் கண்காணிக்கும் வேலை இவனோடது தான்.

பாலுவிடமிருந்து அழைப்பு வரவும் பேசி விட்டு போனை கீர்த்தியிடம் கொடுத்தான். அவர் ஏதேதோ கேட்கவும் இவளும் பதில் அளித்து விட்டு போனை இவனிடம் கொடுத்தாள்.

“நீங்க உங்க பேரு கீர்த்தி தானே?”

“எஸ் சார் “

“இப்ப உங்க சிஸ்டம் ஓகே வா? எல்லாம் கரக்ட் பண்ணியாச்சா?”

“எஸ் சார்! நொவ் இட்ஸ் குட் “

“வெல் டன் கீர்த்தி”

அவன் கை குலுக்க கையை நீட்டினான். அவள் தயங்கவும் இவனுக்கு முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. தன்னிடத்தில் வந்து அமர்ந்தவன் தன்னுடைய ஆள் காட்டி விரலை தன்னிடமே நீட்டி “தேவயா இது உனக்குத் தேவையா?தூ !” செல்பாக காரி துப்பிக் கொண்டான்.

“என்னடி! கார்த்திக் சார் ஒரே புகழ்ச்சி போல?” வந்து நின்றாள் தாமரை .

“ஆமா இந்த ஆம்பிளைங்க புகழ்ச்சி பத்தி தெரியாதா?”

“என்னடி பேசுற நீ.? அவரு ஆபிஸ் விஷயமா தானே உன்ன பாராட்டினார்.”

இவள் பதில் பேசாமல் போகவும் தாமரையும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.

மதிய இடைவெளியில் ,

“என்னடா கார்த்திக் ? முஞ்சி எல்லாம் பள பளக்குது?

“சார்! நம்ம கார்த்திக் சாருக்கு வீட்டுல பொண்ணு பாக்க போறாங்க. அவங்க அம்மா நாளைக்கு வடபழனி முருகன் கோவில்ல சாமிக்கு அபிஷேகத்திற்கு குடுத்துருக்காங்க. தெரியாதா உங்களுக்கு? என்றாள் ஒருத்தி.

“அப்படியா கார்த்தி? காங்கிராட்ஸ் டா. சீக்கிரம் எங்களுக்கு ட்ரீட் வைக்கணும்.” முதலில் கேள்வி கேட்ட சங்கருக்கு புன்னகையை பதிலாக கொடுத்தான்.அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்தும், ஆல் தி பெஸ்ட் என்று சொன்னார்கள். கீர்த்தி மட்டும் அமைதியாக உண்டு விட்டு நகர்ந்துக் கொண்டாள். அவளை யாரும் கவனிக்க வில்லை. அவள் எப்போதுமே அப்படித்தானே. தேவையானது மட்டும் பேசுவாள். அதுவும் எது தேவை என்று அவளே தான் தீர்மானிப்பாள் . இது அவள் இயல்பு இல்லை. இவளின் இயல்பாக மாற்றப்பட்டு விட்டது.

 

ஏன்?

அண்ணா எனக்கு கொஞ்சம் இன்னர்ஸ் வாங்கணும். கீர்த்தி வந்து நின்றாள்.

அங்கே நம் வந்தனாவும் வந்து நின்றாள் அண்ணாவிடம்.

“சரி நைஹா தானே? எப்ப போகணும்? இப்ப நீ ரெடின்னா இப்பவே போகலாம். காலை வேளையில் கொஞ்சம் கும்பல் இருக்காது. ப்ரீயா பாக்கலாம். ” சட்டையின் கையை மடித்து விட்டவன் தலையை சரி செய்து கொண்டான் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே. இது எப்போதுமே அவனுக்கு வழக்கம் தான்.

“ஓகே அப்படின்னா நான் ரெடியாகிடறேன்.” சொல்லிவிட்டு குளியல் அறைக்கு விரைந்தாள் .

“வாடி சீக்கிரம் !” அன்னையின் அதட்டலில் அவசரமாக சுடிதார் ஷாலுக்கு பின் குத்திக் கொண்டாள் வந்தனா .

“இஸ் ஆ ! எம்மா நீ கத்தின கத்துல பின்னு கையில குத்திடுச்சு “

“ஆமா ! சுருசுறுப்பா குளிச்சு முடிச்சு வந்தாத் தானே. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பியோ ?”

பிள்ளைகள் இருவருக்கும் தோசையை செய்துக் கொண்டே அங்கே குட்டி பக்கெட்டில் சாம்பாரை கொண்டு வைத்தார் அவர்களின் அன்னை.

இதோ கிளம்பி விட்டார்கள்.

“அம்மா பை!” அண்ணாவுடன் வண்டியில் ஏறுவதற்கு முன்பு அன்னைக்கு கன்னத்தில் முத்தமிட்டவள்,

“திட்டினாலும் அழகி டீ நீ” என்றாள் இவள்.

