துடிக்கும் இதயம் உன்னோடுதான்
திருக்குறள்.
அறத்துப்பால்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான் சிறப்பு அதிகாரம்-இரண்டு குறள் எண் 11 .
காலை வேளையில் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்து
வீட்டு தொலைக்காட்சியில் வந்த இந்த குரல் கவனம் கலைத்தது.
வான் சிறப்பு. எத்தனையோ பெரிய விஷயங்களை இந்த இரண்டு அடிகளில் திருவள்ளுவர் புகுத்தி இருந்தாலும் அதையே வாழ்க்கையாக மாறும்போது அதன் வலி மிகவும் அதிகம் தான்.
கண்களில் வந்த அந்த பழைய நினைவுகளை ஒதுக்கவும் முடியாது. ஓரம் தள்ளவும் முடியாது. மாறாக இப்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்.
இது நம் நாயகிக்கு மட்டும் அல்ல. நம்மை போன்ற அனைத்து நாயகிகளுக்கும் பொருந்தும். பாலை அடுப்பில் வைத்து விட்டு, கவனத்தை வேறு எங்கோ கொடுத்து விட்டால் பால் பொங்கித் தான் போகும், அடுப்பில் இருக்கும் தோசை கருகித் தான் போகும்.
தாமரை அப்படி அல்ல. ஒரு நேரத்தில் பல வேலைகள் செய்தாலும் அனைத்துக்கும் சம அளவில் கவனத்தை கொடுப்பாள். இருப்பினும் குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதானது இல்லையே! அதிலும் இரன்டு வயது என்றால் கேட்கவும் வேணுமா ? சமையலை முடித்தவள் தனது இரண்டு வயதுக் குழந்தையை எழுப்பினாள் . பெரியவர்களோ அல்லது சிரியவர்களோ உறக்கம் என்பது ஒரு ரீஜார்ஜ் டைம் தான் இல்லையா?
முன்பு ஒரு கட்டுரைப் படித்தேன். அதில் ஒரு பெண்மணி எழுதி இருந்தார்.
‘இவ்ளோ கவலை வேணாம். குழந்தையாகவே இருந்திருக்கலாம்’ இது எல்லாரும் யோசிப்பது தான். ஆனா குழந்தைக்கு டென்சன் இருக்காது என்று யாராவது சொன்னார்களா. மேலே இருக்கும் ஏதோ ஒரு பெட்டி, ஸ்பீக்கராக இருக்கலாம், அல்லது கருப்பு வர்ண யானையாக இருக்கலாம். இல்லை வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை எப்படி எடுப்பது?
“அம்மா அழகாக வீட்டை துடைச்சு வைச்சுருக்காங்க. அதுல எப்படி கிறுக்கலாம்? எவ்ளோ பெரிய ட்ராயிங் புக்! என்று சுவற்றில் என்ன ஓவியங்கள் போடலாம்? என்று பல வித எண்ணங்கள் டென்ஷங்கள் அவர்களுக்கும் இருக்கத்தான் இருக்கிறது இல்லையா?
உறங்கைக் கொண்டிருந்த அவன் நம் குட்டிப் பாப்பா கதிர்
“அம்மா ! திரும்பிப் படுத்து இவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மகன். அவனும் பாவம் தானே. அம்மாவை இன்று எப்படி ஓட வைக்கலாம். பல வித கற்பனைகளுக்கு நடுவில் பாவம் தன்னையும் அறியாமல் தூங்கி விடுகிறான். தூங்கினால் டைம் வேஸ்ட் இல்லையா?
அதுவே அன்னை வந்து அவனைக் கட்டிக் கொண்டால் போதும் இன்னும் ஒரே நிமிடம்தான். ,விட்டால் அவளையும் அருகே படுக்க வைத்து தூங்க வைத்து விடுவான் செல்லக் குட்டி.
