உணர்வுகள் எப்பொழுதும் ஆழமானவை…
அது ஒரு நாளில் வரலாம். பல வருடங்கள் கழித்தும் வரலாம்..
ஆனால் இங்கு நிலாவிற்கு விக்ரம் மேல அது இது அன்பும் மரியாதையும் ஏற்பட்டது.
யாருடைய நிழலும் தன் மீது படாமல் பார்த்துக் கொண்டவள், இன்று அவளை அறியாமல் அவனே உலகம் என்று அவன் கைகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டாள்.
சற்றும் எதிர்பாராத விக்ரம் அவளை இன்னும் தன் மார்போடு தன் இதய சத்தம் அவள் காதுக்குள் நுழையுற மாதிரி இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான்.
இந்த உலகத்துல நாங்கள் இருவரும் மட்டும் தான் இருக்கிறோம் வேற யாரும் இல்ல… இந்த அளவுக்கு அவங்களுடைய மனசு உலகம் மறந்து தனி உலகத்தில் இரு உயிர்கள் இணைந்தது போல இருவரும் சேர்ந்து இருக்க,
அப்போ…
ஒரு கைதட்டல்..
சபாஷ்… சபாஷ்…
ரொம்ப நல்லா இருக்கே, இதுக்கு பேரு என்ன?.. பிரண்ட்லி ஹக்கா?.. இல்ல வேற எதுவுமா?..
இப்படி கேட்டுக் கொண்டே ஒரு குரல் அவர்களை நெருங்கி வரும் பொழுது,
அங்கு ஒரு 50 வயது பெண்மணி அவர்கள் இருவரையும் நோக்கி வந்து கொண்டிருக்க, அதை பார்த்ததுமே நிலா பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்தாள்.
அவனை விட்டு வேகமாக விலகி தனியே நின்றபடி, ஹலோ மேம்…
இப்படி சொல்ல,
நீ… அந்த பட்டிக்காடு நீ தானே,
நீ எதுக்கு இப்ப இங்க வந்து இருக்க?…
உன்ன பத்தி தான் ஆபீஸ்ல எல்லாரும் பேசிட்டு இருக்காங்களா?…
நான் கூட ஏதோ ஒரு பேரழகி என்று நினைத்தேன்.
இங்கு வந்து பார்த்தா அது நீதானா?..
உனக்கு வேற யாருமே கிடைக்கலையா?.. போயும் போயும் இவளையா உனக்கு பிடிச்சிருக்கு?…
இப்போ சொல்லு வரிசையில எத்தனை பொண்ணுங்கள் வந்து நிப்பாட்டுறேன்னு பாரு, நம்மளுடைய ஸ்டேட்டஸ்க்கு தகுந்த மாதிரி,
ஏய்… நீ எப்படி என் மகனை வளைச்சு போட்ட, அந்த அளவுக்கு உனக்கு அறிவு இருக்கா என்ன?…
எல்லாம் என்னோட நேரம்..
இப்படி சொல்லும் போது தான் அவளுக்கு ஒரு விஷயம் புரிஞ்சது அவன் அவள் வேலை பார்க்கிற கம்பெனியுடைய ஓனர் உடைய பையன் என்று..
இது புரிஞ்சதுமே அவளுக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது.
இங்க பாருங்க…
நிலா கிட்ட சாரி கேளுங்க, உங்களை யாரு முதலில் இங்க வர சொன்னா?..
நீங்க வேணா உங்கள சார்ந்த யாரும் வேணாம்னு சொல்லி தானே நான் தனியா வந்து இருக்கேன். இப்போ எதுக்கு மறுபடியும் இங்க வந்து இருக்கீங்க?..
வெளியில போங்க, இப்படி அவன் கோபமாக நிலாவுடைய கைகளை பிடிச்சுக்கிட்டு அவன் பேசிகிட்டு இருக்கும் போது என்னது?… சாரியா?.. நானா?..
இவள் கிட்டையா?…
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவ கழுத்தை பிடித்து நெறிச்சுக் கொல்லனும்னு இருக்கு.