“தோசை சூப்பர் மா. முதல்ல நீ சாப்பிடு. அப்பா வந்ததுக்கு அப்புறம் சாப்பிட்டுக்குவாரு.”

இது மகன். முதலில் மகள் சொன்னதற்கு லேசான வெட்கம் வர, பின்னே வந்த மகனின் வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருந்தது லலிதாவுக்கு . இது நிலைக்குமா?

 அண்ணனும் தங்கையும் இங்கே பாண்டி பஸார் நாய்டு ஹாலுக்கு வந்தார்கள். அவர்களின் இரு சக்க வண்டியின் அருகே வந்து நின்றது ரவியின் கார் . வந்தனாவும் கார்த்திக்கும் பேசிக்கொண்டே உள்ளே சென்றுவிட காரை பார்க் செய்து விட்டு வந்தான் ரவி. சுடிதார் செக்ஷனில் ஆண்கள் இருவரும். பெண்கள் இருவரும் உள்ளாடை பகுதியில். அவரவருக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

இப்போது தான் வந்தானா ரவியைப் பார்த்தாள் .

“ஹெலோ சார்1 நீங்க இங்க எங்க? என்று ஆரம்பித்து நால்வருக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனது. ரவியும் வந்தனாவும் பேசிக் கொண்டிருக்க, கீர்த்தியும் கார்த்தியும் பேசாமலேயே இருந்தார்கள்.

“அண்ணா கீர்த்தியும் உங்க ஆபிஸ் தானே” என்று வந்தனா ஆரம்பிக்க கீர்த்தி இவளிடம் புன்னகை முகமாகவே பேச ஆரம்பித்தாள். கார்த்திக் ரவியுடன் பேச நால்வரும் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டார்கள் .

“உன்னால இவ்ளோ சாப்பிட முடியாது ” கார்த்தி தங்கையின் தட்டிலிருந்து சிலது எடுத்துக் கொண்டான்.

“எனக்கு இன்னொன்னு வேணும்” அப்பளத்தை கொறித்துக் கொண்டிருந்தாள் வந்தனா.

“காய் சாப்பிடாம அப்பளம் மட்டும் சாப்பிட்டு ஏமாத்ததே “

ரவி இவர்களை ஆசையாகப் பார்த்துக் கொண்டே உணவு உண்டு முடித்தான். கீர்த்தியோ எதுவும் பேசாமல் அவள் உணவில் மட்டுமே கவனம் செலுத்தினாள். கொஞ்சல் திட்டுகளுக்கு நடுவில் அவரவர் உணவை முடித்துக் கொண்டார்கள்.

நடுநடுவே அவர்களுக்குள் பேசிக் கொண்டாலும் உணவை வீணடிப்பது பற்றி தான் நால்வருமே பேசிக் கொண்டார்கள்பிரதானமாய் .

“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்” கார்த்திக் ரவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

“பை கீர்த்தி ! சார் நாளைக்கு பாக்கலாம்” சொல்லி விட்டு வந்தனாவும் கிளம்பி விட்டாள்.

நாளைக்குப் பார்க்கலாம் என்று சென்றவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்தனாவின் வீட்டில் இருந்தார்கள்.

வீட்டிற்கு வந்தவர்கள் பை மாறியிருப்பதை பார்த்து விட்டு கார்த்தியின் வீட்டுக்கு வந்தார்கள். லுங்கி டி ஷிர்டில் கார்த்திக் அடக்கமாய் இருக்க ஏனோ வந்தனா தான் ஒரு மாதிரி பரபரப்பாக இருந்தாள் . போனைப் பார்ப்பது போல கார்த்தியும் சமையல் அறையில் வேலை செய்வது போல அவள் அன்னையும் இவளையே உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருந்தார்கள்.

“அப்பா எங்கே காணோம் !” தேடிய நம் கண்களில் இதோ பொறுப்பாக துணிகளை அயர்ன் செய்துக் கொண்டு இருக்கிறாரே.

ரேடியோவில் பழைய காலத்துப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க ரசித்தபடி தன்னுடைய உடை, பிறகு கார்த்தியின் உடை என்று அவர் செய்து முடிக்கவும் பிறகு தங்கையின் உடை பொறுப்பை அண்ணன் எடுத்துக் கொண்டான்.

புடவையை அவன் உதறி எடுக்க எதிரில் நின்றது கீர்த்தியின் உருவம்.

“வாங்க! வாங்க!” உற்சாகமாக அழைத்தான் .

சிரித்துக் கொண்டே அவன் அழைத்தபோது ஏனோ கீர்த்தியால் அவன் உருவத்தை அவன் கண்களை விட்டு அகற்ற முடியவில்லை. கவனத்தை சட்டென பெரியவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டாள் .

துடிக்கும் இதயம் …..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page