துடிக்கும் இதயம் உன்னோடுதான்
இவள் வேலையைப் பார்த்து முடிக்கும் நேரம் பாஸ் வந்து விட்டார்.
கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.
நம் நாயகி ?
அத்யாயம் -2
வான்சிறப்பு
அதிகாரம்-2 குறள் எண்-11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
இங்கே சூர்யாவின் அலுவலகம் கோவை…..
கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.
“ஹை கைஸ்!” என்றுத் தொடங்கியவன் கோர்வையாகப் பேசி முடித்தான். தமிழில் அவன் பேசியதால் அவர்களுக்கு முன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை. அவன் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள் . அவனின் இடது கன்னத்தில் இருந்த அந்த நீண்ட தழும்பு அவர்களுக்கு கண்ணை உறுத்தினாலும், அவன் பேச்சில் தான் இளையவர்களுக்கு கவனம் இருந்தது.
மற்றவர்கள் குட் மார்னிங் சொல்லும்போது தாமரையும் எழுந்து நின்று குட் மார்னிங் சொன்னாள். வலப் புறம் இருந்தவளை பார்த்து “குட் மார்னிங்” சொல்லி விட்டு தனது பேச்சை ஆரம்பித்தான்.
“நீங்க எல்லாரும் இங்க கம்பெனிக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க எல்லாரும் சின்ன பசங்க. வளவளன்னு பேசி நான் கொடுமை படுத்தப்போறதில்ல. பட் ரெண்டு நிமிஷம் உங்களோட வேலை நேரத்துலேர்ந்து நான் எடுத்துக்கறேன்.
இது வரைக்கும் எப்படியோ! ஆனா இனிமே உங்களோட கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மூலமா நீங்க டாமினேட் பண்ண ஆரம்பிக்கணும். நமக்கு என்ன வேணுன்னாலும் மனசுல புது புது ஐடியாக்கள் வரலாம். அதை வெளிப்படுத்தற தன்மை இல்லன்னா., அது முழுக்க வேஸ்ட் தான் அதுக்கு என்ன வேணுன்னாலும் செய்ங்க. சொந்த மொழில யோசிங்க. இங்கிலீஷிலே ட்ரான்ஸ்லெட் பண்ணுங்க. இனி எப்பவும், “நான் தமிழ் மீடியம் எனக்கு புரியல்லேன்னு என் கம்பனில நிக்கக் கூடாது. இப்ப நம்ம கம்பனி தமிழகத்தில் மட்டும் தான் இருக்கோம் . போகப்போக நம்ம கம்பனி இன்னும் நிறைய முன்னேறணும். அப்ப உங்களோட ஸ்கில்ஸ் ரொம்ப முக்கியம். “
அவனேத் தொடர்ந்தான் …..
“ரீசெண்டா ஒரு ஹார்வர்ட் இன்ஸ்டிடியூட்ல வந்திருந்த ஒரு ஆர்டிகிள் யூ டியூப் ல கேக்க முடிஞ்சது. உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல். எப்ப நடந்தது? யாரவது சொல்ல முடியுமா ?” உதடுகள் அசைந்த போதிலும் அவனது கண்கள் கூர்மையாக வந்தவர்களை அளவிட்டுக் கொண்டிருந்தது.
“26/11 சார்” நிறைய குரல்கள் வந்தது.
“எந்த வருஷம் ?”
அமைதி ..
“2008” ஒரே ஒரு குரல் தாமரையிடமிருந்து…
“குட் ! உங்க பேரு ?”
“இதயத் தாமரை சார் .”
“குட்! குட்! “
“அந்த தாக்குதல் நடந்த போது அங்கே இருந்த ஊழியர்கள் யாரும் வெளில போகலை. நாம வெளில போய்ட்டா அங்கே வந்து தங்கி இருக்கறவங்களை எப்படி காப்பாற்ற முடியும்னு அவங்களும் அங்கே தான் இருந்திருக்காங்க. எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம், கம்பனி ஊழியர்கள் கிட்ட நீங்க எல்லாரும் எப்படி வெளில போய் தப்பிக்கறதுன்னு தெரிஞ்சும் ஏன் நீங்க யாருமே தப்பிக்க முயற்சி செய்யலேன்னு பேட்டில கேட்டாங்க.”
அது ஏன்னு அவங்களுக்கும் தெரில. அதுக்கு அப்புறம் மிஸ்ட்ர் டாடா கிட்ட கேட்ட போது,
“ஏன்னு கேட்டா எனக்கும் காரணம் தெரில. ஆனா அவங்க எல்லாருமே கிராமத்துலேர்ந்து வந்தவங்க. ஒரு வேளை அது காரணமா இருக்கலான்னு சொன்னாராம். அதாவது கிராமத்து மக்கள்னா படிக்காதவங்க பட்டிக்காட்டுங்கறது கிடையாது. அவங்க எல்லாரும் நம்பிக்கைக்கு உரித்தானவர்கள். நானும் உங்களை நம்பறேன். நீங்களும் கிராமத்து பள்ளிகள்ல படிச்சுட்டு நம்ம விவேகானந்தா ஆஸ்ரமத்துல இருந்தவங்க தான். படிக்க பணம் இல்லை . பரவாயில்ல. இப்ப படிச்சாச்சு. வேலையும் வந்துடுச்சு. இதுக்கு மேல நீங்க எந்த அளவுக்கு உண்மையாவும் நேர்மையாவும் உங்க டேலன்ட் இங்க காட்டறீங்களோ அந்த அளவுக்கு ..”