ஏய், இந்த பக்கம் வா என் பையனுடைய பக்கத்தில் நிற்கிறது உனக்கு என்ன தகுதி இருக்கு?…
தள்ளி போ… இப்படி பயங்கர ஆவேசமாக அவங்க பக்கத்துல வந்து நிலாவுடைய கைய புடிச்சு இழுத்து விட,
டக்குனு அவனுக்கு பயங்கர கோபம் வந்துருச்சு. விக்ரம் அதே கோபத்தோட அவங்க அம்மா நிலா காய பிடிச்சிருக்குறத பார்த்ததுமே அவர்களுடைய கையிலேயே சட்டுனு அடிச்சு அவள் கையை விலக்கி வேகமாக உனக்கு ஒன்னும் ஆகலைல்ல,
ஐ அம் சாரி, அவங்க அவங்களுக்கு பதிலா நான் கேட்டுக்குறேன்னு அவன் சொல்லிக்கிட்டே நீ முதலில் உள்ள போ,
நான் இவங்கள பேசி அனுப்பிட்டு வரேன்னு சொல்லி அவளுடைய தோள்பட்டையை பிடித்துக் கொண்டு அவன் அவளை உள்ளே கொண்டு போக,
நான் என்ன பேசிட்டு நிற்கிறேன் நீ என்னையே அடிக்கிறியா நான் உன்னை பெத்த அம்மா டா,
யாரு?..
நீங்களா?..
நிலா நீ உள்ள போ முதல்ல,
என்ன சொன்னீங்க?… என்னை பெத்தவளா?..
பெத்துட்டா போதுமா?…
நீங்க செஞ்ச எதையுமே நான் மன்னிக்கல, இப்ப வரைக்கும் என்னால் நிம்மதியா தூங்க முடியல,
அடுத்து என்ன செய்வதற்கு இங்கே இருக்கீங்க வந்திருக்கீங்க?..
போதும்டா சாமி,
வாழ்க்கையில் இப்படி ஒரு பொம்பளையா நான் பாத்துரவே கூடாது என்னைக்குமே,
டேய் நான் உன்னோட அம்மா, என்ன விக்ரம் அம்மாவை பார்த்து இப்படி எல்லாம் பேசுற உனக்காகத்தானே நான் இப்படி ஓடி ஓடி உழைச்சுட்டு இருக்கேன்?..
உழைப்பை வைத்து என்ன பண்ண?…
என் அப்பாவை திருப்பி கொண்டு வர முடியுமா உங்களால..
என்னோட சித்திய மறுபடியும் இங்க கூட்டிட்டு வர முடியுமா?.
முடியாதுல,
அது ஒரு ஆக்சிடென்ட். நான் வேணும்னு பண்ணல என்னை ஏண்டா நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?..
இப்ப நீங்க இங்க இருந்து கிளம்பலனா உங்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிடுவேன்.
இப்ப நீங்க போறீங்களா இல்லையா?… நான் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா?.. என் வாயால உங்களை நான் அம்மான்னு கூப்பிடவே மாட்டேன் என்னைக்குமே…
இந்த சொத்து பத்து சேர்த்து வச்சுக்கோங்க… அதை பத்தி எனக்கு கவலை இல்லை அது எனக்கு தேவையில்லை.
எனக்கு நீ அப்பா சொத்து சேர்த்து வச்சுட்டு தான் போயிருக்கிறார் அது மட்டும் இல்ல என்னோட சித்தி.. சித்தி இல்லை, என்னோட அம்மா அவங்களும் எனக்கு என்னென்னமோ செஞ்சு வச்சுட்டு தான் போயிருக்காங்க,
அவங்க இந்த உலகத்தில் வெண்ண இல்லாம இருந்திருக்கலாம். ஆனா எப்போதுமே என் மனசுக்குள்ள அவங்க மட்டும் தான் இருக்காங்க நீங்க இல்ல,
இந்த உலகத்துல வாழ்றதுக்கு தகுதி உங்ககிட்ட இல்லவே இல்லை கிளம்புங்க,
சரி நான் கிளம்புறேன். ஆனா இந்த என்னை வடிஞ்ச மூஞ்சிய எதுக்கு இங்க உக்கார வச்சிருக்க?…
இது மட்டுமாவது கேளுடா,
என்னது?.. அவன் என்னோட தேவதை. அவளுக்காக நான் எதையும் பண்ணுவேன்.
