உன்னை தூங்க தானே சொன்னேன். நீ ஏன் அங்க போய் நிக்கிற?..
போய் தூங்கு.
உன்ன தான் சொல்றேன். போ…
இப்படி எல்லாம் விக்ரம் கிட்ட நிலா சொல்லிக்கிட்டு அந்த இடத்துல அவளால அந்த சங்கடத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்,
அவள் மனதுக்குள் நினைக்கும் அந்த பூரிப்பை வெளிக்காட்டவும் முடியாமல், சில தடைகளோடு பல தயக்கங்களோடு அவனை ஏரெடுத்து பார்க்க முடியாதவளாய், இப்போ கூட தூங்கு என்று சொல்றதுக்கு முக்கிய காரணம் அவனுக்காக இல்ல அவளுக்காக அந்த சங்கடத்தில் இருந்து அவளை காப்பாத்திக்க,
இது ஒரு விதமான வெட்கம். இதிலிருந்து வெளியே வர முடியல, அதுக்காக அவன் மேல இருக்கிற பயம்னு சொல்ல முடியாது அவன் மேல இருக்கிற ஆசைன்னும் சொல்ல முடியாது. இந்த சொல்ல முடியாத உணர்வுக்குள்ள சிக்கி அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவளை முதல் படியை எடுத்து வைத்தாள்.
ஒரு ஒரு எட்டிற்கும் ஒவ்வொரு வித பதட்டம்.
இதயம் ஏனோ அவளை கேட்காமலே இரு மடங்கு துடிக்கின்றது.
மறுபடியும் அந்த பார்வை தனக்கு வேண்டும் என்ற ஆசை,
ஆனாலும் பெண்மை தடுக்கின்றது.
என்ன ஆச்சு?..
ரொம்ப நேரமா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்பாமல் நிக்கிற,
என்று சொல்லிக் கொண்டே அவன் அருகில் போய் நிற்க,
அவனால் எதுவும் பேச முடியல, அவள் கேட்டதுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் அந்த இரும்பு கம்பியை தன் இரும்பு கரங்களால் அழுத்தி பிடித்து படி,
தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவனாக அவனுக்கு அவனாக தன் உணர்வுகளை சிறைப்படுத்திக் கொண்டான்.
விக்ரம்..
இப்படி அவள் மெல்லமாக தன் குரலால் கூப்பிட்டாலும் கூட,
கேட்காதது போல வேறு பக்கம் திரும்பி சிரிக்கும்போது, அவளும் மறைமுகமாக சிரித்தாள்.
சலசலன்னு…. இலைகள் எல்லாம் அசைய,
ஒரு தென்றல் காற்று மேலோட்டமாக அவர்கள் இருவரையும் உரசியபடியே, அவர்களைப் பேச வைக்க அந்த காற்றும் கூட முயற்சி செய்ய,
அந்த புன்னகையில் தெரிந்தது…
பேசுவதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை என்று, வேடிக்கை பார்த்தாலும் கூட, ஏனோ உணர்வுகள் இரண்டும் அவர்களின் உள்ளத்தை நோக்கி பேச முடியாமல் தவித்த நிலையில் திக்கு முக்காடி போய் நிற்க,
பேச வார்த்தைகள் வரல,
அந்த காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்ததோ என்னவோ?…
மெல்ல மெல்ல விரல்கள் செல்லம் கொஞ்ச,
அருகில் நெருங்கியபடி ஒரு யோசனையோடு
தொடவா?….
வேண்டாமா?…
என்ற ஆழ்ந்த சிந்தனையோடு அதே நேரத்தில் எப்படியாவது அதை தொட்டால் என் வாழ்வில் முதல் வெற்றியை தொட்டதாக என் இருவருமே அவர்களின் விரல்களை அந்த இரும்பு கம்பியில் வைத்து எண்ணங்களின் விளையாட்டில் மூழ்கி இருக்க,
வேகமாக அவனுடைய விரல்களை இறுக்கப் பிடித்தாள்.
கொஞ்சம் கூட அவன் எதிர்பார்க்கல, அவளாக தன் விரல்களை தீண்டுவாள் என்று…
மனசின் படபடப்பை குறைக்க முடியாமல் இதயத்துடிப்பு வெளியே மைக் போட்ட மாதிரி அவ்வளவு சத்தமாக கேட்டது.
