அரக்கன் – 3
- அத்தியாயம்- 3
அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இருந்து இயற்கையை ரசித்து வரைந்துக் கொண்டு இருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தான் அவன் நண்பன் நித்திஷ்.
“என்ன ஆரோன் ரொம்ப தீவிரமா ட்ராயிங் பண்ணிட்டு இருக்க போல”
“ம்” என்று ஒற்றே வரியில் பதில் சொல்லியவன் கவனம் முழுவதும் அங்கே இரு பட்டாம்பூச்சிகள் ஒன்றோடு ஒன்று சங்கமித்துக் கொண்டு இருந்த காட்சியை வியப்புடன் பார்த்தவன் விழிகள் அப்படியே படம் பிடித்தது போல் சிறிதும் மாற்றம் இல்லாமல் வரைந்து இருந்தான் ஆரோன்.
ஆறடி உயரம் கொண்ட ஆரோன் பார்வை என்றும் கழுகு பார்வை தான். புன்கைத்தால் நமக்கு என்ன கிடைத்து விடும் என்று கேட்பவன்.
“மனம் நிம்மதியாக இருக்கும்” என்று சொன்னால்.. “என் நிம்மதி என்னிடம் தானே இருக்கிறது” என்று உணர்ச்சியே இல்லாமல் பேசிபவனை காண்போர்களுக்கு ஆச்சிரியமாக தான் இருக்கும்.
ஆரோனுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. நட்பிற்கு கூட ஒரு எல்லை வைத்து இருப்பவன். யாரிடமும் நெருங்கி பழக மாட்டான். நெருங்க விட்டதும் இல்லை.
மற்றவர்கள் வருத்தப்படுவார்களே என்று எல்லாம் நினைக்க மாட்டான். மனதில் தோன்றியதை அப்படியே கூறிவிட்டு செல்வான்.
உண்மையில் இவன் மனிதன் தானா என்று கூட பலருக்கு சந்தேகம் உண்டாகும்.
ஆனால் அதை எல்லாம் சட்டை கூட செய்ய மாட்டான். தனக்கு கொடுக்கப்படும் பணியை நேர்தியாக மிக நேர்த்தியாக முடித்து கொடுப்பவன்.
அதனாலயே அவனை தேடி நிறைய நபர்கள் வருவார்கள் ஓவியம் வரைந்து தர சொல்லி.
அது கூட மனதுக்கு பிடித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வான். பிடிக்கவில்லை என்றால் பல கோடி கொடுத்தாலும் மனம் இறங்க மாட்டான்.
இப்போது அவன் மன திருப்திக்காக ஓவியம் வரைய நினைத்தவனுக்கு கிடைத்த காட்சி தான் தங்களையே மறந்து தன் துணையுடன் ஒன்றோடி இருந்த பட்டாம்பூச்சிகள் காட்சி தான்.
ஓவியத்தை பார்த்த நித்திஷோ “வாவ் ஒன்டர்புல் ஆரோன்… அப்படியே தத்ரூபமாக ட்ராயிங் பண்ணி இருக்க” என்று பாராட்டினான்.
இந்த பாராட்டுக்கு மயங்குறவன் இல்லையே ஆரோன். வாய் திறந்து ஒரு பேச்சிக்கு கூட நன்றி என்ற சொல்லை உதிர்க்க வில்லை.
மீதி அவுட்லைன் கொடுக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கொடுத்தவன் தன் வேலை முடிந்தது போல் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினான்.
இதெல்லாம் பழக்க பட்டது போல் நித்திஷிம் தோள்களை குலுக்கி விட்டு அவன் பின்னால் ஓடினான்.
“இப்போ எங்க போக போற ஆரோன்” என்று கேட்டபடி அவன் வேகத்திற்கு தகுந்தது போல் நடந்தான்.
ஆரோனோ “பீச்சிக்கு” என்றான்.
“போன வாரம் தானே போன” என்று நண்பனிடம் உரிமையாக கேட்டு விட்டான் நித்திஷ்.
ஆரோனோ “எனக்கு எப்போ தோனுதோ அப்போ எல்லாம் போவேன். அதை ஏன் நீ கேட்குற” என்று கேட்டு அவங்க வந்த ஆட்டோவில் ஏறி சென்று விட்டான்.
இது தான் ஆரோன். எதை பற்றியும் கவலைப்பட மாட்டான். தன் மீது அக்கறையாக தானே கேட்கிறார்கள் என்று கூட யோசிக்க மாட்டான். அவனிடம் கரிசனமாக ஏதாவது கேட்டால் “நீ ஏன் அதை கேட்கிற” என்ற சொல்லோடு பேச்சை முடித்துவிடுவான்.. எதிரே நிற்பவர்கள் பேச்சையும் நிறுத்த வைப்பான்.