எத்தனை கவலை இருந்தாலும் இவளும் தான் மகனின் மேனி பட்டு விட்டால் போதும், தன்னையும் அறியாமல் உறங்கி விடுவாள் . எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தவளுக்கு அவனின் அணைப்பும் , முத்தங்களும் தான் மருந்து.
“கண்ணு குட்டி, பட்டு குட்டி எழுந்துருங்க ., என் செல்லம் பட்டு..” கொஞ்சி கொஞ்சி தான் அவனை எழுப்ப வேண்டும். மகனாக இருந்தாலும் வாங்க போங்க என்று தான் அழைப்பாள். பெரிய வீட்டு வாரிசு. ராஜா வீட்டு கண்ணுக் குட்டி. மரியாதையுடன் தானே அழைக்க வேண்டும்? “ம்” என்று சிறு அதட்டல் போட்டால் கூட தாங்க மாட்டான் என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. “நீ என்ன வேண்ணா சொல்லு நான் இப்படித்தான்” என்று அடம் அதிகமாகிவிடும். அது அவன் இயல்பு இல்லை. அவன் குடும்பத்தில்இருந்து வழி வழியாக வந்தது.
அதுவே கொஞ்சி கொஞ்சி கேட்டால் உடனே நடந்து விடும் . அப்படியே அவன் அப்பா மாதிரி சொல்லிவிட எனக்கும் ஆசைதான். ஆனால் அது அப்படி இல்லையே .
அப்படி இருந்திருந்தால் அவள் இப்படி இவனை வைத்துக் கொண்டு தனியாக கஷ்டப் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
ஆம் இது தான் நாம் செல்லப் போகும் கதையின் ஓட்டம்.
நாம தினமும் நிறைய செய்திகள் பாக்கறோம் கேக்கறோம். அதை விடவும் அனுபவிக்கறோம் . மற்ற எல்லாத்தையும் விட அனுபவம் கத்துக் கொடுக்கற பாடம் கொஞ்சம் ஹார்ஷா தான் இருக்குது. அதுல ஒன்னு, நான் சந்திச்ச பல விஷயங்களில் கடந்து வந்த பாதைகளில் ஒன்னு தண்ணீர் கஷ்டம்..
கடந்து வந்த பாதை என்று சொல்லி விட முடியுமா? இன்னிக்கு இருக்கும் இந்த நல்ல நிலை நாளைக்கு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் நம்முடைய உயிர் நீர் என்ற எண்ணம் அனைவருக்குமே வர வேண்டும்.
காஸ் பற்றாக்குறை. முப்பது ருபாய் தண்ணீர் கேன் ஐம்பது ருபாய். வாங்கம்மா வாங்க தண்ணீர் வேணுன்னா வாங்க பத்து ரூபா பத்து ரூபா கேன் தண்ணி பத்து ரூபா என்று எங்கள் வீட்டு வாயிலில் தண்ணீர் லாரி வரும் .அது மாறி கேன் வாட்டர் பதினைந்து ரூபா இருபது இன்னும்..இப்போது முப்பது ரூபா . நாலு மணிக்கு கோயம்பேடு செல்ல சில ஆட்டோக்கள் கிளம்பி விடும். அப்படி என்றால் மூன்று முப்பதுக்கு அடிப் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சத்தமும் கேட்கும். நானும் இருக்கேன் என்று மழைக்காலங்களில் கூப்பாடு போடும் அவை கூட எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கடா என்று இந்த வெயில் காலத்தில் நம்மிடம் கெஞ்சும் .
என் மகனின் புத்தகத்தில் வந்த ஒரு பாடம், அல்லது தினசரி நிகழ்ச்சி. ஒரு கிராமத்தில் சுத்தமாக தண்ணீர் இல்லாத பெண்கள் இருபது கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அங்கே சென்றால் ஒரு கிணறு . கிணறு மட்டும்தான். அதில் தண்ணீர் கிடையாது. அதற்குள் இறங்கி ஒரு பெண் குவளை போல ஒரு பிளாஸ்டிக் உடைந்த கப்பில் தண்ணீர் எடுத்து எடுத்து குடங்களை நிரப்பிக் கொடுக்கிறார். எத்தனை நேரம் ஆகும் பிறகு அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து மற்ற வேலைகள் பார்க்க வேண்டும். யார் இவர்கள்? நாம் கிண்டல் செய்து விட்டு பாணி பூரி வாங்கி சாப்பிடுவோம் அதே வடக்கன்ஸ் தான்.
