அரக்கன் – 6
- அத்தியாயம்- 6
யாரென்று அறிந்தும் அறியாமல் நடிப்பது ஏனென்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்த மடந்தையவளின் மனம் தவிப்போடு,
“யார் நீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவளுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
ஏனோ அவளால் அவன் கூறியதை நம்ப முடியவில்லை. ஆரோன் அவளை யாரென்று கேட்டதின் பலனாக சற்று கோபத்துடன்,
“என்ன விளையாடுறீங்களா ஆரோன்? நேத்து நீங்களாவே வந்து பேசி.. என் கையை வரையனும் கேட்டீங்க. அதுக்கு நான் முடியாது சொன்னேன். அதுக்கு நீங்க ஒகே சொல்லிட்டு போய், நீங்க அங்க நின்னீங்க” என்று அவன் நின்ற இடத்தை காட்டிவிட்டு,
பின் அவள் நின்ற இடத்தை காட்டி “நான் இங்க நின்னுட்டு இருந்தேன். அப்புறம் ஒரு காட்டேரி வந்துச்சி.. நீங்க என் கையை பிடிச்சிட்டு என்னை காப்பாத்தி கூட்டி போனீங்க. ஆனால் அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சி தான் எனக்கு தெரில. இவ்வளவு பண்ணிட்டு இப்போ என்னடனா என்னை யார் கேட்கிறீங்க?” என்று மூச்சே விடாமல் பேசிக் கொண்டு போனவளை பொறுமை இழந்து அனல் தெறிக்க முறைத்துக் கொண்டு இருந்தான் ஆரோன்.
அவனின் கோபப்பார்வையை கண்டவள் “இப்போ எதுக்கு முறைக்கிறீங்க. நான் உண்மைய தான் சொன்னேன்” என்று அடக்கியே வாசித்தாள் பெண்ணவள்.
அவனோ எதுவும் பேசாமல் அவளையே முறைத்துக் கொண்டு தன் ஒரு கரத்தால் பேண்ட் பாக்கேட்டிலிருந்து அலைப்பேசியை எடுத்தவன் அதில் ஒரு எண்ணிற்கு அழைத்தான்.
எதிர்முனையிலோ வெகு நேரம் காலம் கடத்தாமல் அடுத்த நான்காவது ரிங்கிலே அழைப்பை ஏற்ற அவனின் நண்பன் நித்திஷ் “சொல்லுடா” என்றான்.
ஆரோனோ பேதையவளின் மீது நிலைத்து இருந்த பார்வையை விலக்காமல் “நேத்து இதே டைமுக்கு நான் எங்கே இருந்தேன்” என்று அழுத்தமாக கேட்டான்.
நித்திஷோ “எங்க இருந்தனா? புரிலடா” என்றான் தூக்கக் கலக்கத்தில்.
ஆரோனோ கோபமாக கடினமான குரலில் “நான்.. நேத்து.. இந்த .. நேரம் எங்கே.. இருந்தேன் கேட்டேன்” என்று ஒரு ஒரு வார்த்தையாக அழுத்தி கேட்டான்.
மதிய உணவை முடித்து விட்டு அந்தி சாயம் வேளை வந்தும், உண்ட மயக்கத்திலிருந்து இதுவரை எழுந்துக் கொள்ளாதவன்.. ஆரோனின் அனல் தெறிக்கும் வார்த்தையை கேட்டு சட்டென உறக்கம் முழுவதும் எங்கோ பறி போனது என்று தெரியாமல் முளித்த நித்திஷ் அங்கே மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தான்.
பின் ஆரோனிடம் “இந்த டைம் நேத்து பார்க்ல பட்டாம்பூச்சியை ட்ரா பண்ணிட்டு இருந்த” என்று சொன்ன அடுத்த கணம் அழைப்பு துண்டிக்கப் பட்டது.
நித்திஷோ தலையை சொறிந்துக் கொண்டே கரத்திலிருந்த கைப்பேசியை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்னாச்சி இவனுக்கு. போன் பண்ணான், எங்கே இருந்தேன் கேட்டான், பதில் சொன்னதும் பட்டுனு வச்சிட்டான். இவன் கூட மனுஷன் ப்ரெண்ட்ஸிப் வச்சிப்பானா? ஆனால் நான் வச்சிட்டு இருக்கேன். ஒருவேளை நான் மனுஷனா இருக்க மாட்டேனோ?” என்று புலம்பியவன் மீண்டும் மெல்ல மெல்ல உறக்கத்திற்கு அடிமையாகினான் நித்திஷ்.
அங்கே அலைப்பேசி மூலம் கேட்டத்தை அதிர்ந்து பார்த்து கொண்டு நின்றவளிடம் “கேட்டல? இனி லூசு போல சொல்லிட்டு இருந்த? அவ்வளவு தான்” என்று எச்சிரிக்கும் குரலில் பேசி விட்டு அங்கே இருந்து நகர போனவனின் கரத்தை சட்டென்று எட்டி பிடித்தாள் அவள்.
