யோசிக்க முடியல, அது எப்படி?…
அவன் ஒரு நாள்ல என்னோட உயிராக மாற முடியும்?..
அவன் இல்லாத வாழ்க்கையை என்னால நொடிப் பொழுதும் உணர முடியாமல் பித்து பிடித்தவளாய் இருக்கிறேனே?…
அவன் பார்வை சொல்லுது என் மேல அவனுக்கு இருக்கிற அதீத காதலை,
அவன் ஒற்றை சிரிப்பு சொல்கிறது, அவனுக்கு என் மீதான ஈர்ப்பை, காமத்தையும் தாண்டிய அவன் பார்வை வருடல்களை,
இது என்னுடைய ஒரு நாள் மாற்றம் இல்லையோ?….
இது என் வாழ்நாள் ஏக்கம்,
என் ஆயுளுக்கான சுதந்திரம்.
என்ன வாழ்க்கை வாழ்ந்தேன் என்று திரும்பி பார்த்தா எனக்கு ஒண்ணுமே தெரியல,
எல்லாமே அடுத்தவங்களுடைய கைக்குள்ளே அடங்கி போயிடுச்சு,
ஆனா…
உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு எனக்கான உலகத்தை கண்டறிந்து காண்பித்தவன்.
எனக்குள்ள பல கேள்விகள் இருக்கு?… ஏன் எனக்காக செய்யணும்?…
கண்ணாடி முன்னாடி நின்றால் முகத்தை பார்க்க எனக்கே பிடிக்காது.
அவமான சின்னமாக தான் என்னுடைய வீட்டில் நான் சுத்திட்டு இருந்தேன். சம்பாதிக்கல என்றால் அதுக்கும் நான் தகுதி இல்லாதவளா போயிருப்பேன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு….
என் இருட்டு அறையில் வெளிச்சமாக்கிய என்னோட ஒளி. என் ஆண் தேவதை,
ஆனா… அவர் எதுக்காக எனக்கு வேலை வாங்கி கொடுக்கணும்?… இது இரக்கமாக இருந்தால் எனக்காக எல்லாமே பண்ணனும் எந்த அவசியமும் இல்லை?…
அவரின் ஒவ்வொரு பார்வையும் சின்ன சின்ன தொடுதல்களும் என்னை நானே புதுமையாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
அவரின் சின்ன சிரிப்பு எனக்கு வாழ்நாள் சந்தோஷமாக மாறிக் கொண்டு வருகிறது.
ஏன் இப்படி நான் மாறிட்டேன்?…
ஒரு உண்மையான அன்பை இப்படித்தான் இருக்குமா?…
எனக்கே இது சந்தேகமா இருக்கு அந்த அளவிற்கு இந்த உலகம் என்ன மாத்திருச்சு.
விக்ரம்… நீங்க எதுக்காகவுமே கலங்க கூடாது.
உங்களுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் என் இதயத்தை நனைக்குது.
உங்க கண்ணீரை பார்க்கிற சக்தி எனக்கு இல்ல,
நீ அழுகாத கூட நான் இருக்கேன் நான் எப்போதுமே இருப்பேன் என்று உன் கையை இறுக்கமாக பிடிச்சு சொல்லனும்னு தோணுது..
ஆனா அவனோட கண்ணீரை பார்க்கும் போதெல்லாம் ஏன் என்னை அறியாமல் நான் அழுதுட்டு இருக்கேன் எனக்கு தெரியலையே..
இப்படி யோசித்தபடியே நிலா அவன் அழுகையை பார்க்க முடியாத அவளாய் துடித்து துடித்து போக,
விக்ரம் ப்ளீஸ்….
நான் உங்க கூட தானே இருக்கேன். அழுகாதீங்க,
என்று சொல்லிக் கொண்டு அவளும் திரும்பி திரும்பி அழுக அவருடைய கைகள் இறுக்கமாக பிடித்தான்.
ஒரு ஆணுக்குள் இவ்வளவு கண்ணீரா?…
பெண்ணின் கண்ணீர் பற்றி பேசிய இதே உலகம் ஆணின் கண்ணீரை பற்றி ஏன் மறந்து போனது.