இது கதையா கட்டுரையா என்று யாரும் என்னை திட்டாதீங்க.
தண்ணீரே இல்லாத ஊருக்கு யாராவது தண்ணீர் வசதி செய்து கொடுத்தா அவங்களை நாம் ஆசாமி மாதிரி தானே பார்ப்போம் . அந்த சாமிக்காக எது செய்யவும் தயங்காத நாயகி. அப்படிப்பட்ட சாமியே தப்பு செய்தால்….
தண்ணீரை சம்பந்தப்படுத்தி சில காட்சிகள் வரும். ரொம்ப அதிகமா இல்ல. கொஞ்சம் தான். காதல் கதை தான்.. ரொம்ப அதிகமா இல்லாம நம்மளை போன்றவர்கள் வாழும் இயல்பான வாழ்க்கை …
கதைக்குள்ள போகலாம்.
அத்யாயம் -1
நாம இப்ப போகப் போற ஊரு கோவை. கோவை? தொழில் நகரம் சொன்னா போதுமா? கோவைன்னு சொல்லறதே ஸ்பெஷல் தானே. அங்க இருக்கற மக்கள், அவங்க பேச்சு வழக்கு எல்லாம் தனிதான் சிறுவாணி தானே அங்கே இன்னும் ஸ்பெஷல். சிறுவாணி ஆத்து தண்ணி .. மருதாணி வச்ச கன்னி. பழைய பாடல். அப்போதிலிருந்தே ஒருமுறையாவது அந்த தண்ணீர் குடித்துப் பார்க்க அடியேனுக்கு ஆசை தான். சென்னை வாசிக்கு வாய்ப்பு இருக்கிறதா தெரியவில்லை.
சிறுவாணியில் இருக்கும் குறைந்த தாது மற்றும் ஆக்சிஜன் அளவினால் இனிமையாக இருக்கிறதாம். உபயம் -கூகிள். கோவை குற்றாலமும் சிறுவானியும் ஒன்றா. நீங்களும் செய்தி சேகரிங்க.
“ஹை ஆல்! புதுசா வந்திருக்கற எல்லாருக்கும் எங்க கம்பனியோட வாழ்த்துக்கள். ஆல் ஆர் வெல்கம்” என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்கள் அவர் பேசுவதையே உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள்.
சற்று உயரமாக அளவான மீசை, பளிச்சென்ற தோற்றத்துடன் பார்மலாக ஆங்கிலத்தில் பேசியவனைக் கண்டால் எந்த பெண்களும் மயங்கி விடுவார்கள் தான். நம் நாயகியோ அல்லது அவளுடன் வந்திருப்பவர்கள் யாரும் அப்படி அல்ல. அதற்கான நேரமும் இது இல்லை.
நாயகி இதயத் தாமரை உட்பட அங்கே அவளுக்கு அருகில் நின்றிருந்த சிலரும் கூட படபடப்புடன் அவன் சொல்வதையே உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் விஷயம் அவர்கள் இங்கே புதியதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள். இரண்டாவது மிக முக்கியமான விஷயம் அவர் பேசுவது ஆங்கிலத்தில் மெதுவாக இவர்களுக்குப் புரியும்படி பேசினாலும் இவர்களுக்கு புரிந்துக் கொள்வது சற்று சிரமம் தான். அனைவருமே தமிழ் வழிக் கல்வி.