அவன் விரல்களை பிடித்த பதட்டத்தில் அவள் முகம் எல்லாம் சிவந்து பாதி தங்க நிறத்திலும் பாதி பன்னீர் ரோஜாக்களை போல முகமெல்லாம் படர்ந்து இருக்க,
அவன் ஒரு நொடி கூட யோசிக்காமல் வேகமாக அவளுடைய விரல்களை இன்னும் அழுத்தமாக பிடித்தான். எப்போதும் இது என்னோடு இருக்கட்டும் என்பது போல…
பார்வைகள் நிமிர்ந்து பார்க்க பல யோசனைகள் கொண்டு தரையில் ஏதோ தொலாவியபடி இப்பொழுது மெல்லமாக நிமிர்ந்து பார்க்கும் போது,
இதயத்திற்குள் இருந்து ஏதோ ஒற்றை மணி அடிப்பது போல தோன்றியது…
நிலா கண்களில் கண்ணீர் பெருகியது…
அது ஏன்?…
அவளுக்கே காரணம் தெரியாது.
விக்ரம் அவள் கண்ணீரை துடைத்தபடியே ஏதோ ஒரு சந்தோஷத்தில் அவளை பார்த்து சிரிக்க,
இருவரும் மெல்ல மெல்ல நெருங்கி அந்த இதழ் சிறையை உடைத்து எரிந்த அந்த நொடியில்,
ஏதோ ஒரு சத்தம்..
விக்ரம் சார்.. விக்ரம் சார்…, அப்படின்னு,
இருவரும் கைகளை தனித்தனியே பிரித்து விலகி நிற்க,
இவ்வளவு நேரம் இருந்த உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அடங்கிப் போய் கீழே எட்டிப் பார்க்க,
அங்கு வந்திருந்தது தினேஷ்.
சார்… உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒன்னு பேசணும் சார் ப்ளீஸ் கொஞ்சம் கீழ வரீங்களா?…
என்ன தினேஷ் உனக்கு வேணும்?..
உனக்கு யாரு இந்த அட்ரஸ் கொடுத்தா நீ எதுக்கு இப்ப இங்க வந்த?… இப்படி அவன் கோபமாக கேட்க இல்ல சார் ப்ளீஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் கீழே வாங்க..
நான் பேசிட்டு போயிடறேன்.
நிலா நீங்களாவது சொல்லுங்க ப்ளீஸ்… இப்படி கையெடுத்து கும்பிட்டு கேட்க ஆரம்பித்தான். அத பாத்ததுமே,
இரு தினேஷ் நாங்க வரோம்னு விக்ரம் நிலாவை கூட்டிட்டு இப்ப கீழே இறங்க,
ரொம்ப தயக்கத்தோடு தினேஷ் நின்னுட்டு இருந்தான்.
என்ன தினேஷ் வேணும்?…
நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஆன்சர் வரல, இல்ல சார் அது வந்து…
உங்க கிட்ட சாரி கேட்கலாம் என்று தான் வந்தேன் சார்,
நான் அப்படி பண்ணி இருக்க கூடாது. ரொம்ப சில்லியா நடந்துக்கிட்டேன்.
இனிமேல் நான் இப்படி பண்ண மாட்டேன். இந்த மாதிரி நான் பண்ண போது அது நியூஸ் அது இது என்று எதிலாவது வந்து இருந்தா நம்ம கம்பெனி போயிருக்கு தானே மிகப்பெரிய ஆபத்து. அத நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல என் கூட இருந்தவங்க எல்லாரும் என்ன பயங்கரமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
நிலா நான் உன்கிட்ட தான் முதல்ல சாரி கேக்கணும். உன்னோட டைரியை எடுத்துக் கொடுத்த போது நான் படிக்காமல் இருந்து இருக்கணும்.. ஆனா அப்படி பண்ணாம படிச்சிட்டேன்.
அதுதான் இங்கு மிக பெரிய தப்பு. அடுத்தவங்களுடைய பர்சனல் குள்ள நான் உள்ள போய் பார்த்து இருக்கவே கூடாது.
எல்லாரும் என்ன ரொம்ப ஒரு மாதிரி கிண்டல் பண்ணாங்க, அதனால தான் ஏதோ அவங்க கிட்ட நான் ஹீரோ மாதிரி காட்டிக்கணும் என்பதற்காக நான் இப்படி பண்ணிட்டேன்.
இனிமேல் எதுக்காகவும் நான் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன். ஐ அம் சோ சாரி… உனக்குள்ள எவ்வளவு பெயின் இருந்திருக்கும்னு நான் அப்ப யோசிக்காம விட்டுட்டேன்.