அவன் பதில் சொல்லாமல் நிறுத்த, புதிதாக வேலைக்கு வநதவர்கள்
“நாங்களும் உயரலாம் சார் ” என்றார்கள் கோரஸாக .
“எஸ் ! நீங்க என்ன பண்ணணுன்னு இவங்க சொல்லுவாங்க. ஆல் தி பெஸ்ட் !”
தம்ப்ஸ் அப் காட்டினான். அவனின் உற்சாகமான குரலில் அவனின் முகத் தழும்பின் பயம் கூட மறந்து இப்போது பெரிய முதலாளியின் மீது ஏதோ ஒரு இனம் புரியா ஈர்ப்பு வந்து விட்டது , அனைவருக்கும்.
பிறகு கார்த்திக்கிடம் திரும்பியவன்,
“இவங்களோட டீடெயில்ஸ் எல்லாம் ரெடியா?” என்று வினவ ,
“எஸ் சார்! இந்த பொண்ணு பண்ணிக்கிட்டு இருக்காங்க “
“யா குட்! ஷோ மீ ” சொல்லிக் கொண்டு அவள் அருகில் வந்து, அவள் செய்த வேலைகளை அடுத்த அடுத்த பக்கங்களை நகர்த்தி பார்த்தான் . அவனின் கண்கள் கூர்மையாக இருந்து. லேசாக புருவ முடிச்சு., “நான் ப்ரசண்ட் சார்” என்று வந்து நின்றது .
“நேமோட பர்ஸ்ட் லெட்டர் கேப்பிடல் வரணும் புரிஞ்சுதா ?” சொல்லி விட்டு தவறாக இருந்ததை அவனே சரி செய்தான். வெகு அருகில் தான் நின்றான். அவனின் வாசனை திரவியத்தின் வாசனை அவள் மூக்கை துளைத்தாலும் அவனின் கை நுனி கூட அவள் மீது படவில்லை .
இப்போது…… இதோ அவனின் தோள் மீது சாய்த்திருக்கிறாள் காரின் உள்ளே. அவனின் மனைவி என்ற அந்தஸ்துடன் நம் இதயத் தாமரை..
சிக்னலில் கார் நின்ற போது ,
“என்ன டி ஜில்லு என்ன யோசிக்கற?”
“வேற என்ன? உங்களை பார்த்த அந்த நாள், அந்த நொடி “
“நானே உன்னோட புருஷனா இங்க உக்காந்திருக்கேன் . உன்னோட புருஷனா. உனக்கு மட்டுமே உரிமை உள்ளவனா. நீ ஏன் அதனையே இன்னும் நினைச்சுகிட்டு இருக்க?”
“அது அப்படித் தான். அது சரி அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“ஆமா! பிரச்சனை தான். புதுசா கல்யாணம் பண்ண பொண்டாட்டிய வேற எதையோ யோசிக்க வைக்காம ஆஃபீஸுல மீட் பண்ணது பத்தியே யோசிச்சுகிட்டு இருக்கன்னா நான் எங்கையோ எதையோ மிஸ் பன்னறேனோ?”
“அப்டின்னா?”
புரிந்தும் அறியாதது போல குறும்பாகக் கேட்டாள்.
“என் உனக்குத் தெரியாதா?” புடைவைக்கு இடையில் தெரியாமல் மறைத்திருந்த புடவையை விலக்கி லேசாக கிள்ளினான்.
“தெரியலையே! ” சொன்னவள் கீழ் உதட்டை மடித்துக் கடித்தாள் .
“ஆஹாங் அதுனாலதான் உன்னோட முகம் இப்படி சிவந்துருச்சா ?”
அவனிடம் பதில் சொல்ல முடியாதவள் மேலும் சிவந்த முகத்தை ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். விடுவானா நம் நாயகன்… சாரி சாரி அவள் நாயகன் !
“திரும்பு டீ !” இது என்ன காதலனின் கட்டளையா ?
பாவம் அவள். கணவனின் முகம் பார்க்க முடிந்தால் தானே!
“இப்பவே நீ என்னை பாக்கணும்.” மீண்டும் அதேப் போல கட்டளை தான். ஆனால் குரலில் மாற்றம். ஏதோ ஒரு உல்லாசம்.
“இல்லன்னா என்ன பண்ணுவீங்களாம்?”என்று கேட்டுக் கொண்டே அவன் பக்கம் திரும்பி விட்டாள். உதட்டில் வந்த புன்னகையுடன் அவள் வேறு எதைப் பற்றி எல்லாம் நினைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் இப்போது காரில் வாய் மொழியில் சொல்லிக் கொடுத்தவன் வீட்டுக்குப் போனதும் கூட அவன் வாய் மொழியில் தான் சொல்லிக் கொடுப்பான் . ஆனால் வேறு விதமாக.