நித்திஷிற்கு இன்றுவரை அவன் புரியாத புதிராகவே இருந்தான்.
ஆரோனை பற்றி நன்கு அறிந்ததாலோ என்னவோ அவன் முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு போவதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தான் வந்த பைக்கிலே திரும்பி சென்றான்.
ஆடோவில் இருந்து இறங்கி கடற்கரையில் கால்பதித்தவன் மனம் ஓர் நிமிடம் சிலிர்த்து அடங்கியது.
மனம் ஒரு உந்துதல் தர சட்டென்று பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.
அங்கே அவன் ரசித்த தேவதை குழப்பங்கள் சூழ்ந்த முகத்தோடு நின்று இருந்தாள்.
அலுவலகத்திலிருந்து புறப்பட்டவளுக்கு மனம் கணத்து போய் இருந்தது. ஒரு வாரமாக எதை பற்றியோ சிந்தித்து கொண்டு இருந்தவளால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை.
ஒரு வாரம் முன்பு புயல் போல் ஒரு அரக்கன் அவள் கண்களுக்கு விருந்தளிக்க அதில் தன் சுய நினைவை இழந்து மயங்கி போனாள் பேதை.
கிட்டதட்ட அவள் கண்விழித்த போது அவள் தங்கி இருந்த அறையில் நன்றாக உறங்கி விட்டு எழுந்தது போல் உணர்ந்தாள்.
சில நிமிடம் அப்படியே தலையை பிடித்து அமர்ந்தவளுக்கு நடந்த ஒவ்வொன்றும் நினைக்கு வர,பதறி போனவள் முதலில் அழைத்தது என்னவோ அவளுடன் பணி புரியும் ரம்யாவிற்கு தான்.
“தன்னுடன் பேசிக் கொண்டு வந்தவளை நொடி பொழுதில் காணமால் போனதை அவளால் நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
கிட்டதட்ட கடைசி அழைப்பில் லைன் எடுக்க பட இந்த பக்கம் இருந்தவளோ மிகவும் பதற்றதுடன் தட்டு தடுமாறி பேசினாள்.
“அ..அ..க்கா எங்க இருக்கிங்க?”
எதிர்முனையிலோ “ஹலோ சொல்லுடி” என்று ரம்யாவின் குரலில் உண்டான திகைப்பை மறைத்தாள்.
பின் “எங்க க்கா இருக்கிங்க” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.
ரம்யாவோ தூக்க கலக்கத்தில் தலையை சொறிந்துக் கொண்டு அரைக்கண் வழித்து நேரத்தை பார்த்தாள்.
அது நல்லிரவு இரண்டு மணியென காட்ட, கொட்டாவி விட்டபடி “அடியே நைட் இரண்டு மணிக்கு போன் பண்ணி எங்க இருக்கனு கேட்டா! என்னடி சொல்றது. தூக்கம் வருது போனை வைடி” என்று சொல்லிவிட்டு ரம்யா உறங்கிவிட,
உறக்கம் கலைந்து போய் பிரம்மை பிடித்தது போல் சிலையாக அமர்ந்து விட்டாள்.
“ஒருவேளை நான் கண்டது கனவா இருக்குமோ” என்று யோசித்தவளுக்கு நடந்த அனைத்தும் நிஜம் போல் காட்சியளிக்க, “ஆ” என்று கத்தியப்படி இருப்பக்கமும் தலையை பிடித்துக் கொண்டாள் எதை நம்புவது என்று புரியாமல்.
கிட்டதட்ட ஒரு மணி நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவளுக்கு முகம் மட்டும் தெளிவாகவில்லை.
குழப்பத்தின் ரேதை பெண்ணவளின் முகத்தில் அப்பட்டமாக படர்ந்தது.
சிறிது நேரம் கழித்து எழுந்தவள் முகம் அலும்பிக் கொண்டு ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி தலைவலிக்கு ஒரு காபியை போட நினைத்து சமையலறைக்குள் சென்றாள்.
சூடான மணத்ததுடன் ஒரு காபி கோப்பையை கையில் எடுத்து வந்தவள் நாசியில் முகுர்ந்த காபியின் நறுமணத்தில் மனம் சற்று தெளிவானது போல் உணர்ந்தாள்.
முழுமையாக தேனீரை அருந்தியவள் “எதுவா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ் போய் கேட்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறக்கத்தை தழுவினாள்.
மறுநாள் வழக்கத்திற்கு மாறாக அலுவகத்திற்கு சீக்கிரம் வந்தவளை அதிசியமாக பார்த்தார் வாட்ச்மேன்.