இப்படி அவன் பேசிக்கிட்டே போகும்போது,
விக்ரம் நிலாவை பார்த்தான். அவன் பேச பேச அவள் ரொம்ப டென்ஷன் ஆகி அவளுடைய இரண்டு கைகளையும் ஒன்றாக கோர்த்து பிசைந்து கொண்டிருப்பதை பார்த்ததும்….
அவள் ரொம்ப பதட்டமாக இருக்கிறதே விக்ரம் உணர்ந்து, தினேஷ் போதும்.
சாரி சொல்லிட்ட இல்ல… அது அக்சப்ட் பண்றதும் பண்ணாததும் நிலாவுடைய விருப்பம். நீ விளக்கம் கொடுக்கத் தேவையில்லை நீ உன் மனசார சாரி கேட்கிற என்று எங்களுக்கு புரியுது.
ஓகே…
இப்படி சொல்லும்போது இல்ல சார் அது வந்து ன்னு… அவன் யோசனையோடு சொல்ல,
அப்போ நிலா, தினேஷ் நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?…
உங்க பிரண்ட்ஸ் அந்த மாதிரி சொல்லி இருந்தாலும் கூட, அதாவது கிண்டல் பண்ணி பேசி இருந்தாலும் கூட, உங்க மனசுல என்ன பத்தி கீழ்த்தரமா நினைச்சதுனால தான் உங்கனால அதை ஏத்துக்க முடியல,
ஏன்?… நான் ஒரு பொண்ணு தானே,
என்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா போதும். அடுத்தவங்களுக்காக, அடுத்தவங்களை பார்த்து அப்படியெல்லாம் எனக்கு மாத்தணும்னு எந்த அவசியமும் இல்லை.
அப்படி மாத்துனதுக்கு அப்புறம் தான் அடுத்தவங்களுக்கு பிடிக்கும்னா அப்படிப்பட்ட அடுத்தவங்களும் எனக்கு தேவையில்லை.
இந்த விஷயத்தை பற்றி நீங்கள் என்னிடம் டைரக்டா கேட்டு இருந்தா கூட சொல்லி இருப்பேன்.
எனக்கு உங்களை பிடிக்கும். இதுக்கு முன்னாடி பிடிச்சது… என்ன மாதிரியான தெளிவா சொல்றேன்.
ஒரு ஆயிரம் பேர் இருக்குற இடத்துல ஒரே ஒருத்தரங்க மட்டும் உங்க கிட்ட பேசினா உங்ககிட்ட பாசம் காட்டினா அதுக்கு என்ன உறவு.
அப்படி மட்டும் தான் நான் யோசிச்சேன்.
அது கடவுளா இருக்கலாம். அம்மா அப்பாவா இருக்கலாம் பிரண்ட்ஸா இருக்கலாம். இப்படி எல்லாவுமாகத்தான் உங்களை நான் பார்த்தேன். அதனால தான் தினேஷ் உங்க கிட்ட நான் கண்ணியமாக இதுவரைக்கும் நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லவே இல்ல.
அதுக்கு முக்கியமான காரணமே… நான் உங்களை அந்த இடத்தில் வைத்து பார்க்கவில்லை என்று அர்த்தம்.
எனக்கு நான் ரொம்ப அழகு தான். நீங்க அப்படி எல்லாம் செஞ்சதுனால என்னோட வாழ்க்கை எப்படி மாறுச்சுனு உங்களுக்கு தெரியுமா?…
என்ன வீட்டுக்குள்ள சேர்த்துக்கல, நைட் ஃபுல்லா எங்க இருந்து வந்தேன்னு கேக்குறாங்க?… நான் என்ன சொல்லணும்?…
நான் என்ன தப்பு முதல்ல பண்ணினேன் அதவாது சொல்லுங்களேன்..
என்னை இந்த அளவுக்கு தண்டிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு. நீ இப்படி என்ன பத்தி நினைக்காத நீ வெளிப்படையாக கூட பேசி இருக்கலாம்.
சரி நாளைக்கு நான் அதே ஆபீஸ்ல எப்படி மரியாதையோடு வேலை பார்ப்பேன்?..
உன்னை இது போல பண்ணா உனக்கு ஓகேவா தினேஷ்?…
இல்ல உன் வீட்டு பொண்ணு இந்த மாதிரி ஏதாவது பண்ணாலும் கூட, இந்த மாதிரி என்ன பத்தி லெட்டர் எழுதி இருந்தால்தான் நான் பண்ணினேன் ஒரு பையன் சொன்னா நீ சரின்னு சொல்லுவியா?..