இங்க பாருங்க விக்ரம்,
என்னோட வாழ்க்கையை புதுசா மாற்றியது நீங்க தான். ஆனா இப்போ நீங்க இப்படி கலங்கி அழுகிறத பார்த்தா என்னால அதை தாங்கிக்க முடியல,
தயவு செஞ்சு சொல்றேன்,
நான் எப்போதுமே உங்க கூட இருக்கேன் நீங்க கலங்கி நிற்காதீங்க இப்படி சொல்ல நான் வாழ்றதை வேஸ்ட் நிலா.
எல்லாம் இருந்தும் நான் ஏன் எதுவுமே இல்லாதவன் போல இருக்கேன் என்று எனக்கு தெரியல நிலா,
கதறி அழுகணும்னு தோணுது. எனக்கான ஒரு ஆறுதல் எதுவுமே கிடைக்காதது போல இவ்வளவு நாள் என்னோட வாழ்க்கை தனிமையிலேயே போயிடுச்சே…
என்ன அப்படி என்ன பாவம் பண்ண?…
இவ்வளவு மனபாரத்தையும் சுமந்து நான் இந்த உலகத்துல வாழனும் மா தோணுது…
நான் அப்படி என்ன ஆசைப்பட்டேன்?… பெற்ற தாயுடைய முழு அன்பையும் பெற்று அவங்க என்கூட இருக்கணும் அவங்க கூட நான் விளையாடனும் அவங்களுக்கு நான் எல்லாம் ஆக இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.
ஆனா அவங்க அதுக்கு கூட எனக்கு கொடுக்க முடியாத ஒரு நல்ல அம்மாவாக எப்போதுமே இருந்திருக்காங்க.
எல்லாம் இருந்தும் இல்லாத ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா?…
நரக வேதனையோடு உச்சம்.
இப்படி அவன் அழுகும் போது அவளுக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. நான் என்னைக்குமே உன்னை விட்டு போக கூடாது. உன் கூட மட்டும் தான் நான் இருக்கணும் உன் மனசுக்குள்ள இவ்வளவு வேதனைகள் இருக்கா?…
ரொம்ப சொகுசா வாழ்ந்த ஒரு ஆளு என்று மட்டும் தான் என் மண்டைக்குள்ள இப்போ வரைக்கும் இருக்கு ஆனா…
அவனுக்குள்ள இருக்கிற மனசு ரொம்ப வேதனையும் அவன் சிந்தும் கண்ணீரும் என்னை என்னவோ செய்யுது.
அவனுக்கான முழு பொறுப்பு நான் மட்டும்தான்.
இனிமேல் தாயாகவும் எல்லாவும் நானாகத்தான் இருக்க போறேன். எப்போதும் கூடவே இருக்க போறேன்.
இன்னைக்கு இல்ல…
இனி எப்பவும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று அவள் மனசுக்குள்ளயே அவனிடம் சொல்லாத வார்த்தைகளால் தனக்குள்ள சத்தியம் செய்து கொண்டா,
அவன் கைகள் இறுக்கி பிடித்து அவள் விடாமல் அவனுக்கு முழு பலமாக நிற்கும் போது தான்,
அவன் மனசுக்குள்ள இருந்த பயத்தை மறுபடியும் சொல்ல ஆரம்பித்தான்.
எனக்கு பயமா இருக்கு.
எங்க அம்மா உன்னை என்கிட்ட இருந்து பிரிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவாங்களோ என்ற பயம் எனக்கு அளவுக்கு அதிகமா இருக்கு.
உன்னை என்னால் எப்போதுமே இழக்க முடியாது.
நீ இல்லாத வாழ்க்கை என்னால நினைச்சு கூட பாக்கவே முடியல,
அது அம்மாவே இல்ல.
அவள் ஒரு மோசக்காரி, அவள் ஒரு கொலைகாரி.
உன்னோட ஆசைக்காக எந்த எல்லைக்கும் போற ஒரு கேவலமான ஜென்மம்
ஒருவேளை அவங்க உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ணா நீ என்ன விட்டு போயிட கூடாது.