ஏற்கனவே கோபத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தவனுக்கு இப்போது சுல்லென்று கோபம் எல்லையை கடந்து போனது.
அவனுக்கு தான் அதிகம் பேசுவது பிடிக்காத ஒன்றாக்கிற்றே. அதை அறியாத வஞ்சியவள் ஆணவனின் கரத்தையே பிடித்து நிறுத்தி இருக்கிறாள் அல்லவா.
கடும் சினத்துடன் அவள் பிடித்த கரத்தை உதறி நொடி பொழுதில் பெண்ணவளின் கழுத்தை பிடித்தான் ஆரோன்.
அவளோ மிரண்டு போய் அவன் விழிகளை காண ஆரோனோ “இங்க பாரு. நீ பேசுறது பண்றது எல்லாம் பார்த்தாவே தெரியுது. நீ என் பின்னாடி சுத்துறனு. என்ன லவ் பண்றீயா?” என்று கேட்டு கழுத்தை மேலும் நெருக்கினான்.
அவளோ அவனிடமிருந்து விலக போராடிக் கொண்டே “இல்லை” என்று தலையை ஆட்ட, சுற்றி முற்றி பார்த்த ஆரோன் அங்கே அங்கே மனிதர்கள் தங்களை பார்ப்பது உணர்ந்து அவளை மெல்ல விடுவித்தான்.
பின் ஆள்காட்டி விரலை உயர்த்தி “என்னை பத்தி தெரிஞ்சிக்க, நீ எத்தனை மாசமா என்னை பாலோ பண்ணனு தெரில. ஆனால் இதுக்கு அப்புறம் என் பின்னாடி வந்த அவ்வளவு தான்” என்று எச்சரிக்கை விட்டு நடந்து செல்பவனை தன் கழுத்தை தடவியப்படி விழிகள் கலங்க பார்த்தாள் பாவை.
அவளுக்கோ கோபம் ஒரு பக்கம், நடப்பது அனைத்தும் மாயமாக இருப்பதை நினைத்து பயம் ஒரு பக்கம், யாரென்று தெரியாத ஒருவன் பொதுவெளியில் அவள் கழுத்தை பிடித்து நெறிக்கும் சமயம் சுற்றி இருப்பவர்கள் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இயலாமை மறுபக்கம் என்று பல்வேறு உணர்வுகளில் சிக்கிக் கொண்டு தவித்து போனாள்.
ஆரோன் அவள் கண்களிலிருந்து மறையும் புள்ளி வரை அவன் போன திசையை மட்டுமே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள் பெண்ணவள்.
அவள் மனமோ ‘இவன் என்ன அவ்வளவு பெரிய இதுவா என்ன? இந்த உர்ராங்குட்டானை நான் லவ் பண்ணுவேனா? இவன் பின்னாடி நான் எப்போ அலைஞ்சேன். லூசு பையன் லூசு மாதிரி பேசிட்டு திட்டிட்டு போகுது. இதுல என்னை கொலை பண்ண வேற ட்ரை பண்றான்” என்று மூளை குழம்பி போய் பிதற்றிக் கொண்டு இருந்தவள் பாதங்கள் ஆறுதலை தேடி அந்த அலையிடம் சென்று நின்றது.
மீண்டும் மீண்டும் அவளுள் அவனின் நினைவுகள் மட்டுமே தோன்றியது. அதை தடுக்க நினைத்தாலும் அவளால் அவனின் எண்ணம் உருவாவதை தடுக்க முடியாமல் திண்டாடினாள்.
“நான் அவனை ஏன் லவ் பண்ணனும்?” என்று கேட்டவளின் பாதத்தை தொட வந்த கடல் அலைகள் தொட்டு விட முடியாமல் மீண்டும் கடலிலே இழுக்கப்பட்டு உள்ளே சென்றது.
பெண்ணவளின் மனமோ இப்போது ஆரோன் என்னும் ஆடவனிடம் மாட்டிக் கொண்டு அவனையே சுற்றி திரிந்துக் கொண்டு இருக்க..
அங்கே தொலை தூரத்தில் நரம்புகள் வெடித்து விடும் அளவிற்கு உடல் வெறிக்க.. பாதத்தின் நீண்ட விரல் நகங்களும் கரத்தில் இருந்த நீண்ட நகங்களும் ராட்சசன் போல் காட்சியளிக்க, தன் சிவந்த விழிகளால் தேவதை பெண்ணிவளை தன் கூர்மையான பல் கொண்டு அவளின் உதிரத்தை ருசி அறிய ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தது அந்த அரக்கனின் தேகத்திற்கு சொந்தமானவன்.
அப்போது மங்கையவளின் முதுகில் ஒரு கரம் அழுத்தமாக அடித்து “ஏய் அனு” என்று சந்தோச குரலில் அழைக்க,
அடியில் உண்டான எரிச்சலுடன் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
இது மகிழ்ச்சிற்கான அதிர்ச்சியா? இல்லை பயத்திற்கான அதிர்ச்சியா? அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