“என்ன அண்ணா பொறுப்பே இல்லாமல் இருக்கிங்க. சீக்கரம் கேட்டை திறங்கண்ணா” என்று அலுத்துக் கொண்டாள்.
அவரோ “ஏன்ம்மா ஒன்பது மணி ஆபிசுக்கு எட்டு மணிக்கெல்லாம் வந்து கேட்டை திற லேட்டாகுது சொல்ற” என்று அவளிடம் மல்லுக் கட்டிக் கொண்டே கேட்டை திறந்தவர் திரும்பி பார்த்தார்.
“இங்க பாரு ஆபிசை கூட்டி பெருக்கிற ஆளே இப்போ தான் வந்து இருக்கு” என்று முறைப்பட்டார்.
அதையெல்லாம் காதில் வாங்கதவள் நேராக உள்ளே சென்று அவர்கள் குழு நபர்கள் அமர்ந்து வேலை புரியும் கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.
ஒரு மணி நேரம் பொறுமையாக நேரத்தை கழித்தவளுக்கு ரம்யா வர நேரமாகவதை பார்த்து சற்று பொறுமையை இழந்தாள்.
சரியாக ஒன்பது ஐந்துக்கு ரம்யா அலுவலகம் வர. அதற்குள் பத்து முறை அவளுக்கு அழைத்து விட்டாள்.
கடுப்புடன் அலுவலகம் வந்தவள் நேராக அவளிடம் சென்று “என்னடி பிரச்சனை. இல்ல தெரியாம தான் கேட்குறேன் என்ன பிரச்சனை உனக்கு. பஸ்டாப்பிலிருந்து இங்க வரதுகுள்ள பத்து வாட்டி போன் பண்ற. அது போல லேட் நைட் போன் பண்ணி எங்க இருக்க கேட்கிற. என்ன தான் ஆச்சி உனக்கு? ” என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் ரம்யா.
அவளோ நேரடியாக “அக்கா நேத்து என்ன நடந்துச்சி. அந்த சூறாவளி வந்துட்டு போனதுக்கு அப்புறம் நம்ம எப்படி வீட்டுக்கு போனோம்” என்று உளறியவளை ஒரு மார்க்கமாக பார்த்தாள் ரம்யா.
“என்னடி ஆச்சி உனக்கு. சூறாவளி சொல்ற. எப்போ வீட்டு போனோம் கேட்குற. அடியே நேத்து ஞாயிறு டி. எப்போவும் ஞாயிற்று கிழமை லீவ் தானே நமக்கு. புதுசா என்ன என்னவோ சொல்லிட்டு இருக்க. கனவு ஏதாவது கண்டுயா என்ன?” கேட்டுக் கொண்டே அவள் நெற்றி கழுத்து என்று தொட்டு பார்த்தாள்.
ரம்யா ஞாயிறு என்று சொன்னதை கேட்டவள் உறைந்து போனாள். ‘அப்போ நேத்து நடந்தது எல்லாம் கனவா? அது எப்படி கனவுக்குள்ள இன்னொரு கனவு வரும். அந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் வந்துச்சே” என்று யோசனையில் மூழ்கியவளை ஒரு உலுக்கு உலுக்கி நடப்புக்கு கொண்டு வந்தாள் ரம்யா.
பின் என்ன நடந்தது என்று ரம்யா விசாரிக்க. அவளும் மனதிற்கு போட்டு குழப்பி கொள்வதை விட யாரிடமாவது சொல்லி விடை காணலாம் என்று நினைத்து ரம்யாவிடம் அனைத்தையும் கூறினாள்.
அதை கேட்ட ரம்யா சிரித்தே விட்டாள். “அடி போடி கனவு கண்டுட்டு வந்து சீன் போடுறீயா?” என்று சொல்லிவிட்டு தன் கணினியை உயிர்ப்பித்தாள்.
அவளோ “இதே மாதிரி தான் நேத்தும் உன் சிஸ்டமை ஆன் பண்ண” என்றாள் சலித்துக் கொண்டே.
ரம்யாவோ “நான் டெயிலி இப்படி தான் சிஸ்டம் ஆன் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு தன் பணியை ஆரம்பித்தாள்.
ஆனால் அன்றைய நாள் மட்டுமில்லாமல் அதுக்கு அடுத்த வந்த நாட்களையும் குழப்பத்தோடவே கடத்தினாள் அவள்.
வார இறுதியில் வழக்கமாக போகும கடல் அலைகளை தேடி வந்து விட்டாள்.
சரியாக ஆரோன் வந்து இறங்கிய சமயம் தான் அவளும் வந்தாள்.
அந்த நேரம் ஒரே சமயத்தில் இருவரும் உடலும் சிலிர்த்து அடங்கியது.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