எனக்காக நீ எப்போதுமே ஸ்ட்ராங்கா நிக்கணும். என் வாழ்க்கைக்கான ஒரு முழு அத்தியாயம் நீயாக இருக்கணும்னு நினைக்கிறேன்.
நான் நினைச்சது போல நீ என் கூடவே இருப்பியா?…
இப்படி சொல்லிக்கொண்டு அவளுடைய மடிகளில் படுத்து கண்ணீர் விட்டு ஒரு இளம் வயது ஆண் அழுது கொண்டிருக்கிறான் அதை பார்த்த நிலாவுக்கு,
இப்போ தான் ரொம்ப பயம் வந்துருச்சு..
அவன் கண்ணில் இருக்கிற அந்த கண்ணீருடன் கூடிய காதல் அவளை என்ன என்னவோ செய்தது.
பேச வார்த்தை இல்லாமல் அதே நேரத்தில் செயலிலும் எதையும் காட்ட முடியாத அவளாய்,
அவனை விட்டுக் கொடுக்க முடியாத ஒரு குழந்தை போல தன் மடியில் அவனை ஏந்தி கொண்டாள்.
அவனை பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொண்டாள்.
அவன் கண்ணீரை பார்க்க முடியல,
அவளுடைய விரல்களால் மெல்ல துடைத்தபடி,
நான் உன் கூட எப்போதுமே இருப்பேன் விக்ரம் நீ இந்த மாதிரி எல்லாம் பேச வேண்டாம்.
நீயே என்னை துரத்தினாலும் நான் உன்னை விட்டு என்னால் போக முடியாது.
நீ என்ன செஞ்சாலும் எனக்கு தெரியல ஆனா உன் மேல அளவுக்கு அதிகமான பைத்தியத்துல நான் இருக்கேன்.
இந்த உலகத்துல எனக்குன்னு கண்ணே சிந்தனை முதல் ஆள் நீதான் என்று நினைக்கிறேன்.
எனக்கு அம்மா அப்பா தங்கச்சின்னு யாருமே வேணாம் நீ மட்டும் என்கூட இருந்தா போதும் இந்த உலகத்தையே நான் ஜெயிச்சுடுவேன்.
அவமானத்துக்கு உள்ளே வாழ்ந்த எனக்கு, ஆறுதலாய் இருந்து எல்லாத்தையும் உடைச்செரிஞ்சு வெளில வர வச்ச உன்னை நான் அப்படியே விட்டுட்டு போயிடுவேன் நினைக்கிறாயா?…
இல்ல விக்ரம்,
உங்களை விட்டுட்டு நான் போக மாட்டேன். இந்த உறவு ஒரு நாள் வந்த உறவாக இருக்கக்கூடாது.
நீ எனக்கு துணையா நான் உனக்கு துணையா இருக்கணும்னு நானே ஆசைப்படுகிறேன்.
அப்படி எல்லாம் உங்களை விட்டு விட மாட்டேன். யார் எதிர்த்தாலும் சரி எத்தனை பேர் வந்தாலும் சரி என்னோட விக்ரம் எனக்கானவர் மட்டும்தான்.
இப்படி சொல்லிக்கொண்டு அவனுடைய முகத்தை துடைத்த படி அவனுக்கு ஆறுதலாக பேசும்போது திடீரென அவன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி சொருக ஆரம்பிச்சது.
அவன் வேகமாக வேறு பக்கம் திரும்பி வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டான்.
ஐயையோ…. ஐயாம் சாரி,
நீ முதல்ல எழுந்திரு,
இந்த பக்கம் வேணாம் கிளீன் பண்றேன்னு சொல்லும் போது அதெல்லாம் ஒன்னும் வேணாம். அமைதியாக இருங்க நான் பார்த்துக்கிறேன்.
இந்த பக்கம் வாங்கன்னு சொல்லிட்டு அவள் பயங்கரமாக எல்லாத்தையும் சுத்தம் பண்ணி வாசனை திரவியங்கள் எல்லாம் போட்டு அதை சரி பண்ணினா,
முதல்ல உங்கள கிளீன் பண்ணனும்னு சொல்லி அவன் கையை பிடித்துக்கொண்டு நேராக பாத்ரூமுக்கு போய் அவனோட காயத்திற்கு மேல ஒரு பிளாஸ்டிக் கவர எடுத்து தண்ணி படாத மாதிரி கட்டினா..