நீ புரியாம பண்ண ஒரு விஷயம். உன்ன கெத்தா காட்டணும்னு சொன்ன ஒரு விஷயம்.. என் வாழ்க்கை நாசமா கேட்டுச்சு அதான் உண்மை. நீ எத்தனை தடவை சாரி கேட்டாலும்… நடந்தது எப்படி மாற்ற முடியும்?
உன்னோட சாரி நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். ஆனா என்னோட மரியாதை?.. என் குடும்பத்தோட மரியாதை
விக்ரம் உடைய மரியாதை இதெல்லாம் யார் திருப்பித் தருவா?..
இப்படி அவள் ரொம்ப தைரியமாக நிறைய கேள்விகள் கேட்க கேட்க விக்ரம் உடைய பார்வை விரிய ஆரம்பித்தது.
இவ்வளவு தைரியமாக பேச உனக்கு வருமா அப்படிங்கிற மாதிரி…
இது எல்லாமே எனக்கு அப்போ புரியல நிலா…
இங்கே வந்ததுக்கப்புறம் உன்னை கிண்டல் பண்ணனும் நினைச்சுகிட்டு தான் நான் வந்தேன். ஆனா ஆபீஸ்ல எல்லாரும் முன்னாடியும் விக்ரம் சார் பயங்கர சத்தம் போட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சது.
நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணி இருக்கேன் அதனால உன்னோட வாழ்க்கையை மட்டும் இல்ல என்னோட வாழ்க்கையும் இந்த கம்பெனியுடைய பேரும் கெட்டு போயிருக்கும். இதனை யோசிச்சு கூட பாக்கல சுயநலமா இருந்துட்டேனே..
எனக்கு ரொம்ப ஒரு மாதிரி குற்ற உணர்வை இருந்துச்சு அதனால தான் நான் இங்கே வரைக்கும் வந்தேன் ஆனா இங்கே நீ இருப்பேன்னு எனக்கு தெரியாது.
நான் சாரை பார்ப்பதற்காக வந்தேன். அடுத்து உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன். நீ இங்க இருந்தது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு எனக்கு புரியுது. இப்ப நீ உன் வீட்டில் இல்லை என்று….
சார் நீங்களும் என்னால பாதிக்கப்பட்டு இருக்கீங்க. நிலா நீயும் தான்… கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் ரெண்டு பேரும் மன்னிச்சுக்கோங்க என்று சொல்லும் போது,
விக்ரம் உடனே இங்கே பாரு தினேஷ். நாங்க மன்னிச்சிட்டோம் நீ கெளம்பு.. போய் வேலையை பாரு இப்படி சொல்ல இல்ல சார் அது வந்து..
நிலா உன் கிட்ட பேசிட்டா அது உனக்கு புரியுதா?… அவளுக்கு உன் மேல கோபம் இருந்தா உன்கிட்ட பேசி இருக்கவே மாட்டா,
மன்னிச்சுட்டா நீ போயிட்டு வா… நிலாவுக்கான ஸ்பேஸ் நம்ம கொடுக்கணும்.
நான் சொல்றது புரியுது தானே இப்படி விக்ரம் தினேஷ் கிட்ட கேட்கும் போது புரியுது சார்.
சரி நான் கிளம்புறேன் நான் போயிட்டு வரேன் நிலா போயிட்டு வரேன் சார் இப்படி சொல்லிக்கிட்டு அவன் போக,
அவன் கேட்டை கடந்து சென்றதும், நிலான்னு சொல்லி விக்ரம் திரும்ப ஆனா அவள் இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டாள். ஒரு கோளை மாதிரி இருந்த என்னை… இந்த அளவுக்கு யோசிச்சு பேச வச்சிருக்கீங்க.
எனக்கு இல்ல ஏதோ ஒரு புதுமையான மாற்றத்தை நான் உணர்கிறேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்….
இதுக்கு நான் என்ன கைமாறு பண்ண போறேன்னு எனக்கு தெரியல, என்னை எப்போதும் இது போலயே நடத்துவீங்களா?..
என்னால உங்களை விட்டு போறத பத்தி யோசிக்கவே முடியலன்னு சொல்லி அவள் இறுக்கமாக ரொம்ப அழுத்தமாக கட்டி அணைத்தபடி நிற்க,
பல மாதங்கள் தவம்…
இப்போதுதான் விக்ரமுக்கு நிறைவானது அதுவும் ஒரே நாள்ல,
இப்படி அவங்க நிற்கிறது ஒரு உருவம் தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருந்துச்சு அது யாரு?..
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
