அலை கடல் பெண்ணவள்
அலை 30
தூரத்தில் வானம் கருமையாகத் தெரிந்தது.மயூரியின் கண்களில் கண்ணீர் வந்தது.
“வீனஸ்…”என்று அவள் மெதுவாக சொன்னாள்.“உனக்கு ஏதோ ஆபத்து…”அவளது மனம் அந்த இரவு முழுவதும் அமைதியாக இல்லை. ஏனெனில் அந்த கனவு ஒரு சாதாரண கனவு இல்லை.
அது ஒரு இதயத்தின் அழைப்பு போல இருந்தது.
அவளது கண்களில் தூக்கம் இல்லை. அவளது மார்பில் ஒரு தெரியாத அச்சம் மட்டும் இருந்தது. அந்த நேரத்தில் அறையின் கதவு மெதுவாக திறந்தது.
உள்ளே வந்தாள் அம்பை.“மயூரி…இன்னும் நீ தூங்கவில்லையா?”
என்று அவள் மெதுவாக கேட்டாள்.
மயூரி திரும்பிப் பார்த்தாள்.அவளது கண்களில் இருந்த பயத்தை
அம்பை உடனே கவனித்தாள்.
“என்ன ஆயிற்று?”என்று அவள் அருகில் வந்து கேட்டாள்.மயூரி ஒரு நொடி அமைதியாக இருந்தாள்.பிறகு மெதுவாக சொன்னாள்“அம்பை…நான் ஒரு கனவு கண்டேன்…”அம்பை சிரித்தபடி கேட்டாள்.
“கனவா?அதற்காக இப்படி பயப்படுகிறாயா?”மயூரி தலை அசைத்தாள்.
“இல்லை…அது சாதாரண கனவு இல்லை.”அவள் மெதுவாக எல்லாவற்றையும்சொன்னாள்.
கடலில் புயல் உண்டாவது,எரியும் கப்பல்.கப்பல் உடைந்து போவது.
வீனஸ் கடலில் விழுவது. மரத்துண்டைப் பற்றிக் கொண்டு போராடுவது.
அவள் கடைசியாக சொன்னாள்“அந்த கனவில் வீனஸ் என்னைப் பார்த்து‘மயூரி…’ என்று அழைத்தான்…”
அந்த வார்த்தை கேட்டவுடன் அம்பையின் முகம் மாறியது.அவள் திடீரென அமைதியாகிவிட்டாள்.அவளது கண்களில்ஒரு அதிர்ச்சி தெரிந்தது.
“நிச்சயமாகஅப்படியே சொன்னானா?”என்று அவள் மெதுவாக கேட்டாள்.
மயூரி தலை குனிந்து“ஆம்…” என்றாள்.அம்பை கட்டிலின் ஒரத்தில்உட்கார்ந்தாள்.
சில நொடிகள் அவள் எதுவும் பேசவில்லை.பிறகு மயூரியை நோக்கி பார்த்து சொன்னாள் “மயூரி…சில கனவுகள் சாதாரண கனவுகள் அல்ல.”
“இதயம் தொலைவில் இருக்கும் ஒருவரின் துயரை உணரும்போது
அப்படி கனவாக வரும் என்று மூதாட்டிகள் சொல்வார்கள்.”மயூரியின் இதயம்
அந்த வார்த்தை கேட்டதும் நடுங்கியது.
“அப்படியென்றால்…”என்று அவள் கேட்டாள் அம்பை திரும்பி வெளியே பார்த்தாள்.
மழை இன்னும் பெய்துக்கொண்டிருந்தது.
“வீனஸ் இப்போது கடலில் இருக்கிறானே…”அந்த வார்த்தை அறையின் அமைதியை வெட்டியது. மயூரியின் கண்ணீர் அவள் அறியாமல் வழிந்தது.
