அரக்கன் – 8

  • அத்தியாயம்- 8

வெகு நாட்களுக்கு பிறகு தோழியிடம் தன் மனதை திறந்து பேசி விட்டு வீட்டிற்கு வந்த அனுமதிக்கு சற்று தெளிவடைந்தது போன்ற உணர்வு. 

முன்பு எல்லாம் எந்த ஒரு விசியத்தையும் பானுவிடம் பகிர்ந்துக் கொள்ளாவள் அனு. அதில் பல பிரச்சனைக்கு இன்று போல் நல்ல தீர்வுகளை சொல்லி தோழியை தேற்றுவாள். 

பானுவின் திருமணத்திற்கு பிறகு தோழியை சந்திக்கவும் இல்லை தொடர்புக் கொள்ளவும் இல்லை அனுமதி.

ஆனால் இன்று எதிர்பாராத விதமாக சந்திக நேர்ந்ததும் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டாள். 

அதற்கு எப்போதும் போல் பானு இன்றும் ஒரு நல்ல முடிவை கூறி அவளின் தெளிவு இல்லாத மனநிலையை மாற்ற பெரும் உதவி செய்து விட்டாள்.

நாளை தோழி சொன்ன இடத்திற்கு சீக்கிரம் கிளம்பி ஆரோனை பார்க்க வேண்டும் என்பதால் விரைவாகவே உறங்க ஆரம்பித்து விட்டாள் அனுமதி. 

இதே சமயம் பானுவில் வீட்டில். 

அவர்கள் அறைகுள் நுழைந்ததும் “என்ன பானு நீ. அனு கிட்ட பேசி புரிய வைக்காம நீயும் அவளோடு சேர்ந்துட்டு அவ சொல்றதெல்லாம் நிஜம் போல் பேசிவிட்டு வர. இந்த காலத்துல எப்படி பானு ரத்தகாட்டேரி, அப்புறம் அவளை சுத்தி நடக்கிற அமானுஷம் எல்லாம் நடக்கும். அவ தான் ஏதோ பயத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்கா! நீ தெளிவா தானே இருந்த? உன் ப்ரெண்டுக்கு எடுத்து சொல்ல வேண்டியது தானே” என்று கடுகு போல் வெடித்தான் சதீஷ்.

மாற்று உடையை கையில் சுமந்தபடி “அனு இப்படி பொய் சொல்லிட்டு திரிர ஆளுலாம் இல்லைங்க. அவளை சுத்தி என்னவோ நடந்து இருக்கு. அதான் அவள் இப்படி பிகே பண்றா. நான் சொன்னா மாதிரி அந்த ஈவெண்ட்ல அவ பார்த்த அதே ஆளு அங்கே இருந்தா? அனு சொல்றது எல்லாம் உண்மையாகிடும்ல” என்று சொல்லிக் கொண்டே குளியலறையை நோக்கி சென்றவள் ஓர் நிமிடம் திரும்பி பார்த்து,

“உங்க முதலாளிக் கிட்ட சொல்லி நாளைக்கு எனக்கும் அவளுக்கும் அந்த  எக்ஸ்ஷிபிசன்க்கு போக பாஸ் வாங்கி கொடுங்க. நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் சென்று விட்டாள் பானு.

 

சதீஷோ மனைவியை திட்டிக் கொண்டு இருந்தாலும் அவள் கேட்ட விசியத்தை வாங்கி தர நினைத்து தனக்கு மேல் இருக்கும் அதிகாரிக்கு கைப்பேசி மூலம் அழைத்து மரியாதையுடன் பேச ஆரம்பித்து அவரை சமாளித்து எப்படியோ இரண்டு நபருக்கான நுழைவுச் சீட்டை வாங்கி விட்டான்.

 

மறுநாள் பானு சொன்ன இடத்திற்கு விரைவாக வந்த அனு.. உள்ளே போக முடியாமல் வெளியவே தடுத்து நிறுத்தப்பட்டாள். 

அனுவோ திருதிருவென முழித்துக் கொண்டு “என்னை எதுக்கு தடுக்குறீங்க. எனக்கு தெரிஞ்சவரு தான் இந்த ஈவன்டுக்கு இன்சார்ஜ்” என்று சொல்லி புரிய வைக்க முயன்றாள். 

ஆனால் பாதுகாவலர்களோ “உள்ள போறதுக்கு உங்க கிட்ட பாஸ் இருக்கா? பாஸ் வச்சி இருக்கிறவங்க மட்டும் தான் உள்ளே போக முடியும் மேடம்” என்று அவளை அங்கே இருந்து அனுப்பினர். 

அவளோ போகாமல் கீழே விழ போன தன் கைபையை சரியாக தோளில் மாட்டியபடி “அய்யோ நான் சொல்றதை ஏன் நம்ப மாட்டுகிறீங்க. நிஜமாவே எனக்கு தெரிஞ்சவர் தான் இங்க வர சொன்னாரு” என்று எவ்வளவோ புரிய வைக்க முயன்றாள். 

அனு கிளம்பியதிலிருந்து பானுக்கு இரண்டு முறை அழைத்து பார்த்து விட்டாள். ஆனால் பானு அழைப்பை ஏற்கவில்லை. 

‘ஒருவேளை சதீஷோட அக்கா பானு பக்கத்துல இருக்காங்கலோ’ என்று நினைத்தவள் அடுத்து அவளுக்கு கூப்பிடவேயில்லை. 

பானுவோ கணவனை சீக்கிரம் எழுப்பி அவனை அனுப்பி விட்டு மற்ற வீட்டு வேலைகளை முடித்தவள் சரியாக அனு அழைத்த போது கைப்பேசியை ஜார்ஜில் போட்டு விட்டு குளிக்க சென்று இருக்க. அது பானுவின் காதில் விழவேயில்லை. 

