அரக்கன் – 9

  • அத்தியாயம்- 9

அந்த பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தவளுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டு இருந்தாள் அனுமதி.

அனுவின் பொய்யான தாக்குதலை அறிந்து அவளை விரட்டி பிடிக்க இரண்டு காவலர்கள் மட்டும் அவள் பின்னால் ஓடினர். 

அனுவோ அவர்கள் கண்ணில் படமால் இருபத்திற்காக அங்கும் இங்கும் ஓடியவளின் நீண்ட நெளிய கரத்தை பிடித்து சட்டென்று அங்கே இருந்த சிறிய அறையினுள் இழுக்கவும் பதறிய அனு கத்த வாய் திறக்க… 

பெண்ணவளின் வாயை மற்றய கரம் கொண்டு பொற்றினான் ஆரோன். 

ஆரோனை விழி விரித்து வியப்புடன் பார்த்தவளுக்கு அவனின் நெருக்கம் உள்ளுக்குள் என்னவோ செய்தது. 

அதன் வெளிப்பாடு அப்பட்டமாக பேதையின் கண்ணம் தன்னிச்சையாக சிவப்பாக மாற.. விழியை தாழ்த்திக் கொண்டாள்.

அந்த சிறிய ஸ்டோரூமில் இடம் உண்மையாகவே மிகவும் சிறியதாக இருந்தது. தேவையில்லாத பொருட்களை போட்டு அடைத்து வைத்து இருப்பதினால் இருவர் உள்ளே நிற்பதற்கே இடம் போதவில்லை. 

ஆரோன் மெல்ல அந்த அறையில் கதவை திறந்து அந்த காவலர்கள் சென்று விட்டார்களா என்று பார்த்தான். 

ஆனால் அவர்களோ அங்கேயே சுற்றி சுற்றி அலைந்துக் கொண்டு இருந்தனர். 

“அந்த தீவிரவாதி.. மாயஜால பொண்ணு கிடைச்சலா” என்று கேட்டார் ஒருவர். 

அதற்கு மற்ற ஒருவரோ “இந்த பக்கமில்லை. அங்கே?” என்று மாற்றி கேட்க. இவரோ இல்லை என்று சைகை செய்யதவர் தன் வாட்டிதாக்கியை எடுத்து,

“ஒரு பொண்ணு என்டர் பாஸ் இல்லாம உள்ளே நுழைஞ்சிட்டா. அவளுக்கு மாயஜால வித்தை எல்லாம் தெரிஞ்சி இருக்கு. பார்க்க தீவிரவாதி போல இருப்பா. சீக்கிரம் தேடுங்க அந்த வித்தைக்காரியை” என்று அவர் சொல்ல சொல்ல..

இங்கே அனுவிற்கோ மூக்கு புடைத்துக் கொண்டு கோபம் வந்தது. 

“என்னை பார்த்தா தீவிரவாதி மாதிரியா இருக்கு. இல்ல வித்தை காட்டுறவ மாதிரி இருக்கா? அவங்க எப்படி அப்படி சொல்லலாம்” என்று பொறிந்தவளின் உதட்டின் மேல் தன் ஒற்றை விரலை வைத்து,

“உஸ்” என்று கண்களாலே மிரட்டினான் ஆரோன். 

அவளோ ஆணவனின் விரல் அவள் உதட்டில் பட்டதும் பேச்சின்றி நின்று போனாள். 

ஆரோனோ கதவின் இடுக்கில் அந்த காவலர்கள் சென்று விட்டனரா என்று பார்த்துக் கொண்டு இருந்தான். 

அவர்களும் சிறிது நேரம் அந்த இடத்தில் தேடி விட்டு வேறு பக்கம் சென்று தேட ஆரம்பித்னர். 

அதுவரை ஆரோனின் விரல் அனுவின் உதட்டிலே இருந்தது. 

ஆரோனோ அந்த இரு காவலர்கள் சென்றதும் அனுவின் புறமே நேராக திரும்யபியவன் “உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா? இப்படி தான் அத்துமீறி உள்ளே வருவீயா?” என்று கடுமையாக கேட்டான். 

ஆரோனின் இந்த கடுமை பார்த்த அனுவிற்கு கோபம் தலைக்கெறியது. ஏற்கனவே கோபத்தில் சிவந்து இருந்த அவளின் மூக்கு இப்போது மேலும் சிவப்பாக மாற.. அதை பார்த்த ஆரோன்,

“இந்த மூக்கு ஏன் சிவப்பா மாறுது” என்று அதி தீவிரமாக கேட்டான் அவன். 