எப்படி அவளுக்கு நீ வேலை போட்டு கொடுத்தல்ல அது போலவா?..
ஆமா,
அவளுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இனிமேல் நீங்க இங்க வந்திங்கனா உங்க மரியாதை கெட்டுப் போறதுக்கு நான் தான் முழு பொறுப்பு அதை காப்பாத்திக்கணும்னா இங்கு வராதீங்க,
முக்கியமா நிலா கிட்ட நீங்க இன்னும் சாரி கேட்கல, அதை கேட்டுட்டு நீங்க இங்க இருந்து போகலாம் இப்படி அவன் சொல்லும்போது,
அந்த பிச்சைக்கார கிட்ட நான் சாரி கேட்கணுமா?… அப்படி ஒரு சாரி கேட்டுதான் உன் கிட்ட பேசணும்னு எனக்கு அவசியம் இல்லை போடா.. எப்போதும் தனியா தானே வாழ்ந்தேன்.
இப்போதும் அப்படியே இருந்துட்டு போறேன்.
ஒரே ஒரு மகன் ன்னு உனக்காக நான் கீழ இறங்கி போறேன் ஆனா நீ எதுக்காக என்னை இப்படி அவமானப் படுத்துகிறாய் என்று எனக்கு தெரியல,
முதல்ல உன்னோட சித்திக்காக என்னை விட்டு விலகிப் போனாய்..
இப்போ இவளுக்காகவா?…
ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ அம்மான்னு சொல்லி என் பக்கத்துல வந்து நிப்ப, அன்னைக்கு நீ பேசின எல்லாத்துக்கும் பதில் நான் கொடுப்பேன். இப்படி அவங்க சொல்லிட்டு அங்கிருந்து கோபமாக போகும்போது,
இது எல்லாத்தையும் ஒரு ஓரத்தில் நின்னு நிலா கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு தலை எல்லாம் சுத்த ஆரம்பித்தது.
அந்த அப்பார்ட்மெண்ட்ல நான் இவரையும் இவர் என்னையும் சரியாக பார்த்துக் கொண்டதே இல்லையே…
எனக்கு இவர் எப்படி வேலை வாங்கி கொடுத்திருப்பார்?… இவ்வளவு பெரிய கோடீஸ்வர பையனுக்கு எதுக்கு என் மேல ஒரு கரிசனம்?… எதுக்காக அங்கே தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார்?..
அப்படின்னா… நான் பாத்ரூம்ல மயங்கி கிடந்தப்போ இவர் உரிமையா வந்ததுக்கு காரணம் இவரு அந்த ஐடி கம்பெனி ஓனரா?..
அதனால தான் எல்லாரும் இவரை பார்த்து பயந்தாங்களா?…
இந்த விஷயத்தை ஏன் என்கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்லை.
குழப்பமா இருக்கு.
இவர் எப்படி நான் மயங்கி கிடந்தது தெரிஞ்சு அங்கு வந்து என்னை காப்பாற்றினார்?…
ஏதோ ஒரு ஈர்ப்பு தான் எங்களுக்குள்ள இருக்குன்னு நினைச்சேன் ஆனா என்னை ஏற்கனவே தெரிஞ்சது போல வேலை எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்ன?..
அன்னைக்கு இண்டர்வியூல, நான் எந்த கொஸ்டினுக்கும் ஆன்சர் பண்ணவே இல்ல ஆனா எல்லாமே எனக்கு தெரியும் எனக்கு அது சொல்லவும் வரல மத்தவங்க மாதிரி,
என்னை இன்டர்வியூ எடுத்தவங்க கிண்டல் பண்ணி சிரிக்க ஆரம்பிச்சாங்க..
சொல்லப்போனால் நான் அந்த மார்க் போடுற லிஸ்ட் எல்லாத்தையுமே பார்த்துட்டு தான் வந்தேன். அதுல எனக்கு ஜீரோ போட்டு இருந்தாங்க. ஆனால் எப்படி எனக்கு வேலை கிடைச்சது என்று எனக்கு ஒண்ணுமே புரியல,
அப்ப இதுக்கெல்லாம் காரணம் இவர்தானா?…
இப்படி பல யோசனைகள் அவள் மண்டை குள்ளே ஓடிக்கொண்டே இருந்துச்சு.