 

ஆனால் அந்த பக்கம் எதார்த்தமாக நடந்து போன சதீஷின் அக்காவின் செவியில் விழ, 

‘இவ்வளவு காலையில யாரு இவளுக்கு கூப்பிடுறாங்க’ என்று எண்ணியபடி அலைப்பேசியை எடுத்து பார்த்தவருக்கு கோபம் தான் வந்தது.

 

‘இன்னும் இவ கிட்ட இந்த பானு பேசிட்டு இருக்காளா? அன்னிக்கே அந்த அனுக்கு மிரட்டி தானே விட்டேன். இனி பானு கூட எல்லால் பேச கூடாதுனு. இப்போ எதுக்கு கால் பண்றா’ என்று யோசித்தவர் கோபத்துடன் அனுவின் நம்பரை பானு போனிலிருந்து அழித்து விட்டார். 

மற்றவரின் தொலைப்பேசியை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து பார்ப்பது தவறு என்று அறிந்தாலும்…அனைத்தும் தெரிந்து இருக்கும் புத்திசாலியாக எதிலும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு அனு இடைஞ்சலாகவே இருந்தாள். 

 

தன்னை விட சிறிய பெண்ணிற்கு அனைத்து விசியமும் தெளிவாக தெரிந்து இருப்பது மட்டுமில்லாமல் கல்யாண வீட்டில் அவளையே முதன்மை படுத்தியது அவளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. 

 

அதுவே அவள் அனுவை வெறுபதற்கு காரணமாக இருந்தது.

அனு நினைத்தது போல் சதீஷின் அக்காவின் சுழ்ச்சியால் பானுவின் கைப்பேசி எடுக்கப்படாமல் இருக்க.. அந்த பெரிய கட்டிடத்தின் வெளியே நின்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அனுமதி. 

 

இருந்தாலும் அவர்கள் அவளை உள்ளே போக விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர் “இங்கே பாரும்மா நீங்க சொல்ற மாதிரி நிறைய பேர் வந்து சொல்லிட்டு உள்ளே போக ட்ரை பண்ணுவாங்க. நாங்கெல்லாம் அவங்களை உள்ளே விட முடியுமா? யாருக்கு தெரியும் நீங்க தீவிரவாதி கூட்டத்தில் ஒருத்தியா இருந்தா? என்ன பண்றது?” என்று கேட்டு விட,

அனுவிற்கோ கோபம் எல்லையை கடந்தது “என்னை பார்த்தா தீவிரவாதி மாதிரியா இருக்கு. என் முகத்தை பாருங்க, பச்சை மண்ணு மாதிரி இருக்கேன். என்னை பார்த்தா தீவிரவாதி மாதிரி இருக்கு” என்று தன் முகத்தை காட்டி கேட்டவள் வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள். 

அங்கே நின்று இருந்த தடுப்பு காவலாளர்கள் அவள் அழுவதை பார்த்து திகைப்படைந்து ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

அனுவோ மூக்கை உறிஞ்சியபடி ஒற்றை கண்ணை மட்டும் லேசாக தூக்கி அவர்களை நோட்டமிட, அவளையே உண்ணிப்பாக பார்த்துக் கொண்டு இருந்த காவலாளர்களின் ஒருவன் அவளை நெருங்க.. 

அனுவோ சட்டென தன் கையை எடுத்து வலப்பக்க நெஞ்சில் வைத்துக் கொண்டு “அய்யோ ஆண்டவா இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா? கடவுளோ” என்று ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்து இருக்கரம் உயர்த்தி “வானுலக கடவுளே உனது குழந்தையான என்னை தீவிரவாதி சொல்லிட்டாங்க. இதை பார்த்துக் கொண்டு நீங்க இன்னும் ஏன் அமைதியாக இருக்கீங்க. உங்களோட மின்னல் சக்தியை கொண்டு இப்போதே இவர்களை தாக்குங்கள்” என்று சொல்லிக் கொண்டே இரு கரங்களையும் பந்து போல் சுழற்றி அங்கே வாயை பிளந்துக் கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தவர்கள் மீது ஏதோ சக்தியை வீசுவது போல் “உப்” என்று காற்றினால் சுழற்றிய பந்தை எறிந்தாள். 

அவள் மேலே வானத்தை பார்த்து பேசிய நொடியிலிருந்து மேலேயே பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு அனுவின் இந்த பொய்யான தாக்குதல் உண்மையென நம்பி பயத்தில் சட்டென கீழே குப்பறப்படுத்து விட, 

இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணிய அனு அவர்களை மண்ணை கவ்வ வைத்து உள்ளே ஓடி விட்டாள்.

இதையெல்லாம் உள்ளே இருந்த கருப்பு ஜன்னல் கண்ணாடி உதவியுடன் பார்த்துக் கொண்டு இருந்த ஆரோவின் இதழில் மெல்லிய கீற்று.

அனு உள்ளே வருவதற்காக காவலாளர்களிடம் கெஞ்சிக் கொண்டு இருந்த சமயம் ஆரோன் அங்கே வைக்கப்பட்டு இருந்த அவனின் கை வண்ணத்தில் உருவான ஓவியத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு மற்ற ஓவிங்களை கவனித்துக் கொண்டு இருந்தவன் விழி, அன்னிச்சையாக வெளியே செல்ல, அனுவின் கோமாளி தனத்தை பார்த்தான். 

ஆம் பானு அனுவிடம் கூறியது போல் ஆரோன் அவனின் திறமையை வெளிக்காட்ட அங்கே அவன் வரைந்த ஓவியதை வைத்து  இருந்தான். 

 

இனி அடுத்த அத்தியாயதில் காணலாம்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
137 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
260 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page