இதற்கு மேல் அவள் அமைதியாக இருப்பாளா என்ன? 

“ம் நான் தான் மாயாஜாலம் தெரிஞ்ச பொண்ணாச்சே. அதான் என் விரல் வித்தையால மேஜிக் செய்து சிவக்க வச்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் உதட்டில் இருந்த அவன் விரலை கோபமாக தட்டி விட்டாள். 

அதில் கோபமடைந்தவன் “ஏய் நான் உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன். ஆனா நீ என் கிட்ட கோபப்படற” என்று சொன்னதை கேட்டவள் இடுப்பில் இருக்கரத்தையும் வைத்து,

ஒற்றை புருவம் உயர்த்தி “அதான் ஏன் கேட்டேன். நான் யாருனு உங்களுக்கு தெரியாது தானே? அப்படி இருக்கும் போது நான் பிரச்சனையில் இருந்தா உங்களுக்கு என்ன வந்தது? எப்படி யாருனு தெரியாத ஒரு பொண்ணுக்கு உதவி பண்ணிங்க” என்று சரியாக அவனை மடக்கி கேட்க,

அவனிற்கோ ‘ஏன்டா உதவி செய்தோம்’ என்று ஆனது. 

யாரிடமும் அவளவுக்கு மீறி பேசி பழகிடாதவன் இன்று அனுவிடம் வார்த்தைக்கு வார்த்தை வாயடித்துக் கொண்டு இருந்தான் அவனையே அறியாமல். 

சலிப்பாக இருப்பக்கம் தலையை ஆட்டிய ஆரோன் “ஆமா தெரியாது தான். இப்போவும் சொல்றேன் நீ யாருனு எனக்கு தெரியாது. நேத்து நீ பீச்சில லூசு போல என் கிட்ட உளறிட்டு இருந்ததை பார்த்து, உன்னை பைத்தியம் நினைச்சேன். அதான் இன்னிக்கு இங்கே உன்னை பார்த்ததும் மெண்டல் ஹாஸ்பிடல இருக்க வேண்டியது, இங்கே சுத்திட்டு இருக்கேனு பாவப்பட்டேன்” என்று மிகுந்த நெக்கல் தோரானையில் ஆரோன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

அனுவிற்கு கோபம் எல்லையை கடந்து விட்டது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி அவள் முன் நின்ற ஆறடி ஆண்மகனை நிமிர்ந்து பார்த்தாள். 

“என்னைய பார்த்தா மெண்டல் போலவா இருக்கு” என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்க,

ஆரோனோ கண்களை சுருக்கிக் கொண்டே ஒரு அடி பின்னால் சென்றான். 

அது மிகவும் சிறய அறை என்பதால் அவன் வைத்த அந்த ஒரு அடியிலே சுவரில் மோதிக் கொள்ள, அனுவோ அவனின் உடலை தொட்டு விடும் அளவில் நெருக்கமாக நின்றவள் ஆணவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து,

“அது இதுனு சொல்றீங்க. என் பெயர் அனு.. அனுமதி” என்று சொன்னாள். 

அனுமதி என்ற பெயரை கேட்டதும் சிறு இழை நகை அவன் உதட்டோராம் தெரிய. அதை கண்டுக் கொண்ட அனு… காரிகையவனை ஆழமாக ஊடுருவி,

“உண்மையா சொல்லுங்க! நான் யாருனு உங்களுக்கு தெரியாதா? அன்னிக்கு என் கை அழகா இருக்குனு நீங்க சொல்லல. அப்போ ரத்த காட்டேரிக் கிட்ட இருந்து நீங்க தானே என்னை காப்பாத்துனீங்க? அப்புறம் ஏன் உண்மையை ஏத்துக்க மாறுகிறீங்க” என்று அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்த்து கேட்டாள். 

 

பெண்ணவளின் நெருக்கத்தில் சற்றே அவன் திகைத்தாலும் ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு,

“உன் கேள்விக்கு நான் பதில் சொல்லனும் எந்த அவசியமும் இல்லை” என்று சொன்னவன் கதவின் இடுக்கில் வெளியே பார்த்தவன் அடுத்த நொடி அனுவின் கழுதை பிடித்து வெளியே தள்ளினான் சினத்தோடு. 

இதை எதிர்ப்பார்க்காத அனு தடுமாறி சென்று கீழே விழ போக, சரியாக அங்கே தோழியை தேடி வந்த பானு அனுவவை தாங்கி பிடித்தாள். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
124 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
238 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page