“கேன் யூ ஹெல்ப் மீ” என்ற சிறிய வார்த்தை கூட கேட்பதற்கு வாய் உதறல் எடுக்கும். ஏதாவது கேட்டால் ஆங்கிலத்தில் கேட்டால் புரிந்தாலும் பதில் எளிதில் சொல்லி விட மாட்டார்கள் . வருமா வராதா என்பதையும் தாண்டி தப்பாக பேசும்போது மற்றவர்கள் கிண்டலடித்து விடுவார்களோ என்ற பயமே அவர்களை முன்னுக்குத் தள்ளாமல் பின்னுக்கு இழுத்தது. அவர்களை குறை கூறுவது சரியாகிடுமா? ஆங்கிலத்தில் ஏதாவது தவறாக பேசிவிட்டால் அல்லது திக்கித் திணறி பேசினால் கிண்டல் செய்பவர்கள் தான் அதிகம்.
இருக்கட்டும். அவர்கள் முட்டி மோதி கல்லூரி முடித்து விட்டு இதோ ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டார்கள். இனி அவர்களின் வாழ்க்கை உயர அவர்கள் தான் பொறுப்பு.
இவர்கள் அனைவருமே தமிழ் வழிக் கல்வி என்பதையும் தாண்டி இவர்கள் அனைவருமே அனாதை ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் . இந்த கம்பனியின் ஓனர் இந்த விவேகானந்தா ஆசிரமத்திற்கு சென்ற போது அவர்கள் மூலம் விவரம் அறிந்து தான் இவர்களை வேலைக்கு எடுத்திருக்கிறான் . இத்தனை பெரிய கம்பனி ஒனர் அவன் இவன் என்று சொல்வதா ?
ஆத்தரை விட வயசுல சின்னப் பையன் தானே. அப்ப சொல்லலாம்.
ஆளு பாக்க சும்மா நச்சுன்னு இருப்பான். கன்னிகள் மனசு ஜாக்கிரதை. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல. என்ற வழக்கமான வர்ணனைகள் தாண்டி யோசித்தால் என்ன?
“இப்ப இவங்க ஒரு பார்ம் கொடுப்பாங்க. இதுல உங்களை பத்தின டீடெயில்ஸ் மட்டும் பில் பண்ணிடுங்க. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. இவங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க .”
கீர்த்தியை காட்டி சொல்லிக் கொண்டிருந்தார் அந்த சார். அவர்கள் பார்ம் ஃபில் செய்துவிட்டார்கள்.
“வெயிட் பண்ணுங்க. பாஸ் வந்துடுவாரு.” வரவேற்பில் குர்தியில் இருந்த பெண் சொல்லி விட்டு தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அதற்குள் அங்கே வந்த கார்த்திக் அதுதாங்க முதல்ல ஒருத்தரு வந்து பேசினாரே அந்த சாரு தான் கார்த்திக். தாமரையை அழைத்து ஒரு கணினி முன்பு அமர வைத்து,
“இது எல்லாம் இதுல ஃபில் பண்ணிடுங்க . நெக்ஸ்ட்ன்னு இருக்கறத பிரஸ் பண்ணா அடுத்த பார்ம் வந்துடும்.”
சொல்லி விட்டு இவர்களின் விவரங்களை கொடுத்து விட்டுச் சென்றார். இவள் சீரியசாக, ‘எந்த தவறும் வந்து விடக் கூடாது’ என்று முதலில் நம் கணேசனை மனதில் துணைக்கு வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.
“எந்த தப்பும் வந்துடக் கூடாதுப்பா கணேசா. நீங்க தான் கூட துணையா இருக்கணும்.”
மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் .
அப்படியே நாமும் ஒரு முறை தலை வணங்கி கொள்ளலாம்.
வியாசருக்கு மகாபாரதம் எழுதினவரை போய்
பார்ம் ஃபில் பண்ண ஹெல்ப்புக்கு கூப்பிடறியே இது நியாயமா ?
நாம கேக்கலாம். அவரு கேக்க மாட்டாரு. குழந்தைங்க கூப்பிட்டா ஓடி வந்துருவால்ல .
இதயம் துடிக்கும் ..