அம்பை அவளது கையைப் பிடித்தாள். “பயப்படாதே… கடல் எல்லாவற்றையும் விழுங்காது.”“சில நேரங்களில் அது உயிர்களையும் காப்பாற்றும்…”
ஆனால் அம்பையின் மனதுக்குள் கூட ஒரு கேள்வி எழுந்தது அந்த புயல் இரவில்
வீனஸ் உண்மையில் உயிரோடிருக்கிறானா?என்ற கேள்வியில் அம்பை தீக்பிரம்மையில் ஆழ்ந்தாள்.
மயூரி அம்பையின் மடியிலேயே தலை சாய்த்தவளின் நினைவுகள் தன்மணாளனின் காதல் வேட்கை நினைவில் வந்தது.
எத்தனை ஆனந்தம் எத்தனை கனவுகள் என்று நினைததவள் அவன் எப்போது வருவனோ வரட்டும் என்ற நினைவில் உறங்கினாள்.
……..
கற்கோவிலின் முன்னே உடைந்து போன பாய்மரப் படகொன்றின் மேல் உட்கார்ந்தாள் சித்திரப் பாவை.
சமுத்திர ராஜனை கூர்மையான பார்வையுடன் வெறித்தாள். தொலைதூரத்தில் மின்னிய வெளிச்சத்தைக் கண்டவளின் முன்னே வந்து நின்றது இந்திர விழா (காமன் விழா) நாட்கள். கொற்கையில் அவளது காமன் விழாவை நினைத்துக் கொண்டே களித்தாள்.
வைகறை விடியல் புலரும நேரம் வரப்போவதை அறிந்தவள் சிலம்பொழி மின்ன மீண்டும் நடந்தாள். சிலம்புகளின் சப்தத்தில் மணல்துகள் வழியை விட்டது. இரவில் முட்டையிடும் ஆமைகள் கூட ஓடி ஓளிந்து கொண்டது.
சித்திரபாவை நடந்து போனதே நாட்டியம் ஆடியது போலவே இருந்தது.மீண்டும் மணற்சிற்பத்துக்குள் சரணடைந்தாள். கண்கள் யவனதேசம் இருந்த திசையை பார்த்தபடி இருந்தாள்.
கொற்கை நகரின் கடல்கோல் கொற்கை நகரையே இழுத்து அணைத்துக் கொண்டது. இதோ இந்த சித்திரபாவை பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் தன் காதலனுக்காக் கடற்கரையில் தவம் இருக்கிறாள்.
அலர்மேல்வள்ளி தன் கனங்களையும்
தவிப்பையும் சேர்த்து கல்லாய் சமைகிறாள்
காரிருளின் வண்ணத்தை வாரி எடுத்து
தன்மீது பூசிக்கொண்ட வானதி
காற்றுபுகா இறுக்கத்தில் நான் உறைய
நிசப்தமில்லாமல் உருகவேண்டும்
சேர்பனின் வதனம் காண மருள்
சொருகி வீழ்ந்து கிடந்தாள் பாவை
வருவான் அவள் தேவன் என்று
அவனின் ஸ்பரிசம் பட்டதும் உயிர்தெளுவாள்
இச்சிலை அழகி…….!!
இன்றும் நிற்கிறாள்…!!
அலைகடலின் மணற்பரபில்லில் சிலையாய்
யுகங்கள் பல பல கடந்து காதலில் கசிந்துருகி
இன்றும் நிற்கிறாள்…..!!
இரவும் பகலும் உரசும் வேளையில் உயிர்பிப்பாள்
பலஜென்மங்களாக காத்திருக்கிறாள்….!!
பேதை அவள் பூப்படைய…..!!
மொட்டவிழ்த்து மலர்லிதழ் விரிக்க கார்வண்டை
எதிர்நோக்குவாள் பெண்ணவள்…..!!
வெள்ளைநிற மணல்பரப்பில் வெண்குடங்களின்
பாரத்தை தேன்பாகாய்
சண்பகமலரின் வாசம் தனை தன்னுள் எடுத்து
சங்குகழுத்தில் ஏகாந்தமாய் மணம்வீச
தன் மணாளனை தேடுகிறாள்….!!
இந்த அலைகடல் பெண்ணவள்….!!
அலை வருடி நிற்கும்….