“ம்ம்! என்ன எதை பத்தி ? நான் உன்னை பர்ஸ்ட் டைம்***** ? இல்ல உன்ன அங்க இங்க ..”
ஆவலுடன் அவள் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தவனின் தலையைத் திருப்பியவள் ,
” எது பத்தியும் இல்ல. முதல்ல இப்ப வண்டிய ரோட்டுல பார்த்து ஓட்டுங்க .”
அவனிடம் வீரப்பாக சொன்னாலும் அவளின் நினைவுகள் எங்கே செல்கின்றன என்பது தான் அவனுக்குத் தெரியுமே !
வேண்டா வெறுப்பாக வண்டியை ஸ்டார்ட் செய்தாலும் விரைவாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற வெறியுடன் தான் வண்டியை ஓட்டிய மாதிரி தெரிந்தது . எதற்காக? எல்லாம் இதற்காகத் தான்., உள்ளே நுழைந்தவளை கையில் அள்ளிக் கொண்டு அறைக்குச் சென்று விட்டான் தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் தீர்த்துக் கொள்ள.
எத்தனை முறைப் பேசினாலும் அலுக்காது. எத்தனை முறை சேர்ந்தாலும் அலுக்காது. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு காதல் பிரேமை இது எல்லாம் சேர்ந்து செய்யும் மேஜிக் இல்லையா?
உதடுகளின் ஊர்வலமும், ப்ளீஸ் போதும்.. முடியலை என்ற வார்த்தைகளும் தான் எத்தனை எத்தனை?
எத்தனை முறை கூடினாலும், உதட்டிலும் நெற்றியிலும் கன்னங்களிலும் அவன் கொடுக்கும் அழுத்தமா முத்தங்களும், வலிக்குதா ? கஷ்டப்படுத்தறேனா என்ற கொஞ்சல் மொழிகளும் தான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது. உடலுக்கு எத்தனை சோர்வாக இருந்தாலும், அவன் எத்தனை முறை கேட்டாலும் தன்னை கொடுக்கக் கூடியவள் எப்போதுமே சோர்வு இல்லை என்று தான் கூறுவாள். அவள் அப்படி சொன்னாலும் அவளுக்கு முடியவில்லை போதும் என்று தன்னை தானே அடக்கி கொள்வான் அந்த காளை.
லவ் மேக்கிங் பற்றி எத்தனை எத்தனை பேசி இருப்பான் ? எத்தனை கொஞ்சல்கள்.
அன்று அவனைப் பற்றி காரில் அமர்ந்து அவனைக் கட்டிக் கொண்டு யோசித்தவளுக்கு கன்னங்கள் சிவந்தன . இப்போதும் அவனைப் பற்றிய சிந்தனைதான் .காரில் இருந்து அல்ல காரைப் பெயர்ந்த வீட்டில் இருந்து.
ஏனோ இன்று அவனின் நினைவு அவளைப் படுத்தும் பாடு அதிகம் தான். அவனைப் போலவே. காமத்தை அள்ளிக் கொடுத்தவனுக்கு அவள் அவனை எத்தனை காதலித்தால் என்பது புரிந்திருக்கவில்லை. தன்னுடைய அவலட்சணமான முகம் காரணமா அல்லது படிப்பு தொழில் என்ற இலக்கை அடைய வேண்டிய எண்ணத்தினாலோ என்னவோ பெண்களின் மீது கவனம் செலுத்த முடியாதவன், இவள் எனக்கானவள் எனக்கே எனக்கு என்று தெரிந்ததும் தன்னுடைய உரிமையை மட்டுமே அவளிடம் நிலை நாட்டினான். அவளோ, ‘இவன் என்னவன்’ என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருப்பவளுக்கு மனதில் அவன் மட்டுமே அமர்ந்திருந்தான் ராஜாவாக.
அவனை மட்டும் குறை கூறி என்ன ? தனக்குள்ளேயே சுருங்கி கொண்டவனை விழி விரித்துப் பார்த்து, “நான் உனக்கானவள், நீயும் இந்த தழும்பு கொண்ட முகமும் எனக்கானது” என்பதை சொல்லிக் கொடுத்தவள், அந்த மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை காமம் இல்லை “கா”வில் ஆரம்பிக்கும் “ல்” இல் போயி நிற்கும் என்று ஹரிணியின் குரலில் இல்லாமல் தன்னுடைய சொந்தக் குரலிலேயே சொல்லி கொடுத்திருக்கலாம்.
காதல் என்பது என்ன? ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழனும் அது இது.. போதும் . இதை எல்லாம் மீறி வேறு என்ன செய்துவிட முடியும்?
நாம யாரும் யோசிக்க கூட முடியாத விஷயத்தை அவள் அவனுக்காக செய்துகிட்டு இருக்கா . என்னவாக இருக்கும்.. பாக்கத்தானே போறோம் ..
அவனுக்காக அவள் இதயம் துடிக்கும்…..