அவனுடைய உடையை ஒவ்வொன்றாக கழட்டும் பொழுது அவனுக்குள்ள இருந்த உணர்வு அது சொல்ல முடியாதது..
ஆனால் அவள் எந்த கூச்சமும் இல்லாதது போல காட்டிக் கொண்டு மனதுக்குள் பல சங்கடங்கள் இருந்தாலும் கூட, இந்த நேரத்துல அதை காட்டுவதற்கு அவள் கொஞ்சம் கூட விரும்பவே இல்லை,
தண்ணீரை எடுத்து மெல்ல ஊற்ற,
அவன் ஒரு மாதிரி குளிரில் நடுங்கிக் கொண்டே தன் உதட்டை நடுங்க வைத்தபடி உட்கார்ந்திருக்க,
அவள் அந்த வலுவலுப்பான சோப்பு கட்டியை அவன் உடலில் தன் கைகளோடு வைக்கும் போது அந்த சூடு அந்த குளிரையும் போக்கி இதமாக மாற்ற ஆரம்பித்தது.
அந்த சூடு அவள் கைகள் வைத்ததால் மட்டுமல்ல, அவள் கைகள் மேலே பட பட அவனுடைய உணர்ச்சிகளும் அவனுடைய கட்டுப்பாட்டை மீறி விடுமோ என்ற பயமும் அதிகரித்தது.
அவளுடைய கவனம் முழுவதும் அவனை குளிப்பாட்டுவதில் இருக்க,
அப்போ சோப்பு நழுவி கீழே விழுந்தது. அதை எடுக்க திரும்பியவள் எழுந்திருக்கும் பொழுது தலையில் ஓங்கி இடித்துக் கொண்டாள் ஷவர் உடைய கண்ட்ரோல் மேல,
மட மட என்று தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அதை வேகமாக அடைக்க முயற்சி பண்ண,
திடீர்னு அந்த இரவுல அந்த தண்ணீர் கொட்டும் போது ஏதோ அருவில முதல்ல குளிச்ச அந்த ஜில்லுன்ற தண்ணீரில் நனைந்ததுமே ஒரு மாதிரி பதற்றத்தில் மூச்சு வாங்க,
ஆனால் அவளுக்கு பின்னாடி விக்ரம் எழுந்து நின்றான்.
அவள் அதை அடைக்க அதே நேரத்தில் அவனுடைய கைகள் அவளுடைய கைகளை மெல்ல வருட ஆரம்பித்தது.
அந்த தொடுதல் இதுவரையிலும் அவள் கண்டதில்லை…
அதை மறுக்கவும் இல்லை, கண்களை மூடியபடி அதை முழுவதுமாக உணர,
அவளை வேகமாக திருப்பினான். அவள் தலை முடியில் சொட்டிக் கொண்டிருந்த அந்த நீரை தன் விரல்களால் சுண்டி விட்டபடி அந்த முடிகளையும் பின்னை எடுத்து போட்டு அவள் முகத்தை நிமிரச் செய்ய,
உடம்பெல்லாம் கூசி போய், சற்றவளாய் அவன் முகத்தை காண முடியாமல் தவித்து போய் தன் ஏக்கங்களையும் வாய் விட்டு சொல்ல முடியாமல் திணறியபடி அதே நேரத்தில் அதை மிகவும் பிடித்துப் போய் விலகாமல் நிற்க
அவள் பார்வையை வேண்டி அவன் தவம் போல அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க,
மெல்லமாக அவளுடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கண்களை பார்க்க முயற்சி செய்தது.
அந்த ஒரு நொடி தான் இந்த உலகின் நிசப்தம் என்று அவர்களுக்கு தோன்றியது.
இருவர் மனமும் ஒன்றிணைந்த அந்த ஒரு தருணம் அனைத்தும் அமைதியான அந்த ஒரு சூழல் இதுவரையிலும் கண்டிடாத ஒரு புதுமையான அனுபவம் தான்.
இனி என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