இப்போ அவள் வெளியில் எட்டி பார்க்கும்போது, அங்கே நின்று கொண்டிருந்த அவனை காணவில்லை.
அங்கும் இங்குமாக அவளுடைய கண்களை சுழற்றிக்கொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தாள்.
இப்போ அவன் கேட்டுக்கு வெளியே அவனுடைய பைக்ல அங்கிருந்து கிளம்பிட்டான்.
விக்ரம்… விக்ரம்..
இப்படி கூப்பிட்டுக் கொண்டு அவள் வீட்ல இருந்து கேட்டை நோக்கி ஓட ஆனா அவனை அங்கிருந்து போயிட்டான்.
கேள்விகள் அவள் மனசை போட்டு அறுத்துக் கொண்டிருக்கின்றது. பதில் சுத்தமா தெரியல தலையெல்லாம் சுத்த ஆரம்பிச்சது.
இப்படியே ரொம்ப நேரமாக அவள் வாசலை பார்த்தபடி அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க,
ஆனால் விக்ரம் ஒரு பெரிய பை நிறைய சரக்கு பாட்டில் வாங்கிட்டு
ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்.
ஆட்டோ சத்தம் கேட்டதுமே அவள் வெளியில் எட்டிப் பார்க்க, இப்ப அவன் கேட்டை தள்ள மாறிக்கொண்டே திறந்தான். பைக்ல போனவரு இப்பொழுது ஆட்டோவில் வராரு…
வரும்போது என்ன ஆச்சு அவருக்கு?.. ஒரு மாதிரி வருகிறார் என. அவள் வேகமாக அவன் அருகில் போய் விக்ரம்..
என்ன ஆச்சு?…
இப்படி கேட்டுக்கொண்டு அவன் பக்கத்தில் போக, பயங்கரமாக குடித்திருக்கிறான்.
போதையில நடக்க முடியாம அங்கும் இங்கும் அசைந்து அவன் வர,
குடிச்சிருக்கியா?.. இப்படி கேட்டதும் ஆமா,
நீ போ..
நான் பாத்துக்குறேன். இப்படி அவள் கைய புடிச்சு அவன் அவனுடைய கைகளை தொட விடாமல் தள்ளிவிட,
விக்ரம் ப்ளீஸ்…
உங்களால நடக்கவே முடியல, எப்படி மாடியில் ஏற போறீங்க நான் கை பிடிச்சு கூட்டிட்டு போறேன் வாங்க,
இப்படி அவனுடைய கையை அவளுடைய தோள்பட்டையில் போட்டுக் கொண்டு அவனை அழைத்துக் கொண்டு போக,
கையில வேற அவன் பாட்டிலை வச்சிருந்ததுமே, அந்த பையை வெடுக்கென்று பிடுங்கி,
அதை கீழே ஒரு இடத்தில் வைத்துவிட்டு மாடிக்கு கூட்டிட்டு போக,
அவன் எந்த ஒரு வார்த்தையும் பேசவே இல்ல அமைதியாக வந்தான்.
முதல்ல உக்காரு…
எதுக்கு இப்படி பண்ண?… வீட்ல ஒருத்தி இருக்கேன் என்று உனக்கு மறந்து போச்சா?…
என்னை இப்படி வீட்ல வச்சுக்கிட்டு நீ குடிச்சிட்டு வரலாமா?..
என்னை பார்த்து பேசு..
இப்படி அவனை கண்டிக்கிற விதமாக ரொம்ப கோபமாக அவள் பேசிக்கொண்டே இருக்க டக்குனு குழந்தை மாதிரி அவளுடைய மடிய பிடிச்சு அதில் தன்னுடைய தலையை புதைத்துக் கொண்டு அழுக ஆரம்பிச்சிட்டான் ஒரு அஞ்சு வயசு குழந்தை மாதிரி,
அவன் அழுகையை பார்த்ததும் அவளுக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது..
இட்ஸ் ஓகே..
இட்ஸ் ஓகே..
நான் இருக்கேன். அழுகாத, இப்படி சொல்லிக்கிட்டு அவளுடைய கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வர ஆரம்பித்தது.
அவன் எதற்காக அப்படி அழுகிறான்?…
அவனுடைய அம்மாவை எதற்காக அப்படி வெறுக்கிறான்?..
இதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
